Monday, September 21, 2009

தொடர்பதிவு - 1

கோதரி ஹேமாவும், தோழர் சி.கருணகரசும், தோழர் ஷஃபிக்ஸ்ம் அழைத்த தொடர் இது. நல்லா இருங்கப்பா..

அ-அம்மா இங்கே வா வா
அப்பாவின் இறப்பிற்கு பிறகு, அம்மா எப்போதாவது வீடு வருகிறாள். மருமகளின் நல்மனசு சுருங்குமுன், புறப்படுகிறாள். சகோதரிகள் வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பா வீடு என தத்திகொண்டே இருக்கிறாள். அம்மாவை கூடேவே வைத்து பார்க்க முடியாத ஒரே மகனின் நிலைமை யாருக்கும் வர வேண்டாம்.

-ஆசை முத்தம் தா தா.
பயணம் சொல்லிக்கிற போது, இரு கைகளிலும் கன்னம் வழித்து, சொடிக்கிட்டு, கண்கள் தளும்ப தரும் அம்மா முத்தம்! பயணங்களில் கூடவே வருகிறது.


-இலையில் சோறு போட்டு.
ஏழு எட்டு வயதில், ஒரு திருமணத்தில் முதல் பந்தியில் அமர்ந்தேன். "உனக்கென்னடா இப்ப அவசரம்?" என்றார் அந்த பெரியவர். உறவினர். செல்வேந்தர். பிடுங்கி எறிய இயலாதிருக்கிறது பசுமரத்தாணியை.

-ஈயை தூர ஓட்டு.
வெங்காயக்கடை, காய்கறிக்கடை, LIC-ஏஜென்ட், போட்டோ-வீடியோ எல்லாம் செஞ்சு பார்த்தாச்சு, இந்த காரியத்தையும் பார்த்துக்கொண்டே.

-உன்னை போல நல்லார்.
"அப்படியே வர்றான், வாரிசு தப்பாமல். வச்ச இடம் தெரியாமல், எடுத்த இடம் தெரியாமல்-உங்க மகன்" தொலை பேசியில் சிரிக்கிறாள் மனைவி. வாடா...வாடா...வாடா, என் மகனே!

-ஊரில் யாரும் இல்லை.
பெரியப்பாவிற்கு எட்டு குழந்தைகள். அப்பாவிற்கு அஞ்சு. சித்தப்பாவிற்கு மூணு. எல்லோரும் ஒரே வீட்டில் வீடு கொள்ளாது இருந்தோம். இப்போ, வீடு மட்டும் இருக்கு. ஊரில்.

-என்னால் உனக்கு தொல்லை.
"பாதி ஜாமத்துக்கு வராதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல" என தூக்க கலக்கத்தில் கதவு திறக்கும் தொல்லை, இந்த ஏழு வருசமாய் மனைவிக்கு இல்லை எனலாம்.

-ஏதும் இங்கு இல்லை.
ஒரு வருஷத்தில் மகள் திருமணம் என நினைத்திருக்கிறேன். பை, காலி. நம்பிக்கை மட்டும் இருக்கு.

-ஐயம் இன்றி சொல்வேன்
ஏதும் இங்கு இல்லை-இல் சொன்னதுதான். வேறென்ன?..

-ஒற்றுமை என்றும் உயர்வாம்.
எப்படி, இப்படி இருக்க வாய்த்தது பெரியப்பா, அப்பா, சித்தப்பா?

-ஓதும் செயலே நலமாம்
நிறைய இருக்கு.வழி நடத்துது.

ஒள-ஔவை சொன்ன மொழியாம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

தே எனக்கு வழியாம்.
ம்ம்ம்ம்..என்ன சொல்லலாம்? ஒரு கவிதை சொல்லலாம்...

மூன்று செங்கலிட்ட
அடுப்பில் கொதிக்கிறது
திருட்டு கோழி.

சாராயத்திற்கும்
ஆள் போயிருக்கு.

ந்த பிறகே
அழுவேன்
முதலில்
கோழிக்கென..

ஸ்ஸப்பா...... இப்பவே கண்ண கட்டுதே! இதுக்குமேல ஆங்கிலம் வேறயா? சொல்லவே இல்லை.....

