Tuesday, September 15, 2009

என்ன சொல்லட்டும் முத்தண்ணே


(Photo by CC license, Thanks #)

"புள்ளைகளைக்கூட
வேணாமுன்னு
போய்ட்டவளை
எதை சொல்லிண்ணே
கூப்பிட சொல்றீக?"

முடிவெட்டிக்கொண்டே
பேசிக்கொண்டிருக்கிறார்
முத்தண்ணன்

திலின்றி
குனிந்திருக்கிறேன்

றுந்தறுந்து
விழுந்து
கொண்டிருக்கிறது

கேசம்
போலவே
நேசமும்

49 comments:

சந்தனமுல்லை said...

hmmm :(

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மைய்ர்ஆச்சின்னு போய்டா ..............

இந்த வரிகளை தான் நீங்கள் இப்படி

கேசம்
போலவே
நேசமும்

கவிதையாக மாற்றிநிரோ

மிகவும் ரசித்தேன்

தொடர்ந்து கவிபாட வாழ்த்துக்கள்

na.jothi said...

கேசம்
போலவே
நேசமும்

மொட்டையே அடித்தாலும்
முடி வளரும் அண்ணே
வலுக்கை தலை னு சொன்னாலும்
முழுவதும் போகாது
ஓரத்திலாவது வளரும் தானே

நேசமித்ரன் said...

:(

பதிலின்றிகுனிந்திருக்கிறேன்

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

கவிதாசிவகுமார் said...

கலியுகம்...

துபாய் ராஜா said...

//அறுந்தறுந்து
விழுந்து
கொண்டிருக்கிறது

கேசம்
போலவே
நேசமும்//

எல்லோர்க்கும் இது பொருந்தும்.

Ayyanar Viswanath said...

உங்கள் கவிதைகளில் எப்போதும் மிளிரும் மனிதமும் நெகிழ்வும்

உங்களுக்கு என் அன்பு..

thamizhparavai said...

எளிய சொல்லாடல்களில் வலிய நேசம் உதிர்ந்து கிடக்கிறது....

ஹேமா said...

அண்ணா கேசம் நேசம் கவிதைக்கு வார்த்தை அழகு.ஆனால் கேசம் போல நேசத்தை அவ்வளவு எளிதாக வெட்டி வீசிவிட முடியாது அண்ணா.
கவிதை அழகுதான்.

Vidhoosh said...

ஒவ்வொரு வரிகளிலும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது

--வித்யா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

என்ன சொல்ல பா.ரா?

-ப்ரியமுடன்
சேரல்

நர்சிம் said...

இனி இந்தப் பக்கம் வரப்போவதில்லை ஸார்.இதே வேலையாப் போச்சு உங்களுக்கு.

ஒவ்வொரு கவிதையைப் படித்ததும் மனம் கனத்து விடுகிறது.

ராஜா சந்திரசேகர் said...

உரையாடல் நிகழும் இடம் கவிதையை
இன்னும் வலுவாக்குகிறது.

கல்யாணி சுரேஷ் said...

என்னோட அப்பாவின் நிலையை காட்டுகிறது கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ராஜாராம்!

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

மண்குதிரை said...

simply supernney

மணிஜி said...

அவ களுத்துல
கத்தியை போட்ற வேண்டியதுதான்...

அ.மு.செய்யது said...

கேசம் போலவே நேசமும் !!!!

கிளாஸ் ராஜாராம்...!!! உங்கள் கவிதை தொகுப்பு எப்பொழுது புத்தகமாக வரும் ??

rvelkannan said...

//கேசம் போலவே நேசமும்//
அழகாய் வார்த்தைகள் அமைந்தாலும்
உண்மை வலிக்கிறது

பாலா said...

arumai anne

பாலா said...

