Thursday, January 6, 2011

பால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்-- இரண்டு


(Picture by cc licence, Thanks Sahlgoode)

வெங்கடேஸ்வரய்யர்
செத்துப் போனார்.

கோமதி மாமிக்கும்
நடை உடை போச்சு.

செங்கல் உதிர்த்து எளிதாச்சு
கால் பதித்து ஏறும் மூலைச் சுவர்.

குழந்தைகளுக்கும் கையொன்றும்
நீளமில்லை நமக்கு போல்.

காலத்தை கேலி செய்தும்
வாயூர வைத்தும்
கடந்து போய் விடுகிறதுடா
கிளி மூக்கு மாங்காய்.

ப்போ எங்கிருக்கிறாய்
செல்வராஜ் நீ?

***


33 comments:

க ரா said...

இன்னும்.. இன்னும் ... நிரையா சொல்லுங்க மாம்ஸ்

a said...

kadanthu sellum ethvathu oru PIZZA kadaiyil uthu parungal..... selvaraj QUEUEvil nirkka koodum
(sorry for the comment in thanglish)

வினோ said...

அப்பா அந்த மூல சந்து சுவருக்கு பின்னாடி... :)

Chitra said...

வாவ்! சூப்பர்!

ஹேமா said...

அண்ணா....ஆட்டம் ஆரம்பம் !

நசரேயன் said...

//இப்போ எங்கிருக்கிறாய்
செல்வராஜ் நீ?//

இங்கதான்

Muruganandan M.K. said...

"செங்கல் உதிர்த்து எளிதாச்சு
கால் பதித்து ஏறும் மூலைச் சுவர்." சுவையான வரிகள்

Anonymous said...

அசத்தல் அண்ணா..

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

அனைத்து வரிகளும் அற்புதம்

அம்பிகா said...

\\குழந்தைகளுக்கும் கையொன்றும்
நீளமில்லை நமக்கு போல்.\\
:-)))

Ashok D said...

//அண்ணா....ஆட்டம் ஆரம்பம் ! //

hello இது இரண்டாம் ஆட்டம்மா...

தல கவித சூப்பரு :)

அன்புடன் அருணா said...

இன்னும் அழகா எழுதுவீங்களே!

இன்றைய கவிதை said...

நல்லா இருக்கு பா ரா


நன்றி
ஜேகே

செ.சரவணக்குமார் said...

என்னிடமும் இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது அண்ணா. இப்படி வேறு எவருடைய பட்டியலிலாவது நாமும் இருக்க மாட்டோமா? என்ற ஏக்கமும்..

ராமலக்ஷ்மி said...

அருமை.

vasu balaji said...

திருட்டு மாங்கா ருசி:)

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் அருமை

'பரிவை' சே.குமார் said...

கவிதையில் கால ஓட்டத்தை சொல்லி விட்டீர்கள் சித்தப்பா.
அப்பா சேர் என்ற என சிறுகதை பார்த்தீர்களா?

rvelkannan said...

அந்த கேள்வி ... எனது புரதான அடுக்குகளில் எதிரொலிக்கிறது

ஈரோடு கதிர் said...

அடடா!

ராகவன் said...

அன்பு பாரா,

அருமையான கவிதை பாரா இது... செல்வராஜ் என்பது பொதுப்பெயராகி விடுகிறது இங்கே... செல்வராஜ் என்பது குறியீடாய் மாறி பல அர்த்தங்களை கொடுக்கிறது பாரா...

நல்லாயிருக்கு ரொம்பவும்.

அன்புடன்
ராகவன்

சிநேகிதன் அக்பர் said...

கொடுத்த வைத்த செல்வராஜ்.

Unknown said...

எல்லோரும் சொல்லிவைத்த மாதிரி தவறவிடுகிறோம் ...

காமராஜ் said...

அன்பின் பாரா.....
புத்தாண்டுவாழ்த்துக்கள் மக்கா.

