Friday, June 11, 2010

ஆச்சு மக்கா

ஆயிற்று.

இன்றுடன் நம் கருவேலநிழலின் முதல் ஆண்டு நிறைவுறுகிறது. எவ்வளவு நிறைவான, நெகிழ்வான முதல் வருடம்!

வேலை விட்டால் அறை. கொஞ்சம் டி.வி. நிறைய வீட்டு நினைவு. கொஞ்சம் அலை பேசும் சந்தோசம். கொண்டு, நிறைவுறும் குரல்வழி குடித்தனம்...இப்படியான பொழுதாக போய்க் கொண்டிருந்த போதுதான், இந்த கருவேல நிழலை தொடங்கி தந்தார்கள் தம்பியும், நண்பரும்.

தேற்றும் முகமாக, இங்குள்ள நண்பர்கள் சொல்வார்கள், "நாலு வெள்ளி முடிஞ்சால், சம்பளம். இருப்பத்தி நாலு சம்பளம் எடுத்துட்டா ஒரப்பாயிட்டு வீடுதான்" என்று.

இந்த பனிரெண்டு மாதமாக இது நிகழலை மக்கா.வெள்ளி வந்ததும் தெரியல. சம்பளம் வந்ததும் தெரியல. மாதாந்திர காலண்டரில், அனிச்சையாக நாட்களின் மேலாக குறிக்கிற இன்டு குறியீடு கூட இல்லை. (அனேகமாக இங்கு வந்தேறிகள் எல்லோரிடமும் இது உண்டு..இப்படி ரெண்டு காலண்டரை கிழித்தால் வீடு என்பதாக ஐதீகம். :-))

"என்னண்ணே என்ன பண்றீங்க?

"மக்கா நலமா?"

"மாமா நல்லாருக்கியளா?"

"சித்தப்ஸ்?"

"குரல் கேட்கணும் போல் இருந்தது, ராஜா சார்"

"யோவ்..என்ன மயிறு கவிதை எழுதுற?"

"நலமா பாரா?"

"வணக்கம் தோழர்"

"மகளுக்கு நிச்சயமாயிட்டுன்னு கேள்விண்ணே. என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? எதையும் யோசிக்க வேணாம்ண்ணே. கூடப் பிறந்த தங்கையா எடுத்துக்கோங்க. என்ன தேவைன்னாலும் கூப்பிடனும். கடன் வாங்கக் கூடாது. சரியா?"

என்றெல்லாம் திகைக்க வைக்கிற, நண்பர்கள் மற்றும் சகோதரிகள் குரல்கள்.

ஆம்,

நம் மகாவிற்கு ஒரு வரன் வந்தது.அவர்களுக்கு பெண் பிடித்து போயிற்று. நமக்கும், குடும்பம் பிடித்துப் போனது. மாப்பிள்ளையோ சிங்கப்பூர். குறிப்பிட்ட தேதிக்குள் நம் சம்மதம் தெரிவிக்க வேண்டிய சூழல்.( மாதம், நாள்,கிழமை இப்படியாக) கையும் காலும் ஓடாத சூழல். மாப்பிள்ளையை நாமும் பார்க்க வேணும். இல்லையா? சிங்கையில் உறவினர்கள் இருந்தார்கள்.

அவர்களை கூப்பிட்டு, நிலை விளக்கி பொருந்துவதற்குள் பொருந்தினார்கள் நம் பதிவ நண்பர்கள்.

முறை வச்சு, மாமாவென அழைக்கும் கண்ணன் என்ற மனவிழி சத்ரியன் மற்றும் சி. கருணாகரசு!

"மாமா, இது எங்க டூட்டி மாமா. எதுக்கு வருந்துரீறு?" என்று மறுநாளே போய் மாப்பிள்ளையை பார்த்து வந்தார்கள். சம்மதம் சொன்னார்கள்.சம்மதம் சொன்னோம். நிச்சயதார்த்தம் முடிந்தது.

விலை மதிப்பற்ற எவ்வளவோ நண்பர்களையும் உறவுகளையும் இந்த ஒரு வருடத்திற்குள் தேடி தந்திருக்கிறது, கருவேல நிழல்!

கவிதை எல்லாம் சும்மா மக்கா.

எவ்வளவோ உன்னதமான கவிஞர்களை இதே பதிவுலகில் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். போடா மயிறு என்று முகத்தில் அறைகிறார்கள், கவிதையில்.

பொறவு,

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கிடைச்சது?

அன்புதானே மக்கா?

எதிர்பார்ப்புகள் அற்ற, பிரதி பலன் கருதாத நண்பர்களை/ உறவுகளை தேடி தந்திருக்கிறது கருவேல நிழல் என்ற பதிவுலகம்!