கேசம்
போலவே
நேசமும்

மொட்டையே அடித்தாலும்
முடி வளரும் அண்ணே
வலுக்கை தலை னு சொன்னாலும்
முழுவதும் போகாது
ஓரத்திலாவது வளரும் தானே


pagadikku inge idamillai jothi
thayavu seithi thiruththi kolga

unarvukalaal pesikkondirukkum pothu vilaiyattuthanam athai keduppathu pol .

SUFFIX said...

கேசம் உதிர்வது போல நேசமும் உதிருமா, விரைவில் வளர்ந்திடும் முத்தண்ணே!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஆமா ராஜாராம், நானும்
''பதிலின்றி
குனிந்திருக்கிறேன்''.

உயிரோடை said...

ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து பா.ரா.

S.A. நவாஸுதீன் said...

எளிய வார்த்தைகளில் எப்பப்ப்பா!! என்ன சொல்ல நண்பா!

செய்யது சொன்னதுபோல் உங்கள் கவிதைகளின் தொகுப்பு நிச்சயம் புத்தகமாக வரவேண்டும்.

Radhakrishnan said...

பிரமாதமான கவிதை ராஜாராம் அவர்களே.

அதுவும் நடந்த சூழலுடன் இணைத்துச் சொல்லப்பட்ட விதம் அட்டகாசம்.

na.jothi said...

நிச்சயம் பகடி இல்லை பாலா
நம்பிக்கையை ஊட்டுவதாகவே
பின்னூட்டமிட்டேன்
பகடியாக கருதினால்
பின்னூட்டத்தை எடுத்துவிடுங்கள்
அண்ணா

பா.ராஜாராம் said...

ஒரு சாவு நிகழ்ந்திருக்கும்.தெரிந்தவர்கள் எல்லோரும் வருவார்கள்.சிலர் வரும்போதே கதறி துடித்தபடி.சிலர் வாயில் துண்டு கொண்டு அழுத்தியபடி.இன்னும் சிலர்,"எந்திரிடா மூதி,ஆகவேண்டியதை பாரு.புள்ளைகளும் ஒன் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கு.முகத்தை துடைத்து கொண்டு புள்ளைகளை பார்ப்பியா?"என்கிற மனிதரின் குரல் முக்கியமாய் அந்த இடத்தை உயிர்ப்பிக்கும்.அப்படி ஒரு சம்பவம் இது என எடுத்துகொண்டால் கூட,ஆறுதலுக்கென வருகிற குரல் ஒரே மாதிரி இருப்பதில்லைத்தானே பாலா?ஜோதியின் குரலை நாம் அப்படித்தான் இங்கு எடுத்து கொள்ள வேணும்.உதறி வாழ்வை சந்திக்க முத்தன்ணனை தயார் பண்ணுகிறார் என்று எடுத்துக்கொள்வோம்.கண்டிப்பாக ஜோதி மாதிரி ஆட்கள் அதைத்தான் விரும்புவார்கள்.இந்த sambavatthudanaana ondral ரொம்ப pidicchurukku பாலா.இந்த sambavangalil jothiyum வேணும் baalaavum வேணும்.ரொம்ப uyirppaa இருக்கும்.நன்றி பாலா,ஜோதி.

ரௌத்ரன் said...

எளிய வார்த்தைகளில் எப்படி வாய்க்கிறது உங்களுக்கு இவ்வளவு அருமையான கவிதைகள்?

ஆச்சர்யம் அளித்து கொண்டேயிருக்கிறீர்கள்...

ரௌத்ரன் said...

எளிய வார்த்தைகளில் எப்படி வாய்க்கிறது உங்களுக்கு இவ்வளவு அருமையான கவிதைகள்?

ஆச்சர்யம் அளித்து கொண்டேயிருக்கிறீர்கள்...

Ashok D said...

பிரமாதம் சார்..

அன்புடன் மலிக்கா said...

//அறுந்தறுந்து
விழுந்து
கொண்டிருக்கிறது


கேசம்
போலவே
நேசமும்.//

கவிதை வரிகள் அருமை.
கேசம் மீண்டும் வளர்வதுபோல்
நேசமும் வளர வேண்டுவோம்

Anonymous said...

