குரல்வழி சிற்பங்கள்-தொடர்ச்சி..
மாதவராஜ், காமராஜ்
உருவி விட்டதுபோல் ஒரே மாதிரி இருப்பார்கள் மோகன் மாமாவும், ராஜ்குமார் மாமாவும். ஆறடி உயரம்,நடை, உடை, குரல் அமைப்பு எல்லாம். மாமாக்கள் இருவரும், அப்பாவும், நானும் நால்வருமாக கூத்தாண்டன் ரயில்வே பாலத்திற்கு குளிக்க போயிருந்தோம். எனக்கு அப்போ எட்டு வயதிற்குள் இருக்கலாம். அப்பா போர்த்திய, அப்பா வாசனை அடிக்கிற துண்டை தோளில் போர்த்தியபடி இவர்கள் நடைக்கு பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தேன். கூத்தாண்டன் கண்மாய் என்பது ரயில்வே பாலத்தை மேவி, நிறை சூழியாய் மூச்சு விடுகிற காலம் அது. துண்டு, உருப்படிகளை மடியில் இடுக்கியபடி பாலத்தில் அமர்ந்திருந்த நான் இவர்கள் மூவரும் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். "துணியை அங்கிட்டு வச்சுட்டு தவ்வுடா" என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள் மாமாக்கள்.
அப்பா முகம் நீரின் மேலாக மிதந்தாலும் கூப்பிடவில்லை அப்பா. கூப்பிட்டாலும் போயிருந்திருக்க மாட்டேன். மாமாக்கள் குளத்தில் இருக்க கரை ஏறி வந்தார் அப்பா,"துண்டு கொடுடா" என்றார். துணிகளை தரையில் வைத்த தருணம் நான் தண்ணியில் இருந்தேன். கால் தரை தட்டியது வரையிலான செங்கழனி நீரை இதோ இப்பவும் பார்க்க வாய்க்கிறது. கரை தூக்கிக் கொண்டு வந்த மாமாக்கள் இருவரும்,"வக்காளி என்னடா மாப்ள நீ?" என்றபடி சிரித்ததை இப்பவும் கேட்க்க வாய்க்கிறது.
ராகவனிடம் அழை எண் பெற்று மாதவன், காமராஜை அழைத்த போது இருவருமே வங்கியில் இருந்தார்கள். பாலம் பாலமாய் வெட்டுகிற சிரிப்பு, செய்து வைத்த பேச்சுத் தொணி, அடுத்தடுத்த வீடு, அடுத்தடுத்த அழை எண், என உரிச்சு தந்தார்கள் என் அந்த மாமாக்களை. தூக்கி எறிய அப்பா இல்லையே என்று தான் நானாக குதித்தேன் இவர்கள் எழுத்து குளத்தில். "வக்காளி என்னடா மாப்ள நீ?" என அசால்ட்டாக கரை தூக்கிக் கொண்டு வந்தது இவர்கள் இருவரின் செஞ்சு வச்ச குரல். எழுத்திற்கும் குரலுக்கும் ஒன்றும் மாமாங்க தூரம் இல்லை!
பாலா
அதிகம் பேசமாட்டார் ஜெயராம் மாமா. முதலில் தாய் மாமன், பிறகு லதாவின் அப்பா, அப்புறம் மாமனார் என்று படிப்படியாக தன்னை அலங்கரித்து கொண்டார். (கடைசி அலங்காரத்தை அலங்கோலம் எனலாம்). ரத்தினம் போல் எப்பவாவது என ஒரு சொல் உதிரும். குடுகுடுவென ஓடி பொறுக்கிக்கொள்ள தோணும். "சாம்பார் நல்லா வச்சுருக்கக்கான்னு எந்தம்பியே சொல்லிட்டான்" என்று வெகுநாள் வரையில் பேசிச்சிரித்த அம்மாவை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
"யப்பா.. மாமாவுக்கு தண்ணி, கிண்ணி வாங்கி கொடுத்துராதீக. அல்சர் தொந்திரவு. அப்புறம் நாந்தான் சிரமப்படணும்" என்று சரசத்தை என்னை ரகசியமாய் எச்சரிப்பார்கள். இடுப்பில் சொருகி கொண்டு போகிற குவாட்டர் பாட்டிலை மல்லிகை புதரில் வைத்துவிட்டு "அத்தைக்கு தெரியாமல் குடிங்க.. கொண்ணே புடுவார்கள் என்னை" என்று மாமா காதிற்குள் சொல்வது உண்டு நான். அத்தைக்கும் மகனாகி, மாமாவிற்கும் மருமகனாகி,
லதாவிற்க்கும் "நடைபிரண்டி" ஆகிற சந்தோசத்தை மிஸ் பண்ண விரும்புவதில்லை நான். அது ஒரு குஜால்தான் மக்கா...
