(picture by cc license thanks Wonderlane)
குச்சி குச்சியாக
சேகரித்தது.
கூடு கட்டியது.
முள்ளைக் கொண்டு
முள்ளை எடுக்கிற நமக்கும்
ஒரு குச்சி மட்டுமே
தேவையாக இருக்கிறது.
அக்குடும்பம்
கலைந்து விடுகிறது.
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...
59 comments:
அதிசயமா இருக்கு. நான் தான் first-ஆ?
கவிதை அருமை பா. ரா. ஒருவரது சந்தோஷத்தில் இன்னொருவரின் வலி இருக்கு தானே? சில நேரம் ஒருவரின் இழப்பு மற்றவருக்கு gain.
என்டர் என்டறாய் தட்டினேன்.
கவிதை வந்தது.
முள்ளைக் கொண்டு முள்ளை எடுக்கிற
பலருக்கும் ஒரு கவிதை மட்டுமே தேவையாக இருக்கிறது.
என் பதிவு அழிக்கப்பட்டது.
ஹி ஹி...எத்தன தடவ தான் "நல்லா இருக்கு பா.ரா.னு சொல்லறது..அதான் என்டர் தட்டிட்டேன்..
அப்ப நான் 4ர்தா?
அவ்வாறு கலைந்த குடும்பத்தின் வலி நமக்கு தெரிவதில்லை. நுணுக்கமான கவிதை.
அழகு!
நல்லாயிருக்கு நண்பா
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
நல்லாயிருக்கு சித்தப்ஸ் :)
மிக நுண்ணிய பார்வையுடன் வலியை காட்சிபடுத்திய கவிதை பா.ரா !
வாழ்த்துக்கள்
( அப்பாடா ஒருவழியா முன்னாடியே வந்தாச்சுப்பா ...)
அருமை பா ரா!
முள்ளைக் கொண்டு
முள்ளை எடுக்கிற நமக்கும் //
நல்லாருக்கு.
என்ன, வேலை ரொம்ப அதிகமா மக்கா...
மாம்ஸ் கூர்மையான பார்வை உங்களது..!!
சித்தப்ஸ் சொல்ல மறந்துட்டேன்.. தலைப்பு கவித :)
அசத்தல்ண்ணே..:))
//குச்சி குச்சியாக
சேகரித்தது.
கூடு கட்டியது.'//
இந்த நிலையில் இருப்பதால் எனக்கு அடுத்தடுத்த வரிகளின் ஆழம் அனுபவ பூர்வமாய் உணரமுடியவில்லை..ஆனால் முன்னமே ஆயத்தமாகிக் கொள்ளலாம்.
நன்றி பா.ரா. சார்.அட்டகாசம் பண்றீகள்..
கவிதை அருமை
கவிதை அருமை. ரியாத்லயிருந்து எப்ப வர்றீங்க அண்ணே.
ரொம்ப நல்லா இருக்கு.. தலைப்பும் மிகவும் பிடித்திருந்தது
அருமை
கவிதை அருமை பா.ரா.
வலி
யார் கூட்டை கலைச்சேனோ நான்' என்று அரற்றுவார்களே..அதானா இது?
டெம்ப்ளேட் கமெண்ட். “நல்லா இருக்கு மக்கா”.
வேற இங்கே வந்தால் வேற என்ன சொல்லமுடியும்.
நெஞ்சில் முள்ளை தைத்து விட்டீர்கள்.
நல்ல கவிதை
நீங்கள் அங்கே எங்கே குச்சி எடுத்தீர்கள் இப்போ ? இந்தக் கவிதை வர.
கவிதை அழகு.
:(
வீட்டில் சாயும் மரம்ன்னு ஒரு அருமையான கவிதை எழுதிட்டு, இதென்ன இவ்வளவு பெருசா குச்சி கிச்சின்னு விளக்கமா? மகாப்பா....
வழக்கம் போல கவிதை அருமை.
வெகு அருமை பா.ரா
அழகு பாரா.
நாட்கள் கொஞ்சம் கடந்தாகிவிட்டது...
அலைபேச்சில் கேட்ட பாசாங்கற்ற மனிதம் தொடர்ந்து பேச உண்டான தொல்லைகளற்ற நேரங்களை கோரிக்கொண்டேயிருக்கிறது..
இடையில் கொஞ்சம் பயணம் போலும் இருபக்கமுமே..
கவிதைகள் குறித்து பரஸ்பரம் உணர்த்துதலும் உணர்தலுமே போதுமானது...
நிரம்ப வாசிக்கவும், லயிக்கவும்,அதன் பின் எளிமையானதும் கனமானதுமான அர்த்தங்கள் நிரம்பிய உங்களின் எழுத்துக்களை நட்புக்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியம் கொள்ளவைப்பதில் ஒரு அலாதியான சுகம் இருக்கிறது பா.ரா..
திரும்ப விட்ட இடங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நல்லா இருக்கு மாம்ஸ்
அன்பு பாரா,
எப்படி இருக்கிறீர்கள்?
வீட்டில் சாயும் மரம்...அழகான தலைப்பு. பொருத்தமாய் இருக்கிறது??
ஒரு சிறிய குச்சி விருட்ஷமாய் போவது கருவேல நிழலில் மாத்திரமே என்று நினைக்கிறேன்.
