Wednesday, September 1, 2010

பூச்சாண்டி கவிதைகள்

தெரிஞ்ச பூச்சாண்டி


(Picture by cc licence, Thanks Phoenix2k)
ட்டானை
ஹெலிகாப்டர் பூச்சியென
முதலில் அறிந்தேன்.

ட்டானை
தட்டான் எனவும்
அறிந்தது உண்டு.

போறான் பாரு,
வாலில் நூல் கட்டிய பொறம் போக்கு
என அறிந்திருக்கலாம்
தட்டானும் என்னை.

பொறம் போக்கே ஆனாலும்
பூச்சியே ஆனாலும்
பரஸ்பரம் அறியப் படுதலில்
ஒரு மகிழ்ச்சியே பூச்சி.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

***

தெரியாத பூச்சாண்டி


(Picture by cc licence, Thanks Jinterwas )

நேற்றவள்
கனவில் வந்ததை
சொன்னேன்.

ன்ன சொன்னேன்?
என்றாள்.

யோசிச்சு சொல்றேன்
என்றவள் சொன்னதை
சரி என்றாய் என்றேன்.

சிரித்தாள்.

ண்டுபிடித்து விடுகிற
போதெல்லாம் சிரிப்போமே அப்படி.

***


44 comments:

அன்பரசன் said...

இரண்டுமே நன்று

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு சார். விகடனுக்கு வாழ்த்துகள்ன்னு சொல்லி போரடிக்குது;))

sakthi said...

நல்லாயிருக்குங்க ராஜாண்ணா

சைவகொத்துப்பரோட்டா said...

தெரிஞ்ச பூச்சாண்டி ரொம்ப நல்லா இருக்கு.

சிவாஜி சங்கர் said...

@2nd
வெக்கப்பட வச்சுடீங்க மாம்ம்ஸ்ஸ்...

rvelkannan said...

வாழ்த்துகள் அண்ணே
இப்போ எல்லாம் விகடன் வாங்கியவுடன் சொல்வனம் உங்களின் கவிதையை தான் கண்கள் தேடுகிறது.
1.அட ஆமா ... இப்படி கூட இருக்கலாம் தானே.
2. மெல்லிய ஊடலுடன் கூடிய அந்த பொழுதுகள் நினைவுக்கு வருகிறது அண்ணே ..

'பரிவை' சே.குமார் said...

இரண்டுமே நன்று.

vasu balaji said...

எப்பவும் சொல்ற அதே அருமைதான்.என்ன இந்த வாரம் நட்சத்திர அருமை.

vinu said...

adappaaigala firstaa vanthu comment type paqnnurathukkullea 8 pearu vanthu commenttittu poiteengala
enna kofumai sir ithu

வினோ said...

பா ரா.. கலக்கல்.. இரண்டாவது காலையும் நல்லா விடியுது.. இரண்டாவது புகைப்படம் அருமை...

சுந்தர்ஜி said...

1.அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
வாழத்தான் வாழ்கிறோம்.
அறிந்தபின்னும் தெரிந்த பின்னும்
அறியாதிருந்த காலத்தின் மேல் படரும் பிரேமை இருக்கிறதே! ஒண்ணாங் க்ளாஸ் பாரா.

2.சிரிப்பதைத் தேடிக் கண்டுபிடிக்கும் காலத்தில் கண்டுபிடித்துச் சிரிப்பது எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

அழகான ரெண்டு அநுபவங்கள் ரெண்டு கவிதைகளாக சூல் கொண்டு.

நல்லாருக்கீங்களா பா.ரா? ரொம்ப நாளாச்சு ஒட்டடையெல்லாம் நீக்கிட்டு வர்றதுக்கு.

Thamira said...

அழகு தட்டான்.

dheva said...

சூப்பர்.. சித்தப்பா...

இரண்டாவது கவிதை கொஞ்சம் ஊசி முனை வளைவு மாதிரி கொஞ்சம் தடுமாற வச்சு புரியவச்சது....!