"எலும்பள்ளி வைங்கத்தா மாப்ளைக்கு" என்று, தண்ணிக்கு பிறகு பரிமாறுகிற வீட்டு மனுஷிகளை விரட்டுவதை பார்க்கணுமே நீங்கள். அவ்வளவு அழகாய் இருக்கும்! மாமா உதிர்க்கிற ரத்தினம் போல் பாலாவும் ஒரு பின்னூட்டம் உதிர்த்தார். தகப்பனாக இருப்பது என்கிற என் கவிதைக்கு. "இந்த கவிதைக்கு பின்னூட்டம் போடுவது என்றால், ஒரு ஓரமாய் உட்க்கார்ந்து அழுதுட்டுத்தான் போடணும்" என்று. ஒரு வார்த்தைதானே உறைய வைக்கிறது அல்லது குளிர வைக்கிறது!
"மாம்சு" என்று பாலா ஒவ்வொரு முறை மீட்டுகிற போதும் நான் என் வீணையிடம் சேர்கிறேன். "எலும்பள்ளி வைங்கத்தா" என்கிற என் பழைய வீணையிடம்.
D.R.அசோக்
"புதூர் கம்மா மாமரம்" என்கிற ஒரு மாமரம் ஒன்று உண்டு. அது என் வாழ்வோடு நேரடி தொடர்பு கொண்டது. வீட்டிலிருந்து குறுக்கு வழியாக பிடித்தால் ஒரு கிலோ மீட்டர் தூரமே. t.v.s.50- யை கண்மாய் பாதத்தில் நிறுத்திவிட்டு கரை ஏற விடாது மக்கா. அப்படியே வாரிச்சுருட்டிக்கொள்ளும். சற்றேறக்குறைய அரை ஏக்கர் பரப்பிற்கு சும்மா தண்ணென்று நிழல் பரப்பி நிற்கிற மாமரத்திடம் என் ஆன்மா பேசியது அதிகம். பரஸ்பரம் அதுவும்!
"என்னபுள்ளே.. இன்னைக்கு ரொம்பத்தான் கொணட்டிக்கிற" என்று நானும், "போடா குடிகார கிழவா" என அதுவும் சீண்டாத நாள் இருக்காது. மனைவி குழந்தைகளிடம் எந்த மனக்கிலேசம் ஏற்பட்டாலும் அடுத்த நொடி, "டொர்ர்" என்கிற என் டி.வி.எஸ்.50 அங்குதான் அழைத்து செல்லும். வர்ற வரத்து பார்த்து,"ஆத்தி..எம்புள்ளைக்கு என்னாச்சு?" என்று ஏந்தி கொள்ளும். "ந்தா..வந்த முகத்தோட போகாத" என்று அதட்டி, சேலை விலக்கி உள் பாவாடை சீட்டி துணியில் கண்ணு மூக்கெல்லாம் சிந்தி, அழுந்த துடைத்து அனுப்பி வைக்கும்.
"சித்தப்சு" என்று உற்சாக நுரை கொப்பளிக்கிற என் அசோக்கின் குரலை நான் அவளின்றி வேறு எவ்விடம் சேர்ப்பேன்? அசோக் பேசி முடித்து வெகு நேரம் வரையில் அறை வாசனையாக குளிர்ந்து கொண்டிருக்கும், எறும்பூறி உதிர்ந்த மாம்பூ வாசனை போல.
**
சபிக்ஸ், தமிழன் கறுப்பி, ஜெஸ்வந்தி, லாவண்யா-மனோ, ஜோதி, செய்யது, ஜமாலன் சார், மோகன் குமார், ஸ்டார்ஜன், அக்பர், நர்சிம், தேனம்மை, யாத்ரா,முரளி என்று இன்னும் கூட வித விதமான குரல்வழி அடைந்த சிற்ப்பங்கள் உண்டு. அவர்கள் சம்மதம் தெரிவித்தால் தனி தனியாக பேச விருப்பம் இருக்கிறது. "போதும்டா. போர் அடிக்குது" என்றாலும் போதும்தான்.
இவர்களை எல்லாம் நேரில் பார்க்கிறது வரையில், இப்படியாக ஏதாவது ஒரு "என் மனிதர்களுடன்" மோதவிட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறேன். யானையை கொண்டு குதிரையை வெட்டியும், குதிரையை கொண்டு சிப்பாயை தட்டியுமாக...
இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெந்து தணியும் சவுதியின் இந்த தனிமைப் பாலையில் இந்த விளையாட்டும் கூட இல்லையெனில், வேறு என்ன செய்யட்டும் மக்கா?
புரை ஏறும் மனிதர்கள் - 1, 2, 3 , 4
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
49 comments:
hai nanthan first ..!!!
appada oru muraiyavathu siikairam vanthuten
thamila adikira porumaikuuda illai paaraa
ராஜா ராணி மாதிரி மட்டும் நெனைச்சுப்பிடாதீக மக்கா
ஏமாந்து போவீக ,...
