Friday, March 19, 2010

பிடித்த பத்து பெண்கள்

தேனு மக்கா கூப்பிட்டு இருந்தாங்க, இந்த தொடருக்கு. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான். ரொம்ப நல்ல்ல்லல்ல்வன்னு வேறு சொல்லிட்டாங்க. ரொம்ப நன்றிங்க மக்கோய்...

ரூல்ஸை பாருங்கங்க..

1.சொந்தக்காரங்களா இருக்கக் கூடாதாம். (நல்ல எண்ணம்யா...)

2.வரிசை முக்கியமில்லையாம் (ரொம்ப முக்கியம்..)

3.ஒரே துறையில் பல பெண் மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்குமாம். ஆனால், அதுல்லாம் இங்க செல்லாதாம். இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள். சரியா?(வெளங்கிருச்சு! இதுல "சரியா?"வேறு...)

ஆகட்டுங்கக்கோய்...

**

1.தோழி நாகேஸ்வரி

"யார் என்ன சொன்னால் என்னடா? நம்ம மனசுல தப்பு இல்லைல? நீ என் நண்பன்டா"என்று சொல்பவர்கள். நான் தெருவில் கிடந்த போது என்னை கையில் எடுத்து கொண்டவர்கள். "இப்ப பிரச்சினைகள் இல்லாமல் இருக்கியே இதுவே போதும்" என்று தொலைவில் நிற்கிறார்கள். எங்கு நின்றால் என்ன தோழி? இப்பவும் மனசில் நிற்கிறீர்கள்! உறவுகளை சொல்லக் கூடாதாம் என்ற போது-முதலாவதாய்!

2.அம்பை

பெண் எழுத்தாளர். ரொம்பவும் முன்னால் வாசித்தது. இப்பவும் மனசில் நிற்பவர்கள்!

3.செல்வநாயகி

நின்று போயிருந்த வாசிப்பை மீண்டும் திறந்து தந்தது இந்த வலை உலகம்தான். நேசன் மூலமாக இவர் தளம் அறிந்து தொடர்ந்து வாசித்து வருகிறேன். பிரமிப்பு ஏற்படுத்தும் எழுத்து,உயரம்!நிறைய நேரம் வாசித்து,பின்னூட்டம் கூட போட பயந்து ஓடி வந்துருவேன். என் வலைத் துறையில்,ரிசப்சன் பிரிவில் இருக்காங்க.(யோவ்..யாருயா குரல் கொடுக்குறது.படம் போட்டாச்சுல்ல பாருங்கையா..)

4.அமித்தம்மா

(ஹல்லோவ்...ரூல்ஸ் காரவுகளே..உங்களைதான்! ஒரே ஆபிசு,வேறு வேறு டிபார்ட்மென்ட் இருப்பதில்லையா? அந்த கேட்டகரிலதான் பேசுறேன்...சும்மா,சும்மா குறுக்க வரக் கூடாது. தெரியும்ல, சிவகங்கையான்கள?..விடுறா தம்பி. நீ எதுக்கு பொருள எடுக்குற? அண்ணன்தான் பேசிகிட்டு இருக்கேன்ல? பாசக் கார பயபுள்ளைகளா...)

என்ன சொன்னேன்? ஆங்...அமித்தம்மா!

சிறுகதை டிபார்ட்மென்ட்ல இருக்காங்க பாஸ்! உண்மையில் இருந்து உண்மையை எடுத்து உண்மையாலுமே எழுதுறாங்க. அமித்து அப்டேட்சும் ரொம்ப பிடிக்கும். என்னவோ, சிறுகதையில் கரைந்து போகிறேன்.

5.முல்லை

பத்தியா? சமூகமா? அரசியலா? இலக்கியமா? நகைச்சுவையா? கூப்புடுறா முல்லையை என்று குரல் கொடுக்கலாம்! என்றாலும் டிபார்ட்மென்ட் சொல்லணும் இல்லையா? பப்பு டைம்ஸ் மச்சி! சிரிச்சு சிரிச்சு நிறைந்து போகிறேன்.