நேசத்தை இழந்த நெஞ்சத்தின் வலியை புரிந்த வலி வார்த்தையாய் கவி பாடியிருக்கிறது...ஹிஹிஹி இது நல்லா புரிந்தது உணரவும் முடிந்தது கவிதையின் ஆழமான கருத்தை....

மாதவராஜ் said...

மிக இயல்பான, எளிமையான வார்த்தைகளால் மிக உயர்ந்த பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள். விடுபடமுடியாமல் நிற்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்களை ஒற்று தொடர் விளையாட்டில் மாட்டி விட்டிருக்கிறேன். பாருங்கள்.
http://maunarakankal.blogspot.com/2009/09/blog-post

பா.ராஜாராம் said...

@சந்தன முல்லை.

நல்லா இருக்கீங்களா முல்லை!கிட்டதட்ட எல்லா கவிதைகளிலும்,ஏதாவது ஒரு ரூபத்தில்," உள்ளேன் அய்யா",என உங்களை பார்க்க சந்தோசமாக இருக்கு.நன்றியும் அன்பும்,முல்லை.

@உலவு.காம்.

தொடர்ந்து பார்க்கிறேன்,உங்களையும்.நன்றியும்,அன்பும்.

@ஜோதி

ஜோதி,நல்லா இருக்கீங்களா மக்கா.எப்போ பயணம்?அன்பும் நன்றியும் ஜோதி.

@நேசா

ஒரு குறியீடு.ஒற்றை வார்த்தை.அடித்து நிமிர்த்துவது போல்.அன்பும் நன்றியும் ப்ரியா.

@ஆருரன் விசுவநாதன்

விஸ்வா,நலமா?ரொம்ப நன்றியும் அன்பும் தல.

@உதிரா

தானாடாவிட்டாலும் தசை ஆடும் உதிரா!நன்றி மக்கா!

@துபாய் ராஜா

ராஜா,பூஜா குட்டி நலமா?பூஜா மட்டுமா?நன்றியும் அன்பும் சகோதரா.

@அய்யனார்

ரொம்ப சந்தோசம் அய்யனார்.உங்களை மாதிரி மனிதர்கள் வரவில் சிலிர்த்தடங்கியது நிழல்!நன்றியும் அன்பும் மக்கா.

@தமிழ்ப்பறவை

நல்லா இருக்கீங்களா மக்கா?உங்களின் பச்மரி பயணக்குறிப்புகள் வந்து வாசிக்கணும்.இந்த ஒரு மாத வேலைப்பளுவில் நீண்ட பதிவுகள் வாசிக்க இயலாமல் துரத்தியது நிகழ்.ஒன்றிரண்டு நாள்.வந்து வாசிக்க வேணும்.அடுத்த பதிவும் போட்டுட்டீங்க.தடர்ந்து வரும் உங்களின் அன்புக்கு அதே அன்பு மக்கா.நன்றியும் கூட.

@ஹேமா

ஆகட்டும்டா ஹேமாம்மா.நம்பிக்கைதானே வாழ்க்கை.வலிமையும்.நன்றிடா பயலே.

@விதூஷ்

வணக்கம் வித்யா.நல்லா இருக்கீங்களா?அந்தரவெளிகளில் உங்கள் கவிதைகள் வாசித்து பிரமித்து போகிறேன்.தொடர்ந்து உற்ச்சாகம் தருகிறீர்கள் வித்யா.அன்பும் நன்றியும்,மக்கா.

@சேரல்

ப்ரியமுடன் சேரல் என சொல்ல வேணும் இல்லையா?அவ்வளவு ப்ரியம் எழுத்துக்களிலும்.ரொம்ப நன்றி சேரல்.அன்பும்.

