Saturday, February 19, 2011

தீராக் கோபம்


(Picture by cc licence, Thanks XeroDesign)

நாளும் இரவும் கூடுதலாகிப்
போன நாளொன்றில்
புகைப் படத்திலிருந்து இறங்கி
அருகமர்ந்து கொள்கிறாய்.

ஒன்றுமில்லையாதலால்
தட்டுத் தடுமாறி எழுந்து
சாமி படத்து பூவெடுத்து நீட்டுகிறேன்.

வேண்டாமென தலையாட்டி
மீண்டும் புகைப் படம் எய்துகிறாய்.

செய்திருக்க கூடாதுதான்...

சாமி கைவிட்டதில்தான்
சாமியாகி இருந்தாய்.

----கல்கி (இந்த வாரம்)
நன்றி கதிர்பாரதி, கல்கி


26 comments:

vasu balaji said...

கல்கிலயும் கலக்குறீங்க பா.ரா. வாழ்த்துகள்.

Unknown said...

நல்லா இருக்குங்க.

அன்புடன் நான் said...

கவிதை ... நெகிழ்வு.

ஓலை said...

பா.ரா.வின் கைவண்ணம் கல்கியிலும் ஒளிருது.

காமராஜ் said...

ஓடுகிற ஓட்டம் நின்று நிதானித்து எதையும் அசைபோடத்தேரமற்றதாக்குகிறது.வாடியபயிரைக்கண்டபோதெல்லாம் வாடுகிற மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.வாய்த்தாலும் உருக்கி சொல்லமுடிவதில்லை.
சொல்லமுடிகிற கை எங்களுக்கு நெருக்கமான கை.பாரா பாரா பாரா..
எப்படி இருக்கீங்க.

ராமலக்ஷ்மி said...

கடைசி வரிகள் மிக நெகிழ்வு பா ரா.

'பரிவை' சே.குமார் said...

நெகிழ்வு.

dheva said...

ஆற்றாமையின் வெளிப்பாடு சித்தப்பா....! உணர்ந்தேன்!

Ashok D said...

:(

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை....

நிலாமகள் said...

கடைசி இரு வரிகள் என்னென்னவோ எண்ணங்களை கிளர்த்திவிட்டன... இப்படித்தான் ... படைப்பின் சாவி எங்காவது முகம் காட்டி வாசகனை உணர்வயப் படுத்தி விடுகின்றன. அவலமும், ஆற்றாமையும் முரடு தட்டிப் போன வடுவாயினும், ஏதோவொரு கணத்தில் கிழிபட்டு கசியத் தொடங்கிவிடுகின்றன பா.ரா. அண்ணா...

சிநேகிதன் அக்பர் said...

கல்கியில் வெளியானதற்கு வாழ்த்துகள் அண்ணே.

Ahamed irshad said...

(*பா ரா*)ட்டுக்க‌ள்..

ராகவன் said...

அனபு பாரா,

கவிதை படித்தேன் பாரா. கடைசி இரண்டு வரிக்காக இழுத்த மாதிரி இருந்தது. பழைய பாராவுக்காக காத்திருக்கிறேன் பாரா. நாளும் இரவும் கூடுதலாகிப் போன நாளொன்றில்.... நல்ல வரிகள் பாரா.

அன்புடன்
ராகவன்

வினோ said...

முடிந்த போன பின் கொட்டித் தீர்க்க எத்தனை இருக்கு இல்ல பா...

Anonymous said...

//
நாளும் இரவும் கூடுதலாகிப்
போன நாளொன்றில்
புகைப் படத்திலிருந்து இறங்கி
அருகமர்ந்து கொள்கிறாய்.

தர ஒன்றுமில்லையாதலால்
தட்டுத் தடுமாறி எழுந்து
சாமி படத்து பூவெடுத்து நீட்டுகிறேன்.//

ரொம்ப நேரம் யோசிச்சேன் அண்ணா...உங்கள் எழுத்தை பாராட்டும் அளவு வரலைன்னும் தோனுது..எங்க அண்ணா கவிதை கல்கிக்கே மெருகு...

சுசி said...

வாழ்த்துகள் பா ரா.

க.பாலாசி said...

அப்டியே உருக்கிவிடுறீங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பா.ரா. வாழ்த்துகள்

மரா said...

அருமைண்ணே.

உயிரோடை said...

அண்ணா க‌விதை ந‌ல்லா இருக்கு.

சந்தான சங்கர் said...

அருமையா இருக்குங்க

கல்கி பிரசுரத்திற்கு
வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

கடைசி வரி கலங்க வைத்தது மக்கா..

கல்கியில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்

kovai sathish said...

இப்படியும் யோசிக்கலாமோ..?

நேசமித்ரன் said...

//ராகவன் said...

அனபு பாரா,பழைய பாராவுக்காக காத்திருக்கிறேன் பாரா//

நானும்... நானும்... மக்கா!

பா.ராஜாராம் said...

நன்றி பாலாண்ணா!

நன்றி கலாநேசன்!

நன்றி கருணா!

நன்றி சேது!

காமு மக்கா, நல்லாருக்கேன். நீங்க? வேலைப் பளுக்கள். வரமுடியாமல் கெடக்கு. நன்றி காமு!

நன்றி சகா, ராமலக்ஷ்மி! கலக்குறீங்க போல? :-)

குமார் & தேவா & அசோக் மகன்ஸ் மிக்க நன்றி மக்கள்ஸ்! (என்னா வரிசை?) :-)

மனோ, ரொம்ப நன்றி பாஸ்!

மிக்க நன்றி நிலாமகள்! நல்லாருக்கீங்களா?

அக்பர்ஜி நன்றி!

நன்றி இர்ஷாத்!

நன்றி ராகவன்! :-)

நன்றி வினோ!

டேய்.. தமிழ், நன்றிடா! :-)

சுசி, நன்றி பாஸ்!

மாப்ள பாலாசி, நன்றியப்பு!

டி.வி.ஆர்.சார், ரொம்ப நன்றி சார்!

மரா, நலமா? நன்றி ஓய்!

நன்றி லாவன்ஸ்!

சங்கர்ஜி! எம்புட்டு காலம்! நல்லாருக்கீங்களா? நன்றி மக்கா!

தேனு மக்கா, ரொம்ப சந்தோசம். நன்றியும் தேனு!

சதீஷ், மிக்க நன்றி!

பழைய பா.ரா, கூப்பிடுகிறார்கள் ஓய் பழைய (anitique parties) ஆட்கள். :-)) நன்றி நேசா!