வெறும் கோபமும், துவேஷமும் மட்டும் நிரம்பியதில்லை இப்பதிவுலகம் என இச்சூழலில் பதிய விரும்புகிறேன்.
***

முழங்காலுக்கு கீழாக
பார்த்திருக்கிறேன்
செடியில் இம்மரத்தை என
நினைவு வந்த போது
அதன் முழங்கால் நிழலில் இருந்தேன்.

***

இப்படியாக இரண்டாவது வருடத்தை தொடங்குகிறேன். அதாவது, தொடங்குகிறோம்!..

நன்றியும் அன்பும் மக்களே!

***

118 comments:

இராகவன் நைஜிரியா said...

அண்ணே வாழ்த்த வயதில்லை... அதனால் தங்கள் வலையுலக முதலாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு என் வணக்கங்கள்.

இராகவன் நைஜிரியா said...

ஊய்....ய்....ய்.... மீ த ஃபர்ஸ்ட்டோய்...

இராகவன் நைஜிரியா said...

ஊய்....ய்....ய்.... மீ த ஃபர்ஸ்ட்டோய்...

இராகவன் நைஜிரியா said...

// இப்படியாக இரண்டாவது வருடத்தை தொடங்குகிறேன். அதாவது, தொடங்குகிறோம்!.. //

ஆம் தொடங்குகின்றோம்..

(எப்படி ஓட்டிகிட்டேன் பார்த்தீங்களா.... இதுக்குத்தான் சாமர்த்தியம் வேணும் என்கிறது... எப்பவாவதுதான் பின்னூட்டம் போட்டு இருக்கேன்.. இருந்தாலும்.. இப்ப இங்க வந்து நல்லா சப்பளம் போட்டுகிட்டு உட்கார்ந்து... முதல் பின்னூட்டம் போட்டாச்சு)

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் பா.ரா.. (ம்ம்... ராகவன் சாருக்கே வாழ்த்த வயசில்லையாம்ல..)

க ரா said...

வாழ்த்துகள் பா.ரா. சார்.

gulf-tamilan said...

வாழ்த்துகள்!!!

நளினி சங்கர் said...

////////////////////
பொறவு,
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கிடைச்சது?
அன்புதானே மக்கா?
////////////////////

அதில் என்ன சந்தேகம் பாரா...

அன்பு செலுத்துவதில் புதிய பதிவர், மூத்த பதிவர் என எந்த பாரபட்சமும் பாரா பா.ரா-வுக்கு இவ்வளவு சொந்தங்கள் கிடைத்திருப்பதில் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை.

நசரேயன் said...

//அண்ணே வாழ்த்த வயதில்லை...//

அண்ணே உங்களுக்கு மனசு இருந்தா போதும்.. எனக்கு தான் வயசு இல்லை

நளினி சங்கர் said...

வாழ்த்துக்கள் அன்பா...

Unknown said...

வேறென்ன சொல்ல ..

வாழ்த்துக்கள் மாமா
:)

சுசி said...

வாழ்த்துக்கள் பாரா சார்.

மகாவுக்கும்.

ரோஸ்விக் said...

வாழ்த்துக்கள் சித்தப்பா... ரெண்டு(க்கும்) வருஷத்திற்கும்... தங்கச்சி பரிசத்திற்கும்... :-)
நானும் சின்கையில தான் இருக்கேன்...
எப்போ ஊருக்கு வாறீங்க? சிந்திப்போம் சித்தப்பு... :-))

AkashSankar said...

உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்...

பிரேமா மகள் said...

வாழ்த்துக்கள்...


பீல் பண்ண வைக்கறீங்களே?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் ...

நேசமித்ரன் said...

ஒரு வருஷம்
ஒரு புத்தகம்
ஒரு தமிழ் மண விருது
ஒரு 138 பதிவு
ஒரு 280 பாலோயர்கள்
ஒரு சொடுக்கு கூகிள் தேடலில் 43,800 தடம்
ஒரு பா.ராஜாராம்
ஒரு ஊராக உலகு

வாழ்த்துகள் ரமேஷ்
வாழ்த்துகள் கண்ணன்
வாழ்த்துகள் பா.ரா
வாழ்த்துகள் நேசா
வாழ்த்துகள் மக்கா

செந்தில் நாதன் Senthil Nathan said...

வாழ்த்துக்கள்...

போன ஆண்டு போலவே,
அடுத்து வரும் ஆண்டுகளிலும் உங்கள் கவிதை மழைத்துளிகள் எங்களை முத்தமிட்டுச் செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்.

சகோதரிக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி,
அன்பு வாசகன்!!

Ravichandran Somu said...

கருவேல நிழலின் ஒரு வருட நிறைவிற்கும், மகளின் திருமண நிச்சயத்திற்கும் வாழ்த்துகள் பா.ரா சார்!