தூரம் உங்க மனசுல ரொம்ப வர்ணங்களைக் கூட்டுது ...
நாங்களும் சரளைக்காட்டு ஜீவன்கதான் ...
அன்பின் பா.ரா
புரையேறும் மனிதர்களில் நான் கண்டதெல்லாம் அன்பை மட்டும்தான். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை இப்போது. நெகிழ்ச்சியாக உணர்கிறேன் அண்ணா.
மனம் லேசாகி.. ஓடை நீரில் கால்களை நனைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் வார்த்தைகள் பா.ரா.
சத்தமில்லாமல் நீங்கள் கோர்த்துக்கொண்டிருக்கின்ற மணிகளில் உறவுகளும், நட்புக்களும் வேறு வேறு நிறங்களாக இருந்தாலும்,கோர்க்கின்ற விதத்தில் ஒன்று போலவே எங்கள் கண்ணுக்கு தெரிகின்றது பா.ரா.
அருகருகே இருந்துகொண்டு இப்படியான நட்புக்கள் அருகே இல்லையே என ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் கந்தக பூமிக்காரர்களிடம் நானும் பேசியிருக்கிறேன்...
சலிக்கத்தான் மாட்டேனென்கிறது.
பொழுதும்..பேச்சும்.
அவரவர் அகங்காரங்களை விட்டு விலகி பொதுவான விஷயங்கள் குறித்து ஒரு மையப்புள்ளியில் இனைவது இத்தனை நாட்களில் இவர்களுடன் மட்டும்தான் சாத்தியமாகியிருக்கிறது.
உங்களின் வார்த்தைகள் வழி தங்களை ஒரு முறை கூச்சத்துடனே பார்த்துக்கொண்டு, இந்த அன்பினை தக்கவைத்துக்கொள்ள வேறென்ன செய்யலாம் என்பதுதானே அவர்களின் யோசனையாக இருக்ககூடும்...
தொடர்வதின் வழி நமக்கும் பொதுவான நண்பர்கள் குறித்த குரல் வழி ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ள மிகவும் ஆவலாகவே இருக்கின்றது பா.ரா.
இதில் போராவது ஒன்றாவது...
அருமை
வாழ்த்துகள்
ஆத்தீ.....
அன்பு பாரா,
நுங்கு தண்ணியில் விளைந்தது இந்த நட்பும், அன்பும். விளைந்தது எல்லாம் தித்திக்கிறது பாரா. எழுத்தில் ஆரம்பித்து, குரலில் வளர்கிறது ஒரு நிலாமுற்றத்தில் நிரம்பும் மெல்லிய ஒற்றை வயலின் இசை இரட்டை தந்திகளில் –
மெல்லிசு வெத்திலைகளை நரம்பு பிரித்து, தெக்கம் பாக்கு வைத்து, இதமான சுன்னாம்பு தடவி, பொடியாக மடித்து நறபுறவென்று மென்று, வழியும் உமிழ் நீரை புறங்கையால் துடைத்து, அரைத்ததை நுனி நாக்கில் நிறுத்தி எனக்குள் நிறைக்கும் ஒரு விதமான வர்ணக்கலவை உறவுகளில் நிறைகிறது மனசு...
இரட்டை நாயனங்கள் - குழைந்து பெருகும் புண்ணாகவராளி/ நாதநாமக்கிரியையில் எழுந்து ஆடுகிறது... சீறுகிறது, வளைந்து, நெளிந்து வால் ஊன்றி தலை நிமிர்த்துகிறது... பளபளக்கும் கண்களில் உலகமே படமாய் விரிகிறது... இரண்டுமே வேறுவேறு படங்கள் ஆனால் மாற்றி மாற்றி நம் எல்லோரையும் காட்டுகிறது... அனைத்து முத்தமிடுகிறது...உடலில், உணர்வுகளில் பின்னி இறுக்கி அணைக்கிறது... நாயனங்களில் உருகி ஓடும் நாதம் வழிந்து தரை தொட்டு உயர்கிறது விருட்சங்களாய் மனோரஞ்சிதங்கள்... உதிர்க்கும் பூவெல்லாம் நுகரப் பெருகும் பண்மடங்காய்... மூர்ச்சையாய் வீழ்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்னால்.
சங்கப்பலகை மாதிரி பேராசையுடன் விரியக் காத்திருக்கிறது இன்னும் வறண்டு துவளும் ஒரு பாலைப் பெருவெளி. உங்களால் முடியாது பாரா... அள்ளிப் பருகிவிட்டு இன்னும் அகத்திய தாகத்துடன் காத்திருக்கிறேன்...