6.வித்யா(vidhoosh)

முல்லை டிபார்ட்மென்ட்தான்! ஆபீஸ் வேற. அடையார் பிராஞ் மாதிரி...எதை கொடுத்தாலும் பேசுவாங்க. மேட்டர் பார்ட்டி மாப்ள. ஏகப்பட்ட stuff! ஆபீசா?..முல்லை ஆபீசுல இருந்து வெளில வர்றீங்கல்ல லெப்ட்ல திரும்புங்க. பிள்ளையார் கோயில் வரும். பிள்ளையார்ட்ட கேட்டாக் கூட சொல்லுவாரு. சுறுக்கமா, சகலகலா டிபார்ட்மென்ட்ன்னு வச்சுக்குங்களேன். அப்படில்லாம் டிபார்ட்மென்ட் இல்லையா? யார் சொன்னது?எங்க ஊருல இருக்கு!

7.தமயந்தி

இங்கிட்டு தமயந்தி!..அங்கிட்டு? (அதட்டாதீங்க..அழுதுருவேன்) பாராங்க (கிடு..கிடு..கிடு)

8.லாவண்யா

இந்த டிபார்ட்மென்ட்ல கூட்டம் ஜாஸ்த்திதாம்ப்பு. தள்ளு முல்லா இருக்கும். ஒண்ணுக்கு பத்தா சொல்லலாம்தான். ரூல்ஸை மீறக் கூடாதுல. நூல் பிடிச்சது மாதிரி போகணும் பாருங்க...நாளைக்கு ஒண்ணுன்னா ஊரை பேசி புடுவாய்ங்கயா..கவிதை டிபார்ட்மென்ட்டுங்க-இந்த லாவண்யா!

9.விக்னேஸ்வரி

confident டிபார்ட்மென்ட் பாஸ்! எழுத்தில் நம்பிக்கை தெறிக்கும். துரை சார்ந்த கண்,பார்வை,பேச்சு,எழுத்து!போனில் பேசும் போது கூட,"மாம்சு, உங்க கலருக்கு(பார்க்காமயே கலரை கண்டு பிடிக்கிறாய்ங்கைய்யா..) வேஷ்ட்டி,சட்டை,வெள்ளை பெல்ட்,ஹவாய் செப்பல்,கையில ஒரு மஞ்சப் பையி புடிச்சிங்கன்னா மகளுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்குற தோரணை வந்துரும். அப்புறம் வேற என்ன வேணும் உங்களுக்கு?" என்பார்கள். சர்தானுங்க மருமகளே என்று இந்த டிபார்ட்மென்ட்டை ஒதுக்கியாச்சு.

10.கார்த்திகா வாசுதேவன்.

புத்தக விமர்சனமெல்லாம் ரொம்ப நல்லா பண்றாங்க மாப்ள! கருவேலநிழல்ன்னு ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதி இருந்தாங்க பாரு...நானே விசில் பிரிச்சிட்டேன்னா பாரேன். மாப்ள கேளேன்...மாப்ள நீ கேளேன்...அதுனால விமர்சனம் செக்சனுக்கு மேனஜேர் ஆக்கிட்டேன்.

இன்னும் அனேகர் உளர். அபிஷ்ட்டு..கூடாதுடா என்கிறது கமிட்டி. ஷேமம்...நல்லாருங்கோ கமிட்டிவாள்!

உஷ்..அப்பாடா!

பெண்கள் தினமாம்! அதுனால பிடிச்ச பத்து பெண்களை பத்திப் பேசணுமாம். எங்களுக்கு தினம் தினம்தான் தினம்! நாங்க எதுனா பேசுறோமா? என்னா கொடுமை சார் இது?...

மூணு பேரை வேறு கூப்பிடனுமாமே? வாங்க,ஜெஸ்வந்தி, சுசி, சித்ரா!

மாறுதலுக்கு பிடித்த பத்து ஆண்களைப் பற்றி பேசுங்களேன்...அம்மா, நீங்க பேசுங்களேன்...தாயே நீங்க பேசுங்களேன்...அக்கோவ்..நீங்க பேசுங்களேன்...

இப்பப் பார்த்து சிக்னல் எடுக்காதே?..

58 comments:

Ashok D said...

firstu????