வெட்டிக்காட்டில் மாடு மேய்க்கும் சிறுவனாக இருந்த காலத்தில் மாடுகளை மேயவிட்டுவிட்டு கருவேல மரங்களின் நிழல்களில்தான் இளைப்பாறி இருக்கிறேன். இப்போது உங்களின் கருவேல நிழலில்தான் கவிதைகள் படித்து இளைப்பாறி வருகிறேன்.

நானும் சிங்கபூரில்தான் இருக்கிறேன். ஏதாவது உதவி என்றால் என்னையும் தாங்கள் தொடர்பு கொள்ளலாம்:)
சிங்கப்பூருக்கு வாருங்கள்... சந்திப்போம்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அம்பிகா said...

அன்பு பாரா,
நெகிழ வைக்கிறீர்கள்.
//பொறவு,
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கிடைச்சது?
அன்புதானே மக்கா?//
நிச்சயமாக...!
வாழ்த்துக்கள்
மகாவுக்கு இந்த அத்தையின்
வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவியுங்கள்.

Toto said...

ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம். என்ன‌ கொடுத்தீங்க‌ளோ, அது உங்க‌ளுக்கு திரும்ப‌ வ‌ருது. இன்னும் வ‌ரும் ! ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள் ஸார்.

-Toto

காமராஜ் said...

பாரா....

ரெட்டை வாழ்த்துக்கள் மக்கா.
வெறும் வெறுப்பும் சண்டையும் மட்டுமில்லை
இது எவ்வளவு சத்தியமான வார்த்தை.
அப்படியே தூக்கி வச்சு கொண்டாடனும்.

ஹோவெனும் அந்த ஆர்ப்பரிப்பில்
கெட்டி மேளம் கெட்டிமேளம் என்கிற உற்சாகத்தில்
கொளம்பு கொதிச்சிருச்சா எலை வெட்டியாச்சா
என்கிற கூட்டு உபசரிப்பில் எல்லால் காணாமல் போகும்.

நினைந்துருக ஆயிரமாயிரம் கணங்கள் கொட்டிக்கிடக்குது
எப்போ ஊருக்கு மஹாவின் மணநாள் ஒரு அன்பின்
சர்வதேச மாநாடாக இருக்கும்.

வாப்பூ வா வச்சிக்கிறோம்

விநாயக முருகன் said...

வாழ்த்துக்கள் பா.ரா. ஊருக்கு எப்போ வர்றீங்க?

உங்கள ஆட்டோவுல தூக்கிப்போட்டு போக ஒரு கூட்டமே காத்து நிற்கிறது. ந‌ல்லா உபசரிக்கத்தான். ப்யந்துடாதீங்க.

மணிஜி said...

டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்...வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் பா ரா.

உங்கள் மகளுக்கும்:)! மகிழ்ச்சியாய் உள்ளது.

சத்ரியன் said...

ஒரு வருஷம் ஆயிடுச்சா மாமா..?

வாழ்த்துகள்!

(மனவிழித் திறந்தும் ஒரு வருஷம் ஆயிடுச்சி மாமா..ஜூன் 07-2009)

சற்று தாமதமாக முதல் குட்டு ஐயா சீனா-அவர்களின் கையால் கிடைத்தது, இப்படி..

//அன்பின் சத்ரியன்

பழைய இன்ப நினைவுகளை நனைக்க சொல்லாமலே வரும் மழை வாழ்க

நல்வாழ்த்துகள்//

சத்ரியன் said...

//முறை வச்சு, மாமாவென அழைக்கும் கண்ணன் என்ற மனவிழி சத்ரியன் மற்றும் சி. கருணாகரசு!

"மாமா, இது எங்க டூட்டி மாமா. எதுக்கு வருந்துரீறு?" என்று மறுநாளே போய் மாப்பிள்ளையை பார்த்து வந்தார்கள். சம்மதம் சொன்னார்கள்.//

இதுக்கான காரணம் என்னவென்று நீங்களே சொல்லியிருக்கீங்களே மாமா. எல்லாத்துக்கும் ”அன்பு” தான் காரணம்னு.

சத்ரியன் said...

மாமா வீட்டு கல்யாணத்துக்கு இப்பவே வாழ்த்துகள்.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் அண்ணே... எல்லோரும் உறவு பந்தம் பாசம்ன்னு பேசறப்ப நம்பாத மனசு, நீங்க போன்ல மகான்னு உரிமையா சொன்னப்ப உருகித்தான் போயிடுச்சு. ரொம்ப நேரம் உங்க வார்த்தை உள்ளுக்குள்ள முட்டிட்டுருந்துச்சிண்ணே.. கவிஞர்கள்ல முக்கியமான சிறந்த மனிதர்கள்ல நீங்க ஒருத்தரா இருக்கறதும் உங்ககிட்ட பழகுறதும் எங்க பாக்கியமாத்தான் தோணுது..

ராம்ஜி_யாஹூ said...

my best wishes

மாதவராஜ் said...

அன்பு பொங்கும் பக்கங்கள் உங்களுடையவை மக்கா.