A-available/single? --single(in Saudi!).
B-best friend?--அப்பா.
C-cake or pie?--ரெண்டுமில்லை.
D-drink of choice?--நெப்போலியன்-கருப்பு அட்டை.
E-essential item you use every day--சிகரெட்.
F-favoraite color--grey.
G-gummy bears or worms?--அப்படின்னா?..
H-home town?-- சிவகங்கை, வாணியங்குடி.
J-janury or febraury?--or மார்ச்சுவரி என்று கேட்டிருக்கலாம். ராஜேஷ்குமார் டைட்டில் மாதிரி.
K-kids & their names?--மகா, சசி.
L-life is incomplete with out?--அன்பு, காதல்.
M-marriage date?--ஜூலை ஒன்பது.
N-number of siblings?--முதலில் நாலு சகோதரிகள். இப்போ, ஹேமா, சக்தி, புதுசாய் கல்யாணி சுரேஷ் வேறு. அறிய: வீடு காலி இல்லை இனி சகோதரிகளுக்கு. நண்பர்கள் வழியாக வரவும்.(அண்ணன் கேரக்டர் ஆக்கிப்புட்டாங்கப்பா நம்மளை)
O-oranges or apples?--திராச்சை ரசம் - ஊறியது.
P-phobias/fears?--அப்படி எதுவும் இருக்குறதா தெரியலை.
Q-quate for today?--அமைதி!--பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சினைகளை எப்படி அணுகுகிறோம் என்பதில் இருக்கு!
R-reason to smile?--கையில் ஒண்ணுமில்லை. அடுத்த வருடம் மகள் திருமணம்.சிரிக்கிறேன்..
S-season?--மழைக்காலம்.
T-tag for 4 peoples--நவாஸ்,சபிக்ஸ்,துபாய் ராஜா,உதிரா.
U- un known fact about me--அமித்தம்மாவுக்கு அமித்து. மண்குதிரைக்கு தேநீர். எனக்கு இந்த தண்ணி ஞாபகம் ஏன்னு தெரியலை.
V-vegetables you don't like--அப்படின்னு எதுவும் இல்லை.
W-worst habbit--மறதி.best habbit-ம் இதுவே!
X-xray--இடது கை முறிவின் போது.
Y-your favorite food?--சரசு அத்தை செய்யும் நண்டு ரசமும், சுட, சுட, சோறும்.

ஆச்சா! எம்பூட்டு பெருசுன்னு ஜமால் சண்டைக்கு வரக்கூடாது.
நன்றியும் அன்பும் ஹேமா, கருணா, ஷஃபிக்ஸ்.

இந்த தொடர்பதிவை தொடர நான் அன்புடன் அழைப்பது துபாய் ராஜா, என். விநாயகமுருகன், S.A. நவாஸுதீன்.

அன்புடன்,
பாரா.


29 comments:

பாலா said...

ithu test comment
appurama varen

அமிர்தவர்ஷினி அம்மா said...

அறிய: வீடு காலி இல்லை இனி சகோதரிகளுக்கு. நண்பர்கள் வழியாக வரவும்.(அண்ணன் கேரக்டர் ஆக்கிப்புட்டாங்கப்பா நம்மளை)

சிரிச்சிக்கிட்டே இருக்கேன்

ரொம்பவும் சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.

U- un known fact about me--அமித்தம்மாவுக்கு அமித்து. மண்குதிரைக்கு தேநீர். எனக்கு இந்த தண்ணி ஞாபகம் ஏன்னு தெரியலை ///

:))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அ-அம்மா இங்கே வா வாஅப்பாவின் இறப்பிற்கு பிறகு, அம்மா எப்போதாவது வீடு வருகிறாள். மருமகளின் நல்மனசு சுருங்குமுன், புறப்படுகிறாள். சகோதரிகள் வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பா வீடு என தத்திகொண்டே இருக்கிறாள். அம்மாவை கூடேவே வைத்து பார்க்க முடியாத ஒரே மகனின் நிலைமை யாருக்கும் வர வேண்டாம்.

மகள்களுக்கு மட்டும்தான் இந்த பாக்கியம் கிட்டும் என்று நினைத்திருந்தேன், மகன்களுக்குமா
:((((((((

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. உங்க சகோதரிகள் வரிசையில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி அண்ணா.

மண்குதிரை said...

மூன்று செங்கலிட்ட
அடுப்பில் கொதிக்கிறது
திருட்டு கோழி.


சாராயத்திற்கும்
ஆள் போயிருக்கு.


