
இருக்க மரம் இருந்தும்
உச்சிபொழுதில் ஒரு காகம்.
புழுதியை எற்றி விளையாடியபடி
அப்பளப்பூ வாங்கி போய் கொண்டிருக்கிறாள்
செம்பரட்டை சிறுமி ஒருத்தி.
பூவரச மரத்தடியிலமர்ந்தபடி
புடைத்தோ சலித்தோ பொழுதடைத்துகொண்டிருக்கிறாள்
ராக்காயி அப்பத்தாவை
போன்றொரு அப்பத்தா.
சிவனே என்று நின்று கொண்டிருந்த
கோயில் காளையொன்றை
சிறுநீர் விட்டழைத்து
கொண்டு போய் கொண்டிருக்கிறது
செவலை பசு.
இருக்கசொல்லி போனவருக்காக
இருந்துகொண்டிருக்கிறேன்...
முதலில் சில்லென்று இருந்த
திண்ணை ஒன்றில்!
8 comments:
அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!
ஓட்டும் போட்டாச்சு..
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
நன்றி கலையரசன்.
No more torture by ‘word verification’. :)
காட்சிகளை கண் முன் விரித்துவைக்கிறது இந்தக் கவிதை
-ப்ரியமுடன்
சேரல்
தவறவிட்ட கிராமத்து காட்சிகளை கண்முன் கொண்டு வரும் வரிகள் அருமை.
ஜீயோவுக்கு நன்றி..உங்களை அறிமுகபடுத்தியதுக்கு...(பிரம்மசாரிகள் குடியிருப்பு ஒரு அரை பாட்டில் உண்டு..)
அருமை!
நெகிழ்வான நன்றியும் அன்பும் என்..
சேரல்.
துபாய் ராஜா.
தண்டோரா.
என் சுந்தராவிற்கு நன்றி...உங்களை எனக்கு அறிமுகம் செய்ததிற்கு.ஆஹா...இரண்டும் அருமையான விஷயங்கள்.நமக்கு இப்போதைக்கு luck இல்லை மக்கா.அழைப்பிற்கு அன்பு நிறைய.
சென்ஷி.
Post a Comment