Tuesday, September 8, 2009

பா.ராஜாராம் கவிதைகள்-3

1.
(Photo by CC License, thanks groks)

ற்றங்கரையில்
எடுத்த கல்.

மினு மினுப்பற்ற
வழு வழுப்பு.
வீடு வரையில்
சேர்க்க இயலாத
ஞாபக குறைவு.

ங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ளோட பேரோட
இருந்திருக்கும்.
--------------------------------------------------
2.
ஜாகீர் உசேன்
மளிகை கடையில் பார்த்ததாக
நண்பன் வந்து
சொன்னான்.

யிர் துடித்தது
மயிர்க்கால் அளவு.
நண்பனிடம் சொல்லவில்லை
நான்.
---------------------------------------------------
3.
ன்ன செய்வது
என மலைக்கிற
தருணங்களில்
எனையறியாது
ஏதாவது
செய்து விடுகிறேன்.

"சும்மா இருந்து பாரேன்"
யாராவது சொல்லத்தான்
செய்கிறீர்கள்.

சும்மா இருந்தால்
நல்ல கவிதை
கிடைக்குமோ
ஒருவேளை என
குழம்பவும்
செய்கிறேன்.
---------------------------------------------------

Saturday, September 5, 2009

என்னமாத்தான் வருது...

ள்ளங்கை
தாமரை விரிப்பு.
மேலாக
முந்தானை நூல் சேலை.
மேலுக்கும் மேலாக
தளும்பும்
நீர்ச்செம்பு.

ய்யா மார்களுக்கு
கொண்டு வருகிற
நீர்ச்செம்பு.

முறுக்கு மீசை.
நெற்றி பொட்டு.
அங்கவஸ்திர தெறிப்பு.

ய்யா மார்களின்
அய்யா மார்கள் போலவே
அய்யாவும்.

நீர்ச்செம்பை வாங்கையில்
ஒரு ஈஷு.
கொடுக்கையில்
ஒரு ஈஷு.

டுங்கும்
அவளின் வெறுங்கழுத்தை
விழுங்கி
செரிமானத்துக்கு
நெளிக்கிறது

ங்கொய்யால...
தலை எழுத்து.