Monday, November 16, 2009

அளவெடுத்தது 'அவன்'


(picture by cc license, thanks DavidDennisPhotos. com's )

நீங்கள் அணிந்திருக்கிற
அளவு சட்டையில் இருந்து
அளவெடுப்பதே
அவன் கணக்கு.

யிர்க்கால் அளவு
கூடிப்போகும்.
சிலநேரம் குறையலாம்.

ளவெடுக்கும்போது
உள்ளிழுத்து வெளியனுப்பும்
உங்கள் மூச்சு காற்றின்
நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்

கை பிசைந்து நிற்கிறான்
அவன் தவறோவென.

பெரிய மனசு கொண்டவரே..

ல்லை என சொல்லி வாருங்கள்.
அல்லது
ஆம் எனவாவது.

பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.

64 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

பிரமிப்பா இருக்கு..

எப்டியெல்லாம் மனித மனங்களை படித்திருக்கிறீர்கள்

அனுபவமும் வேண்டும் கவிதைக்கு

எப்பவும் சொல்ற மாதிரியில்ல பாரா

இந்தகவிதைதான் ரொம்ப ரொம்ப சுவாசம் மாதிரி சுவாசிச்சேன்னு கூட சொல்லலாம் அருமை...

ராமலக்ஷ்மி said...

//பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.//

சிற்பிகளேதான்.மிக அருமையான கவிதை. படம் கவிதைக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது. வாழ்த்துக்கள் பா.ரா.

அ.மு.செய்யது said...

ஏற்று கொள்கிறேன்.தையற்கலைஞர்களும் ஒருவகையில் சிற்பி தான்.

யாருமே யோசிக்காத வித்தியாசமான கோணம் உங்களுடையது பா.ரா.கவிதை வழக்கம் போல...!!

காமராஜ் said...

படைப்பதனால் அவன் பேர்
(சிற்பி) படைப்பாளி.
யாராயிருந்தும் படைப்பின் உன்னதம் புரிகிற தாயுள்ளம்.
பாரா.. பாரா... பாரா...

mvalarpirai said...

Good one Sir !

விஜய் said...

சிற்பி பா.ரா வடித்த மற்றுமொரு கவிதை சிற்பம்.

வாழ்த்துக்கள்

விஜய்

மணிஜி said...

தலைவரே.....தைச்சுட்டீங்க

தமிழ் அமுதன் said...

//தண்டோரா ...... said...

தலைவரே.....தைச்சுட்டீங்க//


;;))) repeettu

சந்தான சங்கர் said...

//அளவெடுக்கும்போது
உள்ளிழுத்து வெளியனுப்பும்
உங்கள் மூச்சு காற்றின்
நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்//

தையல் சிற்பியின்மீது
மையல் கொண்ட வரிகள்
மெய்யில் உரைத்திட்ட உணர்வு..


எங்கள் மனப்பதிவில்
பதிந்தது நுண்ணிய அளவீடுகளுடன்..


அருமை பா.ரா

vasu balaji said...

/அளவெடுக்கும்போது
உள்ளிழுத்து வெளியனுப்பும்
உங்கள் மூச்சு காற்றின்
நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்/

/பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்./

அருமை ராஜாராம்.குறை சொல்லத் தேடிப் போகிறோமே ஒழிய சரியாக அல்லது நன்றாகத் தைத்திருப்பதை பாராட்டும் பண்பே இல்லாமல் போய் விட்டது.

உயிரோடை said...

//சிற்பியையொத்த தையற்காரன்.//

நீங்க‌ளும் க‌விசிற்பி தானே அண்ணா

Ashok D said...

சித்தப்ஸ் அடுத்தது பானை செய்பவரை பற்றி எழுதபோறீங்க சரியா :))

நல்லாயிருக்கு ரொம்பவே.

பூங்குன்றன்.வே said...

மிக அருமையான ஒரு படைப்பு பா.ரா, பல முறை படித்தும் புதிதாய் இருக்கிறது உங்களின்
"அளவெடுத்தது 'அவன்'".

ராகவன் said...