கும்க்கி அவர்களுக்கு, பெரிசா எழுதறதுனால நான் கும்க்கி ஆயிட முடியாதுன்னு தெரியும் ஆனாலும் பாரா எழுதத்தூண்டறார் என்ன பன்றது...? எவ்வளவு அழகான பின்னூட்டம் உங்களுடையது தெரியுமா? எனக்கு கையும் மனசும் நடுங்கி ஒடுங்கிப் போகுது... இந்த வலை என்னெல்லாம் செய்யுதுன்னு நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கு, உலகம் சுருங்கிப்போனது கூட நல்லது தானே கும்க்கி...? ஒரு தற்செயலான விபத்தாய் ஆரம்பித்த என் கிறுக்கல்கள், (பறக்காவட்டித் தனம் தான் இதுல அதிகம்) இத்தனை பெரியவர்களை எனக்கு நட்பாய் கொடுத்திருக்குன்னா... என்ன அயோக்கியத்தனம் பண்ணியாவது இதை காப்பாத்திக்கிடனும்னு பலுவனம்மாக்கு வேண்டிக்கிடுதேன்...
பாலா, D.R. அசோக் மற்றும் எல்லோருக்கும் அன்பும், நன்றியும்.
அன்புடன்
ராகவன்
உங்களுடன் பேசுவதில் எனக்கும் மகிழ்வே பா. ரா; தங்களுக்கு செலவாகுமே என்ற கவலை மட்டுமே உங்களை நன்கு அறிந்ததால் வருகிறது. Skype என்ற ஒரு வசதி உள்ளது. அதன் மூலம் பேச முயலுங்கள். எனக்கும் அந்த வசதி உண்டு. இதில் பேசினால் செலவு அதிகமில்லை. கண்ணனிடம் கேட்டு பார்க்கவும்
பதிவு தான் நெகிழ வைக்கிறதென்றால்
கும்க்கி, ராகவன், இவர்கள் பின்னூட்டங்கள்..., மீண்டும் மீண்டும்
படிக்கத் தூண்டுகிறது.
இம்புட்டுச் சொகமா பேசித்திரியிற உங்களை ‘அண்ணே’ன்னு சொல்லிக்கிறேன். அது போதும்ண்ணே...மானிட்டர் வழியாக உங்கள் எழுத்துக்கள் என் தோளோடு கை போட்டுக் கதை பேசுவது பரம சுகம்....
பரணி...
ப்ரியமான ராஜாராம்
உன் பதிவு வழியாக அன்பு நிறைந்து ததும்பும் மனசு எங்கள் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது...
நான் இன்னொரு கவிதை பதிவு செய்திருக்கிறேன்.
deivastvm.blogspot.com
அன்பு நண்பருக்கு,
உங்களின் எழுத்துப் பிரவேகம் மிக அருமை. உங்கள் கவிதையில் கட்டுண்டு கிடக்கும் நான், உரைநடையிலும் இப்போது...
பிரபாகர்.
நிஜமாகவே உங்கள் வார்த்தைகளின் பிரயோகத்தில் புரை ஏறுகிறது..
என்னத்தைச் சொல்ல மக்கா? மனித நேயம் மிகுந்தவர் என்று தான் இற்றைவரை நினைத்திருந்தேன். மாமரத்துடன் கூட உங்களுக்கு இருக்கும் பரஸ்பர உறவைக் கண்டு வியந்து போய், உங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இத்தனை மனிதர்கள் உங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாமே!
அண்ணா என்னை மட்டும் ஒதுக்கிட்டீங்க !
பா ரா சார் உங்களில் ஒருவனாய் இருக்கும் போது பெருமையாக உள்ளது .
இதற்கு என்ன தவம் செய்தேனோ ...
/இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு./
எங்களுக்கும். ’பா.ரா’மலே படிக்க இம்புட்டு நேசம். குளு குளுன்னு தண்ணில உதற உதற நிக்கிறப்ப அடி வயத்துல இதமா பரவுமே ஒரு சூடு..ஹா. இப்படி எல்லாமே ஒரு ரசனையா இருக்கிறத நினைக்கிறப்ப பா.ரா. உங்களுக்கு புரை ஏறாதா:)
அருமையான பதிவு பா.ரா..
//கண்ணனிடம் கேட்டு பார்க்கவும்//
மறுபடியுமாஆ மோகன்குமார்???
அருமையான மனிதர்களை அருமையா பதிஞ்சிருக்கீங்க ராஜாராம்.
"பாலாவும் ஒரு பின்னூட்டம் உதிர்த்தார்""'
..
அதாவது மாம்ஸ் இந்த "ர்" தேவையா ???
அதாவது மாம்ஸ் இந்த "ன்" எதுக்கு இருக்கு? ??
அதாவது மாம்ஸ் இந்த " ர்" க்கும் "ன்" க்கும் நிறைய
தூர இடைவெளி ..
அதாவது மாம்ஸ் இந்த " டா " எதுக்கு இருக்கு ?
