Tuesday, September 8, 2009

பா.ராஜாராம் கவிதைகள்-3

1.
(Photo by CC License, thanks groks)

ற்றங்கரையில்
எடுத்த கல்.

மினு மினுப்பற்ற
வழு வழுப்பு.
வீடு வரையில்
சேர்க்க இயலாத
ஞாபக குறைவு.

ங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ளோட பேரோட
இருந்திருக்கும்.
--------------------------------------------------
2.
ஜாகீர் உசேன்
மளிகை கடையில் பார்த்ததாக
நண்பன் வந்து
சொன்னான்.

யிர் துடித்தது
மயிர்க்கால் அளவு.
நண்பனிடம் சொல்லவில்லை
நான்.
---------------------------------------------------
3.
ன்ன செய்வது
என மலைக்கிற
தருணங்களில்
எனையறியாது
ஏதாவது
செய்து விடுகிறேன்.

"சும்மா இருந்து பாரேன்"
யாராவது சொல்லத்தான்
செய்கிறீர்கள்.

சும்மா இருந்தால்
நல்ல கவிதை
கிடைக்குமோ
ஒருவேளை என
குழம்பவும்
செய்கிறேன்.
---------------------------------------------------

38 comments:

பாலா said...

ரெண்டாவது டாப்பு ங்கோ

Kannan said...

/* உயிர் துடித்தது
மயிர்க்கால் அளவு.
நண்பனிடம் சொல்லவில்லை
நான் */

எனக்கும் தான்...!!

rvelkannan said...

மூன்றும் முத்துக்கள்

na.jothi said...

மூன்றாவது டாப்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீங்கள் நிறைய மலைத்தால் எமக்கு நிறைய நல்ல கவிதை கிடைக்கும் போல!
மூன்றுமே நல்ல கவிதை நண்பரே.

சென்ஷி said...

மூன்றும் அசத்தல்.. முதல் கவிதையின் கருப்பொருள் மிகவும் அருமை!

மாதவராஜ் said...

முதல் கவிதை ரொம்பக் கவர்ந்தது...!

நேசமித்ரன் said...

கவி​தை !!!

!

!

!

:)

கவிதாசிவகுமார் said...

மூன்றுமே அசத்தலான கவிதைகள்!!!

நேசமித்ரன் said...

தோணித்துறை லாந்தர் வெளிச்சத்தில் தெரியும் தாலாட்டும் படகு முகத்தின் புன்னகைக் கவிதைகள் இவை பா.ரா.

Ashok D said...

முதலிரண்டும் சில வினாடிகள் யோசிக்க வைத்து புரிய வைக்கிறீர்கள்.


மூன்றாவதும் அப்படியே. ஆனால்
//சும்மா இருந்து பாரேன்"யாராவது சொல்லத்தான்செய்கிறீர்கள்//
இங்கயே கவிதையும் முடிந்து விடுகிறது என்பது உங்கள் நண்பனின் கருத்து.

தமிழன்-கறுப்பி... said...

முதலாவது!

ப்ரியமுடன் வசந்த் said...

ரெண்டாவது புரியலை....

துபாய் ராஜா said...

//அங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ஆளோட பேரோட
இருந்திருக்கும்//

கல்லுக்கு கூட இரங்கும் மனசு கவிஞனுக்குத்தான் உண்டு அண்ணாச்சி.

//உயிர் துடித்தது
மயிர்க்கால் அளவு.
நண்பனிடம் சொல்லவில்லை//

வலி புரிகிறது.

//மலைக்கிற தருணங்களில்
எனையறியாது ஏதாவது
செய்து விடுகிறேன்//

//சும்மா இருந்தால்நல்ல கவிதைகிடைக்குமோஒருவேளை எனகுழம்பவும்செய்கிறேன்//

கவிஞருக்கு மலைப்பும்,குழப்பமும் எல்லாமே கவிதை தருமே அண்ணாச்சி...

யாத்ரா said...

மூன்று கவிதைகளுமே ரொம்பப் பிடித்திருக்கிறது

அது சரி(18185106603874041862) said...

//
அங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ஆளோட பேரோட
இருந்திருக்கும்.
//

ம்ம்ம்....அழுத்தமான வரிகள்...அழுத்தப்பட்ட நினைவுகள்...

ஆ.ஞானசேகரன் said...

மூன்றும் அருமை. முதல் அழகு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மூன்றும் அழகு!

முதல் கவிதைக்கு என் பிரியங்கள்!

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...
This comment has been removed by the author.
Vidhoosh said...

முதலும் மூன்றாவது சும்மா கலக்கலாய் இருக்குதுங்க.

-வித்யா

மண்குதிரை said...

excellent !

