Saturday, November 7, 2009

கௌலி


இந்த படம் தந்துதவிய திரு.பாலா அவர்களுக்கு நன்றி

நிராசையில் மரித்த
கன்னி தெய்வம்
தலைமாடு காத்து வருகிற
கதையொன்றை
சொல்லிக்கொண்டிருக்கிறான்
குடுகுடுப்பை.

தைகளையும் மீறி
அடர் நிசியின்
அறுபட்ட தொண்டையிலிருந்து
சொட்டிட்டு கொண்டிருக்கிறது...

ரு குடுகுடுப்பையின்
வாழ்வு.

43 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

...ப்ச் ...ப்ச் ...ப்ச்

அருமை அண்ணா

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
நிராசையில் மரித்த
கன்னி தெய்வம்
தலைமாடு காத்து வருகிற
கதையொன்றை
சொல்லிக்கொண்டிருக்கிறான்
குடுகுடுப்பை.
//

இப்போ எல்லாம் இந்த வர்க்கங்கள் இல்லையே :((

நம்ம குடுகுடுப்பைதான் இருக்கிறார்:-)

நல்லா இருக்கு...

ஈரோடு கதிர் said...

அருமை

இன்றைய கவிதை said...

அடடா! கலக்குறீங்களே!

-கேயார்

thiyaa said...

அருமை

ஹேமா said...

ம்...அண்ணா நல்லாருக்கு குடுகுடுப்பை உணர்வு.

Ashok D said...

சித்தப்ஸ்

அடங்கமாட்டீங்கலா...

சூப்பர் நித்தப்ஸ்
(நித்தப்ஸ்ன்னா நித்தம் கவிதை எழுதுபவர்ன்னு அர்த்தம்) :)

சந்தான சங்கர் said...

ஜக்கம்மாவும்
வந்துவிட்டாள்
பா.ராவின்
பக்கம்மாய்
நல்ல காலம் பொறக்குது,
நல்ல காலம் பொறக்குது,
இந்த வலைப்பதிவாளர்க்கு
சுப செய்தி வந்திருக்கு!!
மக்கா எண்ணம்போல்
மகா வாழ்வு வரப்போகுது...
ஜக்கம்மா சொல்றா
ஜக்கம்மா சொல்றா...

ஆ.ஞானசேகரன் said...

அருமை... இப்பொழுது இந்த குடும்பங்கள் பிழைப்புக்காக மற்ற தொழிலை செய்கின்றனர்... பாராட்டவேண்டிய விடயம்

ராகவன் said...

அன்பு பாரா,

நல்லா இருந்தது, இந்தக் கவிதை. மனிதர்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் புரண்டு படுக்கும்போது மிச்சமாய் இருக்கும் சில சுவடுகள், சொல்லி நகர்கிறது. கெளலி என்ற தலைப்பு புதிய புரிதல்களை திறக்கிறது.

வாழ்த்துக்கள் பாரா!

அன்புடன்
ராகவன்

சந்தனமுல்லை said...

அருமை!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான கவிதை.

SUFFIX said...

பா.ரா. கண்ணுக்கு மட்டுமே இவையெல்லாம் படுது!! அருமை அண்ணா.

தேவன் said...

நல்ல காலம் பொறக்கட்டும்

நல்ல காலம் பொறக்கட்டும்

நம்ப கருவேல நிழல் அவங்களுக்கு கருணைய பொழியட்டும் !!

அ.மு.செய்யது said...

வாவ்....நல்லா இருக்கு பா.ரா..!!! புத்தக வெளியீடுகள் குறித்து திட்டம் ஏதும் இருக்கா ??

S.A. நவாஸுதீன் said...

அது எப்படி மக்கா ஒன்னும் தெரியாத கும்மிருட்டுல்கூட கவிதை தெரியுது உங்களுக்கு.

//அடர் நிசியின்
அறுபட்ட தொண்டையிலிருந்து
சொட்டிட்டு கொண்டிருக்கிறது...
ஒரு குடுகுடுப்பையின்
வாழ்வு.//

பா.ரா. என்னமா படம் பிடிக்கிறீங்க. சான்ஸே இல்ல போங்க

ஊர்சுற்றி said...

நல்ல பதிவு.

Senthilkumar said...

அருமை நண்பரே!

செ.சரவணக்குமார் said...

மிக அருமையான கவிதை.

விநாயக முருகன் said...

நல்லா இருக்கு ராஜாராம். நகரத்தில் பார்க்கும் குடுகுடுப்பைகள் கிராமத்தில் பார்த்த குடுகுடுப்பைகள் போல இருப்பதில்லை. குடுகுடுப்பை பற்றி நானும் சமீபத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

கவிதாசிவகுமார் said...

குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டால் குலை நடுங்கும். ஆனால் அந்தக் குடுகுடுப்பைக்காரனுக்கோ நடுநிசியில் குடுகுடுப்பை அடித்தால்தான் அவன் குலை நிரம்பும் என்பதை அழகாகச் சொல்லியிருகிறீர்கள். நல்லாருக்கு மக்கா.

ரௌத்ரன் said...

நல்லாருக்கு ராஜா சார்...குடுகுடுப்பைகள பார்த்தே பல வருசம் ஆயிப்போச்சு...

காமராஜ் said...

மனசைப்பிழிகிற கவிதை இது.
தொன்னூறுகளில் நான் மாது பீகே சேர்ந்து ஒரு கைரேகை ஜோசியக்காரரை கேலி செய்தோம்.
மூடப்பழக்கவழக்கங்களை எதிப்பதாக நினைத்த எங்களைத்தனியே அழைத்து. எஞ்சாப்பாட்டுல மண்ணள்ளிப்போடாதீங்க
என்று சொல்லிவிட்டுப்போனார். அவர் கண்ணில் தேங்கிக்கிடந்த பசி வெகு நாட்கள் என்னை துரத்தியது. சாமக்கோடங்கி பற்றிய எனது பழைய பதிவை முடிந்தால் பாருங்கள்.

உயிரோடை said...

//அறுபட்ட தொண்டையிலிருந்து
சொட்டிட்டு கொண்டிருக்கிறது...

ஒரு குடுகுடுப்பையின்
வாழ்வு.//

கொஞ்ச‌ம் ப‌த‌ற‌ செய்கிற‌து இந்த‌ வ‌ரிக‌ள்

rvelkannan said...

கவிதை அருமை
//அறுபட்ட தொண்டையிலிருந்து
சொட்டிட்டு கொண்டிருக்கிறது...
ஒரு குடுகுடுப்பையின்
வாழ்வு.// அதிர்கிறது மனம்

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. கௌலி என்ற தலைப்பு மிக பொருத்தம்.

விஜய் said...

நல்லா இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி எழுதவே மாட்டீங்களா ?

மிக யதார்த்தம்

விஜய்

அமிர்தவர்ஷினி அம்மா said...

கௌலி - இந்த வார்த்தையை கேட்டே வருஷம் ஆச்சு :))

கவிதையும் அருமை.

இரசிகை said...

nallaayirukku...!!

திங்கள் சத்யா said...

சரி, இது "கௌலி"-யா, அல்லது "கெவுலி", "கெவுளி"யா?

பா.ராஜாராம் said...

சரியான கேள்வி,பாலா!

எனக்கு தெரியலை.வாங்களேன் யாராவது...

பாலா said...

wow

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஊரில் அத்தையின் உச்சரிப்பு கெவுளி
ஊரிலிருந்து சென்னையில் அண்டிய அம்மாவின் உச்சரிப்பு கௌலி

நாம அம்மா பொண்ணாச்சே :)

பா.ராஜாராம் said...

அம்மாவா,அத்தையா?

பேசாம இப்படி தலைப்பை மாத்திரலாம் அமித்தம்மா!

வேறு யாராவது...
கௌலி?கௌளி?கெவுளி?கெவுலி?..

அன்புடன் நான் said...

வித்தியாசமான கவிக் களம்... ந‌ல்லயிருக்குங்க பாரா.

S.A. நவாஸுதீன் said...

பா.ரா. எங்க அம்மம்மா (பாட்டி) சொல்ற “கவுலி” வெத்தலை வாங்கத்தான். வெற்றிலை வாங்க அளவுகோல். ஒரு கிலொ வெங்காயம் மாதிரி.

ராமலக்ஷ்மி said...

அருமைங்க. அமித்து அம்மாவின் அத்தை சொன்னமாதிரி நானும் ‘கெவுளி’ என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பா.ராஜாராம் said...

@நவாஸ்
கவுலியா இருக்கு நவாஸ்.அடச்சே..கவலையா இருக்கு நவாஸ்.இவ்வளவு கௌலிகள் இருக்கா இதுக்குள்ள?

@கருணாகரசு.
பின்னூட்ட வறட்சி பாஸ்.கண்டுக்காதீங்க...வறட்சியா?வரட்சியா?..சூழ்நிலை அப்படி கருணா...

@ராமலக்ஷ்மி
திங்கள் சத்யா பாலா!சப்போட்டுக்கு ஆள் வந்தாச்சு..

@திங்கள் சத்யா பாலா
உங்களை போல் இருவர்..வேண்டாம் நீர் ஒருவரே போதும்!வாழ்க நீர்! :-))

நேசமித்ரன் said...

