Wednesday, February 17, 2010

விளக்கில் விசும்பும் பூதம்


(picture by cc license thanks millicent_bystander )

ன்னிடமும்
ஒரு விளக்கு இருந்தது.

தேய்த்தால் போதும்.
பூதம் வரும்.
தேவைகளை செய்து தரும்.

ரொம்ப நாளான தேவை
ஒன்றிற்காக தேய்த்தேன்.

"முதலாளி"
என வந்தது.

தேய்த்துக் கொண்டே இருந்தேன்.

"முதலாளி"
"முதலாளி"
"முதலாளி"


57 comments:

ஜெனோவா said...

ஊருக்கு வாரிங்க போல ;-))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு மக்கா. தலைப்புதான் கவிதையே!

ஆடுமாடு said...

நல்லாருக்கு மக்களே!

வாழ்த்துகள்.

sathishsangkavi.blogspot.com said...

அழகான ஆழமான வரிகள்...

மணிஜி said...

பட்டணத்துக்கு பூதம் எப்ப வருது?

அகநாழிகை said...

சொல்லாத வரிகளில் கவிதை புலப்படுத்தும் உண்மை அதிகம். சீக்கிரம்விருப்பத்தை பூதம் நிறைவேற்ற வாழ்த்துகள்.

- பொன்.வாசுதேவன்

Rajan said...

எனக்கு புரியல! புத்தி சுவாதீனம் கொஞ்சம் கம்மி தலைவா !

அன்புடன் அருணா said...

எப்பவும் போல இல்லியே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆழமான வரிகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை பாரா சார் ..

பூதமே சொல்லிருச்சா ... அப்ப உங்களுக்கு என்றுமே வெற்றி தான் .

வாழ்த்துகள் பாரா சார் .

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்குங்க பா.ரா. - தலைப்புக்கு ஒரு special சபாஷ்

க.பாலாசி said...

//தேய்த்தால் போதும்.
பூதம் வரும்.//

//"முதலாளி"//

அர்த்தமுள்ள கவிதை....

Ashok D said...

சரிங்க முதலாளி :)

சித்தப்ஸ் கவிதை சிக்ஸர்..தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்

Chitra said...

விளக்கில் விசும்பும் பூதம்

........இந்த தலைப்புக்கே ஒரு "ஓ" போடலாம்.

உயிரோடை said...

த‌லைப்பே க‌விதை போல‌ இருக்கு அண்ணா.

சீக்கிர‌ம் தேவையெல்லாம் பூத‌ம் செய்ய‌ட்டும்.

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை அண்ணா.

Vidhoosh said...

ஊருக்கு வரும்போது அடுத்து வரக்கூடும் அந்த அஞ்சாவது பூதத்தை எனக்கு அன்பளிக்கவும்.

சிநேகிதன் அக்பர் said...

கவிதையின் உள்ளர்த்தம் புரியவில்லை.

ஒருவேலை வயசு பத்தாதோ. :)

iniyavan said...

தலைவரே,

நமக்கு கவிதை அவ்வளவு வராது.

எத்தனை தடவை படிச்சாலும் எனக்கு புரியலை.

அது முதலாளினு சொன்னதால திரும்ப திரும்ப தேய்ச்சீங்களா? இல்லை அதுதான் உங்கள் தேவையா?

அகல்விளக்கு said...

கவிதை அருமை....

தலைப்பும் படமும் சொல்லிவிடுகிறது அர்த்தத்தை

vasu balaji said...

:), கடன் வாங்கித் தேச்சா கவிதை எழுத வருமா பா.ரா.

Paleo God said...

welcome back..:)

Jerry Eshananda said...

தலைப்பில் அசந்து போனேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

பூதம் (கவிதை) நல்லா இருக்கு.

அப்துல்மாலிக் said...

முதலாளீகளின் ஆக்கிரமிப்பை சொல்ல வாறீயளா

ரோஸ்விக் said...

