Wednesday, February 3, 2010

சிதறு தேங்காய்


(picture by cc license thanks mckaysavage)

ரட்டும் வாங்க.
இனிமேல் பிறக்கவா போறோம்?"
பேசிக் கொண்டு போகிறார்
ஒருவர் மற்றவரிடம்.

தையோ இழந்திருக்க வேணும்
யாரிடமோ.

ந்த யாரோ ஒருவர்
கூடப் பிறந்தவராகவும் இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.

தோற்றதை தேற்றும் பொருட்டு
தனக்கோ மற்றவருக்கோ
சொல்லிச் செல்பவராக இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.

ருவேளை எனக்குத்தான்
சொல்லித் தொலைத்தாரோ என்னவோ?

ன்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்?

53 comments:

ஸ்ரீராம். said...

"என்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்?"

ஹா...ஹா...

வாழ்க்கை அனுபவங்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

அந்த யாரோ ஒருவர்
கூடப் பிறந்தவராகவும் இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.
//

அஃதே தான்...!

முனைவர் இரா.குணசீலன் said...

என்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்?


மந்திர வார்த்தை..
மனதைத் தேற்றும் வார்த்தை..
வாழ்க்கையின் புரிதலில் தோன்றும் வார்த்தை!

அருமை நண்பரே..

மாதவராஜ் said...

உங்களைக் கடக்கும் வார்த்தைகளிலெல்லாம் ஓராயிரம் அர்த்தங்களை ஏற்றிவிடுகிறிர்கள்.

யாருக்கு சொன்னாலும் சட்டென உற்சாகம் பற்ற வைக்கும் வார்த்தை இது மக்கா!

எப்படியெல்லாம் படிக்க முடிகிறது!

சிநேகிதன் அக்பர் said...

அருமை பா ரா அண்ணா

சத்ரியன் said...

//தோற்றதை தேற்றும் பொருட்டு
தனக்கோ மற்றவருக்கோ
சொல்லிச் செல்பவராக இருக்கலாம். //

இருக்கலாம் மாம்ஸ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாவே போட்டு உடைக்கிறீங்க.. :)

கண்ணகி said...

நல்லாச் சொன்னீங்க...

சந்தனமுல்லை said...

சூப்பர்!

Vidhoosh said...

எழவும் பிறப்பும்... யப்பா... சூப்பர் ங்க அண்ணா...
--வித்யா

Rajan said...

சிதறடிக்கிறீர்கள் பா ரா !

சிவாஜி சங்கர் said...

யாருக்கு சொன்னாலும் சட்டென உற்சாகம் பற்ற வைக்கும் வார்த்தை இது மக்கா!

எப்படியெல்லாம் படிக்க முடிகிறது! :)

gulf-tamilan said...

நல்லா இருக்கு !!!

Deepa said...

மாது அங்கிள் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.
வாழ்க மக்கா நீங்கள்!

Ashok D said...

ஒன்னுமட்டும் சொல்லிட்டு போயிடறேன்... சரி வேண்டாவிடுங்க.. அதையும் கவிதையாக்கிடுவீங்க... ரொம்ப நல்லாயிருந்தது சித்தப்ஸ் :)

ஹேமா said...

பிறப்பு இல்லைத்தான்.ஆனாலும் அண்ணா நான் பிறக்கணும்.
இழந்தவைகளை மீட்டுக்கொள்ள.
அதில் உங்கள் தங்கையாகவும் கூட.

sathishsangkavi.blogspot.com said...

//என்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்?//

அருமை....

Radhakrishnan said...

அப்படியெல்லாம் எளிதாகச் சொல்லிவிட முடியாது, இனிமேல் பிறக்கவா போகிறோம் எனும் அசட்டுத்தனம் இருக்கவும் கூடாது, எதிலும் குருட்டுத் தைரியம் ஆகாது. இருப்பினும் உங்கள் கவிதையின் யதார்த்தம் கருவேழ நிழலில் ஒரு ரம்மியத்தைத் தந்துவிட்டு போகிறது மக்கா.

செ.சரவணக்குமார் said...

வரட்டும் வாங்க மக்கா.. ரொம்ப பிடிச்சிருக்குண்ணே.

Jerry Eshananda said...

உமது கவிதையை வாசிக்க வந்த வழிப்பிள்ளையார் நாங்கள் தானா?

vasu balaji said...

/எதையோ இழந்திருக்க வேணும்
யாரிடமோ. /

மனதை. உங்களிடம். :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பா ரா

VISA said...

arumai

ராமலக்ஷ்மி said...

//பிறக்கவா போறோம் இனிமேல்?//

அதானே:)? நல்லாயிருக்கு பா ரா!

