Wednesday, June 22, 2011

இலையுதிரும் சத்தம் - ஒன்று


இந்த ஜூன் 11-ல் தளம் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. ஜெத்தா, ரியாத் பயணங்களில் இந்தப் பதிவு தாமதமாகி விட்டது.

'இல்லாவிட்டாலும் நேரத்திற்கு எதையும் செய்பவன்தான் நீ' என நீங்கள் புலம்புவது கேட்கிறது. (ப்ளீஸ் மெதுவாகப் புலம்பவும்)

ஆம்! 'இலையுதிரும் சத்தம்'

இந்தத் தலைப்பின் கீழ் இனி ரெகுலரா புலம்பத்தான் போறேன். புரை ஏறும் மனிதர்கள் அப்படியே கிடக்கிறது இதில் புதுசா ஒரு தொடரா? 'நாய் வாய் வைத்தது போல கொத்திக் கொதறி சாப்பிடாமல் ஒழுங்கா சாப்டுடா' என்பாள் அம்மா. அம்மா கிடக்காள். அப்ப உள்ளவன்தானே இப்பவும்?

##

பிரதி ஞாயிறு சவுதி நேரம் எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் கேபிள் சங்கரின் கொத்து புரட்டா வாசித்து விடுகிறேன்.

ஜாக்கி சேகர் இன்னும் ஒரு படி மேல். 'இரண்டு மணிநேரம், பத்து நிமிடம், நாப்பத்தைந்து செகெண்ட் தாமதமாகிவிட்டது இந்த மினி சான்ட்விஜ் & நான்வெஜ் வெளியிட' என தன் வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறார்.

வாசகர்களும் அவரை மன்னித்து வாசித்து விடுகிறார்கள் / விடுகிறோம். 'எப்படி இப்படியெல்லாம் நேரத்திற்கு எதையும் செய்து விடுகிறார்கள்?' என்று பொறாமையாக வருகிறது.

'வியாழக்கிழமைன்னா விகடன் வரும்' என்கிற நினைப்பைத் தருவது எவ்வளவு உன்னதமோ அவ்வளவு உன்னதம் இந்த நேரந்தவறாமையும். இல்லையா? சரி..ஜெயிக்கப் பிறந்தவர்களோடு எதுக்கு எனக்குப் போட்டி?

என்னையும் நம்பி 397 பேர்கள் 2 வருஷமா பொறுமையாக காத்திருப்பதை நினைத்தால் ஒரு வசனம் நினைவு வருகிறது.

'பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ'.

சமர்த்து செல்லங்களா..நன்றி!

##

போன வருடம் இதே ஜூன் 11-ல் முதல் தொகுப்பு, 'கருவேலநிழல்' வந்து விட்டது. தளம் தொடங்கியதின் மஹா சாதனை இது. காரணம் நீங்கள்தான். 50, 60, கமெண்ட்ஸ்ல்லாம் தட்டி விட்டதில், 'இவன் கவிதைகளை தொகுப்பா போட்டா நல்லா விற்குமோ என்ற சிந்தனையை பதிப்பகத்தாருக்கு அளித்தீர்கள். பலன், 'கருவேல நிழல்' தொகுப்பாகி விட்டது.

மறு பக்கம், தொகுப்பு வெளியிட்ட வகையில் பதிப்பகத்தாரான வாசுவிற்கு 248 கோடி வருவாய் இழப்பு எனக் கேள்வி. (நஷ்ட்டத்தை இப்ப இப்படித்தான் பேசுறீங்களாமே தமிழ் நாட்ல?). வாசு என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் செய்த தவறுகளுக்கு நான் என்ன செய்வேன் மக்களே?

கொஞ்சம் வாசுவிடம் சொல்லுங்கள். மீறி, வாசு என்னை தண்டித்துதான் ஆகவேணும் என விரும்பினால், திகார் ஜெயிலுக்காவது பரிந்துரை செய்யவும். அங்குதான் அந்த மனுஷி இருக்கிறார்.

அவர் கண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நேரில் அந்தக் கண்களைப் பார்த்து விட வேணும் என்பது என் வாழ்நாள் பிரார்த்தனை.