Ashok D said...

yaaaaaaaaaa

Ashok D said...

சித்தப்ஸ் படிச்சுட்டேன்... வேகமாதான்.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

4.அமித்தம்மா

(ஹல்லோவ்...ரூல்ஸ் காரவுகளே..உங்களைதான்! ஒரே ஆபிசு,வேறு வேறு டிபார்ட்மென்ட் இருப்பதில்லையா? அந்த கேட்டகரிலதான் பேசுறேன்...சும்மா,சும்மா குறுக்க வரக் கூடாது. தெரியும்ல, சிவகங்கையான்கள?..விடுறா தம்பி. நீ எதுக்கு பொருள எடுக்குற? அண்ணன்தான் பேசிகிட்டு இருக்கேன்ல? பாசக் கார பயபுள்ளைகளா...)///

:)))

gulf-tamilan said...

/எங்களுக்கு தினம் தினம்தான் தினம்! நாங்க எதுனா பேசுறோமா? என்னா கொடுமை சார் இது?/
அதானே,என்ன ஆணியாயம்:)))

Anonymous said...

அருமையான தேர்வுகள். இதுவரை படிச்சதில் பிடிச்சது இதுதான்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்ன பா.ரா.? பொம்பளைகளிடம் இத்தனை பொறாமை வேண்டாமே!
என்னையும் மாட்டி விட்டாச்சா? ஒருபடியாய் தப்பி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

Chitra said...

மம்மி................... 10 ஆண்கள் பத்தி எழுதணுமாம்........ மம்மி....... மம்மி.........!!!

Raghu said...

//உறவுகளை சொல்லக் கூடாதாம் என்ற போது-முதலாவதாய்!//

மிக‌ அழ‌கான‌ வ‌ரி :)

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான தேர்வுகள்

புலவன் புலிகேசி said...

அட பதிவுலக பெண்களையே தேர்வு செஞ்சிட்டீங்களா...சபாஷ்.

விநாயக முருகன் said...

தலைப்பை பார்த்து
நமீதா த்ரிஷா அனுஷ்கா எ‌ன்று எதிர்பார்த்து வந்தேன்

KarthigaVasudevan said...

முதலாமவரைத் தவிர எல்லோரையும் வாசித்திருக்கிறேன்.
"வாத்சல்யத்தை வார்த்தைகளில் குழைத்துப் பூசிக்கொண்டு புன்னகைக்கும்" உங்களது கவிதைகளுக்காக பா.ரா வை எங்களுக்கும் மிகப் பிடிக்கும் .நன்றி பா.ரா.

இரசிகை said...

rules yellaam meereettu
samththunnum per vaangura ungalukku raja yogam thaan ponga!!

vazhakkam pola superb...rajaram sir!
kalakkiyirukkeenga!

antha pathu pengalukkum vaazhthukal...ithellam avungalukku award polathaane:)

இரசிகை said...

(mela ulla commentla)samaththu-spelling thappaayiduchu........ee

//
4.அமித்தம்மா

(ஹல்லோவ்...ரூல்ஸ் காரவுகளே..உங்களைதான்! ஒரே ஆபிசு,வேறு வேறு டிபார்ட்மென்ட் இருப்பதில்லையா? அந்த கேட்டகரிலதான் பேசுறேன்...சும்மா,சும்மா குறுக்க வரக் கூடாது. தெரியும்ல, சிவகங்கையான்கள?..விடுறா தம்பி. நீ எதுக்கு பொருள எடுக்குற? அண்ணன்தான் பேசிகிட்டு இருக்கேன்ல? பாசக் கார பயபுள்ளைகளா...)

என்ன சொன்னேன்? ஆங்...அமித்தம்மா!

சிறுகதை டிபார்ட்மென்ட்ல இருக்காங்க பாஸ்! உண்மையில் இருந்து உண்மையை எடுத்து உண்மையாலுமே எழுதுறாங்க. அமித்து அப்டேட்சும் ரொம்ப பிடிக்கும். என்னவோ, சிறுகதையில் கரைந்து போகிறேன்.
//

yenakku ivungalai mattumthaan theriyum..............

yenakkum ivungalaip pidikkum!

