Friday, February 12, 2010

நன்றி வாசு, சுகுணா, விகடன்!

சற்றேறக்குறைய பதினைந்து நாட்களுக்கு முன்பு அகநாழிகை வாசுவிடம் அழை பேசியபோது,"சுகுணாதிவாகர்" உங்கள் அழை எண் கேட்டார். கொடுத்துருக்கேன். ஆ.வி.யில் காதலர் தினத்திற்கு கவிதைகள் எழுதி அனுப்ப சொன்னார்" என்றார்.

சுகுணாவை தொடர்பு கொண்டேன். திங்கள் கிழமைக்குள் எழுதி அனுப்பி தாருங்கள் என்றார். அனுப்பி இருந்தேன். ஐந்து கவிதைகள் தேர்வு. மிகுந்த சந்தோசம். அதில் ஒரு கவிதை அட்டையிலும்.

காதல் குறித்து எழுத யாருக்குத்தான் விருப்பம் இருக்காது! மகள் கல்யாணத்திற்கு நிற்கிற காலத்திலும் காதல் குறித்து எழுத வாய்த்திருக்கிறது. அவ்வளவு உன்னதம் இந்த காதல்!

காதல் அங்கேயேதான் இருக்கிறது. போட்டது போட்டபடி, நாம்தான் நகர்ந்து விடுகிறோம். இல்லையா..?

மிகுந்த நன்றியும் அன்பும் வாசு,சுகுணா,விகடன்!

இனி பிரசுரமான கவிதைகள்.

அட்டையின் கவிதை...

நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை.

உள்ளே..

நீ நடந்த தடங்களின் அடியில் தான்
கிடக்கிறது நம் மணல்
மணல் என்றால் மணல்
மனசென்றால் மனசு!

ன்னல் வழியாக
பார்த்துக் கொண்டிருந்தாள்
காலைக் கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணிச் சத்தத்தை!

கொஞ்சூண்டு தான் இருந்தாள்
யாருக்கும் தர முடியாத
காதலாக இருந்தாள்!

காதலுக்கு அர்த்தம் கேட்டார்
கடவுள்
என்னைக் காட்டினேன்
காரணம் கேட்டார்
உன்னைக் காட்டினேன்.

72 comments:

சேவியர் said...

அசத்தல் :)

குட்டிப்பையா|Kutipaiya said...

nachchu - elamae super !!

Ashok D said...

சித்தப்ஸு அப்படியே என்னோட காதலையும் வாழ்த்திடுங்க... :)

நாளைக்கே காதல் கவிதை எழுத நானும் try பண்றேன் (என் ப்ளாகலதான்)

அம்பிகா said...

வாழ்த்துக்கள் பாரா.
கவிதைகள் அருமை.
1, 3
ரொம்ப பிடிச்சிருக்கு.
\\மகள் கல்யாணத்திற்கு நிற்கிற காலத்திலும் காதல் குறித்து எழுத வாய்த்திருக்கிறது.\\
இது ரொம்பவே பிடிச்சிருக்கு.

ராமலக்ஷ்மி said...

ஐந்தும் அருமை. வாழ்த்துக்கள் பா ரா!

விநாயக முருகன் said...

ஹலோ உங்க வயசு என்னங்க...?

தமிழ் அமுதன் said...

அசத்தல் தலைவா ...! வாழ்த்துக்கள்...!

விநாயக முருகன் said...

இதெல்லாம் நல்லதுக்கில்ல... சொல்லிட்டேன்...படிச்சேன்...

சுட்டுப்போட்டாலும் நமக்கெல்லாம் இப்படி உருகி, உருகி எழுதமுடியாது.
உங்க கவிதைக்கு அடு‌த்த பக்கம்தான் நம்ம கவிதை. தெற்றுப்பல்லுக்கு அடுத்து நிற்கும் சாதாரண பல் போல என் கவிதை தெரிகிறது.

இன்றைய கவிதை said...

பா ரா,

ஐந்தும் மிக அழகு, அருமை

//காதலுக்கு அர்த்தம் கேட்டார்
கடவுள்
என்னைக் காட்டினேன்
காரணம் கேட்டார்
உன்னைக் காட்டினேன்.//

மிகவும் பிடித்தது

நன்றி
ஜேகே

butterfly Surya said...

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் உடம்புக்கு தான் வயது. மனசுக்கு அல்ல என்பார் என் குரு ஓஷோ.


அருமை ராஜாராம்.

கடைசி கவிதை ரொம்ப பிடித்தது.

பத்மா said...

நா தான் முதல்ல பார்த்து வாழ்த்து சொன்னேன் ! தெரியுமா?