அன்பு பாரா

என் சித்தப்பாவை பார்த்தேன் உங்கள் கவிதையில். எல்லா ஏழை டெய்லர்களும் எனக்கு சித்தப்பாவாய் தோன்றும். ஒரு கடையில் இருக்கமாட்டார், மூக்கு விடைக்கும் கோபம் எப்போதும் வரும். நிரந்தர வருமானம் இல்லாமல் தையல் மெஷின் பெடலாய் மிதிபடும் வாழ்க்கை எங்கும் நகராமல். சித்தியின் சாமர்த்தியம் இரண்டு வேளை காப்பிக்கும், ஒரு வேளை சாப்பாட்டிற்கும், முருகன் தியேட்டர் சினிமாவிற்கும் போதும்.
வசை நிறைந்த வாழ்க்கை முறை அவர்களுடையது. மிச்சம் விழும் துணிகளில் விதவிதமான வண்ணங்களில் அவர் எனக்கு தைத்துக் குடுத்த சட்டை இன்னும் என் வரவேற்பறை கொலாஜ் சித்திரமாய் மனசுக்குள் மாட்டி இருக்கிறது.

கவிமணம் கொண்ட மனிதர்கள் மத்தியில். மனிதமனம் கொண்ட கவிஞர் நீங்கள்

அன்புடன்
ராகவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒருத்தரையும் விட்டு வைக்கப்போவதில்லை பா.ராவின் கவிதைகள். :)

விக்னேஷ்வரி said...

இப்படியெல்லாம் கூட யோசிக்கலாமா. ரொம்ப நல்லா இருக்குங்க.

S.A. நவாஸுதீன் said...

மனிதனின் உள்மன உணர்வுகளை எப்படி மக்கா வாசிக்கிறீங்க.

அமித்தம்மா சொன்னதுதான் நடந்துகிட்டிருக்கு, நடக்கப்போகுது.

உடம்ப பார்த்துக்குங்க மக்கா

ஜெனோவா said...

உங்களின் அனுபவமும் , நீங்கள் மனிதர்களை படித்திருக்கும் விதமும் பிரமிக்கவைக்கிறது !!

களத்துமேட்டில் வேலை செய்யும் ஏழை , ஆச்சர்யத்துடன் அண்ணாந்து விமானம் பார்ப்பதுபோலவே , கவிதைகளையும் உங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் !

நீங்கள் ஒரு ஆச்சர்யம் சார் !!
தொடருங்கள் , வாழ்த்துக்கள் !

சிவாஜி சங்கர் said...

அற்புதமான கவிதை..

க.பாலாசி said...

//நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்//

நெஞ்சில் தைக்கும் கவிதை.....

இராகவன் நைஜிரியா said...

பிரமிப்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.

அருமை. அருமை.

ஒரு கலைஞனின் கைவண்ணம் மாதிரி, தையல் கலைஞர்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

"உழவன்" "Uzhavan" said...

அவனைப் போல் ஒவ்வொருவனுக்கும் தொழில் நேர்த்தி இருக்கவேண்டும். அருமை

Vidhoosh said...

:) எல்லாத்தையும் சொல்லிட்டு போயிட்டாங்க.. எல்லாரையுமே ரிபீட்டிக்கிறேன். :))

பாராட்டி பாராட்டி வாய்தான் வலிக்கிறது.

நேயர் விருப்பமாக ஒரு வேண்டுகோள். வேலை இல்லாத தம்பி பற்றிய ஒரு கவிதையும் எழுதுங்களேன். சீரியசாத்தான் கேட்கிறேன்.
-வித்யா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமை ராஜாராம். இத்தனை கூர்மையாக மனித மனங்களைப் பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது.
ஒரு சிற்பி இன்னொரு சிற்பியைப் பற்றிச் சொன்ன கவிதை இது. படம் வேறு சூப்பர்.

நேசமித்ரன் said...

அடப்பாவி மனுஷா

இரு இரு அண்ணிகிட்ட சொல்ரேன்

என்னா ஒரு வில்லத்தனம் ?

