Friday, January 8, 2010

சர்க்கஸ்


(photo by cc license, thanks, Emmanuel Dyan
)

து வீடு.

ரு ஹால், அறை,
அடுப்படி, இப்படி.

து குடும்பம்.

ரு மகள், மகன்
இவர்கள் இருவர், அப்படி.

நால்வரும் தூங்குவது ஹாலில்.

மிதிபடலாம்
குழந்தைக் கால்கள் என
நடு ராத்திரியில் கூட
நகர இயலாது அறைக்கு.

வீடு முழுக்க
பகலிலும் இழைகிறாள்
படிப்பு முடித்த மகள்.

யினும்,
சொல்லித்தருகிறது..

ட்டையும் புல்லுக்கட்டையும்
புலியையும் ஆட்டையும்
ஒரே படகில் ஏற்ற கூடாதென்கிற
குடும்ப நீதி விடுகதை.

45 comments:

பிரபாகர் said...

நண்பா!

யதார்த்தமாய் மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்... அருமை.

பிரபாகர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

குடும்பம் ஒரு கதம்பம்

நிலாமதி said...

கவிதை உண்மையை சொல்கிறது . ஆடையும் .........என்றால் உடை என்று பொருள்படும் ஆட்டையும்(ஆடு) என்றால் பொருத்தமாக இருக்கும் திருத்தி விடுங்கள். சார் நான் சொல்வது சரி தானே........?.

vasu balaji said...

ஹா! பா.ரா. அற்புதம். தலைப்பு சொல்லும் கவிதை.

ஹேமா said...

அண்ணா புரிகிறது என்ன சொல்லியிருக்க்றீர்கள் என்று !

பா.ராஜாராம் said...

நன்றி நிலாமதி!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை தான் வாழ்க்கை என்று சொல்கிறீர்கள். யதார்த்தம்.
நிறைய எழுதுங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

சராசரி இந்திய குடும்பத்தை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். அருமை.

cheena (சீனா) said...

அன்பின் பா.ரா

இயல்பான குடும்பச் சூழ்நிலை. பகலிலும் இழையும் படித்த மகள் - மண வாழ்க்கையை எதிர்நோக்கும் மகள் - இப்பொழுதும் ஹாலில் நால்வரா ??

எனக்குத்தான் கவிதை புரியவில்லையா

நல்வாழ்த்துகள் பா.ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை நல்லாயிருக்கு ராஜாராம்.

மண்குதிரை said...

ஆட்டையும் புல்லுக்கட்டையும்
புலியையும் ஆட்டையும்
ஒரே படகில் ஏற்ற கூடாதென்கிற
குடும்ப நீதி விடுகதை.


வாவ் ரொம்ப நல்லா இருக்கு

ரெண்டுமுனாளா நெனச்சே

சந்தான சங்கர் said...

யதார்த்த வாழ்வில்
எல்லோரும் தவறவிட்ட விசயங்களை
உங்கள் கவிதையில் தவழவிட்டிருக்கின்றீர்கள் மக்கா..


மிக அருமை.

க.பாலாசி said...

மிக நேல்ல கவிதைங்க....யதார்த்தத்தை ரசித்தேன்.

கல்யாணி சுரேஷ் said...

அட போங்கண்ணா, சொல்லி சொல்லி வாய் வலிக்குது. சொல்லாமலும் இருக்கா முடியல. அசத்துறீங்க அண்ணா.

அன்பேசிவம் said...

ஒரு கதையில் எதார்த்தவிதையோடு விளைந்த கவிதை, நன்று மகாப்பா...

ஜெனோவா said...

எனக்கு புரியும்படியான ஒரு அர்த்தத்தில் இந்த வாழ்க்கைக் கவிதையை கிரகித்துக் கொண்டேன் பா.ரா ...

கைக்குள் யதார்த்தத்தை வைத்து ஒரு குலுக்கு குலுக்கி விசிறி எறிந்திருக்கிறீர்கள் வாழ்க்கையை சோளிகளாய் !!

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

கரணம் தப்பினால் ம(கா)ரணம்

இப்படியாக விளங்குகிறது வாழ்க்கை சர்க்கஸ் ...

மக்கா எதார்த்ததோடு விளையாடுது வார்த்தைகள் ...

Ashok D said...

யாராவது இந்த சித்தப்ஸ தூக்கிட்டு போய் அவரு வீட்ல வுட்டுட்டு வந்துடுங்க, தொல்ல தாங்கமுடியல்ல... சும்மா குடும்பம் பாசம் அன்பு ன்னிக்கிட்டு... அவன் அவன் வெந்து சாகறான் :))))))))

Deepa said...