MJV said...

தலைவரே சும்மா பிரிக்கறீங்க.... வாழ்த்துக்கள். ஆம் இந்த காதலுக்குதான் எந்த தடையும் இருக்க முடிந்ததில்லை!!!!

ஈரோடு கதிர் said...

இனிமை

சந்தனமுல்லை said...

வாவ்!கலக்கல்! வாழ்த்துகள்! :-)

சுசி said...

//காதலுக்கு அர்த்தம் கேட்டார்
கடவுள்
என்னைக் காட்டினேன்
காரணம் கேட்டார்
உன்னைக் காட்டினேன்.//

இது ரொம்ப நல்லாருக்கு பா.ரா.

வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

இன்று காலையில் படித்தேன் விகடனில். வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

அத்தனையும் அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

na.jothi said...

மிக்க சந்தோசம் அண்ணா

Paleo God said...

மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறதுங்க.. :)) இது போல இன்னும் நிறைய சந்தோஷ தருனங்கள் வரணும்..:)) வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

அட !!!! கலக்கிட்டீங்க பாஸூ..!!! இதெல்லாம் நமக்கு சல்ப்பி மேட்டருன்று மாதிரி ஊதி தள்ளியிருக்கீங்க.!!

ஆனந்த விகடனுக்கு வாழ்த்துகள்..( நீங்கள் ஏற்கெனவே ஆ.வி.யில் எழுதியிருக்கிறீர்கள் தானே ?? )

பா.ராஜாராம் என்ற கவிஞன் உலகமுழுமையுள்ள தமிழர்களால் பேசப்படுவான்.

Rajan said...

Romba azhagaa irunthuchu sir!

vasu balaji said...

அம்மாடியோவ். பா.ரா.:)

Thenammai Lakshmanan said...

ஐந்தாவதுதான் மிக அழகு மக்கா..

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் எழுத்தாளர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி இன்னும் நிறைய வரவேண்டியிருக்குண்ணா

நேத்தே படிச்சுட்டேன் ஆனந்தவிகடன்ல...

வாழ்த்துகள்

:)))

Anonymous said...

அருமையா இருக்கு

நிலாமதி said...

அழகான் கவிதை........நெஞ்சை தொட்டு செல்கிறது வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அண்ணா உங்கள் காதலுக்கும் வாழ்த்துக்கள் ஐந்தாவது கவிதை நல்லாருக்கு.

அண்ணா அஷோக் காதலுக்கு வாழ்த்த முன் என்னை வாழ்த்துங்க.

நசரேயன் said...

நல்லா இருக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மிக்க மகிழ்ச்சி பா.ரா. எல்லாமே அருமை. காதலுக்கு வயசு கிடையாதே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் பாரா

சைவகொத்துப்பரோட்டா said...

//ஜன்னல் வழியாக
பார்த்துக் கொண்டிருந்தாள்
காலைக் கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணிச் சத்தத்தை!//

அழகு, வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

அகநாழிகை said...

வாழ்த்துகள் ராஜாராம். எனக்கெதுக்கு நன்றியெல்லாம், அப்புறம், கவிதைகள் பற்றி... உங்க கவிதைக்கு நான் ரசிகன். தனித்துவமானது உங்கள் கவிதைகள். ராஜாராமால் மட்டுமே அது முடியும். கவிதைக்கான பொருள்கள்தான் உங்கள் கவிதையின் சிறப்பு. போங்கய்யா, எத்தனை முறை பாராட்டுவது. சலிச்சுப் போகுது. இனி ஒரே வரி ‘பாரா‘ட்டுதான். அருமை பா.ரா.

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் பாரா.மிக்க மகிழ்ச்சி!!

மாதேவி said...

அருமை வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

விகடனுக்கு வாழ்த்து சொல்லதான் வந்தேன் செய்யது சொல்லிப்புட்டாரு

----------------

காலை கோலம்
சிந்திய சைக்கிள் மணி சத்தம்

----------------

மக்கா ஒருத்தரை பாரா-ட்டனும் எதுனா நல்ல மாதிரியா சொல்லி தாங்கேளேன் - ஒரே மாதிரியே சொல்லி சொல்லி ...

ராகவன் said...

அன்பு பாரா,

சீழ்த்தலை சாத்தனார் போல தலையில் பேனாவால் குத்திக்கொள்ள தோன்றுகிறது. ...த்தா கவிதையே வரமாட்டேன் என்கிறது... என்னத்துக்கு நானும் எழுதுறேன் பேர் பண்ணிக்கிட்டு இருக்கணும்னு தோணுது...