நட்புடன் ஜமால் said...

அழகு மக்கா!

sathishsangkavi.blogspot.com said...

Sir...Superrrrrrr...

எல்லாரும் அரசியல், சமூக, தொண்டு நிறுவன பெண்களைப்பற்றி எழுதும் போது நீங்க நம்ம வலை பெண்களைப்ற்றி அழகாகவும் அழுத்தமாகவும் கலக்கீட்டடிங்க....

செல்வநாயகி said...

அன்பிற்கினிய ராஜாராம்,

நான் வலைப்பதிவுகளில் எழுதி வருவது மழைக்குப் பள்ளிக்கூடம் ஒதுங்கிய கதைதான். ஒரு ஒழுங்கோ, திட்டமிடலோ, நல்ல நண்பர்களை (உங்களையெல்லாம்தான்) அறிந்துகொள்ளும் ஒரு உத்வேகமோகூட இன்றி எப்போதாவது எதையாவது (அதற்கும் பின்னாலே நெம்புகோலிடும் நல்ல உள்ளங்களின் தூண்டுதல் உண்டு) எழுதிவருகிறேன்.

ஆனால் உங்களின், நேசமித்ரனின் அன்புக்கெல்லாம் என்ன சொல்வது? இப்படியாக இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். நன்றி எல்லோருக்கும்.

நர்சிம் said...

;)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்திட்டீங்க, பா.ரா. சார்.

அம்பிகா said...

நல்ல பதிவு.
நல்ல அறிமுகமும் கூட.
அதென்னவோ பாரா எதை எழுதினாலும் களை கட்டி விடுகிறது.

rvelkannan said...

அம்பை
....ம்
காட்டில் ஒரு மான்
மறக்க முடியாது தான் பா. ரா

சிநேகிதன் அக்பர் said...

அருமை பாரா அண்ணே.

பிடிச்ச பெண்களை சொன்ன மாதிரியும் ஆச்சு.

பதிவர்களை அறிமுகப்படுத்துன மாதிரியும் ஆச்சு.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே நீங்க இந்த இடுகையைப் போட்டுட்டீங்களா...

வெரி குட் & நைஸ் போஸ்டிங்..

நான் ஒரு மாசம் டைம் வாங்கியிருக்கேன். விரைவில் போட்டுவிடுவேன்.

இராகவன் நைஜிரியா said...

ஹை... மீ த 25

Deepa said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
:‍)

Vidhoosh said...

யெலேய் இதாண்டா மேண்டிலு

இதென்னண்ணே செய்யுங்?

இதாண்டா பளிச்சுன்னு எரியும்

போங்கண்ணே..... இதெப்டிண்ணே பளிச்ன்னு எரியும்?
==================================


பாரா-ண்ணே நன்றிங்கண்ணே..

இப்படிக்கு
மேண்டில் (நட்சத்திரங்களுக்கு நடுவில்)

Vidhoosh said...

நாகுக்காக ஏதும் கவிதை படிச்சீங்களா..

எங்க இப்டி கொடுங்க....

Thenammai Lakshmanan said...

கலக்கிபிட்டீங்க மக்கா ரொம்ப அருமை
மிரண்டு போய் நிக்குறேன் இத்தனை பேரோடதை படிக்கிறீங்களா நேரம் கிடைக்குதா

க ரா said...

கலக்கீட்டிங்க சார்.

கலகலப்ரியா said...

சும்மா அதிருதில்ல...

tt said...

இந்தப் பட்டியலில் அம்பை??.. எனக்குப் பிடித்தமான பெண்/ஆளுமை..நன்றி!!

விக்னேஷ்வரி said...

மாம்ஸ் நக்கலாவும், கலக்கலாவும் பேச மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன். எழுத்திலேயும் கலக்கிட்டீங்க.

ரொம்ப ரசிச்சு வாசிச்சேன். நேர்ல நீங்களே உக்காந்து சொன்ன மாதிரி இருந்துச்சு.