ஒரு வருடத்திற்குள், உங்கள் எழுத்துக்களால் எவ்வளவோ மனிதர்களின் உள்ளங்கைகளை பற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்.

உயரங்கள் உங்களுக்கானவை. நமக்கானவை.

தொடர்வோம் மக்கா!

Gowripriya said...

வாழ்த்துகள்:)))

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் ராஜாராம் ... முழங்கால் மரக்கவிதை நன்று

கே. பி. ஜனா... said...

வாழ்த்துக்கள்!

கே. பி. ஜனா... said...

வாழ்த்துக்கள்! சகலரையும் நேசிக்கும் இத மனசுக்கும்!

அன்புடன் அருணா said...

அன்பைக் கொட்டி வளர்த்த கருவேலமரம் பூப்பூக்கும் காலமிது!பூத்துக் குலுங்க விடுங்கள்! வாழ்த்துப் பூங்கொத்துக்கள் !

செல்வநாயகி said...

வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

இரண்டாம் ஆண்டு தொடக்கத்துக்கும்,மருமகளின் நல்மணவாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

விழுந்து எழவும், எழுந்து விழவும் குழந்தை மனம் மட்டும்போதும். அது கவிதை மனமும் கூட.

உங்கள் கருவேல மர நிழலில் பல நேரம் உறங்கியிருக்கிறேன்.
சில நேரம் தவித்திருக்கிறேன். இன்னும், தவிக்கவும் உறங்கவும் உங்களிடம் பதிவிருக்கிறது.
என்னிடம் ஏக்கமிருக்கிறது.

வாழ்த்துகள் மக்கா.

வரும்போது மெயில் போடுங்க.

egjira@gmail.com

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் :)

க.பாலாசி said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஒருவருடமாக உங்களின் படைப்புகளை ரசித்து படித்திருக்கிறேன் என்பதே சந்தோசம்தான். மேன்மேலும் தங்களின் நிழலிலும் இளைப்பாறவே விரும்புகிறேன்...

சிவாஜி சங்கர் said...

வாழ்த்துக்களும் வணக்கங்களும் மாம்ம்ஸ்..........

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மனம் நிறைய மகிழ்வும், அன்பும் வாழ்த்துகளும் பா.ரா!

உரிமையாக பா.ரா. என்று அழைக்க முடிவதற்கு உங்கள் கவிதைகளுடனான என் நெருக்கமே காரணம். வயது கடந்த ஓர் ஈர்ப்பு இது என்று படுகிறது. படைப்புக்கும், படைப்பாளிக்கும் ஏது வயதும், வயோதிகமும்? இந்த விதிதான் பாரதியையும் அவன் இவன் என்றழைக்க வைக்கிறது. மீண்டும் வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

vasu balaji said...

எல்லா மகிழ்ச்சிக்கும் ஒரு மனசின் மொத்த வாழ்த்து பா.ரா.:)

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த சந்தோஷமும் உறவுகளும்தாண்ணே உண்மையான பதிவுலகம்.. வாழ்த்துகள்..:-)))

VJR said...

நீங்க கோபப்பட்டப்பகூட யார்ரா இதுன்னு தோணுச்சு. அதுக்கு விளக்கம் குடுத்துகூட பதில் போட்டேன், ஆனா அத உ.த போடவேயில்ல.

ஒருவேள போட்டாக்க, நீங்க என்னப் புரிஞ்சீக்கவீங்கன்னு பதட்டமோ என்னவோ?

உங்கள் வசீகரமான எழுத்துக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்.

vasan said...

க‌ருவேல‌ நிழ‌ல்தானே
என் வ‌ந்த‌பின்பு, பார்த்தால்
இது ஆல‌ம‌ர‌ அர‌சம‌ர‌ நிழ‌லாய்...
முத‌லாண்டு த‌வ‌ழ்வே இப்ப‌டி,
இர‌ண்டாம் ஆண்டு நடை?
வாழ்த்துக்க‌ள் பா.ரா.

ny said...

வாழ்த்துக்கள் :))

Unknown said...

வாழ்த்துகள் பா.ரா.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துவதற்கு வயதில்லை

அதால

வாழ்த்திக்கிறேன் மக்கா

--------------

பொறுப்பாய் நடந்து கொண்ட சத்ரியனுக்கும் கருணாவுக்கும் நன்றி.

CS. Mohan Kumar said...

கருவேல நிழலின் ஒரு வருட நிறைவிற்கும், மகளின் திருமண நிச்சயத்திற்கும் வாழ்த்துகள் பா.ரா

கனிமொழி said...

வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!
:-)

ஹேமா said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அண்ணா உங்கள் நிழலுக்குள்தான் இத்தனை அன்பு உள்ளங்களும்.
இன்னும் உங்கள் அன்பைக் கேட்டபடிதான்.உங்கள் கை பிடித்தபடியே தொடர்வோம்!