அண்ணாமலையான் said...

கடேசி வரில எல்லாத்தையும் சொல்லிட்டீங்க....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

போட்டு உடைக்கிறேன் என்று தான் நிற்கிறீர்கள்.Super.

காமராஜ் said...

பிரமாதமான பின்னூட்டம் போட எண்ணி
காத்திருந்து சுதாரிக்கையில் கடைசிப்பஸ்ஸும்
போனாப்பல,மொதவண்டிலேயே
தொத்திக்கிட்டுப்போயிர்க்கலாம்.
ஜனங்கள் நிறைந்த இடம்,ஜனரஞ்சகமான திரள்.

போன இடுகையில் நிழற்படம் அம்மாவேவா ?
கொடுத்துவச்சிருக்கோம் பாரா.

உயிரோடை said...

அண்ணா எனக்கே தான் சொல்லி இருப்பாரு இந்த இடத்தில் ஒரு டிவிஸ்ட் இருக்கு.

வழக்கம் போல கவிதை நல்லா இருக்கு.

Thenammai Lakshmanan said...

/எதையோ இழந்திருக்க வேணும்
யாரிடமோ. /
இது அருமை மக்கா

நேசமித்ரன் said...

எல்லோரும் விதந்தோதும் இடத்தில் என்னமோ நான் மட்டும் குறை சொல்வது கூச்சமாக இருக்கிறது மக்கா

ஆனால் உங்களுக்கான நானாகவும் இருக்க வேண்டும் தானே கவிதைக்கான நானாக மட்டும் இல்லாமல்

இரண்டாவது இல்லாமலும் இருக்கலாம் துருத்திக் கொண்டிருக்கிறது மக்கா காரணம் முதல் இல்லாமலும் இருக்கலாமுக்கு
முந்தைய சொற்களின் ”சிக்” மற்றும் “கனம்” 2 வதில் தளர்வது போல் தோன்றுவதும் இருக்கலாம்

மற்றபடி உங்களின் கவிதையில் தூக்கி கொஞ்சும் பேத்தியின் அல்லது பேரனின் முகத்தில் அடிக்கும் வெது வெதுப்பு திரவத்திற்கு மகிழும் தகப்பனை பார்த்து நெகிழும் மகளின் புளகம்தான் மக்கா

பாலா said...

அடடா அடடா அருமை மாம்ஸ்

na.jothi said...

சிதறுகின்ற வார்த்தை
தொணிக்கிற வாகு
ஆற்றாமைகளை இறைக்கவோ
தேற்றவோ
அருமை அண்ணா

Ashok D said...

//பிறப்பு இல்லைத்தான்.ஆனாலும் அண்ணா நான் பிறக்கணும்.
இழந்தவைகளை மீட்டுக்கொள்ள.
அதில் உங்கள் தங்கையாகவும் கூட//
ஹேமா... அடுத்த ஜென்மத்திலும் எங்க உயிர வாங்க வந்துடுவீங்களா? சித்தப்ஸ் நாம பேசாமா.. செவ்வாய்க்கு போயிடலாம் ;))

kovai sathish said...

Nalla polappu...ithu...?!
nice poem...?!

அம்பிகா said...

\\ஒருவேளை எனக்குத்தான்
சொல்லித் தொலைத்தாரோ என்னவோ? \\

எல்லோருக்குமே இந்த தேறுதல் தேவைப்படுது.
அருமை

இன்றைய கவிதை said...

அருமை பா ரா

தேற்றலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ,பிறக்கவா போறோம் இனிமேல் என்று அறுதலையும் சேர்த்து

நன்றி பா ரா

ஜேகே

செந்தில் நாதன் Senthil Nathan said...

//என்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்? //

உண்மையான வார்த்தைகள்.

அ.மு.செய்யது said...

கவிதையைப் பற்றி புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இன்று அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.படக்கவிதை !!!

எங்க இருந்து எடுத்தீங்க..?? எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க.

அ.மு.செய்யது said...

//பிறக்கவா போறோம் இனிமேல்?"//

கவிதை என்ன புரிதலில் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனா எனக்கு வேற சில ( இக்கவிதைக்கு சம்பந்தமேயில்லாத ) நம்பிக்கைகள் புலப்பட்டன.

மறுஜென்மத்தில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு மட்டுமே தோன்றும் இப்படிப்பட்ட சிந்தனைகள்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்க்கை அனுபவங்கள்... நல்லா இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்? //

அதானே :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கலக்கல்.

அன்பேசிவம் said...

மகாப்பா!