அதாவது மாம்ஸ்இந்த "ர்" போட்டதால இது இப்போ
black lable வித் வெஸ்டேர்ன் சைடு டிஷ்
அதாவது மாம்ஸ் இந்த "ன்" போட்டிருந்தா
கோல்கொண்டா வித் பூண்டு ஊறுகாய்
அதாவது மாம்ஸ் ரெண்டுமே சூப்பர் தான்
அந்த ரெண்டாவது தான் எனக்கு ரொம்ப புடிச்சது !!!!!
அதாவது மாம்ஸ்
அதாவது மாம்ஸ்
...
....
நன்றி சொல்லி நகர்ந்து போக விரும்பவில்லை
அதாவது மாம்ஸ் ஆமாம் நன்றி சொல்லனுமா என்ன ?????
அருமை
சூப்பர் பாஸ்
தொடருங்கள்
மிக அருமை பா.ரா , நீங்க இங்கயோ அல்லது நான் அங்கேயோ இல்லாம போயிட்டமேன்னு வருத்தமாயிருக்கு , நல்லவேளை இந்த எழுத்து மூலமாவது உங்களைப் பாத்துட்டு இருக்கேன் ...
கலக்குங்க பா.ரா !!
சித்தப்ஸு.... புள்ளைங்கல பெருமையா பேசறதே உங்களுக்கு வேலையா போச்சி... ம்ம்ம்..செய்ங்க :)
பாருங்க ஹேமா அத்தை அழுவுது. அதுக்கு ஒரு பிரியாணியும் ஒரு கிலுகிலுப்பையும் பார்சல் அனும்ச்சிறலாம்.
//பாலா, D.R. அசோக் மற்றும் எல்லோருக்கும் அன்பும், நன்றியும்.
அன்புடன்
ராகவன்//
அதே அன்பும் நன்றியுங்க :)
அன்புடன்
அஷோக்.D.R.
இப்படியான மனிதர்கள் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதற்கும் நீங்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றதற்கும் வாழ்த்துக்கள்.
//இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெந்து தணியும் சவுதியின் இந்த தனிமைப் பாலையில் இந்த விளையாட்டும் கூட இல்லையெனில், வேறு என்ன செய்யட்டும் மக்கா//
yengalukkum remba pidichchirukku rajaram sir...
kandippaaith thodarungal...
manitharkal theernthu povathillai..yennangalaip polave:)
manam niraintha makizhchiyudan anbin vaazhthukal rajaram sir:)
நீங்க ரொம்ப கொடுத்து வச்சவவங்க, இதுமாதிரியான மனிதர்களை பெற்றிருப்பதால். நானும் கொடுத்து வச்சவதான், மனிதர்களின் மனங்களை சம்பாதித்துள்ள உங்களை அண்ணனாக பெற்றிருப்பதால்.
உங்க ஒரு ஆளுக்கு புரை ஏறினதும் போதும், இப்ப ஊருக்கே புரை ஏறுது உங்க ஒரு ஆளால.
பக்கம் பக்கமா எழுதினாலும் என்னால முழு உணர்ச்சியை சந்தோசத்தை வெளிப்படுத்த முடியாது. அதனால நானும் நேசன் மாதிரியே “ஆத்தாடி என்னால முடியாது சாமி”ன்னு சொல்லி மூச்சு வாங்கிட்டி உக்காந்திறேன் மக்கா.
அழகிய எழுத்துக்களால் எங்களை கட்டிப் போட்டு விடுகிறீர்கள் பா.ரா. படிக்கும்போது நேரில் காண்பது போன்ற உணர்வு. தங்களை அறிந்தததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த முறை ஜித்தா பயணத்தில் நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
அருமையான இடுகை வாழ்த்துக்கள்.
நேரம்கிடைக்கும்போது இதையும் வந்துபாருங்கள்
http://fmalikka.blogspot.com/
//கால் தரை தட்டியது வரையிலான செங்கழனி நீரை இதோ இப்பவும் பார்க்க வாய்க்கிறது. கரை தூக்கிக் கொண்டு வந்த மாமாக்கள் இருவரும்,"வக்காளி என்னடா மாப்ள நீ?" என்றபடி சிரித்ததை இப்பவும் கேட்க்க வாய்க்கிறது.//
பா.ரா,
அசை போட வெச்சிட்டீங்க மக்கா.
(மக்கா-ன்னா இன்னாபா?)
இன்று சயங்காலம் ராகவன் அலைபேசியில் சொன்னார்.
மாதுவையும் என்னையும்புரையேறும் மனிதர்கள் வரிசையில்
வைத்திருந்ததாக.
முதலிலே பார்க்க முடிந்திருந்தால் அந்த சத்யா ஹோட்டலில்
இன்னும் கூடுதலாக ஒருமணிநேரம் பேசிக்கழிந்திருக்கும்.