விஜய் said...

பங்கு,

இது போல் நட்பு சொந்தத்தில் இல்லை

இது போல் சொந்தம் நட்பில் இல்லை

வாழ்த்துக்கள்

விஜய்

ஜெயந்தி said...

வாழ்த்துக்கள்!

யாத்ரா said...

வாழ்த்துகள் ண்ணே
பிரியமே உருவான மனிஷண்ணே நீங்க
ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே, மகாவுக்கு வாழ்த்துகள்.

SUFFIX said...

வாழ்த்துக்கள் அண்ணே, மிக்க மகிழ்ச்சி, சொன்னவை அனைத்தும் உண்மை தான்!! நட்புகள் தொடரட்டும்.

goma said...

நானும் வாழ்த்துவோர் சங்கத்தில் இணைகிறேன்

மாதேவி said...

"கருவேல நிழல்"முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.

வாழ்த்துகள் தொடரட்டும்.....

தூயவனின் அடிமை said...

வாழ்த்துக்கள்...

Balakumar Vijayaraman said...

//தொடங்குகிறோம்!..//

ஆம், வாழ்த்துகள் மக்கா & மகா !

☼ வெயிலான் said...

கருவேல நிழலுக்குள் நானும் வந்து ஒரு வருடம் ஆயிற்று. வாழ்த்துக்கள் பா.ராண்ணே!

Unknown said...

உரை நடையில் உள்ள எழுத்துக்களை
இதயமென்னும் சல்லடையில் வடிகட்டி
கவிதையாக்கி கோப்பையில் ஊற்றி
கார்மேகமென்னும் பதிவுலகிற்கு
விருந்தளிக்கும் நீங்களும் உங்கள் உள்ளமும்
வாழ்க வளர்க இன்னும் பல ஆண்டுகள்

ஸ்ரீதர்

சிநேகிதன் அக்பர் said...

மனசு நிறைந்த வாழ்த்துகள் பா.ரா அண்ணே!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்!!! நெகிழ்வுடன் பா.ரா. அவர்களே!!

ராஜவம்சம் said...

மகனால் அப்பனை வாழ்த்தமுடியாது ஆனால் சந்தோஸத்தில் பங்குகொள்கிறேன் நன்றி மற்றும் உரிமையுடன் மகன்

எம் அப்துல் காதர் said...

நூறாவது வருஷ வாழ்த்துக்கள்.. அப்பவும் நீங்களும் இருப்போம்!

எம் அப்துல் காதர் said...

நூறாவது வருஷ வாழ்த்துக்கள்.. அப்ப நீங்களும், நாங்கள் எல்லோரும் இருப்போம்!

Ashok D said...

சித்தப்ஸு.. சித்தப்ஸு.. :)

Ashok D said...
This comment has been removed by the author.
பின்னோக்கி said...

வாழ்த்துக்கள். கவிதையாய் ஒரு வருடம் கடந்து போனது. பல கவிதைகளைப் படித்து, மீண்டும் படித்து, நண்பர்களிடம் சொல்லி....

!!நீங்க கவிஞர் தான்.....!!

தொடருங்கள். தொடர்கிறோம்

ராகவன் said...

அன்பு பாரா,

சந்தோஷமாக இருக்கிறது பாரா... சந்தோஷத்திற்கான காரணங்கள் நிறைய இருக்கிறது பாரா...

அன்பும் வாழ்த்தும் எப்போதும்
ராகவன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்ன சொல்ல பா.ரா.? நெகிழ வைக்கும் பதிவுகள் வார்த்தைகளை மறக்க வைக்கிறது. மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு வருடமாகத்தான் உங்களைத் தெரியுமா? நம்ப முடியவில்லை மக்கா!

rajasundararajan said...

வாழ்க!

Unknown said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Veera said...

வாழ்த்துக்கள், சார் ! :)

VijayaRaj J.P said...

வாழ்த்துக்கள் பா.ரா.

அன்புடன் நான் said...

எங்களுக்கு உறவையும் உரிமையையும் வழங்கிய... உங்களுக்கே எங்கள் நன்றி.

இது வலையுலகத்தின் கம்மீர அடையாளம்.

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் பா.ரா அண்ணா.

உங்களுக்கு வெகு அருகில் இருப்பதும், அடிக்கடி உங்களைச் சந்தித்து உரையாடுவதும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன.

இந்த‌ வலையுலகம் 'வெறுப்பும் துவேஷமும் மட்டுமே நிறைந்த இடம் அல்ல' என்று குறிப்பிட்டிருப்பது மிகப் பிடித்திருந்தது. உங்களைப் போன்ற ப்ரியங்கள் நிறைந்த மனிதர்களால்தான் இது சாத்தியமானது.

இத்தனை அன்பான உறவுகளை இந்த ஓராண்டில் பெற்றிருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா.