@நர்சிம்

தல,நலமா?எங்கு உங்களை பார்த்தாலும் சந்தோசத்தால் நிறைகிறேன் நர்சிம்.போகிற போக்கில் ஒரு எள்ளல்,ஒரு நிமிண்டு, ஒரு பட்டாசு கொளுத்தல்,என கல கல!!பாருங்கள் இங்கேயும் உங்கள் பிராண்ட்!தினம் வாங்கப்பு.நன்றியும் அன்பும் மக்கா.

@ராஜா சந்திரசேகர்.

உங்கள் குறுங்கவிதைகள் கிறுக்கு பிடிக்க வைக்குது சந்திரா.நாலு வரியாக இருக்கும் எழுந்து வரமுடியாமல் போகும்.பிரமிக்கிறேன்!ரொம்ப நன்றியும் அன்பும் சந்திரா.

பா.ராஜாராம் said...

@கல்யாணி சுரேஷ்.

வாங்க கல்யாணி.நல் வரவாகட்டும்.ஒரே வரியில்,திடிக்கிட்ட பின்னூட்டம் இது.தாண்டி,தாண்டி,தாண்டி, ஓடிக்கொண்டே இருக்கிறோம்...ஓடிக்கொண்டே இருப்போம் கல்யாணி.எங்கு தோண்டினாலும் கிடைக்கும் நிலத்தடி நீரோட்டம் போல.இனி இது தான் சாத்தியம்..நிறையும் அன்பும் நன்றியும் மக்கா.

@ஜ்யோவ்ராம் சுந்தர்.

மக்கா நல்லா இருக்கியா?உன் விமர்சனம் என்னை பெரிய அளவில் இயக்குது சுந்தரா.."நல்லா இருக்கு ராஜாராம்""ரொம்ப நல்லா இருக்கு ராஜாராம்".இப்படி! சில கவிதைகளுக்கு,வரவே மாட்ட."சரி, பயலுக்கு புடிக்கலை போல"என எடுத்து கொள்வேன்.சில கவிதைகளுக்கு, தமிலிஸ்சில் ஓட்டு மட்டும் இருக்கும்."கொஞ்சூண்டு பிடிச்சுருக்கு போல"இப்படி உன் விமர்சனம் தட்டு,தட்டா இருக்கும்.புரிஞ்சுக்கிற மாதிரி....நீ ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்ன அன்னைக்கு,வக்காளி,சந்தோசம் பிச்சுக்கிரும்.நன்றிடா பயலே.

@மண்குதிரை

நல்லா இருக்கீங்களா மண்குதிரை?ரொம்ப சந்தோசம் மக்கா.வந்த நாள் தொட்டு இப்ப வரைக்கும் விடாமல் வந்துக்கிட்டுதான் இருக்கீங்க.இல்லையா?வர்ற ஆளு வரலைன்னா,என்னமோ வெரிச்சுன்னுதான் இருக்கும்.ரொம்ப நன்றியும் அன்பும் மக்கா.

@தண்டோரா

உங்க பின்னூட்டம்,பார்த்ததும் டக்குன்னு சிரிச்சேன் மணி.நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்.கவிதைகள் அற்புதமா வந்துக்கிட்டு இருக்கு மணி. கலக்குங்க மக்கா.போட்ருவோமா ஒரு கட்டிங்கை.நன்றியும் அன்பும் மணி.

@அ.மு.செய்யது.

சந்தோசம் செய்யது.ரொம்ப நெகிழ்வா இருக்கு.உங்க பாஷையில் ஒரு பதில் இருக்கு,உங்க கேள்விக்கு."இன்ஷா அல்லாஹ், செய்யது!"நன்றியும் அன்பும் மக்கா.

kathirvelmuniyammal said...

கூட்டுக் குடும்ப முறை எப்ப போச்சோ அப்பவே
ஆயிருச்சு...நேசம்..கேசமாக!

பா.ராஜாராம் said...