புரியாமல் உடன் பிறப்புகள் ஆட்டோ எடுக்க வேண்டாம். நான் சவுதியில் இருக்கிறேன். நேரம் மற்றும் பொருள் விரயம் . 'வீட்டுக்கு விட்ரா வண்டியை' என யோசிப்பீர்கள் எனில் அங்குதான் என் மனைவி இருக்கிறாள். அவள் ஒரு 'ஒன் உமன் ஆர்மி'

ஒருமுறை, கோபத்தில் இரண்டு நாட்களாக வீட்டில் சாப்பிடாமல் இருந்தேன். எவ்வளவு சின்னப் பிரச்சினை இது?. இதுக்குப் போய் கையை 360 டிகிரி வலமிருந்து இடமாக ஒரு முறையும், இடமிருந்து வலமாக ஒரு முறையுமாக முறுக்கி, முதுகில் ஒரு குத்து விட்டாள். சும்மா, 'டிங்கி டிங்கி டிங்கி டிங்கி டிங்கி' என்கிற சத்தத்துடன் கண்களில் பூச்சிகள் பறந்தன.

நாளைக்கு, 'சொல்லலையே பாசு?' ன்னு சொல்லக் கூடாது பாருங்க.

##

பதிவுகள் குறைந்து போனதற்கு கூகுள் பஸ் பிரதானமாகிறது. செம ஜாலியா இருக்கு மக்களே அங்கு. நான் இங்கு மாதிரி அங்கிருப்பதில்லை. சண்டையெல்லாம் போடுகிறேன். அவர்களும், 'சரி. போயி வீட்ல யாராவது பெரிய ஆள் இருந்தா வரச் சொல்லு' என்கிறார்கள். டொப்புன்னு படத்த கீழ போட்டுட்டு நலுக்குப் படாமல் ஓடியாந்துருவேன். மறு நாள் 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' எனக் கிளம்பி விடுவதும் உண்டு.

சரி இனி பஸ்'சை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு தளத்தில் பதிவெழுதலாம். நீங்களும் வழக்கம் போல 50, 60 கமெண்ட்டுகளைத் தட்டி விடவும்.

காரணம் இருக்கு. இந்தப் புத்தக சந்தைக்குள் இரண்டாவது கவிதை தொகுப்பையும், புரை ஏறும் மனிதர்களையும் புத்தகமாகப் பார்த்து விட தீர்மானம் இருக்கிறது. வாசு இல்லாவிட்டாலும் வேறு யாராவது ஏமாறாமலா போய் விடுவார்கள்?

இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கு, 'மண்டுகள் துப்பும் மொழி' என்பது தலைப்பு. நல்லாருக்கா மக்கா?

##

அப்புறம், இந்த போகன் ராஸ்கலின் கவிதையைப் பாருங்கள்..

குழித் துறையின்
குறுகலான இடுக்கில்
சைக்கிளைத் திருப்புகையில்
எதிர்பாராத விதமாய்
எதிரே வந்துவிட்டது ஒரு யானை.

ஆனையை அங்கு பார்த்ததும்
திடுக்கிட்டேன்
ஆனையும் என்னைக் கண்டு திடுக்கிட்டது

நான் சிறிய அளவில்
ஆனை பெரிய அளவில்

அவரவர் அளவுக்கேற்றார் போலதானே
திடுக்கிடவேண்டும்?

-போகன்

##

ஏழுகடை நண்பர்களில் ஆகச் சின்னவன் செந்தில்தான். 24 வயது. முத்துராமலிங்கம் கடையில் வேலைக்கு இருக்கிறான். செந்திலால் நடக்க இயலாது. ட்ரை சைக்கிளில் வீட்டில் இருந்து கடைக்கு வருவான். கடை வாசலில் சைக்கிளை நிறுத்தி தவழ்ந்து படியேறி கடையில் அமர்வான்.

கல்யாணம் காட்சிகளுக்கு அவனை பைக்கில் அமர்த்திக் கொண்டு போவோம். இறங்கி, குழந்தை போல நெஞ்சில் அவனை சுமந்து சென்று எங்கள் அருகில் அமரச் செய்வோம்.