அன்பு மட்டுமே என்றைக்கும் நிலைத்திருக்கட்டும். வேறு என்ன சொல்லி வாழ்த்துவது அண்ணா உங்களை.

செ.சரவணக்குமார் said...

மகா திருமணப் பேச்சு துவங்கியபோது அது தொடர்பான ஒரு உதவி வேண்டி சிங்கைப் பதிவர்கள் பற்றி நீங்கள் கேட்டதும் பின்னர் நண்பர் சத்ரியன் அவர்களைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது பா.ரா அண்ணா.

இன்னும் கூட நண்பர் சத்ரியனை தொலைபேசியில் அழைத்து உரிமையோடு ஒரு நன்றி சொல்லவில்லை. மகாவையும் அலைபேசி வாழ்த்த முடியவில்லை. தொடர்ந்த பணிச்சுமை வேறு எதைப் பற்றிய சிந்தனையையும் இல்லாமல் செய்துவிட்டது.

இந்த வாரத்தில் கண்டிப்பாக மகாவை அலைபேசியில் வாழ்த்த வேண்டும்.

எனக்கு முன்னால் இத்தனை பேர் வந்து வாழ்த்தியிருக்கிறார்கள் என்பதே பேரானந்தமாக இருக்கிறது.

நீங்கள் இன்னும் அதிகமான தூரம் பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசையும்.

இந்த நேரத்தில் உங்களுக்கு நன்றி சொல்வதும் முக்கியமான கடமையாகிறது.

ஜோதிஜி said...

முழங்காலுக்கு கீழாக
பார்த்திருக்கிறேன்
செடியில் இம்மரத்தை என
நினைவு வந்த போது
அதன் முழங்கால் நிழலில் இருந்தேன்.

சிறப்பான புரிதலுடன் கூடிய வார்த்தைகள். வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனம் கசியும் ஆனந்தத்துடன்,

ஆர்.ஆர்.ஆர்

Jerry Eshananda said...

வாழ்த்துகள் நண்பரே,உங்களோடு பயணிப்பதில் எனக்கு பெருமிதம்.நாளும் அன்பில் தொடர்வோம்.

ரிஷபன் said...

விலை மதிப்பற்ற எவ்வளவோ நண்பர்களையும் உறவுகளையும் இந்த ஒரு வருடத்திற்குள் தேடி தந்திருக்கிறது, கருவேல நிழல்!
எத்தனை ஆரோக்கியமான வார்த்தைகள்!
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு நல்வாழ்த்துகள்..
தொடரட்டும் எழுத்துப் பயணம்..
மகளுக்கும் எங்கள் வாழ்த்துகள்..

HVL said...

வாழ்த்துகள்!

சுந்தர்ஜி said...

எதிர்பாராத நாளில் விழும் மழை போல திடுமென ஒருநாள் பெற்ற உறவு இது.

முகமறியா உறவு தொடர்கிறது எழுத்துக்கள் வடிக்கும் அன்பால்.

மகாவுக்கும் மக்காவுக்கும் வரப்போகிற நாட்களுக்குமான வாழ்த்துக்கள் இங்கேயிருந்து பா.ரா.

Revathyrkrishnan said...

Negizchiyaga irunthathu... Oru varudam thaan mudinthathu endru ungal thalathai paarthu namba mudiyavillai. Vazthukkal

Revathyrkrishnan said...

:-)

cheena (சீனா) said...

அன்பின் பா.ரா

மகாவின் திருமணத்திற்கும், பதிவின் இரண்டாம் ஆண்டு துவக்கத்திற்கும் நல்வாழ்த்துகள். நெஞ்சம் நெகிழ, வலயுலக நட்பினைப் பற்றிய குறிப்புகள் அருமை. இன்னும் பல ஆண்டு விழாக்கள் மகிழ்வுடன் கொண்டாட நல்வாழ்த்துகள் பா.ரா

நட்புடன் சீனா

Unknown said...

வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கருவேல நிழலின் ஒரு வருட நிறைவிற்கும், மகளின் திருமண நிச்சயத்திற்கும் வாழ்த்துகள் பா.ரா

பத்மா said...

மிக்க நன்றி பா ரா சார் .நம்பிக்கை இழக்கும் சமயம் நம்பிக்கை கொள்ள வைக்கிறீர்கள்.
எல்லாவற்றிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...

இரவுப்பறவை said...

மகிழ்ச்சியாய் இருக்கிறது!!
பயணம் தொடர வாழ்த்துக்கள் பா ரா....!!

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.
இணையத்தில் எழுதுவது கையால் மீன் பிடிப்பது போல்; மீன்களுக்கு உங்கள் கைகளைப் பிடித்திருக்கிறது.
தொடருங்கள்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பா.ரா

Nathanjagk said...

1-ம் 0-களும். இணைய இடுகைகளைப் பிரித்து நோக்கினால் மீந்துவது.