@வேல்கண்ணன்

நன்றி சகோதரா.ரெண்டாவது மின்மடல் கிடைத்தது.வேலைகைகளில் பதில் அனுப்ப இயலவில்லை.எழதுகிறேன் வேல்கன்னா..அன்பும் கூட மக்கா.

@பாலா

ரொம்ப நன்றியும் அன்பும் பாலா.சண்டைக்கோழி பாலா!

@சபிக்ஸ்.

இப்பவரையில் உங்களின் பெயரை சரியாய் தட்டச்சு செய்ய இயலவில்லை சபி.இயலவில்லை என்ன..தெரியவில்லை.தெரியாத எவ்வளோவோ உன்னதங்கள் அழகாய் தானே இருக்கு!இல்லையா சபி..தொடர்ந்து வருவது உற்சாகம்.நன்றியும் அன்பும் மக்கா.

@ஜெஸ்வந்தி

சமீபமாய்,உங்கள் பெயர் பார்க்கும் போதெல்லாம் உங்களின் யார் குடியை கெடுத்தேன் தொடர்தான் நினைவு வருகிறது ஜெஸ்.அதை படித்த யாருக்கும் அதுதான் நினைவு வரும்.அங்கேயும் கேட்டேன்.இங்கேயும் கேட்க்கிறேன்,தொடருங்களேன் ஜெஸ்.அன்பும் நன்றியும் மக்கா.

@உயிரோடை

வாங்க உயிரோடை.உங்கள் கருத்துக்கு நன்றி!(ஹி...ஹி..சும்மா,உழு உழு வாய்க்கு..) உங்கள் கவிதைகளின் காட்சி அமைப்பும்,அதை உணர்வுகளுடன் பின்னும் துல்லியமும் அற்புதம் லாவண்யா.இதை அங்கேயும் சொன்னேன்.இங்கேயும் சொல்ல ஆசை.மிகுந்த அன்பும் நன்றியும் சகா.

@நவாசுதீன்

மக்கா,இனி ஜெத்தா எனும்போதே நீங்கள்தான் நினைவில் வருவீர்கள்.அதெப்படி,நவாஸ் மனசில் இருந்து சிரிக்கிறீர்கள் அலைபேசியிலும்,நேரிலும்.உங்கள் சிரிப்பை மனதிற்குள் அடக்க இயலவில்லை...விரிந்து கொண்டே இருக்கு,கைக்கு எட்டாமல்.சவுதியில் பழங்கஞ்சி போல்.

@வெ.இராதா கிருஷ்ணன்

நன்றி ராதா.உங்களின் தொடர்களை வாசிக்கவேணும்.அன்பும் மக்கா.

@ஜோதி

ஜோதி,என் மின் மடல் கிடைத்ததா?ஏன் மக்கா பதில் காணோம்?மிகுந்த நன்றியும் அன்பும் ஜோதி.

@ரவுத்திரன்.

மிக எளிது ராஜேஷ்.வாழ்வதுபோல் எழுதுவது.அல்லது எழுதுவது போல் வாழ்வது.ஜெத்தா வந்து உங்களையும் தமிழன் கறுப்பியையும் பார்க்காமல் வந்த குறை இருந்து கொண்டே இருக்கும் மக்கா.அடுத்த முறை சந்தர்ப்பம் வாய்க்கணும்.முகங்களை,மனசு போல் சேர்க்கத்தான் வேறு என்ன?நன்றியும் அன்பும் மக்கா.

D.R.அசோக்.

நல்லா இருக்கீங்களா அசோக்?உங்கள் தளத்தில் இருக்கும் புகை படம்,மகனா?ரொம்ப நன்றியும் அன்பும் அசோக்.

@அன்புடன் மலிக்கா

வரணும் மலிக்கா.மிகுந்த நன்றியும் அன்பும்.

