Friday, September 4, 2009

யம்மோவ்...



வீடு வருவேன்.
அன்பையும்
ஆக்கி வைத்திருப்பாய்.

குழந்தைகள் குறித்து
கேட்டாலும்
"முதலில் சாப்பிடுடா"
என
சிரிப்பு தருவாய்.

ங்கிருந்து எடுத்தாயோ
இந்த
எண்ணெய் கத்திரி
குழம்பை.

காய்ச்சல் கருமாதிக்கு
தலை தடவி
மார்பிறுக்குவாய்.

டல்சூடு
ஒரு
மருந்தென்பாய்.

குடி
கூடிய
உபத்திரவத்தையும்
குழந்தைகள் பார்க்கவேணாமே
என
கையேந்துவாய்.

கூட கூட
திரியும் குறிப்புணர்ந்து
"இந்த மசுரை சொல்லு உனக்கு"
என
மன முறிப்பாய்.

வெளியில் இருந்து
பார்க்கிறேன்.
வீடு தெரிகிறது.

ள்
நுழைந்த பிறகு
வெளியறிய காணோமே...

ன்ன ஜென்மமோ
நீ
என்
யம்மோவ்..

Tuesday, September 1, 2009

சொல்லிட்டேன்...ஆமா


(Photo by CC Licence thanks feverblue)

ட நடக்க
பேசி சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட

னக்கு போலவே
எனக்கும் வாய்த்தது
அப்பா.

புகைக்க
குடிக்க
கடன் வாங்க
ஆட்டை தூக்கி
குட்டியில் போட
குட்டியை தூக்கி
ஆட்டில் போட

னக்கு போலவே
எனக்கும் வாய்த்தது
அப்பா.

கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்து கொண்டே
செத்து போக...

னக்கு போலவே
எனக்கும் வாய்க்கணும்
அப்பா.