அளவெடுத்தது அவன் -அதாவது ஆண்

அப்போ அளவு கொடுத்தது பெண்

//அளவெடுக்கும்போது
உள்ளிழுத்து வெளியனுப்பும்
உங்கள் மூச்சு காற்றின்
நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்

கை பிசைந்து நிற்கிறான்
அவன் தவறோவென.//

நேசமித்ரன் said...

//பெரிய மனசு கொண்டவரே//

ம்ம்ம் நடக்கட்டும்

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

நேசமித்ரன் said...

//கை பிசைந்து நிற்கிறான்//

ரைட்டு நிப்பான்ல

நேசமித்ரன் said...

//பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்//

பாவமா?

அது சரி வேலிக்கு ஓணான் சாட்சி

நேசமித்ரன் said...

ம்ம்ம்
என்ன பண்ணுரது உலகம் இன்னும் நம்பிட்டு இல்ல கெடக்கு

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு பா.ரா உஙகள் குறும்பை மிக ரசித்தேன்

:)

இரசிகை said...

neengal miga athikamaai vaasikkum puththakangal......,
"MANITHARKAL"-THAANO?

:)

CS. Mohan Kumar said...

அருமையா இருக்கு வாழ்த்துக்கள். எளிய மனிதர்கள் பற்றி ஜெய காந்தன் தான் கதைகளில் எழுதுவார். நீங்களும் எழுதுவது மகிழ்ச்சி

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

கோமதி அரசு said...

அளவெடுத்தது’அவன்”

படைப்பாளிகள் அனைவரும் சிற்பிகள்
தான். தேவையானதை பெற தேவையற்றவைகளை நீக்குபவன் சிற்பிதான்.

கவிதை அற்புதம்.

மண்குதிரை said...

mm nalla irukku anney

mathiyalagan said...

Pinnuriyada...
Thanga rasu....

- Enn Mahan adikadi sollum vasanam...(pasanka parthittu)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.கலக்கிட்டீங்க.

வினோத் கெளதம் said...

வித்தியாசமா யோசிச்சி எழுதி இருக்கிங தல..

விநாயக முருகன் said...

அக உணர்வுகளை வெளிப்படுத்த எளிமையான வரிகள் போதுமென்று மீண்டும் சொல்லியிருக்கின்றீர்கள். அருமை பா.ரா

Kannan said...

correct ta 'point' ta புடுசிங்க நேசன்.

இந்த பய புள்ள முதல்ல இப்படி தான் கவிதையை அனுப்பி வச்சுச்சு.

நீங்கள் தருகிற
அளவு சட்டையில் இருந்து
அளவெடுப்பதே
அவன் கணக்கு.

நானும் மத்தவங்க மாதிரி படிச்சு முடிச்சு கண்கலங்கிட்டேன். பின்பு சற்று சுதாரிச்சு, நம்ம ஊர்ல எந்த ஆம்பளைங்க அளவு சட்டைய கொடுத்து தைக்க சொல்லுறாங்க? அதனால இப்படி மாத்திருவோமா? ன்னு கேட்டேன்

நீங்கள் அணிந்திருக்கிற
அளவு சட்டையில் இருந்து
அளவெடுப்பதே
அவன் கணக்கு.

ரொம்ப நல்லவன் மாதிரி, "சூப்பர் கண்ணா, மாத்திருன்னு", மனசுக்குள்ள சிருசுக்கிடே சொன்னத நம்பி நானும் மாத்திட்டேன். இப்போ உங்க பின்னூட்டத்த பாத்தா பின்பு தான் தெரியுது, எம்புட்டு பேர ஏம்மாதிபுடான்னு....!!!

என்னத்த சொல்ல, நம்ம ஊர்ல நல்லவன நம்புரமோ இல்லையோ, கெட்டவன டபக்குனு நம்பிடுறோம்..!!

பா.ராஜாராம் said...

ஹா...ஹா..கண்ணா,

உண்மையில்,இந்த கவிதையில் என் பார்வை வேறுடா.அதை புரிந்துதான் நீ அப்படி கேட்டியோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்.கடைசியாய் என் பார்வையை பின்னூட்டத்தில் சொல்கிறேன்.இப்ப கவிதையின் பன்முகம் கெட வேண்டாம்.

நேசமித்ரன். said...

