Monday, January 11, 2010

உள்


(picture by cc license, thanks Sam Ilic)

கா
ட்டுச்
செடி

ள்ளிப் பூ

ங்கராந்திப் பொங்கல்

த்திய சோதனை

வீடு பேறு

ஸ்கோர் என்ன?

சொல்ல சொல்ல எழுதியதில்
மஞ்சள் முதலாவது.

கை வளை சத்தம்.

மீன் குழம்பு வைக்கட்டா?

ழகர் கோவிலுக்கு அழைத்து போன
சிவகாமி டீச்சர்.

வானி எப்படி இருக்கோ பாவம்.

கள் கல்யாணம்.

ஸ் ஸ்டாண்டுக்கு எப்படி போகணும் சார்?

ஸ்வஸ்திக் கோலத்தில்
ஒட்டிய நெற்றிப்பொட்டு

புள்ளைகள் தூங்குதுக சனியனே.

சிரிப்பு.
தூக்கம்.
விழிப்பு.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அப்புறமும்
வேறென்னவோவுல..

திருப்பியும்
தூங்கிட்டேன் போல.

49 comments:

நர்சிம் said...

உள்ளின் வெளி அருமை.

Vidhoosh said...

போரடிக்குதுங்க... அருமை என்ற வார்த்தையைச் சொல்லிச் சொல்லி. வேறு வார்த்தை இருந்தா சொல்லுங்க.

அப்புறம் - வீடு பேரா? வீடு பேறா???


--வித்யா

நட்புடன் ஜமால் said...

கலக்கல் மக்கா

மறுபடி தூங்கிய பொழுது ...

சரி சரி அடுத்த “உள்” ...

முனைவர் இரா.குணசீலன் said...

உள்மனதின் ஓசைகளின் அழகான பதிவு..

அ.மு.செய்யது said...

விதூஷ் சொல்றமாதிரி அருமைன்னு சொல்லி போரடிக்குது.நீங்க கவிதை எழுதினது போதும்.கொஞ்சம் மாறுதலுக்கு சிறுகதை எழுதுங்க...

காலத்தின் வாசனை சிறுகதை அருமை.மரப்பாச்சியின் சில ஆடைகள்ல வாசித்தேன் பா.ரா.

செ.சரவணக்குமார் said...

அருமை பா.ரா, நண்பர் செய்யது சொல்வதுபோல அவ்வப்போது சிறுகதையும் எழுதலாமே அண்ணா.

மணிஜி said...

"என் ராசா!!” (படபடவென்று முறிகிறது)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அ.மு.செய்யதுவை வழிமொழிகிறேன்

rvelkannan said...

சின்ன சின்னதாய் உள் வெளிகள்
வெளிப்படும் வார்த்தைகளில்
மினு மினுப்பை தெறிக்கிறது.

Rajan said...

சூப்பர் தலிவா !

சிநேகிதன் அக்பர் said...

உள் மனச்சத்தங்கள் உங்களுக்கு கேட்டிருக்கிறது.

கவிதை அருமை.

விக்னேஷ்வரி said...

படம் எங்கே இருந்துங்க கிடைக்குது உங்களுக்கு...
படம் நல்லாருக்கு (எப்போவும் கவிதை நல்லாருக்குன்னு சொல்லி போரடிக்குது மக்கா.)

SUFFIX said...

அருமை அண்ணே!!

அன்பேசிவம் said...

அடிக்கடி விழித்துக்கோங்க மகப்ப்பா! இன்னும் நிறைய கிடைக்குமென உறங்காமல்..

ராகவன் said...

அன்பு பாரா,

உள் நுழைந்து பிளிறுகிறது ஒரு மதம் கொண்ட யானை, அங்குசம், ஆணை எல்லாம் தோற்கிறது, வெட்கி தலை குனிகிறது மரபுகள் நிறைந்த சிந்தனை பெருவட்டம். ஒளிப்பேழையில் ஒடுங்குகிறது ஓராயிரம் சூரியன்கள் செப்படி வித்தைக்காரன் பாராவின் கையில்.