ஓய், நான் சொன்ன காஸ்ட்யூமை மாத்தி சொன்ன மாமாவுக்கு பொருளெல்லாம் எடுக்காதீங்கய்யா... பெரியவரு. மாமா பொண்ணுகிட்ட சொல்லிக்கலாம், அப்பாவை சரி பண்ணச் சொல்லி. ;)

*இயற்கை ராஜி* said...

:-) Nice

தாரணி பிரியா said...

இதில் அமித்து அம்மா முல்லை விக்கி மூன்று பேரை அறிவேன். அன்பானவர்கள் பிடித்தமானவர்க்ள் கூட‌

நேசமித்ரன் said...

நாக அணை
லட்சுமி
அமிர்தம்
மலர்
மாலின் தங்கை
தங்கையின் வாகனத்தை தூது விடும் நாயகி
லாவண்யம்
மூத்த மருகன் சமேதராக
இளையவன் சமேதராக

வாசுதேவன்


பிரியத்தின் பாற்கடல்
பா.ரா

சுசி said...

அருமையா எழுதி இருக்கீங்க பா.ரா.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கடைசில ஒரு பேர பாத்ததும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. வேற சொல்றத்துக்கு இல்ல..

சுசி said...

அருமையா எழுதி இருக்கீங்க பா.ரா.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கடைசில ஒரு பேர பாத்ததும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. வேற சொல்றத்துக்கு இல்ல..

சுசி said...

அச்சச்சோ.. ரெண்டு தடவை ஒரே கமண்ட போட்டுட்டேனே..

தொடர் பதிவுக்கெல்லாம் கூப்டு மிரட்டினா இப்டிதான் ஆவும் பா.ரா..

அவ்வ்வ்வ்வ்..

பா.ராஜாராம் said...

@அசோக்
மகன்ஸ்,மகன்ஸ்,மகன்ஸ் நன்றி! :-)

@வசந்த்
நன்றி தம்பு!

@gulf-thamilan
நன்றி மக்கா!

@சின்ன அம்மிணி
நன்றி C.A!

@ஜெஸ்
நன்றி ஜெஸ்! :-)

@சித்ரா
அம்மாவை கூப்பிட்டால் பயந்துருவோமா?ஆமா,நீங்க அந்த அம்மாவை கூப்பிடலைல?கிடு..கிடு.. :-) நன்றி சித்ரா!

@ரகு
வாங்க ரகு.மிக்க நன்றி மக்கா!

@சைவ கொத்துப்பரோட்டா
நன்றி எஸ்.கே.பி!

@டி.வி.ஆர் சார்
நன்றி சார்!

@புலவர்
ஆமா புலவரே.பக்கத்துல இருக்கிறாங்க.நெருக்கமாவும்.கூப்புடுவோமே.நன்றி மக்கா!

@விநாயகம்
இந்த பேரை வச்சுகிட்டே இந்த போடு!வம்பன்! :-)நன்றி விநாயகம்!

@கார்த்திகா
ரொம்ப நன்றி கார்த்திகா! :-)

@ரசிகை
வாங்கப்பு...செல்வநாயகி தளத்துல கையெழுத்து போட்டுட்டீங்க போல? எல்லாரையும் வாசிங்க.கலக்குறாங்க.நன்றி ஜோசியரே!(ராஜயோகம்) :-)

@ஜமால்
நன்றி மக்கா!

@sangkavi
நன்றி மக்கா! :-)

@செல்வநாயகி
ரொம்ப சந்தோசமாய் இருக்கு செல்வநாயகி.மிக்க நன்றிங்க!

@நர்சிம்
ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்து கை நனைச்சிருக்கீங்க.சந்தோசமாய் இருக்கு நர்சிம்.நன்றி மக்கா!

@staarjan
நன்றி மக்கா!வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!

@அம்பிகா
உங்களை மாதிரி ஆட்கள் அன்போடு வருவதுதான் இந்த களை அம்பிகா.நன்றி சகோ!

@வேல்கண்ணா
நல்ல வாசிப்புகளை வச்சிருக்கீங்க வேல்கண்ணா.கவிஞர் சுகுமாரன் தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்து சந்தோசமாய் இருந்தது.செய்ங்க மக்கா.நன்றி வேல்கண்ணா!