எனக்கும் கூட இந்த
பொதுச்சோலி பல நல்ல நண்பர்களை அறியத்தந்திருக்கிறது.
அலையும் கூட இல்லையெனும் குறைதீர்த்த தமக்கைகளை தந்திருக்கிறது.
அதுபோலவே
எங்கள் அன்பு பாராவையும் தந்திருக்கிறது.
பாரா
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.
அண்ணா என்னை மட்டும் ஒதுக்கிட்டீங்க !
ஹேமா சொன்னதை வழிமொழிகிறேன்
விஜய்
அன்பின் ராகவன்.,
பா.ரா வின் பதிவில் நாமிருவரும் கொஞ்சம் பேசி மகிழ்வது அவருக்கு உவப்பையே தருமென்ற நம்பிக்கையில்,
பதிவுகளில் பவலான எனது பின்னூட்டங்களை கண்டிருப்பீர்கள்.
ஒவ்வொரு இடமும், மனமும் வேறு வேறான அனுபவங்களை தர வல்லதாகவே வாசிப்பு இருக்கிறது.
போலவே நட்புக்களும், அதற்கான உரிமையுடனான கருத்து தெரிவிப்புக்களும்.
எந்தக்குழுவிலும் சேராதிருப்பவர்களுக்கென்றே ஒரு குழு இருக்க கூடுமல்லவா..
சில நேரங்களில் ஒரு புன்னகையும், அல்லது அது கூட தோன்றாமலும் கடந்து போயிருப்போம்.
எல்லாமே ஒன்று போல ஆகிவிட்டால் நன்றாகத்தானிருக்கும்...
பா.ரா ஒரு அற்புதமான கண்ணாடி வைத்திருக்கிறார்...இருபக்க நிலைக்கண்ணாடி.
அந்தப்புறம் இருக்கும்.. அன்பும் வாசனையும் ஒன்றுபோல மனதில் தங்கிப்போன உறவுகளையும், இந்தப்பக்கம் சமகால இனைய நட்புக்களையும் நிற்கவைத்து ஒன்று போல நமக்கு காண்பிக்கையில்
ஏற்படும் அனுபவம்...
தவிரவும் அவரின் கவிதைகள் சொல்லும் சித்திரங்களும் ஒன்றுபோலவே அன்பைக்குறித்தே பேசி வருகின்றன..
இப்படியெல்லாம் உறவுகள் இல்லையே என்ற ஏக்கத்தின் கடந்துபோன காலங்கள் குறித்த சுவடுகளும், இப்போது பற்றிக்கொள்ள கிடைத்திருக்கும் நட்புக்களின் கரங்களை விடாப்பிடியாக பற்றிக்கொள்ளும் ஆசையும்தான் தொடர்ந்து வாசிக்கவும் பா.ரா மற்றும் ராகவன் போன்றவர்களை கொண்டாடவும் தூண்டிவிடுகிறது..
எழுதியும், பேசியும் தீராது போலிருக்கிறது...
அவரும் நீங்களும் முடித்துக்கொள்கிறீர்கள்.. மக்கா என்ற ஒரு வார்த்தையில்...எனக்குத்தான் இன்னமும் அர்த்தம் பிடிபடாமல் போய்க்கொண்டிருக்கிறது.
//அவர்கள் சம்மதம் தெரிவித்தால் தனி தனியாக பேச விருப்பம் இருக்கிறது. "போதும்டா. போர் அடிக்குது" என்றாலும் போதும்தான்.//
என்ன இப்படிச்சொல்லிட்டிங்க.
உங்களுக்கு இடைஞ்சலா இருக்க கூடாதுன்னுதான் அடிக்கடி போன் பண்ணலை. சொல்லிட்டிங்கல்ல இனி பண்ணிருவோம்.
அன்பின் பா.ரா. சார் நல்ல எழுத்தாளர்களை பார்க்கலாம் அதையும் தாண்டி நல்ல மனிதராக நான் உங்களை காண்கிறேன். எத்தனை புகழ் வந்தாலும் உங்களை மாற்ற முடியாது.
ண்ணே உங்களோட இந்தத் தொடரை நானும் உருகி உருகி வாசிப்பவன். உங்களுக்கு வாய்ச்சிருக்க இந்த மனசு இருக்கே, இதப்பத்தி நான் எவ்ளோ நாள் யோசிச்சி யார்யார் கிட்டயோ பேசி,,,,,, தொடர்ந்து எழுதுங்கணே, உங்களுக்கு புரையேற நானும் காரணமா இருக்கறேன்னு நினக்கறப்போ,,,,,,
இப்பல்லாம் எனக்கும் அடிக்கடி புரையேறுதுண்ணே
@தேனு
தேனு மக்கா,என்ன இப்படி? குடுகுடுன்னு ஓடியாந்து மகா கைய பிடிச்சது மாதிரி இருக்கு.கண்ணெல்லாம் கலங்கிருச்சு மக்கா...உங்களின் இந்த "நாங்களும் சரளைக் காட்டு ஜீவன்கள்தான்" என்பதில். ஏன்னு தெரியாம கலங்குமே அது போல.நன்றி தேனு!
