Friday, February 26, 2010

ரயிலோசையில் கிடுகிடுக்கும் வீடு


(picture by cc license thanks DariusLighting)

ட்டரைக்கு சேது எக்ஸ்பிரஸ்.

ட்லியோ தயிர் சாதமோ
கட்டிக் கொண்டிருப்பாள்
இவனுக்கும் குழந்தைகளுக்கும்.

வேலையெல்லாம் ஓஞ்சு
சற்று கட்டையை சாய்க்க
பேன் சுட்சு தட்டும் போது
மதியம் ரெண்டரை எனக் கூவும்
ராமேஸ்வரம் பாசஞ்சர்.

கொல்லம் எக்ஸ்பிரஸ் வந்தால்
அரை மணி நேரத்தில் இவன் வருவான்.

குழந்தைகள் தூங்கி
இவனும் இறங்கிப் படுக்கும் போது
போய்க் கொண்டிருக்கும்

ருவாடு வாசனை மணக்கும்
இவளுக்கும் பிடித்தமான
ரெண்டுமணி கூட்ஸ் வண்டி.

74 comments:

செந்தில் நாதன் Senthil Nathan said...

நான் தான் முதல் ஆளா? கவிதை சூப்பர் அப்பு....ஆனா உங்க லெவெலுக்கு இல்லையோ? ஏதோ குறையுறாப்புல இருக்கு...ஆனா என்னனு எனக்கு சொல்ல தெரியல....காப்பில உண்மையாவே சக்கரை இல்லையா, இல்ல முன்னாடி சாப்பிட்ட இனிப்பால சர்க்கரை நாக்குக்கு உரைக்க மாட்டேங்குதா? தெரியலயே..

அன்புடன் அருணா said...

ஒவ்வொரு வீட்டிலும் இதுபோல் அடையாளப் ப்டுத்தும் நேர நிகழ்வுகள் உண்டு!நல்லாருக்கு.

Chitra said...

கவிதை அருமை. நல்லா இருக்குங்க.

Unknown said...

நல்லா இருக்குங்க...,

*இயற்கை ராஜி* said...

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present paa.raa.

சைவகொத்துப்பரோட்டா said...

தண்டவாளத்தின் அருகாமை குடியிருப்பு கண் முண் வந்து சென்றது.

தேவன் மாயம் said...

நல்லா இருக்கு! இன்னும் செதுக்கி இருக்கலாம்!!

vasu balaji said...

என்னா வில்லத்தனம்:)))). சூப்பர்ப் பா.ரா.

Ramesh said...

ம்்ம்ம்்ம்் ஆகா நச்ச்்்்.. தொடருங்கள்
///வேலையெல்லாம் ஓஞ்சு
சற்று கட்டையை சாய்க்க
பேன் சுட்சு தட்டும் போது
மதியம் ரெண்டரை எனக் கூவும்
ராமேஸ்வரம் பாசஞ்சர்.///
நெகிழ்ச்சி...கடைசிவரியில் கழன்று விட்டேனா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாருக்கு பாரா சார்.

Ashok D said...

//குழந்தைகள் தூங்கி
இவனும் இறங்கிப் படுக்கும் போது
போய்க் கொண்டிருக்கும்

கருவாடு வாசனை மணக்கும்
இவளுக்கும் பிடித்தமான
ரெண்டுமணி கூட்ஸ் வண்டி//

புரிந்தது சித்தப்ஸ் :)

சிவாஜி சங்கர் said...

நல்லாயிருக்கு மாம்ஸ்..

க.பாலாசி said...

சாதாரண நிகழ்வு சுவைபட கவிதையாய்... அருமை....

Kumky said...

வார்த்தைகளின் வழி சித்திரங்களை மனசில் வரைவதில் உங்களுக்கு ஒப்பில்லை பா.ரா.

ரயில்களின் தடதடத்த ஓசைகளினூடே நேரப்பிசகின்றி ஒரே தாளலயத்தில் தனது கடமைகள் ஒரே அச்சில் செய்து வரவும்.,

காத்துக்கிடத்தலுக்கும் பின்பு ஆதுரமாய் சமைத்து போடவும் ஓய்வாக கொஞ்சம் சாயவும் எல்லா நேரங்களிலும் கடந்து செல்லும் ரயிலின் ஒலி மனதோடும் வாழ்வோடும் பின்னியிருக்கும் அழகு

ரயிலே இல்லாத ஊரிலிருந்தும் கூட..
மனதை தடதடக்க வைக்கிறது பா.ரா.

விநாயக முருகன் said...

அதெல்லாம் அப்ப... இப்பல்லாம் டி.வி.சீரியலை வச்சுதான் நேரத்தை கணக்கிட்டு வண்டியை ஓட்டுகிறோம்.

அண்ணாமலையான் said...