@தமிழரசி

தமிழ்,நல்லா இருக்கீங்களா?பழம் விட்டாச்சு போலேயே.நன்றியும் அன்பும் மக்கா.

@மாதவராஜ்

என்ன சொல்லட்டும் மாதவன்..சித்தப்பா சொன்னதை விடுங்கள்.உங்களை வாசிக்க,வாசிக்க ஒன்றுமே எழதாமல் நிறைய பேசிக்கொண்டிருப்பது புரிகிறது.பிடித்த மனிதர்களுடன் பேசுவது ரொம்பவும் பிடிச்சுருக்கு.வாழ் நாளுக்குள் உங்களை பார்க்கணும் மாதவன்.பேசக்கூட வேணாம்.பார்த்தால் போதும்.வேறு என்ன சொல்லட்டும் மாதவன்...

@கதிர்வேல் முனியம்மாள்

வணக்கம் திரு.கதிர்வேல்.உங்களின் ப்ரீதி விடையின் பின்னூட்டம் பார்த்து ஆடிப்போய் இருக்கேன்."ஜூன் 2009 லேயே வானம் தாழ பறக்க ஆரம்பித்து விட்டது,நண்பரே"என்று இருந்தது.தளம் தொடங்கியதை சொல்கிறீர்கள் எனில்,"அய்யா,நாம் ஒன்றுமே இல்லை."
எழுத்து பிரபஞ்சம் போல் விரிந்து கிடக்கிறது.வாசிக்க,வாசிக்க நிறைய முடியும்.நிறைய, நிறைய தளும்ப இயலாது.எழுதுவதைவிட வாசிப்பதில் நிறைகிறேன் திரு.கதிர்வேல்.உங்களின் பின்னூட்டம்,மிக முக்கியம் எனக்கு.அங்கு சொல்ல இயலவில்லை.அதனால் என்ன.எங்கும் சொல்லலாம் இல்லையா? மற்றபடி,இந்த கவிதைக்கான உங்கள் கருத்து மிக அற்புதம்.நன்றியும் அன்பும்.திரு.கதிர்வேல்.

சந்தான சங்கர் said...

நேசம் குனிவதால்
பாசம் வளராமல்
போவதில்லை...

வாழ்த்துக்கள் நண்பரே...

விநாயக முருகன் said...

//அய்யனார்
உங்கள் கவிதைகளில் எப்போதும் மிளிரும் மனிதமும் நெகிழ்வும்...

உண்மைதான். ஆனா‌‌‌ல் அது சலிப்பூட்டும் பிரச்சாரமாக இல்லாமல் கவித்துவமாக வெளிப்படுகிறது

பா.ராஜாராம் said...

@சந்தான சங்கர்

வரணும் சங்கர்.நிறைய இடங்களில் உங்கள் பின்னூட்டம் பார்க்கிறேன்,சங்கர்.முக்கியமாய், நண்பன் நேசன் தளத்தில் இருக்கும் பின்னூட்டம் நெருக்கமாய் உணர்கிறேன்.நன்றியும் அன்பும் மக்கா.

@விநாயக முருகன்.

ரொம்ப நன்றி விநாயகம்.உயிரோசையில் தொடந்து உங்கள் கவிதை வருகிறது,சந்தோஷமும் வாழ்த்துக்களும் நண்பா!கவிதையில் மிளிரும் மென் நகை பிரமாதம்!

Nathanjagk said...

அட்டகாசம்! அறுந்தறுந்து விழும் ​நேசங்களை, திரும்பப் ​பெறக்கூடத் தயக்காமாய் இருக்கிறது! வாழ்த்துக்கள் ராஜா!

இரசிகை said...

sabaash.....!!!!

பா.ராஜாராம் said...

@ஜெகநாதன்

நன்றியும் அன்பும் ஜெகா.

@ரசிகை

ஆகட்டும் தல.

ஷங்கி said...

வழக்கம்போல்!

பா.ராஜாராம் said...

நன்றி மக்கா!