எல்லோருக்கும் பொதுவாய் வானம்போல “என்ன எழவோ வாங்க.
பிறக்கவா போறோம் இனிமேல்?”

Unknown said...

அன்பு ராஜாவுக்கு
என்ன சொல்ல வர்தைகள்ளில் விளையாடுகிறாய் இவன் என் தம்பி என்று நெஞ்சை நி மிர்த்தி
சொல்லிகிறேன்
அன்புடன் காளியண்ணன்

Kumky said...

என்னமோ போங்க....

பா..ரா..

சொல்லியும் முடியல...

எழுதியும் தீரல...

அப்புறம் பேசியும்

அப்படித்தானிருக்கு....

ரெம்ப சங்கடமாகத்தானிருக்கு....கேட்க..

பேசாம எனக்கு ஏதாவது சொந்தமாகிடுங்களேன்...

ஏக்கமாயிருக்கு.

Toto said...

எரிச்ச‌லோடு செய்ய‌ப்ப‌ட்ட‌ ச‌மாதான‌ம் ரொம்ப‌ அழ‌கு.

-Toto
roughnot.blogspot.com

S.A. நவாஸுதீன் said...

பக்கத்துல யாராவது பேசிகிட்டு போனாக்கூட விட மாட்டீங்களா மக்கா.

ரொம்ப பிடிச்சிருக்கு.

பா.ராஜாராம் said...

@ஸ்ரீராம்
ரொம்ப நன்றி ஸ்ரீராம்!

@வசந்த்
ரொம்ப நன்றி வசந்த்!

@முனைவர்.இரா.குணசீலன்
ரொம்ப நன்றி குணா!

@மாதவன்
மிகுந்த நன்றி மாது!

@அக்பர்
மிக்க நன்றி மக்கா!

@சத்ரியன்
ரொம்ப நன்றி மாப்ள!

@முத்துலெட்சுமி
மிக்க நன்றிங்க முத்துலெட்சுமி!

@கண்ணகி
ரொம்ப நன்றி கண்ணகி!

@முல்லை
மிக்க நன்றி முல்லை!

@வித்யா
சரியாய் இடத்தை பிடிச்சீங்க வித்யா.நன்றி மக்கா!

@ராஜன்
ரொம்ப நன்றி ராஜன்!

@சிவாஜி
மிக்க நன்றி சிவாஜி மக்கா!

@gulf-tamilan
மிக்க நன்றிங்க!

@தீபா
ரொம்ப நன்றி தீபா!

@அசோக்
மிக்க நன்றி மகனே!

@ஹேமா
பிறந்துட்டா போகுது!வரட்டும் வா.. :-).நன்றிடா ஹேமா!

@sangkavi
ரொம்ப நன்றி பாஸ்!

@ராதா
ரொம்ப நன்றி ராதா!நெகிழ்வான பின்னூட்டம்.

@சரவனா
ஹா..ஹா..ஆகட்டும் மக்கா!ரொம்ப நன்றி சரவனா!

@ஜெரி
வாங்க ஜெரி.தொடர்வருகை ரொம்ப சந்தோசம்.மிக்க நன்றி மக்கா!

@டி.வி.ஆர்
ரொம்ப நன்றி டிவிஆர்!

@விசா
ரொம்ப நன்றிங்க!

@ராமலக்ஷ்மி
:-) ரொம்ப நன்றி சகா!

@அண்ணாமலை
மிக்க நன்றி வாத்யாரே!

@ஜெஸ்
ரொம்ப நன்றி ஜெஸ்!

@காமராஜ்
எப்ப வந்தா என்ன மக்கா.நீங்க வந்தா போதாதா?இல்லை காமு.இணையத்தில் எடுத்து இருக்கிறார்கள் கண்ணனும் நண்பரும்.அம்மாவை நேரில் பார்ப்போம்.சரியா?ரொம்ப நன்றி காமராஜ்!

@லாவண்யா
ரொம்ப நன்றிடா சகோ!

@தேனு
மிக்க நன்றி தேனு மக்கா!

@நேசா
சரியான அவதானிப்பு நேசா.உணர்கிறேன்.திருத்திக் கொள்கிறேன்.நீ சொல்லாமல் யாரு மக்கா சொல்வது?ரொம்ப நன்றி நேசா!

@பாலா
ரொம்ப நன்றி மாப்ள!தளம் வரணும்.வர்றேன்.

@ஜோதி
மிக்க நன்றி ஜோதி!இரண்டு மூன்று கவிதைகளாக காணோமே என தேடினேன்.வேலைப் பளுவா?