சித்தப்பு... நீங்கதான் அதுக்கு முதலாளி... கொடுக்க வேண்டியது கொடுங்க... இப்பவெல்லாம் பூதங்களும் "டார்ச்சர்" மட்டும் தான் கொடுக்கும்.... பாவம் அங்கயும் பொருளாதார பிரச்சனை போல.... :-))

ஒருவேளை, அந்த பூதம் உங்களுக்கு நல்ல முதாலாளியா கொடுத்திருந்தா... வேண்டிய அனைத்தையும் கொடுக்கிற முதலாளியா இருந்தா ரொம்ப சந்தோசம்...

ஹேமா said...

அண்ணா...நான் சொல்றதையும் கேட்டு பாருங்க பூதத்துக்கிட்ட !

rvelkannan said...

சொல்லாத வரிகளில் கவிதை புலப்படுத்தும் உண்மை அதிகம். சீக்கிரம்விருப்பத்தை பூதம் நிறைவேற்ற வாழ்த்துகள்.

- பொன்.வாசுதேவன்

அப்படியே நானும் .. பா. ரா

செ.சரவணக்குமார் said...

தலைப்பே கவிதையாக இருக்கிறது அண்ணா.
உங்கள் மொழி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சென்ற கவிதையைப் போலவே இதிலும் உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

பத்மா said...

நம்மால் மட்டுமே பூர்த்தி செய்ய இயலும் போல ! பூதத்தால் ஆகாதெனினும் .......

வெற்றி said...

கவிதை நல்லா இருக்கு..ஆனா கொஞ்சம் புரியல..அதனால் நான் இவ்வாறு விளங்கிக்கொண்டேன்..

பூதம் பெண்ணாகவும்,தேய்ப்பவன் ஆணாகவும்,பூதத்தின் சிணுங்கல்கள் 'முதலாளி முதலாளி முதலாளி' எனவும் :)))

அ.மு.செய்யது$ said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு...

நேரமிருப்பின் மின்னஞ்சல் செய்யவும்.

அம்பிகா said...

நானும் விளக்கை தேய்த்து, தேய்த்து பார்த்தேன். பூதம் வரவே இல்லை. சரி கவிதையாவது வருதான்னு பார்த்தால் அதுவும் வரல.

மதுரை சரவணன் said...

ITHUIKKU PEYAR SURANDAL MUTHALAALI.ARUMAI.

கமலேஷ் said...

இடைவேளை எல்லாம பூதத்தை போட்டு காச்சி எடுதுருகீங்க...தலைப்ப உத்து படிச்சிட்டு பிறகு கவிதை படிக்கும் போதுதான் வெளங்குது..அழகு...கவிதை...

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா என்னப்பத்தி உங்களுக்கே தெரியும் கவிதை,மனிதர்கள், அடிப்படை வாழ்க்கை விஷயம் கூட இன்னும் விளங்கல எல்லாத்தையும் ஈஸியா புரிஞ்சுகிடுற அளவுக்கு மூளை வளர்ச்சி இல்லாம படைக்கப்பட்டிருக்கேன்

இப்போ இந்த கவிதையும்

உங்களுக்கு முதலாளி பார்க்க கிடைத்தாரா இல்லை நீங்கள் முதலாளி ஆகிவிட்டீர்களா என்பதாக குழப்பமிருக்கிறது....

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு பா.ரா

iniyavan said...

அன்புள்ள பா ரா,

கவிதை என்னைப்போல சில நண்பர்களுக்கு புரியவில்லை எனும் பட்சத்தில் கவிதையை விளக்கி புரிய வைக்கக்கூடிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அதனால் எனக்கு புரியும் படி சொல்லுங்கள். இல்லை யாராவது புரிந்த நண்பர்கள் தயவு செய்து விளக்குங்கள்.

iniyavan said...

//ஒன்றிற்க்காக//

அப்படியே இந்த தவறையும் சரி செய்துவிடுங்கள்,

"ஒன்றிற்காக"

மாதவராஜ் said...

கவிதை சிறப்பு.
அம்பிகாவின் பின்னூட்டமும் அழகு.

இன்றைய கவிதை said...

நல்லா இருக்கு பா ரா

முதலாளின்னு வந்தது தேய்க்க தேய்க்க முதலாளி ,

தேய்ப்பவர் தான் முதலாளி அல்லவா!!
உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்

நன்றி பாரா

ராகவன் said...