இந்த செந்திலுக்கு திடீரென நடக்க ஆசை வந்து விட்டது போல. பேப்பரில் விளம்பரம் பார்த்து ஆந்திராவில் எங்கோ அறுவை சிகிச்சை மூலமாக நடக்கச் செய்வதாக எங்களிடம் கொண்டு வந்தான்.

எங்கள் என்கிற நாங்கள் ஒரு 40 பேர்கள் இருப்போம், 'ஏழு கடை நண்பர்கள்' எனச் சொல்லிக் கொண்டு. நாலஞ்சு பேர்கள் மட்டும் வெளி நாடுகளில் இருக்கிறோம் என்றாலும் எல்லோருமே அன்றாடங் காய்ச்சிகள்தான்.

செலவோ ரெண்டு லட்சத்துக்கு கிட்டக்க. ஆனாலும் முடிவு செய்தோம். நணபன் சரவணன் மட்டும் கப்பலில் கேப்டனாக இருக்கிறான். அவன் செலவில் பெரும் பகுதியை ஏற்றுக் கொண்டான். அறுவை சிகிச்சை முடிந்தது.

மஹா திருமணத்தில் வண்டியில் வந்திறங்கிய செந்திலைத் தூக்கி வரவில்லை. முத்துராமலிங்கம் கழுத்தில் கையை மாலை போல போட்டுக் கொண்டு 'நடந்து, நடந்து, நடந்து, நடந்து, நடந்து, நடந்து' வந்து இருக்கையில் அமர்ந்தான்.

மகள் திருமணத்திற்காக கண் கலங்கினேனா.. செந்தில் நடந்ததைக் கண்டு கண் கலங்கினேனா? தெரியல. ஆனால் செந்தில் நடந்தான். இப்பவும் நடக்கிறான்.

ஏழு கடை நண்பர்கள் போலவே கூகுள் பஸ்'சிலும் ஒரு இயக்கத்தைப் பார்க்கிறேன்.வெட்டி அரட்டை மட்டும் அங்கில்லை. கேவிஆர் ஒரு பஸ் விடுகிறார்.

 'ப்ளஸ் டூவில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை. உதவி தேவை' என்பது போல. உடன் நண்பர்கள் இணைகிறோம். கிடு கிடுவென காரியம் ஆகிறது. ஆகிக் கொண்டே இருக்கிறது...

சீக்கிரம் படிக்கத் தொடங்கி விடுவாள் அந்த மாணவி. பிறகென்ன செய்வாள்? அவள் குழந்தை அல்லாத வேறு குழந்தைகளை படிக்க வைப்பாள்.

படிப்பு வாழ்க்கையையும் தருகிறது. படிக்கவும் வைக்கிறது. இல்லையா?

ஏழுகடை விரிந்து உலகம் ஆகி விட்டதா, உலகம் சுருங்கி ஏழு கடை ஆகி விட்டதா என்றிருக்கிறது எனக்கு.

இதை தளத்தில் வெளியிட விரும்பி குழுவில் கேட்டேன். 'க்ளோஸ்ட் சர்க்கிளா இருந்தா நல்லது பெரியப்பு' என அபிப்ராயப்பட்டார் முகிலன். என் க்ளோஸ்ட் சர்க்கிள் நீங்களும்தானே. எனவே வெளியில் சொல்ல வேண்டாம். முக்கியமா முகிலனுக்கு

.ஏழு கடை என்கிற இணய உலகில் இணைய விரும்பினால், நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணனும். கேட்டீங்களா? 'போறான் லூசு'ன்னு குழு அனுமதிக்கும் போது கூப்பிடுவேன் ..

##

அப்புறம், ஏழுகடை நண்பர்களிடம் இன்னொரு விசேஷம் உண்டு. ஏழுகடைக்காரனை சிவகங்கையில் யாரும் கை வைத்து விட முடியாது. இவன் மேலேயே தவறு இருந்தாலும் அடித்தவனை அடித்து விட்டுத்தான் எங்க ஆளை விசாரிப்போம். இதன் மார்க்கமாக 15 நாட்கள் ஜெயிலில் இருந்த அனுபவமெல்லாம் உண்டு.