நெசம்தான்

ஈரோடு கதிர் said...

கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு பா.ரா

gulf-tamilan said...

/ரயிலே இல்லாத ஊரிலிருந்தும் கூட..
மனதை தடதடக்க வைக்கிறது/
நெசம்தான்!!!

க ரா said...

ரொம்ப நல்ல கவிதை.

பாலா said...

நல்லா இருக்கு மாம்ஸ்

சிநேகிதன் அக்பர் said...

ரயிலின் தடதட‌ப்பு மனதில் கேட்கிறது.

பதின்ம வயது தொடர்பதிவு போட்டுள்ளேன். வாருங்கள் அண்ணா.

மாதேவி said...

ரயிலின் ஓசை நன்று.

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லாயிருக்கு நண்பரே... ஆனால் தலைப்புக்கும் வரிகளுக்கும் உறவில்லாதது போல் தெரிகிறதே... உங்கள் வரிகள் அருமை.

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிங்க அருமை . வாழ்த்துக்கள் !

தமிழ் உதயம் said...

கவிதை மனதை தொட்டது.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

ஓய்விலலாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணின் வாழ்வை தொடுவதற்கு ஏதோ ஒர் கண்ணி இல்லாமல் தவிக்கிறது கவிதை. ஒரு வேளை அது கைகூடியிருந்தால் மனதில் சனலத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

சாந்தி மாரியப்பன் said...

கடிகாரத்தை தவிரவும் நேரம் காட்டுவதற்கு, பெண்களுக்கென்று இப்படி ஏதாவதொன்று இருக்கத்தான் செய்கிறது. அது ரயிலாகவோ,பக்கத்து தொழிற்சாலை சங்காகவோ, இல்லை, கரெக்ட்டான நேரத்துக்கு வரும் காக்காயாகவோ கூட இருக்கலாம்.

நல்லா இருக்கு அண்ணா.

விக்னேஷ்வரி said...

ஐ, நல்லாருக்கு.

மாதவராஜ் said...

ரொம்பவும் ரசித்தேன்.
கருவாடா..... மக்கா!
அசோக் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறார்.

புலவன் புலிகேசி said...

காலம் காட்டும் ரயில்...

ராகவன் said...

அன்பு பாரா,

ரயில் ஒரு பிள்ளத்தாச்சி பெண் மாதிரி ஒரு நேசமான மனுஷி, முன் தள்ளிய வயிறும், புஸ்புஸ்ஸென்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தரை அதிர நடக்கும் அவள் ரயில் மாதிரி.

எல்லோர் வாழ்க்கையிலும் இயைந்து ஓடும் ரயில் தண்டவாளங்கள், தூரத்தில் குலவி கலவியை ஒக்கும் என்று எப்போதோ படித்த கவிதை ஞாபகம் வருகிறது இதை படிக்கும் போது.

மனிதர்களும், உறவுகளும், காமமும், ரயிலும் தடதடத்து ஓடுகிறது பா.ரா. உங்கள் கவிதையில்.

”குழந்தைகள் தூங்கி
இவனும் இறங்கிப் படுக்கும் போது
போய்க் கொண்டிருக்கும்”

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு வரும் இந்த காதல், காமம் சுகமானது. பிள்ளைகளை பெற்று பெருத்த புட்டமும், பூசுனாப் போல பெருத்த சரீரமும் கலவிக்கு ஏதுவாய் கட்டிலையும், மெத்தையையும் கீழேயே கிடத்தி வைத்திருக்கும் போல. கொஞ்சம் பிசுக்கு, அலுப்பு, பொறுப்பு என்று மொத்தமாய் தாயானவளை அணைத்து படுப்பது தான் பாரதி பாடிய “ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி”ன்னு நினைக்கிறேன்.

அனுபவிக்கிறேன் பாரா... விரல் ஒழுக ஒழுக நக்கும் குச்சி ஐஸ் பொடியன் மாதிரி...

அன்புடன்
ராகவன்

கோமதி அரசு said...

கவிதை ,நல்லா இருக்கு பா.ரா.

ஹேமா said...

அண்ணா...கவிதைக்கு இதுதான்னு இல்லாம என்ன வேணும்ன்னாலும் கையில கிடைச்சா கவிதையாக்கிடுறீங்க.அருமையா இருக்கு.அண்ணா ஒரு மாசம் ஊருக்குப் போறேன்.உங்க கவிதைகளைத் தவற விடுவேன்.
வந்து பாக்கிறேன்.போய்ட்டு வரேன்.

Jerry Eshananda said...

உங்களிடம் படிக்கிறேன்...பா.ரா.[மனசு ....தட....தடக்கிறது.]

DREAMER said...

அருமையான கவிதை.

நல்லாயிருக்குங்க...

-
DREAMER

ஸ்ரீராம். said...