அன்பின் கண்ணன்

சேட்டைக்கார ஆளு இவரு ... நம்மகிட்ட இந்த செண்டிமெண்டு கதை எல்லாம் வேகாது இல்ல

பாம்பின் கால் பாம்பறியாதா ?

நம்பாதீஙக ! எல்லாத்தையும் போல நம்பலயும் நம்ப சொல்றாரு

ஹி ஹி ஆனா கவிதை ஜூப்பரு ராஜா

என்ன ஒரு காட்சி அளவு எடுக்குறது

:)

- நேசமித்ரன்

கவிதாசிவகுமார் said...

எல்லாவற்றிலும், எல்லோரையும் கவிதை உணர்வோடு படம்பிடித்து அதை கவிதையாய் தரும் உங்களுக்கு "கவிச்சிற்பி" என்று பட்டம் கொடுக்கலாம்.

"கவிச்சிற்பி" பா.ரா. அவர்கள் வாழ்க.

பா.ராஜாராம் said...

@நேசன்,கண்ணா...
எம்பூட்டு சந்தோசம் ரெண்டு பேருக்கும்.இருங்கடி..
@உதிரா
மேல இருக்க ரெண்டு பயலுவகூட நீயும் சேர்ந்துட்டியா..
சேட்டை சிற்பி!இருங்க வைக்கிறேன் மூணு பேருக்குமா!

தேவன் மாயம் said...

இல்லை என சொல்லி வாருங்கள்.
அல்லது
ஆம் எனவாவது///

நல்லா சிந்திக்கிறீங்க!!!

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ச்சியான உணர்வு, கவிதை ரொம்ப பிடிச்சிருக்குண்ணே..

இன்றைய கவிதை said...

அரிதாகிக் கொண்டு வரும் தொழிலை
அருமையாய்ப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள், பா ரா!

நன்றி!

-கேயார்

நிலாமதி said...

இன்று தான் உங்கள் பக்கம் வந்துள்ளேன் போலும் கவிதையை அழகாக தைச்சு இருகிறீங்க. பாராடுக்கள்.

ஹேமா said...

அண்ணா எப்பிடி?எங்கயெல்லாம் தொட்டுப் பறக்குது உங்க கற்பனை.சந்தோஷமாவும் அதிசயமாவும் இருக்கு.
உண்மையாவே ஒரு தையல்காரர் பார்த்தா சந்தோஷப்படுவார்.
தனக்காகவும் ஒரு உள்ளம்ன்னு.

ஆ.ஞானசேகரன் said...

//பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.//

mika arumai

பா.ராஜாராம் said...

@வசந்த்
நன்றி வசந்த்! ரொம்ப சந்தோசம்!

@ராமலக்ஷ்மி
நன்றி ராமலக்ஷ்மி!

@செய்யது
நன்றி செய்யது.நெகிழ்வு.

@காமராஜ்
மிக்க நன்றி காமராஜ்!

@வளர்பிறை
வாங்க வளர்பிறை.மிக்க நன்றி!

@விஜய்
நன்றி விஜய்!சந்தோசம்.

@தண்டோரா
தலைவா..நன்றிஜி!

@ஜீவன்
நன்றி ஜீவன்!

@சங்கர்
நன்றி சங்கர்ஜி!

@வானம்பாடிகள்
ரொம்ப நன்றி சார்!

@லாவண்யா
ஐயோ..லாவண்யா நீங்களுமா?நன்றி சகோ!

@அசோக்
உலகு குசும்பு மகனே,உங்களுக்கு!..நன்றி மகன்ஸ்!

@குன்றன்
நன்றி குன்றா!

@ராகவன்
பின்னூட்ட வாழ்வே..நன்றி சகோதரா!

@அமித்தம்மா
ஆமாம்,அடுத்து அமித்துதான்!அமித்துவையும்,பப்புவையும் பார்க்கவேணும் போல் இருக்கு அமித்தம்மா.பார்க்கலாம்.நன்றி AA!( ஹி..ஹி..அனுஜன்யா..)

@விக்னேஸ்வரி
நன்றி விக்னேஷ்!