CS. Mohan Kumar said...

Liked the second one very much. Very romantic.

Ravichandran Somu said...

1. தட்டான் அருமை!
2. Romantic!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பரே வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

//”யோசிச்சு சொல்றேன்
என்று அவள்”, சொன்னதை
”சரி என்றாய்”, என்றேன்.

சிரித்தாள்.//

மாமா,
பொய் சொன்னா சிரிப்பாங்களா?

என் நெலமை அப்பிடியில்ல.
பொய் சொல்லனும்னா ரொம்ப பயப்பட வேண்டியதா இருக்கு.

கவிதை நல்லாயிருக்குங்க மாமா.

நட்புடன் ஜமால் said...

தட்டானை
தட்டான் எனவும்
அறிந்தது உண்டு.]]

மக்கா நிறுத்திபுட்டிய இங்க

------------------

கண்டுபிடித்து விடுகிற
போதெல்லாம் சிரிப்போமே அப்படி.
]]

ஹா ஹா ஹா

ஆனாலும் மக்கா என்னா கண்டுபிடிக்கப்பட்டது ஸஸ்பென்ஸ் வச்சிட்டீக - கலக்ஸ்

க ரா said...

பூச்சிகிட்டல்லாம் பேச ஆரம்பிச்சுட்டிங்க மாம்ஸ்.. பின்றீங்க...

க.பாலாசி said...

இரண்டுமே நல்லாயிருக்குங்க சார்..

R. Gopi said...

சூப்பர்

Riyas said...

கவிதை நல்லாயிருக்கு.

கலகலப்ரியா said...

!!யோசிச்சு சொல்றேன்
என்றவள் சொன்னதை
சரி என்றாய் என்றேன்!!

:)

ப்ரியமுடன் வசந்த் said...

தட்டான் :-))

சிரிப்புக்கு கூட சிச்சுவேசன் சொல்றீங்களே !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

mmm.romance.Keep it up.

நசரேயன் said...

ம்ம்ம்

vinthaimanithan said...

//எப்பவும் சொல்ற அதே அருமைதான்.என்ன இந்த வாரம் நட்சத்திர அருமை. //

அதே அதே!

ஒரு மாற்றத்துக்கு எப்பாவாவது ஒரு தடவையாச்சும் சுமாரா மட்டும் இருக்குற மாதிரி எழுதுங்களேன்...

சிநேகிதன் அக்பர் said...

அறிதலும், அறிந்துகொள்ளப்படுதலும் எப்போதும் மகிழ்ச்சியே அண்ணா.

ஆனந்த விகடனில் வருவது புதிதா என்ன? :)

அவர்களுக்கு ஆஸ்தான‌ எழுத்தாளர்கள் இருப்பது போல நீங்கள் ஆஸ்தான கவிஞர் என நினைக்கிறேன். :)

இரண்டாவது நுணுக்கமான சிரிப்பு.

பவள சங்கரி said...

அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள்......

Anonymous said...

தெரிஞ்ச பூச்சாண்டி-யில் ஒரு குழந்தைத்தனம் :)

தெரியாத பூச்சாண்டி-யில் ஒரு
விடலைத்தனம் ;)

அழகுப்பா... இரண்டும்.

புரியாத கவிதையைப் புரியும்வரை படித்துப் படித்துப் பார்ப்பது.. புரிந்த கவிதையையும் புரியாத மாதிரி படித்துப் படித்துப் பார்த்து இல்லாத அர்த்தத்தைத் தேடிப்பார்ப்பது.. ஒரு வழக்கமாகி விட்டதுப்பா... எனக்கு :)

Anonymous said...

”என்ன சொன்னேன்?”
என்றாள்.

”யோசிச்சு சொல்றேன்”
என்று
அவள் சொன்னதை

”சரி என்றாய்” என்றேன்.

பா.ராஜாராம் said...

நன்றி அன்பரசன்!

வாழ்த்துகள் இல்லைன்னு சொல்லிப் பாருங்க, வித்யா. ஜாலியா இருக்கும். (அய்யயோ உங்கட்டயேவா?) நன்றி பாஸ்!

