Saturday, September 12, 2009

சருகுதிரும்போதில்


(picture by CC licence, Thanks hj91)

ளர் பிஞ்சு
நகம்கொண்டு
நரம்பு
கிழித்தாடுகிறது
சற்றுமுன் உதிர்ந்த
சருகொன்றை.

தாய் பிரித்த
விடலைப்பூனை.

கிழிக்க கிழிக்க
கொடுத்துக்கொண்டிருக்கிறது
சருகும்.

பூனைக்கும்
சருகுக்கும்
யாருக்கும்

தாய் பிரிக்கிற
தருணம்
போதும் போல
ருதுவாக.

Thursday, September 10, 2009

சுழல் பயணம்



(picture by CC licence, Thanks stumayhew)

திசைகளில்
படுத்துறங்கி கிடக்கிறது
பறவைகளின்
இரைச்சல்.

ரையட்டும்
என கிடக்கலாம்
கதிரவனும் கூட.

ர்ப்பைபுல்
தழுவி
நதி எட்டும்
கடல் மட்டம்.

காற்றும்
இறந்தே வீசுகிறது
சாதக
அ-சாதக
திசை நோக்கி.

பாய்மரச்சுக்கான்
கத்திக்கப்பல் செய்கிறவனின்
கைகளில்.

டப்பாரை நீச்சல்
கை
நீளும் வரையில்.

பிழைத்தும் கூட வரலாம்
பிரேதமேனும்
கரையில்.

ராவிட்டாலும்
ஆமென் சொல்ல
என்
ஏவாள் இருப்பாள்.

னவே

விடிந்தால் அழலாம்
செய் நன்றி
மனமே.