@அசோக்
//சித்தப்ஸ் நாம பேசாமா.. செவ்வாய்க்கு போயிடலாம் ;))//

அது என்ன "நாம?"பூனையை மடியில் கட்டிக்கிட்டா?
:-)
நான் மட்டும் போய்க்கிறேன்.நன்றி மகனே! :-))

@சதீஷ்
திட்டுறீங்களா வாழ்த்துறீங்களா சதீஷ்?திட்டி வாழ்த்துறீங்களா?வரட்டும் வாங்க சதீஷ். :-) மிக்க நன்றி மக்கா!

@அம்பிகா
ரொம்ப நன்றி அம்பிகா!

@இன்றைய கவிதைகள்
ரொம்ப நன்றி ஜேகே!

@செந்தில் நாதன்
ரொம்ப நன்றி செந்தி!

@செய்யது
எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது செய்யது இந்த படம்.லைவ்லியாக இருக்கு என நம் பசங்களுக்கு மெயில் பண்ணி இருந்தேன்.
இவர்கள் இருவரும் இன்னொரு இடத்தில் இருந்து கொண்டு கவிதை எழுதுகிறார்கள் செய்யது.ரசிக்கிறேன்..

//கவிதை என்ன புரிதலில் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனா எனக்கு வேற சில ( இக்கவிதைக்கு சம்பந்தமேயில்லாத ) நம்பிக்கைகள் புலப்பட்டன.//

இது இக்கவிதையின் பெரிய வெற்றி செய்யது.மிக்க நன்றி மக்கா!

@சே.குமார்
ரொம்ப நன்றி குமார்!

@அமித்தம்மா
வாங்க அமித்தம்மா.நீங்க இல்லாம ரெண்டு கையும் போன மாதிரி.. :-)
பொட்டி சரி பண்ணியாச்சா?சந்தோசம்.நன்றியும் அமித்தம்மா!

@ஸ்ரீ
ரொம்ப நன்றி சீயான்! :-)

@முரளி
ரொம்ப நன்றி முரளி! :-)

@காளியப்பன்
மனசு நிறைஞ்சு போச்சு காளியப்பன் அண்ணே.உங்கள் பின்னூட்டம் தமிழில் பார்த்ததுமே கண்கள் கலங்கிவிட்டது.உடன் அழைத்ததும் அதுக்கே.என்னிடம் வார்த்தைகள் மட்டுமே இருக்கு அண்ணே.வைத்து விளையாண்டு கொண்டிருக்கிறேன்.எங்கள் எல்லோரையும் தாங்குகிற வாழ்வை கொண்டிருக்கிறீர்கள் சித்தப்பாவும் நீங்களும்.இது பெரிய கிரியா ஊக்கி அண்ணே எனக்கு.அப்பாவையே பார்த்தது மாதிரி...

@கும்க்கி
தூரிகை எடுத்திருக்கிறேன்.வரைஞ்சுட்டு காட்டுறேன்.. இப்போதைக்கு இவ்வளவே. :-) நன்றி கும்க்கி!

@TOto
வாங்க வாங்க.என் ப்ரிய ஆதர்சனே..ரொம்ப நன்றி மக்கா!

@நவாஸ்
ரொம்ப நன்றி என் நவாஸ் மக்கா! :-)

rajasundararajan said...

பாலவனத்துல திரியற உடும்பு ஒடம்புல நெறைகம்மாக்கரெ வாடை பட்டது மாதிரி... பத்துப் பன்னிரண்டு வருசமா மறந்துபோயிருந்த என் கண்ணுல கண்ணீரெக் கொண்டார... உங்களது போல ஒரு உலகம் நிச்சயமா இருக்கு.

இருக்குதானே? இருக்கணும்.

ஒன்னு விடாம எல்லாப் பதிவுகளையும் வாசிச்சிட்டேன்: கேப்பைக் கருது கணக்கா அப்படியே திருமிச் சாப்பிடுற வாகு.

வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

@ராஜசுந்தரராஜன்
ஐயோ என் அண்ணா..

நீங்களா?

நீங்களேவா?

பிறவிப்பயன் இது எனக்கு!!!

பிடிமானம் கிடைக்காத சந்தோசம்

.நன்றி அண்ணே!

குட்டிப்பையா|Kutipaiya said...

காற்று வாக்கில் காதில் விழுகிற விஷயங்களில் கூட எவ்வளவோ அறிஞ்சுக்கலாம்’ல..என்னமா கொடுத்திருக்கீங்க....அருமையான வரிகள் பா.ரா..

anujanya said...

வாவ். ரொம்ப நல்லா இருக்கு ராஜா.

அனுஜன்யா

*இயற்கை ராஜி* said...

நல்லாயிருக்கு