@சரவனா
ரொம்ப நன்றி சரவனா.இன்று கேவிஆர்-ருடன் ரொம்ப நேரம் பேசிகொண்டிருந்தேன்.உங்கள்,அக்பர்,staarjan,அழை எண் கேட்டிருந்தார்.இந்த வேலை முடிஞ்சதும் அதை செய்யணும்.
@கும்க்கி & ராகவன்
பிறவி பயன் அடைந்தது போல் இருக்கு மக்கா.எனக்கு என் மாமரம் போல்,மனதின் சகல அடைப்பையும் நீக்கி மூச்சு விட்டுக் கொள்ளும் இடமாக இந்த நிழல் அமைந்திருப்பது.எதை விரும்பினேனோ அது கிடைத்த நிறைவு.எல்லோரையும் பேச வைத்து பார்த்து கொண்டே இருக்க வேணும் போல இருக்கு.பல நேரம் ஒன்றுமில்லாது போகிறேன்.சில நேரம் எல்லாமுமாக இருக்கிறேன்.ஒரு பெயர் தெரியாத குருவியாக பிறந்தது போல் இருக்கு.
பிறக்காத மண்புழு போலும் இருக்கு.இவ்வளவு ஒன்றுமில்லா தனத்தை இப்பவே உணர வாய்க்கிறது.நாம் எல்லோரும் பேசவும்,சிரிக்கவும்,அழவும்தான் இவ்விடம்.இதற்காகவே நான் அதிகம் பேசுவதும்."பேசுடா,பேசுடா"என கெஞ்சும் என் மாமரம் போல்..
ரொம்ப நன்றி என் கும்க்கி ராகவன்!
(என்னவோ மனசு நிறைஞ்சு வருது.இனி நாளை பேசலாம்.)
//உங்களுடன் பேசுவதில் எனக்கும் மகிழ்வே பா. ரா; தங்களுக்கு செலவாகுமே என்ற கவலை மட்டுமே உங்களை நன்கு அறிந்ததால் வருகிறது. Skype என்ற ஒரு வசதி உள்ளது. அதன் மூலம் பேச முயலுங்கள். எனக்கும் அந்த வசதி உண்டு. இதில் பேசினால் செலவு அதிகமில்லை. கண்ணனிடம் கேட்டு பார்க்கவும்//
மோகன் குமாரை அப்படியே வழிமொழிகிறேன், மகாப்பா புத்தாண்டு வாழ்த்துகள்
@தியா
நன்றி தியா!
@நேசா
ரொம்ப நன்றி மக்கா!
@மோகன்குமார்
நன்றி மக்கா.என்னிடம் skype உண்டு.i.d.rajaramb46.ஆனால் இங்கு பேசுவது என குறிப்பிட்டது,உங்களைப்பற்றி இந்த குரல்வழி சிற்ப்பங்களில் நான் பேசுவது குறித்து.அக்கறைக்கு அன்பு மோகன்.
@அம்பிகா
ஆம்,அம்பிகா.நான் இவர்கள் அன்பில் ஒன்றுமே இல்லாமல் போகிறேன்..நன்றி அம்பிகா!
@தமிழ்ப் பறவை
ரொம்ப நன்றி பரணி.நிறைவாய் இருக்கு.
@தெய்வா
நன்றிடா பயலே.பார்த்துட்டேன்.தொடர்ந்து எழுது.
@பிரபாகர்
ரொம்ப நன்றி ப்ரபா.ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க..
@வினோ
நன்றி வினோ மக்கா!
@ஜெஸ்
ஆம்,மக்கா!மிக்க நன்றி!
@ஹேமா
இன்னும் உன் குரல் கேட்கலையேடா.குரலைக் கொண்டு சேர்ந்த இடம்,பற்றி பேசுவதே இது.உன் மின் முகவரியோ அழை எண்ணோ இன்னும் எனக்கு தெரியலையே..சித்தப்பா கூட கேட்டார்.மின் முகவரி கேட்டு பின்னூட்டங்கள் போட்டேன் ஹேமா.. any way,இதை பார்த்தால் மின் முகவரி தெரியபடுத்து.மிக்க நன்றிடா பயலே.
@ staarjan
ரொம்ப நன்றி மக்கா!எனக்கும்தான் பெருமையாக இருக்கு.நீங்கல்லாம் கூட இருப்பது.
@வானம்பாடிகள் சார்
ரொம்ப நன்றி பாலா சார்.சந்தோசமாய் இருக்கு.