போலீஸ் ஸ்டேசன் என்றாலே ஒண்ணுக்கு போகிற குடும்பத்தில் இருந்து வந்தவன்தான். (அப்ப 15 நாள் ஜெயிலில் இருந்தால் எவ்வளவு ஒண்ணுக்கு போயிருப்பார்கள் என்கிற கவலை இப்ப வரையில் இருக்கு)

இது வேறு. இதைப் பிறகு பேசுவோம். இவ்வளவு நாட்கள் இதைப் பேசாததற்கு மஹாவிற்கு மாப்பிள்ளை கிடைக்காதோ என்கிற பயம்தான்... இனி என்ன?

இதை எதுக்கு சொல்ல வர்றேனா,

நம் ஏழுகடைக்காரனான நம் (ரெண்டு நம் போடுறனோ. பரவால்ல இருக்கட்டும்) நேசமித்திரன் ஒரு உதவி கேட்டிருந்தான். இப்படி..

'எனது மரியாதைக்குரிய நாடகவியலாளர் ச.முருகபூபதி இயக்கும் புதிய நாடக ஒத்திகை 10-06- 2011 முதல் துவங்கியது.மிக பிரம்மாதமான காட்சிவரிசை, மண் ஒட்டியிருக்கும் வசனங்கள் என பித்தனுபவமாய் இருக்கிறது.உதவிகள் வேண்டி தவிக்கிறது குழு'

என்னைக்குப் போய் வாய் விட்டு கேட்டிருக்கிறார்கள் நம்மாட்கள்? நாமளா நகர்ந்தாத்தான் உண்டு. நான் நகர்ந்து விட்டேன். விருப்பம் எனில் நீங்களும் நகரலாம்.

இது விபரம்,

S.Murugaboopathy
A/C No 31223125664
SBI,Thiruthangal Branch,code-12767

'என்னடாது காசு விஷயமாகவே கொண்டு வருகிறான்?' என்றால்..

வேறு யாரிடம் போவேன் மக்கா?

போக,

இலை உதிரும் சத்தம் நமக்கு கேட்டிருக்கா?

- தொடரும்



57 comments:

பா.ராஜாராம் said...

இதனால் உலகிற்கு அறிவிப்பது என்னவென்றால்,

தம்பி உதவி இல்லாமல் நானா இந்தப் போஸ்ட்ட போட்டேன். கொஞ்சமாவது மதிங்கப்பா :-)

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

இன்றைய கவிதை said...

பா. ரா. அவர்களுக்கு,

இரு வருடங்கள் சாதனை இரு நூறு வருடங்களாய் மாற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

நானூறு வாசகர்களை மகிழ்விப்பது என்ன சாமான்யமா! உங்கள் சேவை தொடரட்டும்...!

-கேயார்

(Mis)Chief Editor said...

உரைநடையிலும் அண்ணன் 'கிங்'டா!

வாழ்த்துக்கள் பா. ரா..!

உங்களிடம் மட்டும் செல்லாது 'பாரா முகம்'!

-பருப்பு ஆசிரியர்

Romeoboy said...

இப்படி பொத்தி பொத்தி வச்சி பொங்கிடீன்களே தலைவரே .. எவ்வளவு நாள் ஆச்சு இதழோரம் மெல்லிய புன்னகையுடன் ஒரு பதிவை படித்து .. வாழ்க உங்கள் சேவை.

அகநாழிகை said...

திகார் ஜெயிலுக்காவது பரிந்துரை செய்யவும். அங்குதான் அந்த மனுஷி இருக்கிறார்.//

குருவி கூண்டை கோலால கலைக்க கூடாது ராஜாராம்.

//வாசு இல்லாவிட்டாலும் வேறு யாராவது ஏமாறாமலா போய் விடுவார்கள்?//

ஓ.. வேறு யாரையாவது ஏமாற்ற செய்யற ஐடியா வேற இருக்கா? இரு நேர்ல வெச்சுக்கறேன்.

Anonymous said...

\\இலை உதிரும் சத்தம் நமக்கு கேட்டிருக்கா?//
கேட்பதில்லை,கேட்க வேண்டியதில்லை,வுணர்தலின் மொழி அது.
இந்த பதிவு போல.அருமை.

ஓலை said...

Viththiyaasaththilum puthumai undakkiyirukkum paa.raa. Arumai.

