Tuesday, March 16, 2010

புரை ஏறும் மனிதர்கள்-ஏழு

பொன்னுச்சாமி (எ) செல்லப்பா பெரியப்பா

"பெரியப்பா பயணம் சொல்லிக்கிற ஆரம்பிச்சிட்டார்டா. மூணு நாளாய் தண்ணி மட்டும்தான் இறங்குது. கனடாவில் இருந்து மதி, கண்ணனும், அமெரிக்காவில் இருந்து பிரசாத்தும் பேசிட்டான்கள். நீயும் பேசிரு. நல்லபடியா போய்ட்டு வாங்க பெரியப்பான்னு சொல்லிரு" என்று அண்ணாத்துரை சித்தப்பா அழை பேசினார்கள். போன் வரும்போது வேலையில் இருந்தேன். வேக வேகமாய் நடந்து கொண்டிருக்கும் போது, சட்டை நுனி, ஆணியிலோ தாழ்பாளிலோ மாட்டி விக் என சுண்டி நிற்போமே, அப்படி நின்றேன்.

போனில் தொடர்பு கொண்டேன்.மங்கை அக்கா எடுத்தார்கள்.

"பெரியப்பாவோட பேசனும்க்கா" என்றேன்.

"பெரியப்பா பேசுற கண்டிசன்ல இல்லைடா" என்றார்கள் மங்கை அக்கா. மூழ்கிக் கொண்டிருக்கிற அப்பாவை பார்த்துக் கொண்டிருக்கிற மகளின் குரல் அது.

"தெரியும்க்கா. சித்தப்பா சொன்னார். மொபைலை பெரியப்பா காதில் வைங்க. கொஞ்சம் பேசனும்க்கா"என்றேன்.

"பேசுடா"என்ற மங்கை அக்காவின் குரலுக்கு பிறகு ஒரு மௌனம் தட்டுப் பட்டது. நான் சந்தித்ததிலேயே ஆக கொடுமையான மௌனம் அது.

"பெரியப்பா..பெரியப்பா"என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். சும்மாவே இருந்தார் பெரியப்பா. பத்துப் பதினைந்து பெரியப்பாவிற்கு பிறகு என்ன பேசுவது என தெரியவில்லை. கண்கள் நிறைந்து வழிய தொடங்கியது...

வேறு வழி இன்றி..

"சமர்த்தா போய்ட்டு வாங்க பெரியப்பா" என்று திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டே இருந்தேன். "சரிடா ராஜா. தைரியமாய் இரு" என்று மங்கை அக்காவின் குரல் கேட்பது வரையில்.

பிறகு போன் வரும் போதெல்லாம் உசும்பி, உசும்பி விழித்துக் கொண்டிருந்தேன். மறு நாள் இரவு வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் மாப்ள சிவா அழைத்தான். விஷயம் கேள்விப் பட்டதும் சித்தப்பா குரல் கேட்கணும் போல் இருந்தது. அறை வந்து மீண்டும் சிவாவைக் கூப்பிட்டேன். "சித்தப்பாவுடன் பேசனும்டா" என்றேன். "அண்ணன் புறப்பட்டார்டா. ஒவ்வொருத்தராய் டாட்டா காமிக்கிறாங்க" என்று தழுதழுத்தார்.

தூர தேசத்தில் இருக்கான்கள். வார்த்தைகளில் பயமுறுத்த வேணாம் என இரண்டு கைகளில் விளக்கை பொத்தியபடி இருக்கும் எல்.ஐ.சி.லோகோ போல பாதுகாப்பாய் பேசினார் சித்தப்பா. ஆனாலும் சுடர் ஆடத்தான் செய்தது. அப்படியான பெரியப்பா இவர்.

அணிலின் கோடுகளைப் போன்ற அண்ணன் தம்பிகள்.

பெரியப்பா, அப்பா, சித்தப்பா மாதிரியான அண்ணன் தம்பிகளை என் வாழ் நாளில் சந்தித்தது இல்லை மக்கா.

அப்படி ஒரு புரிதலோடும்,பிரியத்தோடும் இருக்கிற அண்ணன் தம்பிகள்!"

அண்ணன் தம்பியாடா நீங்கள்லாம்? மாமன் மச்சினன் மாதிரி பேசி சிரிச்சிக்கிறீங்க"என்று ராக்காயி அம்மாயி மாதிரி மனுஷிகள் பேசி பார்த்திருக்கிறோம், குழந்தையாய் இருக்கிற நாங்கள்.

நிதானத்தை சட்டைப் பைக்குள் வைத்திருப்பது போல எப்பவும் அமர்த்தலாய் இருப்பார் பெரியப்பா. அப்பா சென்சிட்டிவ் எனில், சித்தப்பா ஆக சென்சிட்டிவ். எதுக்குடா இம்புட்டு உணர்ச்சி என்பது போல் சமனாய் இருப்பார் பெரியப்பா.