வந்த பிறகே
அழுவேன்
முதலில்
கோழிக்கென..

ithu classnney

ellam kavithai.

இரசிகை said...

pidichchirukku........:)

Ashok D said...

இது மாதிரி கே.ப. படிப்பது அசுவாரசியமானவை. ஆனால் நீங்கள் சுவாரசியமாகவும் உண்மையாகவும் பகிர்ந்துள்ளீர். நிறைய கேள்விகளுக்கு சிக்ஸர் அடித்திருப்பதால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறிப்பிடவில்லை.

நடுவே வரும் கவிதையும் அழகு.

இரசிகை said...

a.....z-i vida
aanaa.......aaavannaaa-remba pidichchirukku:)

niraya yosikka vikkuthu...
thirumba thirumba vaasikkiren:)

azhagu!!!

பாலா said...

"அ " வில் சொன்னது போன்றே நடந்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது மாம்ஸ்

D-drink of choice?--நெப்போலியன்-கருப்பு அட்டை
இதுல தான் நாம ரெண்டு பேரும் வித்தியாசப்பட்டு போயிடுறோம்
முன்னாடி "கோல்கொண்டா" இப்போ (கொஞ்சம் சம்பாதிக்கரதால ) மேன்சன் ஹவுஸ் (ஹிஹிஹிஹி )

--

ஹேமா said...

அண்ணா,அ - ஃ அருமை.
எதையென்று சொல்ல வரல.அத்தனையும் முத்துப்போல.
எல்லாமே சுவாரஸ்யமாயும் உங்களை புரிந்துகொண்டதாயும் இருக்கு.குட்டிக் கவிதை அதைவிட அருமை.மனிதம் நிறைந்த மனிதர் அண்ணா நீங்க.சித்தப்பா சுகம்தானே.

அன்புடன் நான் said...

கலக்கிட்டிங்க பா.ரா அண்ணன் (உங்க சகோதரிகளுக்கு நான் தம்பியாகிட்டேன்)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எல்லாப் பதில்களும் கலக்கல் ராஜாராம். இந்த போத்தலையும், சிகரட்டையும் குறைக்கப் பாருங்களேன். உண்மையில் கவலையாய் இருக்கு.

க.பாலாசி said...

அகர வரிசையில் அந்த ‘அ’ வின் விளக்கமே சொல்கிறது உங்களின் அகத்தினை....

எல்லா பதில்களும் பொருத்தம்...

கவிதை அழகு....

அ.மு.செய்யது said...

//இ-இலையில் சோறு போட்டு.
ஏழு எட்டு வயதில், ஒரு திருமணத்தில் முதல் பந்தியில் அமர்ந்தேன். "உனக்கென்னடா இப்ப அவசரம்?" என்றார் அந்த பெரியவர். உறவினர். செல்வேந்தர். பிடுங்கி எறிய இயலாதிருக்கிறது பசுமரத்தாணியை.//

அவர்களுக்கென்னவோ அது ஒரு மூன்று வார்த்தை தான்.நமக்கு முந்நூறு ஆண்டுகளானாலும் மனதை விட்டு அகலாது.

ப்ரியமுடன் வசந்த் said...

//A-available/single? --single(in Saudi!).//

சிரிப்பா வருது.....

ப்ரியமுடன் வசந்த் said...

//O-oranges or apples?--திராச்சை ரசம் - ஊறியது.//

:) மறுபடியும் சிரிப்புத்தான...

ப்ரியமுடன் வசந்த் said...

//W-worst habbit--மறதி.best habbit-ம் இதுவே!//

கரெக்ட்டு.....

கவிதாசிவகுமார் said...

அனுபவித்த பல போராட்டங்கள், கசப்பு அனுபவங்கள், கூட்டுக் குடும்ப உறவுமுறை,அம்மாவைப் பற்றிய கவலை, அப்பாவைப் பற்றிய நீங்காத நினைவு, மகளின் திருமண பற்றிய யோசனை, இவை அத்தனை பற்றியும் உங்களுக்குள் இருக்கும் என்ன ஓட்டங்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது இந்தப் பதிவு.
என் அம்மா சொல்வார்கள், "இவர்கள் எல்லாம் நெருங்கிய சொந்தம், இவர்கள் எல்லாம் தூரத்து சொந்தம்" என்று. இன்று அனைவருமே தூரத்து சொந்தமாகத்தான் போய்விட்டார்கள். கடினமாகத்தான் இருக்கிறது. உங்களின் குறும்புக் கவிதைகள் சிலவற்றைப் படித்து சிரிக்கும்பொழுது நிஜமாகவே ஒரு நிழல் இருக்கிறது இளைப்பாறுவதற்கு. எங்கே போய்விடப் போகிறது சொந்தங்களும், நேசமும்.