நன்றிடா சக்தி!

நன்றி, எஸ்.கே.பி!

அப்ப @1st போர் அடிக்குது. புரியுது ஓய். நன்றி சிவாஜி!

வேல்கண்ணா, மிக்க நன்றி! :-)

குமார் மகன்ஸ், நன்றி!

நன்றி பாலாண்ணா! (அண்ணனா போய்ட்டீங்க பாலாண்ணா. உங்கட்ட குசும்பு வரமாட்டேங்கிது) :-(

அதானே, என்ன கொடுமை வினு? நன்றி மக்கா!

a said...

தட்டான் கவிதை.......

கோமதி அரசு said...

இரண்டு கவிதையும் நல்லா இருக்கு பா.ரா.

Geetha said...

தெரிஞ்ச பூச்சாண்டி.. மிக பிடித்தது

Geetha said...
This comment has been removed by the author.
பா.ராஜாராம் said...

நன்றி வினோ!

நல்லாருக்கேன் சுந்தர்ஜி! நீங்க நலமா? அறிந்தேன். ரெஸ்ட் எடுங்க. நன்றி சுந்தர்ஜி!

நன்றி ஆதி! :-) (சிரிப்பான் போட தோணுது, உங்க பதிவு)

தேவா, நன்றி மகன்ஸ்!

மோகன்ஜி, நன்றி!

நன்றி ரவி!

நன்றி குணா சார்!

சத்து மாப்பு , :-)) நன்றி!

ஜமால் மக்கா, நன்றி! :-)

ஆர்.கே. மாப்சூ :-) நன்றி!

நன்றி பாலாசி!

கோபி, கலக்குறீங்க பாஸ். நேற்றுதான் உங்க தளம் வந்தேன். intresting! நன்றி கோபி!

நன்றி டீச்சர்!

வாங்க ரியாஸ், நன்றி!

நன்றிடா ப்ரியா!

நன்றி வசந்த்! :-)

ஜெஸ் தோழர், என்ன ஆங்கிலத்தில்? நன்றி மக்கா!

மூணு, ம், ஏதாவது குசும்பு உண்டா நசர்? நன்றி ஓய்!

நன்றி என் விந்தை மனிதா! :-)

கன்னக்குழி, நன்றி!

நித்திலம், மிக்க நன்றி! (பெரிய பெயர் பாஸ். இன்னிலிருந்து நித்திலம். சரியா?)

ராதூஸ், வெரி குட்! தேடு. நன்றி பயலே!

நன்றி யோகேஷ்!

ரொம்ப நன்றிங்க கோமதி அரசு!

கீதா, நலமா? நன்றி!

இரசிகை said...

nallaayirukku......thattaan......!1
suderji yin pinoottam nallaayirukku!1

இரசிகை said...

nallaayirukku......thattaan......!1
suderji yin pinoottam nallaayirukku!1

இரசிகை said...

nallaayirukku......thattaan......!1
suderji yin pinoottam nallaayirukku!1

cheena (சீனா) said...

அன்பின் பாரா

விகடனில் வந்தமைக்கு வாழ்த்துகள்
பரஸ்பரம் அறிமுகப்படுத்தலில் மகிழ்ச்சியே - அருமை அருமை

கண்டு பிடிக்கிற போதெல்லாம சிரிப்பது ... அழகு அருமை

நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா

உயிரோடை said...

அண்ணா, தட்டான் பூச்சி திட்டாதுன்னு நினைக்கிறேன்.

திருமிசை ஆழ்வார் சொன்னது போல பெருமாளே நீயின்றி நான் இல்லை அது போலவே நானின்றி நீ இலை" தட்டானும் அப்படி தான் சொல்லும்.

Raja said...

பிரமாதமா இருக்குங்க...

Raja said...

பிரமாதமா எழுதுறீங்க ...எல்லாத்தையும் கண்டிப்பா படிக்கணும்...