தினேஷ்குமார் said...

வணக்கம் தங்கள் பதிவிற்கு முதல் முறைவருகிறேன்...
கவிதை நல்லாருக்கு அண்ணா ...

நினைவுகளின் பால்யதேடலில்
நீந்திசெல்லும் நெடுநீள
சிநேகிதர் வரிசை நீள்கிறது
முடிவில்லா தேடலுடன்

Mahi_Granny said...

எனக்கு கூட கவிதை இப்போதெல்லாம் பிடித்த ஒன்றாகி விட்டது. பிரபாவும் செல்வராஜும் இன்னும் உங்கள் பால்ய சிநேகிதர்கள் எல்லோரும் எங்களுக்கும் சிநேகமாக வேண்டும்.

விஜய் said...

பங்கு .................

நோஸ்டால்ஜிக் கணங்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

சத்ரியன் said...

மாமு,

பழசுகளை கிளறி விடுறதாலயே எல்லார் மனசுலயும் குடியேறிடுறீங்க.

Ahamed irshad said...

Arumai...

கோநா said...

அருமையான கவிதை பா.ரா

பா.ராஜாராம் said...

இரா மாப்ஸ், நன்றி!

நன்றி யோகேஷ்! தமிழ், தங்லீஷ், இங்லீஷ், கொய் பாத் நஹி பாய். தொடர்ந்து வர்றீங்களே. இது போதும்.

நன்றி வினோ! :-)

வாங்க சித்ரா! நலமா? நன்றி மக்கா!

(ஆ) ரம்பமா ஹேமா? நன்றிடா பயலே!

நன்றி நசர்! //இங்கதான்// நல்லவேளை, இப்ப நான் அங்கில்லை! :-)

வாங்க Dr. எம். கே. முருகானந்தன் சார்! மிக்க நன்றியும்!

நன்றிடா தமிழ்!

யாதவன், நலமா? மிக்க நன்றி மக்கா!

என்ன சிரிப்பு பாரு அம்பிகாவுக்கு! நன்றிடா அம்பிகா!

தல அசோக், சூப்பர் நன்றி! :-)

நன்றி டீச்சர்! கவிதை நல்லால்லை என்பதை எவ்வளவு அழகா சொல்றீங்க! இன்னும் நல்லா படிப்பியே நீ? இன்னும் நிறைய மார்க் வாங்குவியே பயலே, என்பது போல்!

ஜே.கே மக்கா,கேயார் மற்றும் நண்பர்கள் நலமா? நன்றி பாஸ்!

என் பட்டியலில் நீங்க இருக்கிறீங்க சரவணா. நன்றி மக்கா!

ராமலக்ஷ்மி சகா, மிக்க நன்றி!

நன்றி பாலாண்ணா! :-))

சேகர், மிக்க நன்றி!

நன்றி மகன் குமார். வாசித்தேன். ரொம்ப நல்லாருக்கு. எழுதுங்க மகன்ஸ்!

நன்றி வேல்கண்ணா!

நன்றி கதிர்ஜி!

சுசி, மிக்க நன்றி! :-)

நன்றி ராகவன்!

நன்றி அக்பர்!

நன்றி செந்தில்!

புத்தாண்டு வாழ்த்துகள் காமு! நன்றி மக்கா!

வாங்க வாங்க தினேஷ் குமார்! நலமா? நன்றி மக்கா!

நன்றி மஹிக்கா! சந்தோசமும் அக்கா!

விஜய் பங்கு, நன்றி ஓய்!

மாப்பு சத்ரியா! :-) மிக்க நன்றி மாப்ள!

இர்ஷாத், மிக்க நன்றிஜி!

வாங்க கோநா, நன்றி மக்கா!

உயிரோடை said...

புரியுது ஆனா புரியல

பா.ராஜாராம் said...

லாவண்யா, நன்றி!