@அக்பர்
//பதிவர்களை அறிமுகப்படுத்துன மாதிரியும் ஆச்சு//
They are already top seed akbar!ஜஸ்ட் பேசினேன்,அவ்வளவுதான் மக்கா.நன்றி அக்பர்!

@ராகவன் அண்ணாச்சி
வாங்க அண்ணாச்சி.ரொம்ப நன்றி அண்ணாச்சி!

@தீபா
மிக்க நன்றி தீபா!

@வித்யா
:-))சிரிச்சு முடியலை...நாகுவே நல்ல கவிதைதான்.நம்ம கவிதை எடுக்காது.(பருப்பு வேகாது) :-)நன்றி சகோ!

பனித்துளி சங்கர் said...

ஆஹா இது நல்ல யோசனையா இருக்கே !

பனித்துளி சங்கர் said...

உங்களை கவர்ந்த ஆண்களைப் பற்றி எப்பொழுது எழுதப் போறீங்க ?

ரிஷபன் said...

மாறுதலுக்கு பிடித்த பத்து ஆண்களைப் பற்றி பேசுங்களேன்...அம்மா, நீங்க பேசுங்களேன்...தாயே நீங்க பேசுங்களேன்...அக்கோவ்..நீங்க பேசுங்களேன்...
இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

ராமலக்ஷ்மி said...

பதிவு மிக அருமை. அடுத்த தொடரை ஆரம்பித்து வைத்து விட்டீர்கள்:)!

Chitra said...

சிக்னல் கிடைச்சிருச்சி.

http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_21.html

உயிரோடை said...

என்ன‌ தான் அண்ணா அண்ணா கூப்பிட்டாலும் உற‌வு இல்லை அம்ம‌ணின்னு ஊருக்கெல்லாம் சொல்லிடிக‌.

ம்ம்ம் இருக்க‌ட்டும் அண்ணா.

ப‌திவு ந‌ல்லா இருக்கு. ந‌ம்ம‌ டிப்பார்மெண்ட்ல‌ காம்பெடிச‌ன் அதிக‌ம் தான். அண்ணாவுக்கு பிடிச்சி இருக்க‌ற‌துல‌ ச‌ந்தோச‌ம்.

Jaleela Kamal said...

இப்படி காதில் புகை விட்டுக்கிட்டே பதிவு போட்டீஙக போல‌//மாறுதலுக்கு பிடித்த பத்து ஆண்களைப் பற்றி பேசுங்களேன்...அம்மா, நீங்க பேசுங்களேன்...தாயே நீங்க பேசுங்களேன்...அக்கோவ்..நீங்க பேசுங்களேன்...
//
இப்படி கூவியதால் சித்ரா பதிவு போட்டுட்டாங்க‌

அன்புடன் மலிக்கா said...

அசத்தல் தேர்வுகள்..

/யார் என்ன சொன்னால் என்னடா? நம்ம மனசுல தப்பு இல்லைல? நீ என் நண்பன்டா"//

இது சூப்பர். நல்ல தோழி..

வாழ்த்துக்கள்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அன்புக்கு நன்றி பா.ரா.

என்ன இது, செமையா யூத் மாதிரி ரகளையா எழுதியிருக்கீங்க மகா அப்பா.

!!!!!!!!

எதிர்பார்க்கவே இல்லை, அதுவும் அந்த நீ கேளேன்..... ;) அட்டகாசம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி இரசிகை !!!!!!!!!!

'பரிவை' சே.குமார் said...

ரகளையான ரசனையான பதிவு.

தூள் கிளப்பிட்டீங்க பா.ரா.

அட எல்லா பதிவரும் உங்களுக்கு பரிவட்டம் கட்ட வாராங்கய்யா,

ஏய்... கூட்டத்தை கட்டுப்படுத்துங்கப்பா... வரிசையில வாங்க.
நம்ம பாரா இங்கதான் இருக்காரு... அடுத்த பதிவு எழுத விடுங்கப்பா...

Unknown said...

அன்பு ராஜாவுக்கு
தங்கை சுமதியிடம் மட்டும் சொல்லிவிடவா
அன்ன்புதொல்லை காளி

பா.ராஜாராம் said...