எல் கே said...

வாழ்த்துக்கள் அண்ணே.

ராமலக்ஷ்மி said...

ஜூன் 11, மண்டுகள் துப்பும் மொழி, புரையேறும் மனிதர்கள்..

வாழ்த்துக்கள்!!!

போகன் கவிதை அருமை.

// நானா இந்தப் போஸ்ட்ட போட்டேன்.//

இரண்டு வருடம் முடிந்தது. இன்னும் எதற்கு உதவி:)? நல்லாயிருக்கு. நீங்களே போட ஆரம்பியுங்கள்.

CS. Mohan Kumar said...

பல இடங்கள் ரசித்து சிரித்தேன். புரையேறும் மனிதர்கள் புத்தகமாக வருவது குறித்து மகிழ்ச்சி.

தானே போஸ்ட் போட்ட தானை தலைவர் வாழ்க.

என்னால் Buzz பார்க்க முடிவதில்லை. :((

Balakumar Vijayaraman said...

"இலையுதிரும் சத்தம்" - மக்கா, ரொம்ப இயல்பா இருக்கு.

'மண்டுகள் துப்பும் மொழி' - வாழ்த்துகளும்.

vasu balaji said...

=)).சல்யூட்

சிநேகிதன் அக்பர் said...

//இவன் மேலேயே தவறு இருந்தாலும் அடித்தவனை அடித்து விட்டுத்தான் எங்க ஆளை விசாரிப்போம். இதன் மார்க்கமாக 15 நாட்கள் ஜெயிலில் இருந்த அனுபவமெல்லாம் உண்டு. //

இதை நம்பவே முடியலைண்ணே :)அம்பூட்டு பெரிய ஆளா நீங்க? இது தெரியாம ஏதோதோ பேசிட்டனே :)

சிநேகிதன் அக்பர் said...

2வது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் அண்ணா

சிநேகிதன் அக்பர் said...

//தம்பி உதவி இல்லாமல் நானா இந்தப் போஸ்ட்ட போட்டேன். கொஞ்சமாவது மதிங்கப்பா :-)//

பெரிய பெரிய மேதைங்களாம் சின்ன சின்ன விசயத்துல வீக்காத்தான் இருப்பாங்களாம் :)

(இதுக்கும் இப்ப நடக்கிற சம்பவங்களுக்கும் நீங்களா சம்பந்தப்படுத்திக்க வேணாம்)

சிநேகிதன் அக்பர் said...

புத்தக தலைப்பு அருமைண்ணே. ஆனா மத்தவங்கள ஏமாற விடமாட்டேன் நானே ஏமாறுவேன்னு வாசு அண்ணன் சொல்றாரு பாருங்க.

சீக்கிரம் புத்தக வெளியீட்டை எதிர்ப்பார்க்கிறோம்.

சிநேகிதன் அக்பர் said...

இந்த பதிவை பொறுத்தவரை நாங்க தரையாக இருப்பதால் இலை உதிரும் சத்தம் மட்டுமல்ல விழும் அதிர்வும் சத்தமாகவே கேட்கிறது.

மணிஜி said...

வழக்கம் போல்..டாய்தான்:-)))

நேசமித்ரன் said...

மண்டுகள் துப்பும் மொழி ‘ - சொல்லவே இல்ல வாழ்த்துகள்ணே !

அப்புறம் நன்றிலாம் சொல்ல மாட்டோம் :)

மாற்றங்கள் பெரு மகிழ்வு!

இந்த சூழலில் தொடர்ந்து இயங்குவதே சாதனைதான் அண்ணே !

முனைவர் இரா.குணசீலன் said...

சண்டையெல்லாம் போடுகிறேன். அவர்களும், 'சரி. போயி வீட்ல யாராவது பெரிய ஆள் இருந்தா வரச் சொல்லு' என்கிறார்கள்

:)

விஜய் said...

வாழ்த்துக்கள் பங்கு

உலகத்திலேயே அந்த கண்களை ரசித்த முதல் நபர் என விருது வழங்கலாம்

விஜய்

அம்பிகா said...

வாழ்த்துக்கள் அண்ணா

க ரா said...

வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்... புத்தகத்துக்காக ஆவலாக வெயிட்டிங்....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தம்பி துணையில்லாமல் இலையொன்று உதிர்ந்திருக்கிறது சப்தமாக.

மண்டுகள் துப்பும் மொழி நல்ல சாய்ஸ்.மண்டுகளாய் இருப்பதால் துப்பல்.


இந்த இடுகையின் கலந்துகட்டல் மழைநாளில் மொறுமொறுப்பான சூடான வீட்டு முறுக்குப் போல.

அடிக்கடி எழுதுங்க பா.ரா.

சத்ரியன் said...

//உலகத்திலேயே அந்த கண்களை ரசித்த முதல் நபர் என விருது வழங்கலாம் //

இதை நானும் ஆமோதிக்கிறேன்.

மாமா,

ஒரு விஷயம். கமெண்ட் போடுங்கன்னு கேட்டிருக்கீங்க , நியாயந்தான். காசு போடுங்கடா-ன்னா (நான் என்னையச் சொன்னேன்) எப்பூடி மாம்ஸ்!

பதிவுக்குள்ள நிறய விசயங்கள் இருக்கு மாமா. கத்துக்கனும் உங்கக்கிட்ட..!

ஹேமா said...

அண்ணா.... மண்டு நானும் சத்தமாத்தான் புலம்பிட்டு இருக்கேன்.

அன்புடன் அருணா said...

"இலையுதிரும் சத்தம்" நல்லா கேட்டுது!!!

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா அட்வான்ஸ்டு முன்னேற்றத்துக்கு வாழ்த்துக்கள் மக்கா..:)

Unknown said...

வாழ்த்துக்கள்...

rajasundararajan said...

//இலை உதிரும் சத்தம் நமக்கு கேட்டிருக்கா?//

பெர்க்லியுடைய "ஆளில்லாத தோப்பில் மரம் விழுந்தால், சத்தம் கேட்குமா?" என்கிற தத்துவ வினா அல்லவா இது?

ஆனால், இங்கே, பா.ரா., 'கேட்காத போதும் உதிர்தல் நிகழ்ந்திருக்கும்' என்னும் அறிவியல் உண்மையை உணரக் கோருகிறார். அவர் தொண்டுள்ளம் வாழ்க!

ஒரு கதை:

"கோவில் உச்சியில் உள்ள கொடி அசைகிறது," என்றார் ஒரு துறவி. "இல்லை, அசைவது காற்று," என்றார் இன்னொரு துறவி. அவ்விருவரையும் கேட்ட மூன்றாமவர், "கொடியும் இல்லை; காற்றும் இல்லை: மனசுதான் அசைகிறது," என்றாராம்.

கவிஞர் தேவதேவன் ஒருமுறை சாகப் பிழைக்கக் கிடந்தார். அவருக்கு நினைவு திரும்பி-அழிந்து-திரும்பி-அழிந்து கொண்டிருந்தது. ஒரு திரும்புதலில், "குழந்தை இல்லையே, என்று கவலைப் படுறீங்களா சுந்தர்ராஜன்? அது ஒரு மாயை," என்றார். அவரைத்தான் பார்க்கப் போயிருந்தேன் என்றாலும் நான், அப்போது, அவர் என் ம்னம்தோண்டிக் கண்டதுபோல் என்னைப் பற்றிய அதே கவலையில்தான் இருந்தேன். (பிறகு இன்று வரை எனக்கு அந்தக் கவலை திரும்பியதில்லை).

அதற்கடுத்த நினைவு திரும்பலில், "கனிமொழி நல்ல கவிஞர்," என்றதோடு இன்னும் சில வார்த்தைகள் சொன்னார். அவை, கனிமொழி கவிதைகளைப் பற்றித் தான் எழுதி வைத்திருப்பதாகச் சொன்னாரா என்னை எழுதச் சொன்னாரா என்று தெளிவில்லை. (கனிமொழியின் முதல் தொகுதி வெளிவந்திருந்த நேரம் அது). தேவதேவன் பிழைத்தெழுந்த ஓரிரு நாட்களின் பின் நானும் பணி-மாறுதலில் வடோதரா போனவன், பிறகு இருபது இருபத்தோர் ஆண்டுகள் இலக்கியத்தை மறந்துபோனேன்.

