
(picture by cc licence, thanks RubensLP)
அச்சசல் அண்ணன்
மாதிரி இருந்ததால்
மறைத்துக்கொள்கிறேன்
புகையும் சிகரெட்டை
கைகளுக்குள்.
அவரும் புன்னகைத்து
கடந்து போகிறார்.
அண்ணனா
அண்ணன் மாதிரியா
என்கிற
கேள்வி மறைந்து
புன்னகையா
புன்னகை மாதிரியா
என்கிற கேள்வியில்
புகைந்து கொண்டிருந்தேன்.
சிகரெட் மாதிரி.