என்ன ஒரு வடிவம் பாரா... ஒரு தினுசாய் கழுத்தை சாய்த்து பார்க்கும் புதிய நாய்க்குட்டி போல.

யார் பவானி, யார் வசந்தா டீச்சர், யாருக்கும் கவலையில்லை, பாராவின் கவிதையில் சிக்குறுவதில் எல்லோருக்கும் சந்தோசம். பூசணிப்பூ பூத்திருக்கும் சாநிபிள்ளையாரில் ஸ்டிக்கர் பொட்டு, எங்கிருந்து இழுத்து வருகிறீர்கள் இந்த நூதனம் கெட்டித்து போனா தேர்சக்கரங்களை... எல்லோரையும் கடந்து விண்ணில் ஏறி பறக்கிறது புஷ்பக விமானங்களாய் உங்கள் கவிதைகள் பாரா... கழுத்து சுளுக்குகிறது அண்ணாந்து பார்த்து பார்த்து...

கதம்ப நினைவுகளில் குழம்பி பெறுவதும் நறுமணம் தானே பாரா..

நிதி சால சுகவா... இல்லை பாராவின் கவிதை படிப்பது சுகமான்னு கேட்டா... என் ஒட்டு உங்களுக்கு தான் பாரா.

அன்புடன்
ராகவன்

அம்பிகா said...

உள்மன ஆசைகளே,
ஓசைகளாய் வெளிப்படுகின்றன...
அப்படித்தானே?.. பா. ரா..

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்....

Ashok D said...

ஒத்துக்கமுடியாது... ஒத்துக்கமுடியாது... இது அயில் போங்காட்டம்

சுசி said...

நல்லாருக்கு பா.ரா.

//திருப்பியும்தூங்கிட்டேன் போல.//

காட்சிகள் மாறலாம்..

விஷயம் ஒண்ணுதான் அந்நிய தேசத்தில் வாழும் எம்மவர்க்கு :(((

vasu balaji said...

இது எல்லாரும் அனுபவிக்கறது தான். ஆனா பா.ரா.க்குதான் இப்படி சொல்ல தெரிஞ்சிருக்கு. ம்ம். :)

Paleo God said...

யார் பவானி, யார் வசந்தா டீச்சர், யாருக்கும் கவலையில்லை, பாராவின் கவிதையில் சிக்குறுவதில் எல்லோருக்கும் சந்தோசம். //

எனக்கும்..::))

Unknown said...

கொஞ்சம் பழைய மாண்டேஜ் உத்தி தான் என்றாலும் படிப்பவரை கவிதையுடன் நெருங்க வைக்கும் வரிகள்.

S.A. நவாஸுதீன் said...

என்ன பன்றது, ரெடிமேட் கமெண்ட்தான். இங்கே அதுமட்டும்தானே போடமுடியும். நீங்க பட்டையை கெளப்பிகிட்டே இருங்க மக்கா.

////வேறென்னவோவுல..////

மக்கா! நேத்து ஃபோன்ல நூரா கிட்ட என்னென்னம்மா வேனும்னு கேட்டப்ப எல்லாத்தையும் சொல்லிட்டு ஏதோ ஒன்று மறந்து யோசிக்கும்போது இதான், இதேதான் சொன்னாக.

Ramesh said...

உள் குத்தி மனசு இனிக்குது பாராட்டுக்கள்

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு பா.ரா... (திரும்ப திரும்ப இததான் சொல்ல வேண்டி இருக்கு..:)

ஹேமா said...

அண்ணா உள்வீட்டு ஓசைகள் பேச்சுக்களை வச்சும் கவிதை எழுதலாமா !ம்ம்ம்....யோசிக்கிறேன்.

எங்க வீட்டுப் பக்கமும் வந்து போங்க.சொன்னாத்தான் வருவீங்களோ !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாயிருக்கு ராஜாராம். உங்கள் மனத்தின் அடியில் கிடக்கும் எண்ணங்கள் வார்த்தைகளாகக் கொட்டியதில் கிடைத்த கவிதை. வாழ்த்துகள் மக்கா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

நேசமித்ரன் said...