@நவாஸ்
வாங்க குடுகுடுப்பை(//அமித்தம்மா சொன்னதுதான் நடந்துகிட்டிருக்கு, நடக்கப்போகுது.//)
நீங்களுமா?சரியாயிட்டேன் மக்கா.நன்றி நவாஸ்!

@ஜெனோவா
ஜெனோ,உங்க கவிதையின் இயல்பு பார்த்து அசந்து போயிருக்கேன்.நீங்க நம்மளை சொல்றீங்க.பெரிய மனசுக்கு நன்றி ஜெனோ!

புலவன் புலிகேசி said...

உண்மைதான் நண்பரே...ஆனால் இன்று அவர்களுக்கும் வேலையில்லா திண்டாட்டம் தான்...நல்ல கவிதை

rvelkannan said...

//கை பிசைந்து நிற்கிறான்
அவன் தவறோவென//
ஒரு முதிர்ந்த தையற்காரன் அல்லது
கிராமத்தில் வேண்டுமானால் இப்படி இருக்கலாம். பெருநகரங்களில் இப்படியானவரை பார்ப்பது அரிது.
(அளவு எடுப்பவர் ஒருத்தர் அதை
எழுதுபவர் ஒருத்தர் தைப்பவர் வேறு எவரோ அதை நம்மிடம் கொடுப்பவர் ஒருவர்) அங்கும் இங்கும் அப்படியாக மிதம் இருப்பவரை //சிற்பியையொத்த தையற்காரன்//
சிறப்பு செய்கிறது உங்களின் கவிதை.

கல்யாணி சுரேஷ் said...

//பெரிய மனசு கொண்டவரே..

இல்லை என சொல்லி வாருங்கள்.
அல்லது
ஆம் எனவாவது.

பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.//

ரொம்ப நல்லா இருக்குண்ணா. எப்போதுமே தையல்காரரிடம் மட்டுமல்லாது எல்லோரிடமுமே திருப்திகரமான சேவைக்கு நன்றி சொல்வதும் சிறு தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுவதும் வழக்கம்தான். இனியும் மறக்காமல்தொடர்வேன்.

Unknown said...

//சிற்பியையொத்த தையற்காரன்//
உண்மதாங்க.
தேவயற்றத சரியான அளவுல
விலக்கத்தெரிஞ்சவங்க இவங்க.
தவறிட்டா அந்த படைப்பே வீண் தான்.
அட நம்ம சிகைஅலங்கார வல்லுனர்கள் கூட‌
இந்த கூட்டம் தான?


http://vaarththai.wordpress.com/

Karthikeyan G said...

very nice sir..

சேவியர் said...

பிரமாதம் !

Rajan said...

//இல்லை என சொல்லி வாருங்கள்.
அல்லது
ஆம் எனவாவது.//

நல்லா இருக்குங்க பா ரா !

thamizhparavai said...

நன்றி நேசமித்ரன், கண்ணனுக்கு....

குறும்புக்குக் குறைவில்லை ராஜாராம் சார்...

கவிதையைப் படிப்பதில் என்னவெல்லாம் மெனக்கெட வேண்டியிருக்கிறது...
:-)

அன்புடன் நான் said...

உங்க கவிதையை படிச்சுபுட்டு...அப்படியே பின்னுட்டத்த ஒரு வட்டம் அடிச்ச பின்னடிதான் ஒரு புரிதலுக்கு வரமுடிஞ்சது.... படமும் வரிகளும் மிக அருமை .

சத்ரியன் said...

//பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.//

பா(ர்),ரா.

மாம்ஸ், வாழும் கலை தெரிஞ்சிருக்கீங்க. ஒவ்வொரு சிறு அசைவையும் கவனித்து ...எழுதி...எங்களையும் வாழ அழைக்கின்றீர்கள்.

எப்போதும் போல் வியக்கிறேன்.

பா.ராஜாராம் said...

@சிவாஜி
முதல் வருகை!வாழ்த்துக்கள்.நன்றி மக்கா.

@பாலாஜி.
நன்றி பாலாஜி!
நல்லா இருக்கு மோகன்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

@இராகவன் அண்ணாச்சி
நன்றி அண்ணாச்சி!