பல்லிகளின் சப்தம்
வெற்றிலை அளவு
குறளீ என்ற சொல்லின் மரு உ

**************************

மிக்க சந்தோசம் மக்கா

கைக்குட்டை கட்டின உடுக்கை
வாக்கு சொல்லி செல்கிறது
ஆற்றங்கரைக்கு வரச்சொல்லி

என்ற காதல் வரியும்

விடிந்த பின் யாசனாகி விட்டான் தீர்க்கத்தரிசி

என்ற வேதனை வரியும் வாக்கு சொல்லிகள் கொடுத்தவைதான்

நினைவூட்டிய கவிதைக்கு நன்றி

பா.ராஜாராம் said...

@வசந்த்
நன்றி வசந்த்!

@ரம்யா
இருக்கிறார்கள் ரம்யா.திங்கள் சத்யா பாலாவிடமிருந்து இப்புகை படம் பெற்றது.அவர் கட்டுரை வாசித்து பாருங்கள்.நிறைய இருக்கிறார்கள்.முதல் வருகைக்கும் சேர்த்து நன்றி ரம்யா!
குடுகுடுப்பை அண்ணாச்சி,ரம்யாவை கவனிங்க! :-)

@கதிர்
நன்றி கதிர்!

@இன்றைய கவிதைகள்
நன்றி கேயார்!நால்வருக்கும் அன்பு!

@தியா
நன்றி தியா!

@ஹேமா
நன்றிடா ஹேமா!

@அசோக்
:-)..நன்றி அசோக்!

சங்கர்
@மிகுந்த நன்றி சங்கர்!

@சேகர்
நன்றி மக்கா!

@ராகவன்
நன்றி ராகவன்!

@முல்லை
நன்றி முல்லை!

@ஸ்ரீ
நன்றி ஸ்ரீ!

பா.ராஜாராம் said...

@சபிக்ஸ்
நன்றி சபிக்ஸ்!

@கேசவன்
நல்வரவு கேசவன்.நன்றி மக்கா!

@செய்யது
அமாம் செய்யது.விரைவில்.நன்றி மக்கா!

@நவாஸ்
நன்றி மக்கா!

@ஊர்சுற்றி.
தொடர்வருகை சந்தோசம்.நன்றி மக்கா!

@நவிஷ் செந்தில்குமார்.
வாங்க செந்தில்.மிக்க நன்றி!

@சரவணா
நன்றி சரவனா!

@விநாயகம்
அப்படியா விநாயகம்?நன்றி மக்கா!

@உதிரா
நன்றி மக்கா மகளே!அல்லது மகள் மக்கா..(நல்ல குடும்பம்டா..)

@ரவுத்திரன்
இருக்கிறார்கள் ராஜேஷ்!..சந்ததிகள் இடையே மாற்றங்கள் இருக்கு.அருகி இருக்கிறார்கள்..போன வருடம் ஊர் போன போது கூட பார்த்தேன்.திங்கள் சத்யா கட்டுரை வாசியுங்கள்.நன்றி மக்கா!

@காமராஜ்
உங்கள் நட்பு,அவ்வளவு சந்தோசமாய் இருக்கு,காமு!அவசியம் வந்து வாசிக்கிறேன் காமராஜ்.நன்றி மக்கா!

@லாவண்யா.
ரொம்ப நன்றி லாவண்யா!

@வேல்கண்ணன்
நன்றி வேல்கண்ணா!

@விஜய்
சந்தோசம் விஜய்.நன்றி மக்கா!

@அமித்தம்மா
@நன்றி அமித்தம்மா,வந்து ஆட்டத்துல கலந்துகிட்டதுக்கும் சேர்த்து. :-))

@ரசிகை
நன்றி ரசிகை!

@திங்கள் சத்யா
போட்டோ, பின்னூட்டம்,எக்ஸ்ட்ரா பின்னோட்டம்,வள்ளல் சத்யா நீங்கள்!நன்றி மக்கா!

@கருணா
நன்றி கருணா!

@நவாஸ்
மீள் பதிவு?நன்றி பாஸ்!

@ராமலக்ஷ்மி
ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி!

@நேசன்
எல்லாவற்றுக்கும் மிக நெகிழ்வான ஒரு பதில்,ஒரு,கவிதை,அடிச்சு கும்மும் ஒரு நிகழ்வு...பெட்டகம் மக்கா நீ!நன்றி நேசா!

ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் உள்ளே வரும் வந்த பின் ஊட்டங்கள் அத்தனையும் பார்ப்பேன். ஆனால் உங்கள் இணைப்பு என்னுடன் இணைந்த பிறகு இன்று நீங்கள் கொடுத்த வார்த்தைகள் புதிய பாதையை காட்ட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டியது.

இலக்கிய சிற்றிதழ்களில் வரும் வரிகளுக்கு எந்த குறைவும் இல்லை உங்கள் அத்தனை கவிதைகளும்.

சிந்திப்பவர்கள் எப்போதுமே சற்று பிந்தி தான் வருகின்றார்கள். முந்திக்கொண்டு முகம் காட்டாதவர்களும், காட்டி காட்சியை மறைப்பவர்களுமாய்

மௌனம் கசிகின்றது பாரா.