ஜ்யான் ஜ்யெனே சிறையில் அடைக்கப்பட்ட போது பிரான்ஸ் நாட்டின் மொத்தக் கலைஞர்களும் ஒன்றுதிரண்டு குரல்கொடுத்து அவரை வெளியே கொண்டுவந்தார்களாம். கனிமொழி விசயத்தில் அப்படி எண்ணிப் பார்த்தேன். எனக்கே சிரிப்பு வந்தது.

நாம் இந்தியர்கள். நமக்கு, கலையல்ல; அறம்தான் முக்கியம்.

//அவர் கண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நேரில் அந்தக் கண்களைப் பார்த்து விட வேணும் என்பது என் வாழ்நாள் பிரார்த்தனை.// என்பது ஒரு கலைக் கூற்று, கவிஞரே, எச்சரிக்கை!

bogan said...

பா ரா என்னை ராஸ்கல் னு 'பாராட்டினதுக்கு' திருப்பி எப்படி பாராட்டறது ன்னே தெரியலை)

ஆமா பஸ்ல போறதை கொஞ்சம் குறைச்சுக்கணும் போல..ஒரே ரத்தக் களறி...

ரிஷபன் said...

அன்னியோன்னியமாய் (சரிதானா) ஒரு எழுத்தும் அதே சுவாதீனமாய் வாசிக்கிறவனும் அமைந்து விட்டால் என்ன சுலபமாய் அங்கே ஒரு சங்கீதம் ஒலிக்கிறது.. இந்தப் பதிவில் நிகழ்வது போல

செ.சரவணக்குமார் said...

ஆஹா..

நல்லதொரு தொடக்கம் அண்ணா.

நேசன் சொன்னதுபோல இந்தச் சூழலில் தொடர்ந்து இயங்குவது பெரும் சாதனைதான். மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா.

உரைநடையில் தனித்துவமானவர் நீங்கள். இலையுதிரும் சத்தம் தொடரட்டும் அண்ணே.

வரப்போகும் நூல்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

good boy பா.ராஜாராம்! உங்க கருத்துக்கு நன்றி!

ரத்னவேல் சார் நன்றி!

நன்றி கேயார்! :-)

(Mis)Chief எடிட்டர் நன்றி பாஸ்!

அருண்மொழித்தேவன், மிக்க நன்றி!

வாசு, விதி யார விட்டது?...அனுதாபங்களும் அன்பும் :-) நன்றி மக்கா!

இந்து நன்றி!

நன்றி சேது!

கார்த்தி நன்றி!

ஓகே சகா! நன்றி!

மோகன்ஜி, பஸ்' சில் உங்க கமண்ட் பார்த்தனே? வேற மோகன்குமாரா?நன்றி!

பாலகுமார் மக்கா, ரொம்ப நன்றி!

பாலாண்ணா, தான்க்ஸ்! :-)

அக்பர்ஜி, நாலஞ்சு நன்றி! :-)

டாய் .. மணிஜி .. நன்றி! :-)

மக்கா நேசா நன்றிடா!

குணா சார் நன்றி!

பங்கு, விருதுக்கும் சேர்த்து நன்றி! :-))

நன்றிடா அம்பிகா!

எனக்கும் வயதில்லை. பதில் வணக்கம் இரா மாப்ஸ் :-)

சரி சுந்தர்ஜி. இனி எழுதறேன். ரொம்ப நன்றி மக்கா!

முதல்ல காசப் போடும் சத்ரியன் மாப்ஸ். அப்புறம் கூட கமண்ட்டப் போடலாம். :-) நன்றி ஓய்!

நீயுமா ஹேமா? அப்ப, நம்ம குடும்பமே இப்படியா? :-) நன்றிடா ஹேமா!

நன்றி டீச்சர்!

தேனு மக்கா, நன்றி!

நன்றி கலாநேசன்!

அண்ணே, எவ்வளவு விஷயங்கள் அறியத் தருகிறீர்கள்! ரொம்ப நன்றிண்ணே!

போகன், :-) நன்றி!

ரிஷபன், கமண்ட் போடச் சொன்னா ஒரு கவிதை எழுதிட்டுப் போறீங்க. நன்றிஜி!