முகமறியா நட்புடன் வாழுதல் நேசித்தல் துதித்தல் ஒரு நோய் என படித்த நினைவு. அந்த சிந்தனைக்களையெல்லாம் ஒரு கடாசு கடாசிவிட்டு ஜம்மென்று முன்வந்து நிற்கிறது நிழல். கருவேல நிழல்!

பா.ராஜாராம் எல்லோருக்கும் ஒரு பந்தத்தை பரிசளிக்கும் முகமாக இருக்கிறார். எந்த நதியும் சங்கமித்துக் கொள்ளும் கழிமுகமாக, அகல விரிந்த கைகளோடு நிற்கும் விருட்சமாக தெரிகிறார். சொந்தக் கைரேகையின் எளிமை, பட்டம் செய்து தரும் தாத்தா முகத்தோர புன்னகை, வாயிற்படியிலேயே அணைத்து முகம் தடவும் அத்தையின் ஈரக்கைகள் என மடிந்து கொண்ட வாழ்வின் பக்கங்களை ஊதிப் புரட்டும் மென்காற்று போன்ற கவிதைகள்.

கருப்புக்குத் தங்கம் போட்டு காததூரம் அனுப்பணும் - என்பார்கள்! கவிதைக்குத் தங்கம் போட்டு எங்களிடம் அனுப்பியது போல பா.ரா! கவிதையின் எல்லா எளிமைக்கும் வாத்ஸல்யத்துக்கும் பொருந்துகிற ஆளுமை - இவர் பேச்சிலும், பின்னூட்டங்களிலும். ஒருவேளை இயல்பான வாழ்பனுவங்களை ரசித்து கவிதையாக தருவிப்பதால் இருக்கலாம்.

கவிதையைத் தாண்டாமல் அதன் வெளிக்குள் மட்டும் சுழச்செய்யும் மாயாவாதம் இங்குண்டு. வாயிற்படி, பக்கத்துவீட்டுக்காரம்மா, ரயில் சப்தம், கடன்காரன் காலடியோசை, மகளின் விளையாட்டு, பொம்மைகள் விற்பவள், கோலத்தின் பூசணிப் பூ, ஜோஸ்யர் வீடு என்று கவிதை காட்டும் வெளியிலேயே நாம் சுற்றிக் கொண்டிருக்க ஆகாயமளவு சாத்தியமுண்டு.

இதனாலேயே பா.ராவை பா.ரா. வின் வீட்டை அவர் வீட்டு மக்களை நேசிக்கும் குணம் வாய்க்கப் பெறுகிறோமோ? இந்த அணுக்கமும் அன்பும் நமக்கு புதிதானது. நமக்குத் தெரியாமல் கைப்பற்றிக் கொள்ளும் நேசக்கரங்கள் போன்றது. வழிநெடுக கதை சொல்லி அழைத்துச் செல்லும் நேக்கு கொண்டது.

பாதை பெரியது அல்லது சிறியது என பயணம் முடியாமல் தெரியாது. முடிவதாக தெரிவதைப் பயணம் என்றும் சொல்ல முடியுமா? பயணம் என்ற மட்டில் இளைப்பாறல் இல்லாத இயக்கத்தைக் கற்பனிக்கையில் தெம்பு பிறக்கிறது. பா.ராவின் பயணம் இனிதே தொடர வாழ்த்தும் நெஞ்சங்களில் நானும் ஒன்று. ஒன்று படுதலின் சுகம் புரிகிறேன்!

Madumitha said...

வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

//எதிர்பார்ப்புகள் அற்ற, பிரதி பலன் கருதாத நண்பர்களை/ உறவுகளை தேடி தந்திருக்கிறது கருவேல நிழல் என்ற பதிவுலகம்!//

எவ்வ‌ள‌வு நெகிழ்வான‌ ச‌த்திய‌மான‌ வார்த்தை. ரொம்ப‌ ந‌ன்றி அண்ணா

ஜெய் said...

வாழ்த்துக்கள் பா.ரா. சார்.. :-)

Kumky said...

நன்றியும்., அன்பும் தோழர்.

வார்த்தைகளின் உண்மையும், வீரியமும் சொல்லாத விஷயங்களையும் சொல்லிச்செல்கிறது...புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

குட்டிப்பையா|Kutipaiya said...

மிக்க மகிழ்ச்சி பா.ரா..

வாழ்த்துக்கள், இன்னும் சிகரங்களை எட்ட..

Marimuthu Murugan said...

வாழ்த்துக்கள் பா. ரா. ண்ணா

முழங்காலுக்கு கீழாக
பார்த்திருக்கிறேன்
செடியில் இம்மரத்தை என
நினைவு வந்த போது
அதன் முழங்கால் நிழலில் இருந்தேன்


வழக்கம் போல கலக்கலாய்..

Thamira said...