@காளி அண்ணா
எம்புட்டு நல்ல மனசு!இதற்கு நீங்கள் லதாவிடமே சொல்லலாம்.இதில் நான் மட்டுமே எரிவேன்.

சுமதி அக்காவிடம் சொல்வதில்,குடும்பங்கள் கொத்து கொத்தாக எரியும்.புல்,பூண்டுகள் முளைக்கா,காற்று மாசுபடும்,சந்ததிகள் பாதிக்கும்...

:-))
(இதையும் சேர்த்து சொல்லிராதீர்கள்)

பா.ராஜாராம் said...

நன்றி ஸ்ரீராம்ஸ்! :-)

நன்றி தேனு மக்கா!கலக்கிட்டோமா?அப்ப கூட்டணி வெற்றிதான்! :-)

மிக்க நன்றி இராமசாமி கண்ணன்!

நன்றி ப்ரியா குட்டீஸ்! ஆமாவா? :-)

நன்றிங்க தமிழ்!உங்கள் விருப்ப பட்டியலில் எனக்கும் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.

நன்றி ம.மகள்ஸ்!என்ன பொடி போட்டீங்க மகாவுக்கு?ஜபம் பண்ணுகிறாள் பெயரை.. :-)

நன்றி இயற்கை!இயற்கையாய் சிரிக்கிறீங்க.nature அப்படியோ? :-)

நன்றி நேசா!பின்னூட்டங்களில் எவ்வளவு பிரியங்களை பொழிகிறாய் மக்கா!தொட்டடுத்து விபரங்களையும். :-)

நன்றி சுசி!கடைசி பெயர் என்றால் posted by பா.ராஜாராம் என்று இருக்கு.அதுவா? :-) ஒன்ஸ் மோர் மற்றும் டூஸ்க்கும்.means thrice. :-)

நன்றி ப.து.சங்கர்!நம்மை பத்தி நாமே எதுக்கு எழுதணும் சங்கர்?சச்சின் விளம்பரத்தில் நடிக்கலாம்.விளம்பரம் சச்சின் மாதிரி அடிக்குமா?(தானா வருது பாஸ்.. ):-)

நன்றி ரிஷபன்!எனக்கும் முன்னாடி பிடிச்சிருந்தது."கேப்பியா,கேப்பியான்னு" சித்ரா அடிச்சாங்க.அப்புறம் அப்ரோச்-ன்னா என்ன ரிஷபன்-ன்னு கேட்டுக் கொண்டு இருக்கிறேன் இப்ப நான். :-)

நன்றி சகா!தெரியாம செஞ்சுட்டேன்.(கிர்ர்..சித்ரா)

பா.ராஜாராம் said...

பார்த்துட்டேன் சித்ரா! கலக்கி இருக்கீங்க(வயிற்றை) :-))எதையும் ப்ளான் பண்ணாம செஞ்சா இப்படித்தான்(வடிவேல் தொணியில் வாசிக்கவும்) மிக்க நன்றி மக்கா! :-)

நன்றி லாவண்யா!போச்சுடா.நீங்க இப்படி வரீங்களா?என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!(பாலையா தொணியில் வாசிக்கவும்) :-)

நன்றி ஜலீலா!சித்ரா பரவால்லை போலையே...டாடி..டாடியோவ்.. :-)

நன்றி மலிக்கா! :-)

நன்றி அமித்தம்மா! :-)

எதுவும் கோபமா குமார்? :-)) நன்றி மக்கா!

'பரிவை' சே.குமார் said...

nanba kobam ellaam illai.

nalla pathivu enpathaalum aduththa pathivu itahivida nalla varum enpathalum solliyathuthaan athu.

manasula irunthu vanthathu.

பா.ராஜாராம் said...

//nanba kobam ellaam illai.//

தெரியும் குமார்.நானும் ஸ்மைலி போட்டிருக்கிறேன் பாருங்கள்.இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதி இல்லையோ என்று தோன்றியது.அதனால் அப்படி கேட்டேன்.என்றாலும் உங்களின் மேலான அன்பிற்கு மிகுந்த நன்றி குமார்!