Thursday, November 19, 2009

மரண அடி


(picture by cc license, thanks Julien Harneis' photostream )

வூட்டுக்கும் மாமா வூட்டுக்கும்
நடுக்கோண்டு ஒத்தடிப்பாதை.

புடிச்சுப் போனா
மாமா கொல்லை.

போச்சொல்ல போச்சொல்ல
நாயுருவி அப்பும்.

கொல்லையில் கெடக்குற மாமாக்கு
குடும்பம் குட்டி இல்லை.

த்தடியில் படுத்தது பொறவு
பத்தடி ரோடு.

நாயுருவியும் மாமாவும் இப்ப
மருந்துக்கும் இல்லை.

த்தடி வரும்போது
எம்பூட்டுக்குங்க
ரெண்டு ஒத்தடி.

41 comments:

மணிஜி said...

படத்துக்கான கவிதையா?(சொத்துல எனக்கும் பங்கு இருக்கு மக்கா)

தராசு said...

முதல் மூணு வரிக்கும் ஒரு படமும், இரண்டாவது மூணுக்கும் இன்னொரு படமும் வந்திருக்கணுமோ,

இருந்தாலும் சூப்பரப்பு.

சந்தான சங்கர் said...

//ஒத்தடியில் படுத்தது பொறவு
பத்தடி ரோடு.

நாயுருவியும் மாமாவும் இப்ப
மருந்துக்கும் இல்லை.//

பாதைகள் விரிந்தது
பந்தங்களின் சுவடுகள்
அழித்து,
நாயுருவியும்
நெருஞ்சியும்
அறிஞ்சு வந்த
வலி(ழி) தடமாய்..


அருமை பா.ரா

பூங்குன்றன்.வே said...

பேச்சு தமிழில் ஒரு அர்த்தமுள்ள கவிதை..

CS. Mohan Kumar said...

பேச்சு தமிழில் நல்லா இருக்கு பா. ரா

ஆ.ஞானசேகரன் said...

பேச்சித் தமிழில் ஒரு நடப்பை சொல்லிய விதம் அழகு

அன்புடன் நான் said...

சொத்துக்குன்னு எந்த அடிதடியும் இல்லல்ல.....
கவிதை நல்லாயிருக்குங்க பாரா.

Ashok D said...

//சொத்துல எனக்கும் பங்கு இருக்கு மக்கா//

எத்தனபேரு கிளம்பறாங்கப்பா..

நாயுருவின்னா என்னா சித்தப்ஸு?

ப்ரியமுடன் வசந்த் said...

வூடு கட்டி அடிக்கிறீங்க பா.ரா.

அருமை

Rajan said...

என்னவோ போங்க !

மண்குதிரை said...

வாவ் ரொம்பப் பிடித்திருக்கிறது

ராமலக்ஷ்மி said...

//போச்சொல்ல போச்சொல்ல
நாயுருவி அப்பும்.//

பேச்சு வழக்கு அப்படியே வரிகளில் மின்னுகிறது. அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு. உங்களோட இந்த நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்ண்ணா. நன்றி.

புலவன் புலிகேசி said...

பேச்சு வழக்கில் ஒரு அழகு கவிதை...

Jawahar said...

ஆஹா... நல்லா இருக்கே நாட்டுப்பாடல்!

http://kgjawarlal.wordpress.com

rvelkannan said...

அருமை பா. ரா. பேச்சு நடையில் அழகு கவிதை

ராகவன் said...

அன்பு பாரா,

எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த சென்னையின் புறநகர் பாஷையை. வூடு, போச்சொல்ல...

பேச்சு வழக்கு திடீரென்று தெற்கத்தி வாசத்தில் மிதக்கிறது...பொறவு, எம்பூட்டு...

நாயுருவியும், மாமாவும் இப்ப மருந்துக்கும் இல்லை. கெண்டைக்கால்ல அப்பிய நாயுருவியும், மாமாவின் நெஞ்சுக்குழில கிடக்கிற நினப்பும் இந்த கவிதை எங்கும் விரவி கிடக்கிறது பாரா.

பாரா எது சொன்னாலும் கவிதையாய் போகிறது.

அன்புடன்
ராகவன்

விக்னேஷ்வரி said...

கடைசில புரியலை. :(

அ.மு.செய்யது said...

பேச்சு வழக்கு நல்லா இருக்கு..ஆனா எனக்கு கொஞ்சம் புரியவில்லை பா.ரா !!

தேவன் மாயம் said...

வரிகள் நல்லாயிருக்கு நண்பரே!

ஹேமா said...

அண்ணா கவிதை எப்பவும்போல கலக்கல்.

அண்ணா உங்க சொத்துக்கு ஆபத்து.பாருங்க அஷோக் அப்பாக்கு எவ்ளோ அதிர்ச்சியா இருக்கு.

vasu balaji said...

:). அருமை.

சிவாஜி சங்கர் said...

""EXELENT"" words..!!

velji said...

ஒத்தடி.

பத்தடி.

மரண அடி.

கவிதையால் அடிக்கிறீர்கள்.மயிலிறகால் அடித்ததுபோல்.

உயிரோடை said...

ச‌ரியா புரிய‌லை. :(

இரசிகை said...

//நாயுருவியும் மாமாவும் இப்ப
மருந்துக்கும் இல்ல//

yellaamumaai irunthu vittu.., pin illaamale pokum yellaamum koduppethennavo..."MARANA ADI THAAN"

nalla irunthathuppa...:)

நேசமித்ரன் said...