ரயிலின் போக்கில் நேரங்கள்...காலம் காட்டும் ரெயில் வண்டிகள்..

Thenammai Lakshmanan said...

ம்ம்ம் புரியுது எக்ஸ்ப்ரஸ் பாசஞ்சர் ஆகி கூட்ஸ் ஆகிருச்சு இருந்தாலும் ரயில் ஓசை அவளுக்கு பிடிச்சு இருக்கு போல

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை!

Romeoboy said...

சூப்பர் .. உங்க கவிதைகள் கொஞ்சம் ஈஸியா புரியுது. :)

ஜெனோவா said...

ஏழரை மணி பஸ்சு போயிருச்சு , அப்பாவ இன்னும் வரக்காணலியேன்னு அம்மா சொல்வது நியாபகம் வருகிறது பா.ரா . ;-)

அருமை .

இன்றைய கவிதை said...

ரயிலோர வாழ்வையே கவிதையாய்
தடதடக்க வைத்து விட்டீர்கள் பா ரா

நன்றி
ஜேகே

HVL said...

உங்கள் கவிதை அந்த மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது.
நன்றாக இருக்கிறது.

என் பக்கம் வந்து
கையொப்ப மிட்டதற்கு
நன்றி!

Anonymous said...

ரயிலோசையை பேசியது உங்கள் எழுத்தோசை...

நேசமித்ரன் said...

//இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு வரும் இந்த காதல், காமம் சுகமானது. பிள்ளைகளை பெற்று பெருத்த புட்டமும், பூசுனாப் போல //பெருத்த சரீரமும் கலவிக்கு ஏதுவாய் கட்டிலையும், மெத்தையையும் கீழேயே கிடத்தி வைத்திருக்கும் போல. கொஞ்சம் பிசுக்கு, அலுப்பு, பொறுப்பு என்று மொத்தமாய் தாயானவளை அணைத்து படுப்பது தான் பாரதி பாடிய “ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி”ன்னு நினைக்கிறேன்//

mmm ராகவன்

:)

பா.ரா.

significant writing !!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ராஜாராம்... இவனும் ‘இறங்கிப்...’ நுட்பமான பார்வை. பிடிச்சிருக்கு மக்கா.

நட்புடன் ஜமால் said...

கடைசி பாரா - பா.ரா

Nathanjagk said...

ரயில் ரயிலாக மட்டும் இருப்பதில்லை.
தாமதமான சேது எக்ஸ்பிரஸ், தடம்புரண்ட கொல்லம் எக்ஸ்பிரஸ், கருவாட்டை மறந்து வந்த கூட்ஸ்... எனும்​போது வீடு அமைதியாகி மனசு கிடுகிடுக்குமோ?
அபாராம்.. பாரா!

மறத்தமிழன் said...

பாரா,

மிக எளிமையான வரிகள்.

ஆழமான அர்த்தங்கள்..

அசத்தல்...

தொடருங்கள்....

வாசிக்க காத்திருக்கிறோம்.....

அன்புடன்,
மறத்தமிழன்.

சத்ரியன் said...

மாமா,

ரோட்டோர வாழ்வு. அதிலும் செயலும், நேரத்தையும் உணர்த்திய விதம் ரொம்ப புடிச்சிருக்கு.

இரசிகை said...

thadak..thadak,
thadak..thadak,
thadak..thadak...

:)

இரசிகை said...

thadak..thadak,
thadak..thadak,
thadak..thadak...

:)

ச.முத்துவேல் said...

ரொம்ப நல்லாருக்கு.

காமராஜ் said...

இழுத்து முகர்ந்து கொள்ளும்
சுகந்தம் ஊறிக்கிடக்கிறது
ஒவ்வொரு வார்த்தையிலும்.
கருவாடு,கம்புக்கூடு
சுகந்தக் கவிச்சையே .

யோவ் .
பாரா.
வாரும்..

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மிகுந்த நன்றியும் அன்பும் மக்காஸ்!

CS. Mohan Kumar said...

ரயில்களை வச்சி கவிதை எழுதினது நல்லாருக்கு

KUTTI said...

கவிதை சிறப்பாக உள்ளது .
THANKS FOR VISIT MY PAGE.

ரோஸ்விக் said...

//குழந்தைகள் தூங்கி
இவனும் இறங்கிப் படுக்கும் போது

இவளுக்கும் பிடித்தமான
ரெண்டுமணி கூட்ஸ் வண்டி. //

இங்க இருக்கு சித்தப்பு... மேட்டரு... :-)

அ.மு.செய்யது said...

எங்கள் ஊருக்கு போக சேது எக்ஸ்பிரஸ் தான்.சென்னையிலிருந்து மானாமதுரை வரை போய் அங்கிருந்து பஸ்ஸில் போக வேண்டும்.பதினைந்து வருடங்களுக்கு பிறகு,அடுத்த மாதம் சேது எக்ஸ்பிரஸில் பயணிக்கப்போகும் குதூகலத்தில் இருந்த எனக்கு,இக்கவிதை பாலை வார்த்தது.

