
(Photo by CC license, Thanks #)
"புள்ளைகளைக்கூட
வேணாமுன்னு
போய்ட்டவளை
எதை சொல்லிண்ணே
கூப்பிட சொல்றீக?"
முடிவெட்டிக்கொண்டே
பேசிக்கொண்டிருக்கிறார்
முத்தண்ணன்
பதிலின்றி
குனிந்திருக்கிறேன்
அறுந்தறுந்து
விழுந்து
கொண்டிருக்கிறது
கேசம்
போலவே
நேசமும்
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...