இது ஒரு மடக்கு கவிதை பாரா... முழுக்க விரிக்கும்போது தான் அதன் நீளம் அகலம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
பறவைகள் கட்டும் கூட்டின் உள் சுற்றில் முட்களை வைத்து கட்டுமாம் பறவைகள், குஞ்சுகள் கொஞ்சம் பெரிதானவுடன் குத்துகின்ற முட்கள் தரும் வலியை பொறுக்க முடியாமல் கூட்டை விட்டு பறக்க யத்தனிக்குமாம். இதை படிக்கும்போது ஏனோ அது ஞாபகம் வந்தது.
வீட்டில் சாயும் மரம்...
அன்புடன்
ராகவன்
\\ஒரு சிறிய குச்சி விருட்ஷமாய் போவது கருவேல நிழலில் மாத்திரமே என்று நினைக்கிறேன்.\\
கவிதை அருமை.
அப்பாடி இப்படியெல்லாம் வலியா.....
பாராட்டுக்கள் அண்ணே
ஒரு குச்சி.இப்பிடி ஆழமான விஷயம் சொல்ற கவிதை.அண்ணா...!
ஆமா சித்தப்பு... அது குச்சி குச்சியா வச்சு கட்டிருக்க வீட்டை ... நம்மாளுக ஒரு குச்சிய வச்சு டபக்குனு தட்டி கீழ விழுத்தாட்டிருவாய்ங்க...
என்னத்த சொல்ல... வழக்கம் போல நல்லாயிருக்குன்னே நானும் உண்மைய சொல்லிட்டு அப்பீட்டுரேன். :-)
கவிதை தலைப்பில் இருக்கிறது
பா.ரா
:)
கட்டுவதை விட கலைப்பதுதான் எளிது என மனிதன் நினைக்கிறான்.ஆனால் கட்டுவதில் கிடைக்கும் மன அமைதி கலைப்பதில் கிடைப்பதில்லை,மாறாக குற்ற உணர்வே மிஞ்சும்.
கவிதை கரு அசத்தல்.தலைப்புக்கு தனியாக ஒரு சபாஷ்
கூட்டு குடும்பமும் அவை சாய்வதும் ஞாபகத்தில் வருது மக்கா
பிரமாதம்!
ஒரு குச்சியில் தத்துவம் சொன்னதால் இனிமேல் நீங்கள்
"குச்சிக்கவி பாரா" என மக்களால் அன்போடு அழைக்கப்படுவீர்களாக !!!
//முள்ளைக் கொண்டு
முள்ளை எடுக்கிற நமக்கும்
ஒரு குச்சி மட்டுமே
தேவையாக இருக்கிறது.//
வித்தியாசம்
பறவைகள் தொலைத்திருக்கிற மரம்..
பட்டையிலிருந்து வழிகிறது பிசின்.
கூட்டைக் கலைத்த வீட்டு உத்திரத்தில்
கண்ணுக்குத் தெரியாமல்
ஆடுகிறது ஒரு கயிறு.
அருமை...
கான்கிரீட் கூடுகளில் குச்சிக்கு வேலையில்லை இப்போது.
மரங்களே ரசாயனத்தில் சாய்ந்து கொண்டு இருக்கிறது வீட்டின் மீது
கூரிய பார்வைக்கு வாழ்த்துக்கள்
விஜய்
கவிதை அருமை பா. ரா
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
வழக்கம் போலத்தான்.வேலைகள்.தனித் தனியாக பேச முடியலை மக்கா.மன்னியுங்கள்.பேசலாம்.எங்கே போகப் போகுது எல்லாம்?
எல்லோருக்கும் அன்பும் நன்றியும்!
குச்சி குச்சியாய் சேகரித்து
வீடு கட்டி - இது பெரும் பிரயத்தனம்
கலைந்து விடுவதும் பெரும் வேதனை --
குச்சியாய் இங்கே பலரும் பிரயத்தன்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்...கலையாதிருப்பது சில ...
படிக்க படிக்க வலி , அருமை பா ரா
ஜேகே
படிக்க படிக்க வலி
//நேசமித்ரன் said...
கவிதை தலைப்பில் இருக்கிறது
பா.ரா
:)//
உண்மை மக்கா
சுருக்கமான "சுருக்" கவிதை. பாரா வை இத்தனை நாள் பாராது இருந்தது எனக்கு இழப்பே.
ஆமா! மக்கா! உங்க ஊரு எது? நம்ம நாகர்கோயில் பக்கமா?
அசத்தல்ண்ணே...
அண்ணனே
எப்படி இர்ருகீங்க......அண்ணனுக்கு பண்ணிய போன் கிடைத்தது
விகரதிர்க்கு போன் பண்ணவும்
கவிதை மிகவும் வித்தியாசம். எனினும் கூரிய வார்த்தைகள் குத்தினாலும் விலகாது உணர்வு புரிந்த உறவுகள்.
ப்ரியங்கள் நிறைந்த என்,
ஜேகே,
வேல்கண்ணா,
தேனு,
ஈஸ்வரன்,வாங்க கடவுளே.. :-)
பரணி,
மதி,
ராதா,
எல்லோருக்கும் ரொம்ப நன்றியும் அன்பும் மக்கா!
நல்லாயிருக்கு
arumai...:)
Post a Comment