Sunday, April 11, 2010

கொடுக்கல் வாங்கல்


(Picture by cc license Thanks jesse.millan)

பெயர்களை கூடையில் வைத்து
கூடையை தலையில் வைத்து
விற்றுப் போய்க் கொண்டிருந்தாள்
பேரிளம் பெண்ணொருத்தி.

பெண்ணை பிடித்திருந்ததால்
கூப்பிட்டு பெயரை விசாரித்தேன்.

பெயர்களை விசாரித்ததாக
நினைத்தாளோ என்னவோ
கூடை இறக்கி
விலை சொல்லத் தொடங்கினாள்

யானை விலை
குதிரை விலையாக இருந்தது
ஒவ்வொன்றும்.

தென்னடா வம்பா போச்சென
கையில் இருந்த காசுக்கு பெயர் கேட்டேன்.

தூக்கிப் போட்டாள்
ரெண்டு பெயர்களை.

பெண் பித்தன்
ஸ்த்ரி லோலன்
என்பதாக இருந்தது.

ற்று கூச்சமாக இருந்தாலும்
ஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.

"ராசா கணக்கா இருக்க ராசா"
என்றபடி கூடையை தலைக்கு தூக்கினாள்.
ராணி கணக்கா.

45 comments:

ny said...

me the first!!

ny said...

பேரழகு !!
ரொம்ப நாளுக்கப்புறம் உள்ள வந்திருக்கேன்..
பெரிய treat வைச்சுட்டீங்க!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராசா கணக்கா இருக்க பா.ரா.

Ashok D said...

:)

நந்தாகுமாரன் said...

சூப்பரு

பத்மா said...

கைல எத்தன காசு இருந்தது?
என்ன இருந்தாலும் ராசா தானே

Kannan said...

ஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.

நம்ம யாரு..?

i like it ya..!!

vasu balaji said...

ஆஹா!

இரசிகை said...

yenakku yen puriyala.....?

சிநேகிதன் அக்பர் said...

ஆஹா! அருமை பா.ரா அண்ணா.

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை !

காமராஜ் said...

வாக்கும் மூலம் நல்லா இருக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாவ் ரொம்ப நல்லாருக்கு பாரா சார்.

Unknown said...

கவிதையும் கருத்தும் அருமை..

Chitra said...

சற்று கூச்சமாக இருந்தாலும்
ஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.

"ராசா கணக்கா இருக்க ராசா"
என்றபடி கூடையை தலைக்கு தூக்கினாள்.
ராணி கணக்கா.

...... அருமையான கவிதை. நன்றி.

பா.ராஜாராம் said...

@கார்த்தின்

ஒஹ்..கார்த்தி,

ங் அல்லது ல் அல்லது ப்
என்று நிலவை
தழும்பச் செய்தது சத்தம்.

பார்த்தா,நீங்க வந்துட்டீங்க. :-) நன்றி கார்த்தி!

@டி.வி.ஆர். சார்
:-)மிக்க நன்றி சார்!

@அசோக்
நன்றி மகன்ஸ்!

@நந்தா
நன்றி நந்தா!

@பத்மா
:-) என்னா வில்லத்தனம்?நன்றி பத்மா!

@கண்ணன்
படவா.

@பாலா சார்
நன்றி சார்!

@ரசிகை
அதானே,ஏன் புரியலை? :-)

@அக்பர்
நன்றி அக்பர்!

@ப.து.சங்கர்
நன்றி சங்கர்!

@காமு
ஹா..ஹா.. நன்றி காமு!

@starjaan
ரொம்ப நன்றி staarjan!

@முகிலன்
நன்றி முகிலன்!

இன்னைக்கு கொஞ்சம் free மக்கள்ஸ்.பேசணும் போல் இருந்தது.பேசியாச்சு.

பா.ராஜாராம் said...

@சித்ரா
நன்றி சித்ரா!

மரா said...

கவிதை நனி நன்று.

இரசிகை said...

naanga ragavan sir explain seiyum pothu purinjukkuvom...aamaa!

உயிரோடை said...

க‌விதை வித்தியாச‌மா இருக்கு. வாழ்த்துக‌ள் அண்ணா

அம்பிகா said...

என்ன, இப்படி ஆரம்பிச்சிட்டிங்க.

நல்லா இருக்கு பாரா.

ராகவன் said...