சூப்பர் - கவிதையும் நச்சென்ற தலைப்பும்!

Thenammai Lakshmanan said...

என்ன பாரா ....
மகா ஞாபகமா ..
மகா அம்மா ஞாபகமா ..
எது படுத்துது..

மணிஜி said...

வீட்டு சாப்பாடு கேக்குதா ராசா?

S.A. நவாஸுதீன் said...

மக்கா!

பிப்ரவரி 2 டிக்கெட் போட்டிருக்கேன். உங்களுக்கும் சேர்த்து போடவா?

Gowripriya said...

:)

Paleo God said...

பின்னிட்டீங்கன்ணே...::))

Vidhoosh said...

:)

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ஆடுமாடு said...

நல்லாருக்கு.

கலகலப்ரியா said...

மிக அருமை பா.ரா. :)

வினோத் கெளதம் said...

பின்னுது..

விஜய் said...

வாழ்த்துக்கள்

விஜய்

பாலா said...

நல்லா இருக்கு மாம்ஸ்
பூடகமா சொல்றது

SUFFIX said...

எதார்த்தம்!! அருமை பா.ரா.

காமராஜ் said...

பாரா,
அகநாழிகையில் புகைப்படம் பார்த்தேன்.
அதை ராகவனிடமும் பேசினேன்.
உங்களின் இந்தக் கவிதையின்
சாயலில் ஒரு கவிதை செய்து
ஒரு வருடமாக பெட்டியில் பூட்டி
வைத்துவிட்டேன்.
எனக்கு எது நெருடியதோ
அதை அநாயசமாக
தூக்கிப்போட்டுவிட்டீர்கள்.
ரொம்ப பூரிப்பாக இருக்கிறது.
பாரா.. பாரா.

'பரிவை' சே.குமார் said...

//ஆட்டையும் புல்லுக்கட்டையும்
புலியையும் ஆட்டையும்
ஒரே படகில் ஏற்ற கூடாதென்கிற
குடும்ப நீதி விடுகதை.//

அருமை... கவிதை விளங்(க்)குகிறது.
வாழ்த்துக்கள் பா.ரா

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,
ப்ரபா,
starjan,
நிலாமதி,
பாலா சார்,
ஹேமா,
ஜெஸ்,
சைவகொத்துப்பரோட்டா,
சீனா அய்யா,
டி.வி.ஆர்,
சுந்தரா,
மண்குதிரை,
சங்கர்,
பாலாஜி,
கல்யாணி,
முரளி,
ஜெனோ,
ஜமால்,
அசோக்,
தீபா,
மணிஜி,
நவாஸ்,
கௌரி,
ப.ப.சங்கர்,
வித்யா,
அருணா,
ஆடுமாடு(நல்வரவு மக்கா!)
ப்ரியா,
வினோ,
ஸ்ரீ,
விஜய்,
பாலா,
சபி,
காமராஜ்,
குமார்,

எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும்,நண்பர்களே!

சிவாஜி சங்கர் said...

ஆஹா.. நல்லா இருக்கு மாம்ஸ் :)
பாலா எனக்கு அண்ணன்னா பாலாக்கு நீங்க மாமான்னா எனக்கும் நீங்க மாமா தானே..! ச்சே.. இத்தன நாளா மொற தெரியாம போச்சே..
இனி மாப்ளன்னு விளிங்க மாம்ம்ஸ்..

rvelkannan said...

வீடு முழுக்க
பகலிலும் இழைகிறாள்
படிப்பு முடித்த மகள்//
வலிக்கிறது பா. ரா

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் கவிதைக்கு(ம்) அருமைன்னு சொல்லாமப்போனா தெய்வக்குத்தம் ஆயிடும் போல இருக்கே

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் கவிதைக்கு(ம்) அருமைன்னு சொல்லாமப்போனா தெய்வக்குத்தம் ஆயிடும் போல இருக்கே

விக்னேஷ்வரி said...

வீட்டை ரொம்ப மிஸ் பண்றீங்களோ...

மாதவராஜ் said...

படித்த முடித்தவுடன், நிலைகொள்ளாத தவிப்பாய் இருந்தது. அதிர்வுகள் அடங்க காலமாகும்......

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு :-)

thamizhparavai said...

புரிய நேரமாகும் போல...புரிந்ததும் வருகிறேன்...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,

மாப்ள சிவாஜி,
வேல்கண்ணா,
அமித்தம்மா,
விக்னேஷ்,
மாதவன்,
உழவர்,
பரணி,

நிறைய அன்பும் நன்றியும்!