அன்பு பாரா,

காவிரியை கமண்டலத்தில் அடக்க வாய்க்கிறது உங்களுக்கு அகத்தியன் மாதிரி. சிறிய விளக்கின் உராய்வில் பூதம் கொண்டு வர அதுவும் கைகட்டி, வாய்பொத்தி எஜமான விசுவாசத்துடன் இருப்பது, ஆச்சரியம். நமக்கு ஒரு எஜமானன் சிக்கிட்டாண்டா என்று சிரிக்குது பூதம்.

எனக்கு புகையில் இருந்து கிளம்பிய பூதம் உங்களுக்கு வாய்க்கின்ற கவிதையாய் இருக்கிறது, இட்ட பணிகளை செவ்வனே முடிக்கிறது, திரும்பவும் வந்து உங்கள் முன் கை கட்டி நிற்கிறது, அடுத்து என்ன என்பது போல. இது ஒரு குறியீட்டு கவிதை போல இருக்கிறது எனக்கு. மனங்களை உராய்வதை தவிர வேறு என்ன செய்கிறீர்கள் நீங்கள். பூதங்கள் நான் உரசி வந்தாலும், என் ஏவல் செய்யுமா என்பது கேள்வியே. செப்படி வித்தைக்காரன், வர வர மாஸ் ஹீரோவுக்கு வரும் டைட்டில் சாங் மாதிரி எழுதிவிடுகிறேன் பாரா, பின்னூட்டங்களுக்கு பதிலாய்.

அன்புடன்
ராகவன்

Anonymous said...

எனக்கு புரியலை அண்ணா.

இதைச் சொல்லவா வந்தன்னு கேட்கப்படாது....

ஸ்ரீராம். said...

விளக்கை தேய்ச்சதுனால "முதலாளி"ன்னுதா...."முதலாளி" னு சொன்னதால் திரும்பத் திரும்பத் தேய்த்தீர்களா? தாங்க முடியாம விசும்பி விட்டதா?

பா.ராஜாராம் said...

நண்பர்களுக்கு,

சில நேரம் இப்படி நிகழ்ந்து விடுகிறது.இந்த கவிதையை எழதி அனுப்பிய போதே கண்ணன் கேட்டான்,"என்ன சொல்ல வர்றே?"என்று.கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரமாக ச்சாட்டி பார்த்தேன்.திருப்தி படமால்,"தொலை"என போய் விட்டான்.

உலக்ஸ்,மற்றும் நண்பர்கள் சிலர் கவிதையை சரியாகத்தான் அணுகி இருக்கிறீர்கள்.இப்படியா?அப்படியா? என கேட்ட்கும் போது எனக்கும் கொலை பதட்டமாக இருக்கிறது.. :-)

என்றாலும் என் பார்வை இது..

முதலாளி என்கிற வார்த்தை எனக்கு புதுசாக இருக்கிறது.என்னை யாரும் அப்படி அழைக்காத சந்தோசம்.இதைவிட பூதத்திடம்
வேறு என்ன கேட்டு விடப் போகிறேன்..என்பதாக திருப்பி,திருப்பி தேய்க்கிறேன்.என்பதே மக்களே...

"சின்ன சின்ன வார்த்தைகள்.வாழ்வின் சந்தோசத்தை,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது" என்கிற knot கொஞ்சூண்டு உள்ளே இருப்பதாக என்னை திருப்தி படுத்திக் கொள்கிறேன்.

திருப்தி பட்டுக் கொள்ளட்டுமா?

any how,

கவிதைக்கு விளக்கம்?"விளங்குவியாடா நீ?" என்று சுந்தரா மாதிரி ஆட்கள் அடிக்க வருவார்கள்.

விடு சுந்தரா.கவிதையை விட மனிதர்களை,நண்பர்களை பிடிச்சிருக்கு. :-)

Rajan said...

//கவிதையை விட மனிதர்களை,நண்பர்களை பிடிச்சிருக்கு. :-)//

இது எங்களுக்கு ரொம்ப புடிச்சு இருக்கு தலைவா !