அன்பு ராஜாராம்,

பெயர்கள் கொள்வாரில்லாமல் கிடக்கிறது... கையில் இருக்கும் துட்டை எண்ணி பார்க்கையில், இது போதாது போல என்று எப்போதும் ஒரு ஏக்கம் வருகிறது... ஆனாலும் நாம் தான் முடிவு செய்கிறோம் எந்த பெயர் நமக்கு பொருந்தும் என்று நினைத்து கொண்டு கொடுத்ததை வாங்கி கொண்டு திரும்புகிறோம் இல்லையா பாரா... பேரிளம் பெண்ணை கூப்பிட்டு விசாரிக்கும் போதே, நாம் வாங்க வேண்டிய பொருளை நாம் முடிவு செய்து விடுகிறோம் அல்லது என்ன பொருள் நமக்கானது என்று தீர்மானம் ஆகி விடுகிறது... ஊதி துடைத்து மாட்டிப் பார்த்தேன்... நமக்கு நாமே ஒரு justification கொடுத்து கொள்கிறோம், ஸ்திரிலோலன் என்பது மருவி ராசாவாகிறது, அவள் ராணி ஆகிறாள்... என்ன ஒரு கள்ளத்தனம் பாரா... பெண்ணை பிடித்ததால் கூப்பிட்டு பெயரை விசாரித்தேன், பெயர்களை கேட்டதாக விலை சொன்னாள்... இங்கு நடக்கிற வியாபாரம் விநோதமாய் இருக்கிறது... மஞ்சள் கண்ணாடி பாரா நீங்கள் அணிந்திருப்பது...நீங்கள் ராசா கணக்கா இல்லாத பட்சத்தில் அவள் ராணி கணக்கா தெரிவாளா என்பது தெரியவில்லை... கூடைக்காரியை நானும் மடக்கினேன் பாரா... கையில் காசு நிறைய கொடுத்தாலும், இதுக்கு இது தான் என்று நிர்ணயம் செய்து விடுகிறாள், நாம் தெரிவு செய்ய முடியாமல்... வரிசையில் நானும்... ராசா கணக்கா...

அன்புடன்
ராகவன்

Vidhoosh said...

ராசா... ரொம்பத்தான் தெரிச்சுக் கிடக்கு! லொள்ளைத்தான் சொன்னேன். :))

ராகவா! ஏற்கனவே முந்தி வந்துட்டீங்க.

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க சார்....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ராஜாராம்.

கே. பி. ஜனா... said...

காசுக்கேற்ற பணியாரம்!

rajasundararajan said...

யார்யாருக்கு என்னென்ன தகுதியோ அவரவருக்கு அததுதானுங்க கிடைக்கும். முந்தி, ஒருத்தருக்கு அவள் தூக்கிப் போட்ட பெயர்கள்: குடிகாரன், பெருந்தீனிக்காரன், கள்ளத் தீர்க்கதர்ஷி. நீங்க கூச்சமா இருந்தாலும் துடைச்சு மாட்டிக்கிட்டீங்க. அவரு கூச்சமே படாம மாட்டிக்கிட்டாருங்க. அதனால, அவரையும் 'ராசா மாதிரி இருக்கே'ன்னு சொன்னாளுங்க. உங்களெ மாதிரி அவளெ ராணின்னு திருப்பித் திட்டிட்டு விட்டுடாம, தான் ராசாதான்னு அவரே சொல்லிக்கிட்டு அலைஞ்சாருங்க. அப்படியா இந்தான்னு முள்ளுக்கிரீடம் வெச்சுக் கொன்னு போட்டுட்டானுவங்க.

பேரிளம்பெண் ஆகா!

பெயரை விசாரிக்கப் போய் நம்மளண்டையும் கூடையை இறக்கினாளா, ஓடியே வந்துட்டோமுங்க.

இதல்லாம் சரியிலீங்க, கவிதை எழுதுறோம்னு விடுகதை போடுறீங்க. புரிஞ்சது மாதிரி காட்டிக்கிறதுக்கு நாங்களும் உளறிக்கொட்ட வேண்டியிருக்கு. ஆனா எழுதுனவரு என்னத்தெ எழுதுனாலும் வாசிச்சவரு என்ன புரிஞ்சுக்கிட்டாரோ அதுதானுங்க நூற்பாடு (text).

'பரிவை' சே.குமார் said...

க‌விதை வித்தியாச‌மா இருக்கு. வாழ்த்துக‌ள் பா.ரா.

க ரா said...

அருமை பா.ரா. சார். நன்றி.

விநாயக முருகன் said...

ராசா கணக்கா இருக்கு ராசா கவிதை

குட்டிப்பையா|Kutipaiya said...