மறுபிறப்பு இருந்தா செத்துட்டு திரும்ப பிறந்து காதல் வயதை காதலுடன் கழிக்க தோன்றுகிறது... இந்த காதல் பாருங்க பாரா என்னென்னமோ செய்யுது... காதலினால் அறிவெய்தும் இங்கே... காதல் கவிதை பயிரை வளர்க்கும்... ஆனா களைகளுக்கும், பயிர்களுக்கும் வித்யாசம் இருக்கு தானே...

ஒவ்வொரு கவிதையா எடுத்து பேச ஆசையாத்தான் இருக்கு... ஆனா உங்க மேல இருக்கிற பொறாமையால நிறைய எழுத ஒரு சைத்தான் விட மாட்டேங்குது... ஆனந்த விகடனில் உங்கள் கவிதைகள் மாத்திரமே முத்தாய்ப்பாய் இருக்கும்னு நினைக்கிறேன்...

வினாயகமுருகன் போல தெத்துப்பல் அழகன் நீங்க... என்ன பாரா செய்யணும் யாரையாவது பிடிச்சு திரும்ப காதலிக்கவா அல்லது பேசாம கவிதை படிக்கிறதோட நிப்பாட்டிடவா... நமக்கு எழவு காதல் வாய்ச்சாலும் கவிதை வாய்க்கவே இல்லை... ஒருவிதமா உள்ளுக்குள்ள ஒரு வெறியோட இருக்கேன் பாரா... பாரா மாதிரி ஒரு கவிதையாவது... சாகறதுக்குள்ள எழுதிடணும்னு... ஜென்ம பரியந்தம் வரை முடியாதுன்னு தான் நினைக்கிறேன்... இயலாமை கொஞ்சம் அழுகையா கூட வருது...இட்டு நிரப்ப வேறு ஏதாவது செய்யலாம்னு இருக்கேன்... உங்களுக்கு சிற்பம் செய்ய வராது தானே... அப்ப சிற்பம் பழகுறேன்... இல்லேன்னா பங்கீ ஜம்ப் செய்றேன், இல்லேன்னா வயலின் கத்துக்குறேன், இல்லேன்னா குண்டான் நிறைய இட்லிய நிரப்பி சாம்பார் போட்டு பிசைஞ்சி 100 க்கு மேல திங்குறேன்... இதெல்லாம் உங்களால முடியாது தானே...ஹா ஹா ஹா... உங்கள விட தின்றதுல நான் பெரியாளு பாரா.

காதலுடன்
ராகவன்

சென்ஷி said...

சூப்பருண்ணே :)

கார்க்கிபவா said...

என்னுடையதும் வருகிறது பாஸ்..

ஆனா நாங்க யூத் என்பதால் யூத்ஃபுல் விகடனில் :))))

வாழ்த்துகள்

க.பாலாசி said...

அசத்தலுங்க...வாழ்த்துக்களும்....

Ganesan said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

அசத்திட்டீங்க பா.ரா. வாழ்த்துகள்.உங்களை விகடனில் வெளிக்கொணர முயற்சித்த சுகுணா திவாகருக்கும், பொன் வாசுதேவனுக்கும் உங்கள் சார்பாகவும் எங்களின் நன்றிகள்.

குடந்தை அன்புமணி said...

வயசு என்னங்க... வயசு... காதலிக்க... (கல்யாணமானவங்க உங்க மனைவியை காதலிங்கப்பா....)

செ.சரவணக்குமார் said...

ரொம்ப சந்தோஷம் பா.ரா அண்ணே.. கவிதைகள் வெகு அழகு.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் பா.ரா.

மணிஜி said...

வாழ்த்துக்கள் மக்கா !

SUFFIX said...

//கொஞ்சூண்டு தான் இருந்தாள்//

ஆகா அருமை...

Kumky said...

பா.ரா...

கவிதைகளின் வயசு தெரிகிறது.

இருந்துட்டு போகட்டும் விடுங்கள்..பா.ரா..

பார்க்க பயந்து, பேச பயந்து, பின்னால் ஒளிந்து சென்று., அப்புறம் அண்ணன் தம்பி குண்டான் வகையாறக்களிடம் தப்பி., பரிதாபப்பட்ட ஜீவன்களையே தூது அனுப்பி., அக்கா தங்கைகளிடம் அவளின் பெருமை பேசி.,வீறாப்பாக சண்டை போட்டு அடிவாங்கி அதையும் வீட்டில் மறைத்து அதற்கும் அடிவாங்கி.,படிப்பையும் காலங்களையும் கோட்டை விட்டு.,எல்லா நேரமும் நினைப்பாகவே தவித்து.,ஆதரவு படை திரட்டி உடனழைத்து திரிந்து...