@டிவிஆர்
நன்றி tvr!

@உழவன்
நன்றி உழவரே!

@வித்யா
கிர்ர்ரர்ர்ர் .... வித்யா..பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
(உங்க கிச்சு கிச்சுக்கு ஒரு அளவு இல்லையா?.)
நானும் சீரியசாத்தான் சொல்றேன்..

@ஜெஸ்
நன்றி ஜெஸ்...சிற்பின்னா என்ன பாஸ்?

@நேசன்
நேசனுக்கும்,கண்ணனுக்கும் கடைசியில்..

@யாத்ரா
நன்றி மக்கா!

@ரசிகை.
ஆம் ரசிகை.பிடித்த புத்தகமும்.நன்றி மக்கா!

@மோகன்
குரல் கேட்டு கொண்டதில் அவ்வளவு சந்தோசம் மோகன்.உங்களை வாசிக்க நான்தான் தாமதமாகிவிட்டது.அடிச்சு கலக்குறீங்க மக்கா.அறிமுகம் ப்ராப்தம்.நன்றி மோகன்!

@கோமதி.
ரொம்ப நன்றி கோமதி.நல்வரவும்!

@மண்குதிரை
நன்றி மண்குதிரை!

@மதி
எங்கடா..உன்னை ஆளையே காணோம்?பாரு..கவிதா/தமிழ்/உதிரா/என்று கலந்து கட்டி கொண்டிருக்கிறது நம் கவிதும்மா..ஒரு பதிவு மிஸ் பண்றதில்லை...சித்தப்பாவும் நீயும் எங்கடா இருக்கீங்க?..போ!பேச்சு கா!நன்றி சொல்ல மாட்டேன்....

@ஸ்ரீ
நன்றி ஸ்ரீ!

@வினோ
பிரமிப்பு உங்கள் இன்றைய சிறுகதை வினோ.நன்றி மக்கா!

@விநாயகம்
நன்றி விநாயகம்!

@உதிரா
நன்றிடா பயபுள்ளை! :-)))

@தேவன் மாயம்
வணக்கம் டாக்டர்.ரொம்ப நன்றி!

@சரவனா
நன்றி சரவனா!

@கேயார்
நன்றி கேயார்!ப்ரபா,ஜேகே,சந்தர் நலம்தானே?

@நிலாமதி
நன்றி நிலாமதி!நல்வரவும்.

@ஹேமா
டேய்....நன்றிடா பயலே!

@சேகர்
நன்றி சேகர்!

@புலவன் புலிகேசி
தொடர் வருகை,சந்தோசமும் நன்றியும் புலவரே.

@வேல்கண்ணா
நன்றி வேல்கண்ணா!ஆம்.

@கல்யாணி
very good,கல்யாணி! செய்.நன்றிடா!

@லொடுக்கு
நன்றி பாஸ்!

@கார்த்தி
நன்றி கார்த்தி!

@சேவியர்
நல்வரவு சேவியர்.நன்றி மக்கா!

@ராஜன்
நன்றி மக்கா!

@தமிழ்பறவை
ஆம்,பரணி.கெட்ட ராஸ்கல்ஸ் ரெண்டு பேரும்.ஹி..ஹி..என்ன சொன்னீங்களா?நானும் நம்ம ரெண்டு பேரையும்தான் சொன்னேன். :-)நன்றி மக்கா!

@கருணா
நன்றி கருணா!

@சத்ரியன்
மாப்பு..எதுவும் ஆப்பு இல்லையே? நன்றி மாப்ஸ்!

பா.ராஜாராம் said...

இக்கவிதையில் என் பார்வை குறித்து நேசனுக்கும் கண்ணனுக்கும் கடைசியில் சொல்வதாக சொல்லி இருந்தேன்...அது,

தலைப்பு..
அளவெடுத்தது 'அவன்'.இல்லையா?

நான் அந்த 'அவன்'னில் எல்லாம் வல்ல இறைவனை பொருத்திகொண்டேன்.

பொருத்தி பாருங்கள் புதிதாக ஒரு ஜன்னல் திறந்தால்,மிகுதி சந்தோசம்!