இரசிகை said...

aththanaiyum arumai:)

உயிரோடை said...

//ஆளோட பேரோட
இருந்திருக்கும்.//

அருமை. த‌ன் பிரிய‌த்திற்க்காக‌ எடுத்து வ‌ந்து, அதை யாரும‌ற்ற‌வ‌ர் போல‌ சொன்ன‌து. ந‌ல்லா வ‌ந்திருங்க‌ க‌விதை. மீன் தொட்டி மீன்க‌ள் நினைவுக்கு வ‌ருது இங்கே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//ஆளோட பேரோட
இருந்திருக்கும்.//

ரசித்த வரிகள்

ரெண்டாவது கவிதை புரியவில்லை நண்பரே !

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முதல் கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு ராஜாராம்!

S.A. நவாஸுதீன் said...

மொத்தமும் கொள்ளை அழகு. இரண்டாவது இரட்டிப்பு அழகு நண்பா.

ஹேமா said...

அண்ணா மூன்றாவது வரிகளை விட இரண்டாவதும் முதலாவதும் மனதைத் தொட்டது.

SUFFIX said...

முதலும், மூன்றும் கொஞ்சம் புரிந்தது, இரண்டாவது புரியலிங்க!!

அ.மு.செய்யது said...

உங்கள் கவிதைகளை ரசிக்க ஆள் அரவமில்லா ஒரு நிசப்த இரவு வேண்டும்.அத்தனை அழகு !!!

( ஒரு தமிழ்ச்சிறுவனின் புகைப்படம் கூடவா கிடைக்காமல் போய் விட்டது ?? )

தெய்வா said...

//அங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ஆளோட பேரோட
இருந்திருக்கும்//

இந்த கவிதையின் கல்
நீ... நீ... தான்...

கவிதாசிவகுமார் said...

நீங்கள் சும்மா இருந்தாலும் நல்ல கவிதைகள் வரும், குழம்பினால் இன்னும் சுவையான கவிதைகள் வருமே. சரிதானே...

இரவுப்பறவை said...

//ஆற்றங்கரையில்
எடுத்த கல்//

அழகு!

நந்தாகுமாரன் said...

i like the first 2 poems ... especially the first one is damn good

thiyaa said...

நல்ல கவிதை நண்பரே

"உழவன்" "Uzhavan" said...

( ஒரு தமிழ்ச்சிறுவனின் புகைப்படம் கூடவா கிடைக்காமல் போய் விட்டது ?? )
 
எனக்கும் இதேதான் படத்தைப் பார்த்தவுடன் தோன்றியது. நல்ல கவிதைகள்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்..
பாலா,
கண்ணா,
வேல்கன்னா,
ஜோதி,
ஜெஸ்,
சென்ஷி,
மாதவன்,
நேசா,
உதிரா,
அசோக்,
தமிழன் கறுப்பி,
வசந்த்,
ராஜா,
யாத்ரா,
அதுசரி,(நல்வரவு நண்பரே)
சேகர்,
சேரல்,
வித்யா,
மண்குதிரை,
ரசிகை,
உயிரோடை,
அமித்தம்மா,
சுந்தரா,
நவாஸ்,
ஹேமா,
ஷபிக்ஸ்,
செய்யது,
தெய்வா,
இரவுப்பறவை,
நந்தா,
தியா,
உழவன்(நல்வரவு உழவரே!),

எல்லோருக்கும் என் நிறைந்த நன்றியும் அதே அன்பும்!

thamizhparavai said...

முதல் கவிதை முதல் தரம்...

பா.ராஜாராம் said...

தமிழ்ப்பறவை
=============
மிகுந்த அன்பும் நன்றியும் நண்பரே!

செய்யது & உழவன்
===================
நண்பர்கள் இருவருக்கும்,
//ஒரு தமிழ் சிறுவனின் படம் கூடவா
கிடைக்காமல் போய்விட்டது//
என்பது குறித்தான கேள்விக்கு...

எனக்கு கோபம் இல்லை.
ஆனால் வருத்தம் இருக்கு செய்யது,உழவன்.

"ஒரு குழந்தையின் நிறத்தில்
வேருபடமுடியுமா கவிதை எழுதுகிற
நம்மாள்?
இங்கு,அங்கு,எங்கிருந்தாலும்
குழந்தை குழந்தையே!
இக்குழந்தை என் கவிதையின்
உயிர்க்கு உதவியாக இருந்தான்.
உங்களுக்கு தந்த
அதே நன்றியை
இவனுக்கும் தர நேர்கிறது.
இப்போதான்,
இந்த வருத்தமும்
சரியாகிறது."
ப்ரியங்களில் நிறைந்த என் செய்யதும் உழவனும்...
நன்றியும் அன்பும்!