இதெல்லாத்தையும் காலப்போக்கில் மேலிடத்தில் செல்போன்களும், கீழிடங்களில் காயின் போன்களும் முழுசாக முழுங்கி விட்டது பா.ரா..

எப்படியிருந்தாலும் காதலினை காதலிக்கும் உங்கள் கவிதை அற்புதம்..

Kumky said...

ராகவன் பாட்டுக்கு வருகிறார்.

பதிவை படிக்கிறார்.

பின்னூட்டங்களை படிக்கிறார்.

அப்புறம் யோசிக்காமல் ஒரு பாரா பின்னூட்டுகிறார்.

பதிவை படிப்பது போலவே பின்னூட்டத்தையும் திரும்ப திரும்ப படிக்க வேண்டியதாகிறது..

அதன் பின் எதையும் படிக்க வருவதில்லை பா.ரா.
அப்படியே இருந்துவிடலாம்தான்..

Senthilkumar said...

அருமையான கவிதைகள்
வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் பாரா.
கவிதைகள் அருமை.

அன்பேசிவம் said...

பதிவில் வந்து பதில் சொல்ல நேரமின்மையால் வியாழன்றே உங்களுக்கு அழைத்தேன், விகடனின் அட்டையில் உங்கள் பெயர் பார்த்ததும். இங்கே மணி மதியம் 3. உங்களுக்கு என் அழைப்பு வந்திருக்கிறதா?

வாழ்த்துகள் மகாப்பா. :-)

Unknown said...

அன்பு ராஜாவுக்கு
ஆனத்தவிகடன் அட்டையில் ப.ராஜாராம் இதற்க்குத்தான் ஆசைப்பட்டோம் பாலகுமாரா

Ashok D said...

/அண்ணா அஷோக் காதலுக்கு வாழ்த்த முன் என்னை வாழ்த்துங்க//
சித்தப்ஸ் இந்த ஹேமாவ வாழ்த்திட்டே என்ன வாழ்த்துங்க.. எல்லாத்தும் முன்னாடி வர்றேதே இந்த பாமாவுக்கு வேலையா போச்சு சரியான மு.கொ.

Toto said...

க‌விதைக‌ள் அழ‌கு. வாழ்த்துக்க‌ள் பா.ரா. ஸார்.

-Toto

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் மக்கா !

எப்பவும் பார்க்குற கோபுரம்தான்
கார்த்திகை அன்னைக்கு பார்க்கும்போது
எப்பவும் கிளி கொஞ்சிட்டு கோபுரமா பார்த்துட்டு ...

கண்ணு நிறைஞ்சுரும்தானே...!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

உங்க கவிதைய அச்சில பாக்குறதுக்காக விகடன் வாங்கிட்டு வந்தநென் மக்கா!

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள்...

மாதவராஜ் said...

:-))))))
வாழ்த்துக்கள்.

Unknown said...

கவிதை ஆக்கம் அருமை.
வாழ்த்துக்கள் பா.ரா.

+Ve Anthony Muthu said...

சூப்பருங்கண்ணா!

சிநேகிதன் அக்பர் said...

காதல் கவிதை

கவிதைக் காதல்.

சாந்தி மாரியப்பன் said...

இன்றுதான் விகடனில் படிக்கக்கிடைத்தது.

லேட்டா வந்தாலும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.

ஜெ.பாலா said...

மிக நல்ல அழுத்தமான வரிகள்..

Romeoboy said...

\\நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை//

புக் வாங்கி இந்த வரியா படிச்சி மனபாடம் செய்தேன் தலைவரே . சூப்பர் .

புலவன் புலிகேசி said...

நேற்று காதல் விகடனின் முகப்பில் உங்கள் கவிதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் நண்பரே

அண்ணாதுரை சிவசாமி said...

ஆனந்தவிகடன் அட்டைப்படத்தில் 'பா' வன்னாவைப் பார்த்து
ஒரு நிமிடம் நெஞ்சு அடைத்துக் கொண்டதுடா,ராஜா.

உயிரோடை said...

வாழ்த்துக‌ள் அண்ணா.

"உழவன்" "Uzhavan" said...

அருமை. வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

உங்கள் அணைவரின் பின்னூட்டங்களுக்கு மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

இரசிகை said...

enakku anantha vigadan remba pidikkum...:)

marubadiyum vaasiththaalum kavithaikal sugamaaiththaan irukkinrana rajaram ram sir... athu polaththaan kaathalum..:)