பாட்டன் பெயரை பெயரனுக்கு வைப்பது கூப்பிட்டு அழகு பார்க்கவும் பிரியத்தின் அசை போடலும்

கவிதையும் அப்படிதான் போல
கனவாயும் நினைவாயும் புலன் மயங்கும் பொழுதுகளிலும்

வாழ்த்துகள் பா ரா

Radhakrishnan said...

அருமையாக இருக்கிறது.

பாலா said...

இங்க வழி மொழிய ஏகப்பட்ட பேரு கமெண்ட் போட்டுருக்காங்க யாரை வழி மொழிவது ?
மாம்ஸ் போன ரெண்டு போஸ்டுக்கு கமென்ட்டலை மன்னிக்க

வினோத் கெளதம் said...

இப்படி போய்ட்டு அப்படி வரர்த்துக்க்குலே ஒன்னு ரிலீஸ் பண்ணிடுறிங்க..எங்க இருந்து மக்கா யோசிக்கிறிங்க..;)

நல்லா இருக்கு தல..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை
கலக்கல்
நல்லாருக்கு
அருமையாக இருக்கிறது
வேறு வார்த்தை இருந்தா சொல்லுங்க.

சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது .இனிமே வெறுமனே ஓட்டைப் போட்டுட்டுப் போகப்போறேன்.

கமலேஷ் said...

உல் மன பிதற்றல்களையும் கவிதையாக செய்து இருக்கறீர்கள்...மிகவும் நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள்...

MJV said...

உள்ளொன்று வைத்து உள்ளதையே சொல்லியிருக்கீங்க... உங்களுக்கு கவிபெருஞ்சோழன் என்ற பட்டமளிக்கிறேன் (பட்டம் கொடுக்க தகுதி எனக்கில்லை இல்லை என்றாலும்!!!:-)).... . கவிபெருஞ்சோழன் பா.ரா அவர்களே கருவேல நிழலையும் வாங்கி விட்டேன்.... நண்பர் பொன்.வாசுதேவன் அனுப்பி விட்டார்.... இனி எங்க ஊர்ல கவி மழைதான் போங்க....

சந்தான சங்கர் said...

உள் இருக்கும் மனம்
உள்ளார்ந்து
உரைக்கின்றது..
உணர்ந்திட்ட
உள்ளங்கள் வெளிவந்து
ரசிக்கின்றது...


வாழ்த்துக்கள் மக்கா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆழ் மனதின் அர்த்தங்களையெல்லாம் அறிந்து வைத்திருக்கீங்களே ...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாருக்குண்ணா...!

சத்ரியன் said...

//புள்ளைகள் தூங்குதுக சனியனே.//

எப்படி மாம்ஸ் துணிகிறது அந்தச் சொற்கள்....?

Thenammai Lakshmanan said...

//காவிரிக்கரையோன் MJV said...
உள்ளொன்று வைத்து உள்ளதையே சொல்லியிருக்கீங்க... உங்களுக்கு கவிபெருஞ்சோழன் என்ற பட்டமளிக்கிறேன் (பட்டம் கொடுக்க தகுதி எனக்கில்லை இல்லை என்றாலும்!!!:-)).... . கவிபெருஞ்சோழன் பா.ரா அவர்களே //

எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிடுறாங்க ..இனி எனக்கு என்னமிச்சம் இருக்கு பாரா

இதுதான் நான் சொல்ல விழைவதுவும்

கல்யாணி சுரேஷ் said...

என்னண்ணா கனவா? (ஆமா அது யாரு பவானி?)

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

”உள்” நல்லாயிருக்குங்க..... உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

எப்பவும் போல அழகு சார்.... ககக்குங்கோ

வணக்கம் பா.ரா

RaGhaV said...

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. :-)))

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மிகுந்த அன்பும் நன்றியும்!

goma said...

உள் மன ஓசை இவ்வளவு உரக்கக் கேட்கிறதே...
இத்தனை நாள் பா.ரா.வைப் பாராமுகமாய் இருந்து விட்டேனே

ரௌத்ரன் said...

உள்ள என்ணென்ணமோ ஓடுது போங்க :))

இரசிகை said...

:)

azhagu..!