மழலைதான் எவ்வளவு அழகு?!

செ.சரவணக்குமார் said...

அருமை

(Mis)Chief Editor said...

ஐயா! படம் நல்லா போடுறீய!
கவிதையும் எழுதறீய!

ஆனா, மரமண்டைக்குத்தான் பிரிய மாட்டேங்குது!
அஞ்சு காசு/டைலர் ஷாப்பு மாரி எயுதினாதான் பிரியுது!!
என்ன செய்ய?!

அனுபவிக்கோணும்னா தனியா அறிவு வேணுமாக்கும்?!

-பருப்பு ஆசிரியர்

இன்றைய கவிதை said...

as usual super!

-kayaar

வினோத் கெளதம் said...

நல்லா இருக்குங்க..பேசுறதை நேர்ல கேக்குற மாதிரி..

சுசி said...

அருமை ராஜாராம்.

கவிதாசிவகுமார் said...

சிறந்த தனித்துவம் வாய்ந்தது உங்கள் கவிதைகள் அனைத்தும். அத்தனைக்குள்ளும் ஒரு சொல்லொணா அன்பு. வாழ்த்துக்கள் சித்தப்பா.

விஜய் said...

வாழ்த்தைத்தவிர வேறு என்ன நான் சொல்வது மக்கா

விஜய்

அ.மு.செய்யது said...

வலைச்சர பதிவில் நீங்களும் இருக்கிறீர்கள்.நேரமிருப்பின் வந்து பாருங்கள் !!!

S.A. நவாஸுதீன் said...

நீங்க போட்டு தாக்குங்க மக்கா

அன்புடன் மலிக்கா said...

சொத்துன்னாலே அடிதடியாக இருக்குமோ..

நல்லாயிருகுங்க படமும் கவிதையும்..

பா.ராஜாராம் said...

@மணிஜி
நன்றிஜி!

@தராசு
நன்றி மக்கா!

@சங்கர்
நன்றி சங்கர்!

@குன்றன்
நன்றி குன்றா!

@மோகன் குமார்
நன்றி எம்கே! :-)

@சேகர்
நன்றி சேகர்!

@கருணா
நன்றி கருணா!

@அசோக்
ஒருவகை தாவரம்,மகனே.ஆம் மகனே. நிறைய பேரு..ஆமா,சொத்துனா என்ன?நன்றி அசோக்!

@வசந்த்
நன்றி வசந்த்!

@ராஜன்
நன்றி ராஜன்!

@மண்குதிரை
நன்றி மண்குதிரை!

@ராமலக்ஷ்மி
நன்றி ராமலக்ஷ்மி!

@டிவிஆர்
நன்றி டிவிஆர்!

@கல்யாணி
நன்றிடா கல்யாணி!

@புலவன் புலிகேசி
நன்றி புலவரே!

@ஜவகர்
நன்றி ஜவகர்!

@வேல்கண்ணன்
நன்றி வேல்கண்ணா!

@ராகவன்
நன்றி ராகவன்!

@விக்னேஸ்வரி
@செய்யது
@லாவண்யா
@(Mis)chief editor.
இடத்திலும்,மனிதர்களிடமும் படரும் மாற்றங்களே கவிதை.நன்றி மக்காஸ்!

@தேவன் மாயம்
நன்றி டாக்டர்!

@ஹேமா
ஹா.ஹா..உனக்கு அப்பாவை வம்பிழுக்கலைனா தூக்கம் வராதே?200 sfk திருப்பி வாங்கிட்டியான்னு அசோக் கேட்க்க சொன்னார்.நன்றிடா ஹேமா?

@வானம்பாடிகள்
நன்றி சார்!

@சிவாஜி சங்கர்
வாங்க சிவாஜி.நன்றி மக்கா!

@velji
நன்றி வேல்ஜி!

@ரசிகை
என்ன,வார்த்தைகளில் கொஞ்சம் விரக்தி?நமுட்டு சிரிப்பை மிஸ் பண்ணிறாதீங்க ரசிகை.உங்க ட்ரேட் மார்க் அது!நன்றி ரசிகை!

@நேசன்
நன்றி நேசா! :-)

@சரவனா
நன்றி சரவனா!

@கேயார்
நன்றி கேயார்ஜி!

@வினோ
நன்றி வினோ!

@சுசி
நன்றி சுசி!

@ஸ்ரீ
நன்றி ஸ்ரீ!

@உதிரா
ஆகட்டும் மகளே.அன்புடா!

@விஜய்
நன்றி விஜய்!

@செய்யது
பார்த்தேன் செய்யது.பெரிய மனசு.நன்றி மக்கா!

@நவாஸ்
நன்றி மக்கா!

@மலிகா
நன்றி மலிகா!

Ashok D said...

@ சித்தப்ஸு
//ஆமா,சொத்துனா என்ன?//
ஒரு ஃபுல் ஸ்காட்ச்தான். இததான் அந்த ஹேமா பொண்னும் கேட்டுன்னே கீது நைனா.. அதுக்கு சொத்துன்னா என்னான்னு பிரில...(சரியான கிலுகிலுப்பை)

//200 sfk திருப்பி வாங்கிட்டியான்னு அசோக் கேட்க்க சொன்னார்.//
பிரில

thamizhparavai said...

ரசித்தேன் பாரா சார்....