நன்றி சரவணா!

'பரிவை' சே.குமார் said...

பல இடங்கள் ரசித்து சிரித்தேன். புரையேறும் மனிதர்கள் புத்தகமாக வருவது குறித்து மகிழ்ச்சி.

இரசிகை said...

:)

nallyirukku

vaazhthukal rajaram sir....!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் பா.ரா.

மண்டுகள் துப்பும் மொழி ரொம்ப நல்லா இருக்கு தலைப்பு..!

சாந்தி மாரியப்பன் said...

மண்டுகள் துப்பும் மொழிக்கு வாழ்த்துகள் பா.ரா அண்ணா.. ஒன் உமன் ஆர்மியையும், ஏழுகடை வீரவரலாற்றையும் சொல்லி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வெச்சிருக்கீங்க :-)))))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பல வரிகளை ரசித்தேன்! சிரித்தேன் ராஜாராம். வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

நன்றி குமார் மகன்ஸ்! ஊருக்கு போயிருந்தீங்களா..புழக்கத்தக் காணோமே?

நன்றி ரசிகை! சேவியர் நலமா?

வசந்த் தம்பு, நன்றி!

ஆமா சாரல். நாம வீட்டில் இல்லாதப்போ ஒன் உமன் ஆர்மியை அடிக்கப் போய்ட்டா, கண் குளிர பார்க்க முடியாமல் போகுமே:-)) நன்றிடா!

பா.ராஜாராம் said...

ஜெஸ் மக்கா, நன்றி! :-)

ராம்ஜி_யாஹூ said...

arumai

Anonymous said...

அண்ணா வணக்கம் அண்ணா..இரண்டாவது வருடம் வாழ்த்த வயதில்லைன்னு சொல்லமாட்டேன் வாழ்த்துக்கள்...

Anonymous said...

அகநாழிகை வாசு சார் எப்படியும் 248 இழப்பு ஒரு ரெண்டு கோடி செலவு பண்ணி என் கவிதைகளை வெளியிட்ட 250ன்னு சொல்லிக்க கொஞ்சம் பெருமையாவும் இருக்கும் உங்களுக்கு..முகவரியும் உரிமமும் மெயிலில் அனுப்பிட்டேன்...

manjoorraja said...

ராஜாராம், உங்கள் பதிவுக்கு முதல் விஜயம். (நன்றி கேவிஆர்)

நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

ராம்ஜி, நன்றி!

எவ்வளவு எதிரிகளை சம்பாதிச்சு வச்சுருக்கீங்க வாசு! இதோ, மற்றொருவர்! சொல்லிட்டேன் தமிழ். :-)) நன்றிடா!

வாங்க வாங்க மஞ்சூர்ராஜா, நன்றி! கே.வி.ஆர்' க்கும்!

நசரேயன் said...

வாழ்த்த வயதில்லை

தெய்வா said...

இன்று பா.ரா. பிறந்த நாள்
என் வாழ்த்துக்கள்

எல்லோரும் வாழ்த்த வரவேற்கிறேன்

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா ரா:)!

sakthi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா ரா அண்ணா

இரசிகை said...

manamaarntha piranthanaal vaazhthukal rajaram sir....:)

பா.ராஜாராம் said...

நசர் குழந்த, நன்றி! ;-)

என்ன தெய்வா இப்படிப் பண்ணிட்ட? நன்றிடா :-)

சகா, சக்தி, ரசிகை, நன்றி!

சத்ரியன் said...

மாமாவுக்கு... பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஓலை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பா ரா!

Unknown said...

ஜூன் 11, மண்டுகள் துப்பும் மொழி, புரையேறும் மனிதர்கள்..

வாழ்த்துக்கள் பா. ரா.

CS. Mohan Kumar said...

//மோகன்ஜி, பஸ்' சில் உங்க கமண்ட் பார்த்தனே? வேற மோகன்குமாரா?நன்றி! //

பா. ரா அது நான் தான். ஆனால் பஸ் வீட்டுக்கு போன பிறகு வாரத்தின் சில நாட்கள் மட்டுமே கொஞ்ச நேரம் பார்ப்பேன். கமென்ட் போடுவேன்