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதலாளி என்கிற வார்த்தை எனக்கு புதுசாக இருக்கிறது.என்னை யாரும் அப்படி அழைக்காத சந்தோசம்.இதைவிட பூதத்திடம்
வேறு என்ன கேட்டு விடப் போகிறேன்..என்பதாக திருப்பி,திருப்பி தேய்க்கிறேன்.என்பதே மக்களே... //


இப்படித்தான் நானும் புரிந்துகொண்டேன் ஆரம்பத்தில். இருப்பினும் இதுதான் சரியான புரிதலா என்பது தெரியாததால் புரியவில்லை என்று பின்னூட்டமிட தயக்கமாக இருந்தது. நல்லவேளை விளக்கம் வெளியிட்டீர்கள். :))))))

கே. பி. ஜனா... said...

கவிதையில் விசும்பும் உணர்வு! --கே.பி.ஜனா

கே. பி. ஜனா... said...

கொசுறு: அசத்தல்! --கே.பி.ஜனா

விநாயக முருகன் said...

முதலாளி

முதலாளி

முதலாளி

விநாயக முருகன் said...

நான் உங்கள் அடிமை (கவிதைகளுக்கு) அதான் உங்களை குஷிப்படுத்த மூன்று முறை சொல்லிப்பார்த்தேன்

Radhakrishnan said...

வித்தியாசமான கவிதையும், வேடிக்கையான எதிர்பார்ப்பும். அருமை பா.ரா.

Thenammai Lakshmanan said...

எனக்கு புரிஞ்சுருச்சு

தொழிலாளியாக இருந்தது போதும் முதலாளியாக வாருங்கள் மக்கா

எப்ப வர்றீங்க

Thenammai Lakshmanan said...

அட நான் பின்னூட்டமிடு விட்டு அனைத்து விமர்சனங்களையும் படித்தல் உங்க பதில் அதுவாதனிருக்கு மக்கா நல்ல புரிதல் எனக்கு உங்க எண்ணங்கலோடன்னு சந்தோஷப்பட்டுகுறேன் மக்கா அதுக்கு வினாயக முருகனின் பதிலும் அசத்தல் பிரியம் தோய உங்களை முதலாளின்னு அழைக்குறாரே உங்க ஏக்கம் தீர்ந்துச்சா மக்கா நாங்க எல்லாருமே சொல்லுறோம் எங்க(கவிதை) முதலாளி நீங்க....

Unknown said...

கவிதைக்கு விளக்கம் கொடுத்த உங்களை.......... இருங்க தொலைபேசில வச்சிக்கிறேன் கச்சேரியை :-)

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,

ஜெனோ,
சுந்தரா,
ஆடுமாடு,
சங்கவி,
மணிஜி,
வாசு,
ராஜன்,
அருணா டீச்சர்,
டி.வி.ஆர்,
Starjan,
நந்தா,
பாலாஜி,
அசோக்,
சித்ரா,
லாவண்யா,
அக்பர்,
வித்யா,
அக்பர்,
உலக்ஸ்,
அகல்விளக்கு,
பாலா சார்,
ஷங்கர்,
ஜெரி,
எஸ்.கே.பி,
அபுஅப்சர்,
ரோஷ்விக்,
ஹேமா,
வேல்கண்ணா,
சரவனா,
பத்மா,
வெற்றி சார்,
செய்யது,
அம்பிகா,
மதுரை சரவனா,
கமலேஷ்,
வசந்த்,
புலவர்,
உலக்ஸ்,
உலக்ஸ்,(நன்றி மக்கா.சரி பண்ணியாச்சு)
மாது,
இன்றைய கவிதைகள் மூவர்,
ராகவன்,
தமிழ்,
ஸ்ரீராம்,
ராஜன்,
அமித்தம்மா,
ஜனா+ஜனா,
விநாயகம்(கிர்ர்..)+வினயாகம்,
ராதா,
தேனு+தேனு,
கேவிஆர், :-)

எல்லோருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும் மக்காஸ்!

இரசிகை said...

m.. nallaayerukku muthalaali..:)