முந்தைய‌ க‌விதையும் ப‌டித்து விட்டேன்.பேண்டீன் ஷாம்பு..!!! அதுவும் அருமை.

அய‌ராத‌ ஆணிக‌ள் கார‌ண‌மாக‌ முன்பு போல் வ‌லைப்ப‌க்க‌த்தில் இய‌ங்க‌ முடிய‌வில்லை.தாம‌த‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும்.அவ்வ‌ப்பொழுது வ‌ந்தாலும் உங்க‌ள் க‌விதைக‌ளை தேடிப்ப‌டிக்கும் போது ஏற்ப‌டும் ப‌ர‌வ‌ச‌ம்
சொல்லில் அட‌ங்காது.

Sakthidevi.I said...

simple and real words..
congrats..nice....

பின்னோக்கி said...

ரயிலை ஒட்டிய ஒரு வீட்டின் வாழ்க்கையை இவ்வளவு இயல்பான வரிகளில், உங்களால் மட்டுமே முடியும். முடிந்திருக்கிறது.

சேது எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் ரயில்களில் பயணம் செய்தது நியாபகத்துக்கு வருகிறது.

இரசிகை said...

ithu varai vaasikkaatha yella kavithaikalaiyum vaasiththu mudiththen rajaram sir...

yellaam azhagu...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

குழந்தைகள் தூங்கி
இவனும் இறங்கிப் படுக்கும் போது
போய்க் கொண்டிருக்கும்

கருவாடு வாசனை மணக்கும்
இவளுக்கும் பிடித்தமான
ரெண்டுமணி கூட்ஸ் வண்டி.

:)))

அழகு.
என்னமா வார்த்தைகளை கலைத்துப்போட்டு அடுக்கி அன்றாடங்களோடான விளையாட்டை ரசிக்கிறீர்கள்? :)

vidivelli said...

நல்லா இருக்குங்க...,

புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!!!

மெல்லினமே மெல்லினமே said...

unga kavitha suppero supper sir.

இரசிகை said...

rajaram sir-ku vanakkam.

ungalukku yen manamaarntha vaazhthukal-thagappanaayiruppathu ku kidaiththa vetrikku

:)

remba santhoshamum kooda.

aduththa kavithai innum podalaiyaa?

sari naan varren...:)

Thenammai Lakshmanan said...

மக்கா உங்களை ஒரு தொடர் எழுத அழைத்து இருக்கேன்...

வந்து என்னோட பதிவைப் பாருங்க

goma said...

பரவாயில்லையே,
ரயில்களெல்லாம் நேரத்துக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறதே.சந்தோஷம்

Kumky said...

அப்புறம்...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,

மோகன்,
மனோ,
ரோஷ்விக்,
செய்யது,
சத்யா,
பின்னோக்கி,
ரசிகை,
அமித்தம்மா,
விடிவெள்ளி,
மெல்லினம்,
ரசிகை,
தேனு,
கோமா,
கும்க்கி,

ரொம்ப நன்றி மக்கா!

cheena (சீனா) said...

அன்பின் பாரா

புகைவண்டிகளை - அவை ஏற்படுத்தும் இயல்பான நிகழ்வுகளை - கிராமப்புற மக்கலூக்கு சரியான நேரம் காட்டிகளாக பனி புரிவதனை - அழகான கவிதையில் வடித்தமை நன்று நன்று.

காலை எட்டரை - இரவு இரண்டு - ஓய்வில்லாத ஓட்டம் - அவளின் மகிழ்சியே தடை இல்லாத ஓட்டத்தில் தான் இருக்கிறது.

கருவாடு மணக்கும் இவளை ..... ஆகா ஆகா - காமமெனில் இது தான்.

பாரா இயல்பான நடை - சிந்தனை கற்பனை அருமை - கவைதி பிடித்திருக்கிறது

நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பாரா

ராகவன் எழுதி - நேச மித்ரன் அப்படியே மறுமொழியாக இட்டு - மாதவராஜூம் காமராஜூம் களித்து -எழுதிய மறுமொழிகள் - தேனம்மையின் வித்தியாசமான சிந்தனை - அத்தனையும் ரசித்தேன் பாரா

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

எஸ் சம்பத் said...

பின்னோக்கி அறிமுகப்படுத்தி ரயிலோசை கவிதை படிக்க வந்தால், கவிதை நடை சிறப்பு என்பதுடன் பின்னூட்டமிட இத்தனை ரசிகர்களா என்ற வியப்பும் மேலிட்டது - வாழ்த்துக்கள் - சம்பத்