வலைப்பூவின் ஒரு அழகிய பிளஸ் பாயின்டை சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளீர்கள். வாழ்த்துகள் பாரா ஸார்.!

சுந்தரா said...

வாழ்த்துக்கள் பாரா!

மகாவுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

Senthilkumar said...

//
ஆட்டோவுல தூக்கிப்போட்டு போக ஒரு கூட்டமே காத்து நிற்கிறது.
//

நாங்கலாம் சுமோக்கு மாறிட்டோம், வினய்
அட.. கொண்டு போயி கவனிக்கத்தான்...

***********************

வாழ்த்துகள், பா.ரா!

அண்ணா நான் புதுகோட்டைகாரன் தான்...
சென்னை ல இருக்கேன்... வந்தா சொல்லுங்க... உங்களை சந்திக்கிறேன்

சுந்தர்ஜி said...

நெகிழ்ச்சி கலந்த நன்றிகள் பா.ரா.-இந்தச் சிறியவனின் வரிகளை உங்களைக் கவர்ந்த வரிகளாக்கிக் கொண்டதற்கு.

நேசமித்ரன் said...

@ஜெகன்

வாவ் !!!!

சுந்தர்ஜி said...

பா.ரா. ஒரு சின்ன எழுத்துப்பிழைத் தொந்தரவு.கமலேஷ் சுட்டினார்.என் “ரணம்” கவிதையின் குறைப்பை குரைப்பாக மாற்றிக்கொள்ளவும்.இடையூறுக்கு மன்னிக்கவும்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்கள்/உறவுகள்,

நிறைய வேலைகள். முதலாளி வெளியில் கிளம்ப இருக்கிறார். ஆயத்த வேலைகளில் இருக்க வேண்டிய நிலை.அப்பப்போ வந்து பார்த்ததில், குலுங்கிப் போயிருக்கிறேன். யாருக்கும் பதில் சொல்லக் கூட முடியல..ரெண்டொரு நாள்... வந்துருவேன்.

நிலவு பீய்ச்சும் ஒளியில், வேப்ப இலை அசையும் நிழலில்,விடுபட்டு போனதுகளை பேசுவோம். பேசணும்...

பேச வேண்டி, உதறி விரிக்கிற கோரம் பாய் மணல் என் முகத்தில் தெறிக்கணும். சரியா?

மற்றபடி, இந்த குலுங்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும் மக்களே!

Thenammai Lakshmanan said...

என் திருமண நாளில் தான் ஆரம்பித்து இருக்கிங்க மக்கா.. நம்ம மகாவுக்கு திருமணமா... அடுத்த நல்ல செய்தி.. அட என் தம்பி கோபால் பார்த்துட்டாரா மாப்பிள்ளையை.. கருணாகரசுவும்... அப்ப நீங்க பார்த்த மாதிரித்தான் மக்கா..

நடத்துங்க ...ரொம்பப் புரை யேறிச்சு இன்னைக்கு ...அதான் வந்தேன் இந்தப் பக்கம்..காந்தி மதி பெரியம்மா இல்லாமலா...எல்லா ஆசீர்வாதமும் அன்பும் உண்டு மக்கா .. சந்தோஷமா இருங்க.. வேறென்ன சொல்ல..

இளங்கோ கிருஷ்ணன் said...

அன்புள்ள பாரா,

ஒரு வருடமாக உங்கள் வலைப்பூவை பார்க்காததிற்கு வருந்துகிறேன்.

ஒரே வருடத்தில் இவ்வளவு நண்பர்களை சம்பாதித்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாகவே உள்ளது. ஆனாலும் என்ன இப்போ நானும் பாரா வின் நண்பன் ஆகிவிட்டேனே இனி எல்லாம் ஒரு கூட்டந்தான் மக்கா.

மெல்லினமே மெல்லினமே said...

vaalzhthukkal annae!

மெல்லினமே மெல்லினமே said...

vaalzhthukkal nanbarae!

பா.ராஜாராம் said...

நன்றி தேனுமக்கா, இளங்கோ, மெல்லினமே மெல்லினமே!

முடிவிலி said...

வாழ்த்துக்கள் .. தங்கையின் நல்வாழ்விற்கும் ... வலைபக்கத்தின் முதல் ஆண்டு நிறைவிற்கும் ...

பா.ராஜாராம் said...

நன்றி சங்கர்!

வினோ said...

முதல் முறையாக படிக்கிறேன். அற்புதம். இப்படி கூட நட்பு உலகம் வளருமா என யோசிக்க பிரமிப்பா இருக்கு. இத்தனை உள்ளங்கள் ஒன்று சேர்ருதுனா வார்த்தைகளின் அழகும், எளிமையும்.... நினைக்கும் பொழுதே சட்டென உயிர்பெற்றன - இரண்டு கண்ணீர் மொட்டுகள்.
நன்றி அண்ணா...