Thursday, May 13, 2010

கடவுள் அடக்கம்


(Picture by cc licence, Thanks Seattle Miles)

பிழைக்க மாட்டான் என்றிருந்த மகன்
பிழைக்க வேண்டி
வாங்கிய ஆட்டுக் குட்டிக்கு
நேர்ச்சை சாமி
பெயரே இட்டோம்.

தன்னை கொன்று
மகனை காப்பாற்றியது
பெயரைக் காப்பாற்ற
விரும்பிய சாமி.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


Tuesday, May 11, 2010

மிஸ்டு கால்கள்



ஒன்று
சொன்னது மூணு டீ
வந்ததும் அதுவே.
சும்மா வந்த நாலாவது டீ தாங்கியில்
என்னவோ சொன்னான் சிறுவன்.

இரண்டு
பறந்து பறந்து பார்க்கிறான்
பட்டாம் பூச்சி போல.
இடுப்பில் பிணைந்த
கயிறின் பெயரோ
தாத்தா போல.

மூன்று
பர்சில் இருந்த
(திருடிய) புத்திசாலி அட்டைகளை
திருடியவனுக்கு எழுதுகிற கடிதம்
நன்றி, நன்றியரிய ஆவல்
என தொடங்குகிறது...

நான்கு
வெளிர் நீலம் ஊதினேன்
மூங்கில் கடந்த நீர் முட்டையோ
மாநிறம் ஊதியது.

ஐந்து
காகம் சோறெடுத்த பிறகு
சாப்பிடுகிறாள் அம்மா.
முன்பும் அப்பா சாப்பிட்ட பிறகே

ஆறு
ஒரு மிஸ் கால் வந்தால், ஹாய்.
ரெண்டு வந்தால், தூங்கப் போறேன்.சரியா?"
சொல்லிப் போனாள்.

தூங்கப் போறாளா, ரெண்டு ஹாயா?
குழம்பினான்-தூக்கம் வராதவன்.
**