@கலகலப்ரியா
ரொம்ப நன்றி ப்ரியா!
@சுசி
ஹா..ஹா..உங்க குசும்பு போகலை பாருங்க!நன்றி சகா!
@பாலா
வாங்க "ர்" அண்ட் "ன்" கப்பல்ல "ஜி &பி-யா?"
அன்பு மாப்ஸ் & மாம்ஸ் இல்லையா?அதனால்தான் இந்த "ர்!"
நன்றியா?உதை ராஸ்கல்..
@டிவிஆர்
நன்றி டிவிஆர்!
@மண்குதிரை
நன்றி மண்குதிரை!
@ஜெனோ
சந்தோசம் ஜெனோ.மிக்க நன்றி மக்கா!
@அசோக்
ஹேமாவை இழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே?நன்றி மகன்ஸ்!
@அமித்தம்மா
சந்தோசம் அமித்தம்மா.மிக்க நன்றி!
@ரசிகை
சரி ரசிகை பேசலாம்.அது சரி..உங்கள் குரல் கேட்கணுமே?மின் முகவரி தெரியபடுத்துங்க ரசிகை.என் முகவரி.. rajaram.b.krishnan@gmail.com. நன்றி ரசிகை.
@கல்யாணி சுரேஷ்
ரொம்ப நன்றியும் அன்பும்டா கல்யாணி!
@நவாஸ்
ஹா..ஹா..நன்றி என் முதல் மனிதனே!
@சபிக்ஸ்
அடுத்து நீங்கதான் சபிக்ஸ்.கண்டிப்பா பார்க்கணும்.மிக்க நன்றி மக்கா!
@மலிக்கா
ரொம்ப நன்றிங்க மலிக்கா!இதோ வரேன்.
@சத்ரியன்
நன்றி மாப்ள!மக்கான்னா நீங்கதாப்பா..
@காமராஜ்
ஆகட்டும் காமராஜ்.சோலி எல்லாம் முடிச்சு வாங்க.மெதுவா பேசலாம்.மாதுவை காணாத குறைதான்.சோலியாகதான் இருக்கும் .வேறென்ன.. வரட்டும் பாவம்..மிக்க நன்றி காமராஜ்!
@விஜய்
ஹேமாவிற்கு சொன்னதுதான் உங்களுக்கும் விஜய்.மிக்க நன்றி மக்கா!
@akbar
ரொம்ப சந்தோசமும் நன்றியும் அக்பர்!
@யாத்ரா
இந்த "ண்ணே" தான் இன்னும் மனசுக்குள்ளயே இருக்கு யாத்ரா.என் குடும்பத்தில் பிறக்காத உங்களை,எப்படி என் குடும்பத்தில் பிறந்தீர்கள் என காட்டுகிறேன்..உங்களுக்காகவாவது இதை தொடரத்தான் வேணும்..நன்றி யாத்ரா!
@முரளி
புத்தாண்டு வாழ்த்துக்களும் முரளி.மிக்க நன்றி முரளி!
அழகு :-)
nadaifriendy means
amma kan kalanginarkal un kavithi nadayai parrthuvittu
@உழவர்
ரொம்ப நன்றி உழவரே.
@காளியப்பன் அண்ணன்
பொய்த்தனம்,fraud,என்று அர்த்தம் அண்ணே.பேச்சு வழக்குதான்.லாதா அடிக்கடி சொல்வாள்.ரொம்ப நன்றி காளியப்பன் அண்ணே.பெரியம்விற்கு என் அன்பை சொல்லுங்கள்.
பா.ரா!
அன்றே காமராஜ் சொன்னான். உடனே பார்க்க முடியவில்லை. அப்புறம் சென்னை எல்லாம் சென்று, இன்றுதான் பார்த்தேன்.
வாய் ஒயாமல் நண்பர்களை ‘மக்கா’ எனச் சொல்லியழைத்த என் பதின்மப் பருவத்தை எனக்குத் திருப்பித் தந்தவர் நீங்கள்.
குளிர்ந்த தண்ணீராக நிரம்பியிருக்கிறீர்கள். நாங்கள்தான் அதில் முங்கி, நீச்சலடித்துக் கிடப்பதாய் தெரிகிறது.பரவசத்தில், நேசத்தில் சொட்டச் சொட்ட நனைந்து கிடக்கிறோம். எவ்வளவு தூரத்தில், வெந்து தணியும் வெளியில் தாங்கள் இருந்தாலும் மனிதர்களை சட்டென்று தொடமுடிகிற தங்கள் குளிர்ந்த ஸ்பரிசம் அபூர்வமானது.
போதாது.... எதுவும் போதாது....
ரொம்ப நன்றி மாது.நிறைஞ்சு போச்சு!
உறவுகளோடு நட்பின் வலிமையைச் சொன்ன உங்கள் அன்பு மிகவும் வலியது.
Post a Comment