மகா திருமணம் ஜாம் ஜாமென்று நடக்கும், நம்பிக்கையோடு இருங்கள். கல்யாணத்திற்கு பத்திரிக்கை அனுப்புவீங்கதானே?

Unknown said...

Anna...,

Palaya kalathirkku sellannum pool ullathu...,

Maka kalyanathai..jammnu nadathuvoome...makka....

Cheers,
Mathi

SUFFIX said...

உங்களை இந்த தொடர்பதிவிற்க்கு அழைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, தங்களது எழுத்தாற்றலின் மூலம் தங்களைப் பற்றி மேலும் அறிந்தததில் இரட்டிப்பு மகிழ்ச்சி, எல்லா நலமும் வளமும் பெற எமது பிராத்தணைகள்.

SUFFIX said...

//E-essential item you use every day--சிகரெட்//

இதை நிறுத்த முயற்சி செய்யுங்களேன் அண்ணா.

Nathanjagk said...

சாரலாக மழை பெய்து​கொண்டிருக்கும் போது ஸ்ட்ராங்காக ஒரு டீக் குடித்தது ​போலிருக்கிறது.
//வீடு காலி இல்லை இனி சகோதரிகளுக்கு//
இன்ட்ரஸ்டிங்!!

//மூன்று செங்கலிட்டஅடுப்பில் கொதிக்கிறதுதிருட்டு கோழி.
சாராயத்திற்கும் ஆள் போயிருக்கு.
வந்த பிறகேஅழுவேன்முதலில்கோழிக்கென//
இங்க அடைமழையில் ஸ்ட்ராங்க குவாட்டர் நெப்போலியன் அடிச்ச மாதிரி இருக்கு.

விநாயக முருகன் said...

http://nvmonline.blogspot.com/2009/09/2.html

Anonymous said...

அகர வரிசை விழித்திரையை நனைத்து விட்டது....உண்மையை நன்றாக பகிர்ந்து கொண்டீர்கள் எங்களை நல்ல நண்பர்கள் என எண்ணியதற்கு இதுவே சான்று...

சொல்ல மறந்துட்டேன் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட மறக்காதீங்க....வாழ்த்துக்களடி என் தங்கையே.....

நட்புடன் ஜமால் said...

தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும்.

-------------

பதிவு பெருசுதேன்

-------------

அ,ஆ ... - நல்லா சொல்லியிருக்கீங்கன்னு சொல்ல நினைச்சாலும்

ஜெஸ்வந்தி சொன்னது - அண்ணே கொஞ்சமல்ல நிறைய யோசிங்க ...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என..
மாப்ள பாலா,
அமித்தம்மா,
சகோதரி கல்யாணி,
தம்பு மண்குதிரை,
தோழி இரசிகை,
நண்பன் அசோக்,
சகோதரி ஹேமா,
தம்பு கருணா,
தோழி ஜெஸ்,
நண்பன் பாலாஜி,
நண்பன் செய்யது,
நண்பன் வசந்த்,
மகள் உதிரா,
தம்பு மதி,
நண்பன் சபிக்ஸ்,
குருநாதன் ஜெகா,
நண்பன் விநாயகம்,
தோழி தமிழரசி,
தம்பு ஜமால்,

அப்பா..எவ்வளவு உறவும் நட்பும்!
எல்லோருக்கும் என் அன்பு மக்கா!

S.A. நவாஸுதீன் said...

அ முதல் ஃ வரை அசத்தி இருக்கீங்க ராஜா.

A to y-யும் கலக்கலா இருக்கு

கவிதை சூப்பர். கடைசியா என்னையும் கோர்த்துவிட்டாச்சா? வர்ரேன்

ஷங்கி said...

ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவையுடன் உங்களோட அந்த அனுபவக் கதை மாதிரி எழுதியிருக்கீங்க! அற்புதம்!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்..
நவாஸ்,
சங்கா,
அன்பும் நன்றியும் மக்காஸ்!