அழகு..

shakthikumar said...

yathaartham :)

shakthikumar said...

unmai itharkku ethipathagaagavum irukkalaam alla illai sama urimai petravarin samamaagavum irukkalaam
hahaha aanukku pen ilaipillai ellaathulayum thaan

பா.ராஜாராம் said...

@மயில் ராவணன்
நல்வரவு மக்கா.நன்றி!

@ரசிகை
ராகவன்அடுத்த ரசிகர் மன்ற செயலாளர்அதுசரி,இந்த ஆமா,பிராண்டா?(பெண்கள்) :-)

@லாவண்யா
நன்றி லாவண்யா!

@அம்பிகா
:-) நன்றி சகோ!

@ராகவன்
ஹா..ஹா..நன்றி தரன்!

@வித்யா
:-))நன்றி சகோ!

@பாலாஜி
நன்றி பாலாஜி!

@சுந்தரா
நன்றிடா மக்கா!தொடராக நல்லா இருக்கின்ற...கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.நல்லாத்தான் இருக்கு. :-)

@ஜனா
நன்றி ஜனா! :-)

@ராஜசுந்தரராஜன்
:-))) நன்றிண்ணே!

@srjith
நல்வரவு,நன்றிங்க!

@சே.குமார்
நன்றி குமார்!

@இராமசாமி கண்ணன்
நன்றி ஆர்.கே!

@விநாயகம்
யோவ்..நன்றி விநாயகம்!

@kutipaiya
ரொம்ப நாள்க்கு அப்புறம் :-),நன்றிங்க!

@சக்திகுமார்
நல்வரவு மக்கா.ரொம்ப நன்றி!

@ஜெய்லானி
ந்தா வந்துட்டேங்க,இதைவிட என்ன வேலை.மிக்க நன்றி மக்கா!

Nathanjagk said...

தூக்கிப்​போட்டப் பெயர்களை நீங்கள் மாட்டிக் கொண்ட​போது, பெயர் அழகாகி விட்டது. ​நீங்களும் பேரழகாகி விட்டீர்கள்!
Bravo!

vasan said...

கையிலிருந்த‌ காசுக்கே
ஸ்த்ரி லோல‌ன்,
பெண் பித்த‌ன் என்றால்,
மொத்த‌ இருப்பையும்
காட்டியிருந்தா....!!
என்னென்ன‌ பெய‌ரோ???

ரிஷபன் said...

ஆஹா.. இதெல்லாமுமா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கு!

ஹேமா said...

அண்ணா...விடுபட்ட கவிதைகள் வாசித்தேன்.உங்களுக்கென்ன !
எப்பவும்போல கலக்கல்தான்.

நிறைவான இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அன்பு பா.ரா...

உங்களின் மற்ற கவிதைகளிலிருந்தும் இது நிறைய வித்தியாசப்பட்டு நிற்கிறது. அற்புதம்!

-ப்ரியமுடன்
சேரல்

பிரேமா மகள் said...

உங்கள் கவிதையை முதன் முதலில் விகடனில் படித்துவிட்டு, சுகுணா திவாகரிடம் கேட்டேன்.. யார் சார் அது?

''பிளாக்கர்ங்க.. துபாய் பக்கம் இருக்கார்'' என்றார்..

அன்றில் இருந்து உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்...
ஆனால் கமெண்ட் போட்டதில்லை..

அருமையான வார்த்தை கோர்ப்புகள் உங்கள் கவிதை...

பா.ராஜாராம் said...

@ஜெகா
ஜெகா,ரொம்பநாள் ஆச்சுது.மிக்க நன்றி மக்கா!

@வாசன்
வாங்க மக்கா.மிக்க நன்றி!

@ரிஷபன்
:-) மிக்க நன்றி ரிஷபன்!

@ஆ.ஆர்.ராமமூர்த்தி
மிக்க நன்றி மக்கா!

@ஹேமா
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமாம்மா!மிக்க நன்றிடா!

@www.bogi.in
புத்தாண்டு வாழ்த்துக்கள்ங்க.

@சேரல்
ரொம்ப நன்றி சேரல்!உங்களை சந்தித்தது பற்றி சே.சரவணக்குமார் சொன்னார்.சந்தோசமாக இருந்தது சேரல்.

@பிரேமா மகள்
நன்றிங்க.தளம் வந்தேன்.நல்லா எழுதுறீங்க.தொடர்ந்து எழுதுங்க.

Thamira said...

சிறப்பானது.

priyamudanprabu said...

எல்லா கவிதையும் அருமை