ஊண்டி கவனித்தோம் எனில் அணிலின் மேல் உள்ள மூன்று கோடுகளில் நடுக்கோடு போல இருப்பார் பெரியப்பா. மற்ற இரு கோடுகளுக்கு நெறுக்கமாகவும், தீர்க்கமாகவும்.

அவரின் எட்டு குட்டிகளை தூக்குகிற அதே தராசு கைகளில்தான் அப்பா, சித்தப்பா, அத்தைமார்களின் அத்தனை குட்டிகளையும் தூக்குவார். ஐந்து அத்தைமார்களில் இருவர் உள்ளூரிலேயே வாக்கப்பட்டிருந்தனர். புஸ்பமத்தைக்கு ஏழு. அம்சமத்தைக்கு நாலு குழந்தைகள். அப்பாவிற்கு அஞ்சு, சித்தப்பாவிற்கு மூணு. ரைஸ்மில் மாதிரியான வாணியங்குடி வீட்டில் நெல் மணிகளைப் போன்று குழந்தை குழந்தைகளாக குவிந்து கிடந்தோம்.

சாப்பாடு நேரத்தில் அவரவர் வீட்டிற்க்கு போக வேணும் என்பதெல்லாம் குழந்தைகளுக்கு தெரியுமா? எல்லோரும் ஒரே வீட்டில் அமர்வோம். சுடு கஞ்சியோ, வெண்ணிப் பழையதோ அள்ளி வைக்கிற பெரியம்மாவின் கைகளுக்கு பின்புறம் மறைந்திருக்கும் பெரியப்பாவின் மனசு.

பொக்லைன் மாதிரி முரட்டு கைகள் பெரியப்பாவுடையது. ஆழத்தில் இருந்து குழந்தைச் செடிகளை அதன் பிறந்த மண்ணோடு அள்ளுவார். உச்சி முகர்வார். பதியனிடுவார். மனசில் இருந்து நீளும் போது கைதானே மனசு.
வளர்ந்து பக்குவப்பட்ட காலங்களில், பெரியம்மாவும்,பெரியப்பாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்று அறிய நேர்ந்தது. சொந்தத்திற்குள்ளேயே காதலிப்பதில் ஒரு சௌக்கர்யம் இருக்கிறது என்பதை பெரியப்பாதான் எங்களுக்கெல்லாம் சொல்லித் தந்தாரோ என்னவோ...

இவ்வளவு பெரிய குடும்பத்தை தாங்கிய, காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும், குழந்தைகள் முன்பாக பேசிக் கொள்வது கூட சூசகமாய்த்தான் இருக்கும். அடுக்களைக்கு என வீட்டின் பின்புறம் உள்ள கூரை வீட்டிலோ, கொல்லையில் நின்ற புளிய மரத்தடியிலோ தள்ளி, தள்ளி நின்றபடி பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.

"ஒண்ணிஸ்பாய் ... ரெண்டிஸ்பாய்" என கத்தியபடி ஓடி வரும் எங்களை பார்த்ததும்,"வரும்போது கீரை கட்டு வாங்கிட்டு வாங்க"என்று பெரியம்மாவோ,"ஸ்ரீ ராம்ல நல்ல படம் போட்டுருக்கான்க காந்தி.பத்து ரூபா கொடு. படம் பார்த்துட்டு வர்றேன்"என்று பெரியப்பாவோ பேசி கேட்டிருக்கிறோம். தனியறை இல்லாத, தனிமை வாய்க்காத, குழந்தைகள் நிரம்பிய வீடொன்றில் எங்கு முக்குளித்து எங்களை எல்லாம் கண்டெடுத்தார்கள், இந்த பெரியப்பா, அப்பா, சித்தப்பா? என்று யோசிக்கையில் கண்ணும் மனசும் நிறைஞ்சு போகுது.

இப்படியான நிறைவோடையே இதை முடிக்கிறேன் பெரியப்பா...

பெரிய வாழ்வு வாழ்ந்திருக்கிறீர்கள்!

பத்ரமாய் போய்ட்டு வாங்க.

அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க...

55 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இப்படிப் புரையேற வைத்து விட்டீர்கள் பா.ரா. என்ன சொல்வதென்று தெரியவில்லை..

பாலா said...

நெகிழ வச்சுடீங்க மாமா
நேரம் இருப்பின் தொலைபேசுகிறேன்

காமராஜ் said...

இப்படியான மனிதர்களைப் பாக்கும்போதும் கேட்கும் போதும் மூக்கு நுனி கமறல் எடுக்கிறதே பாரா.இந்த எழுத்து எங்கிருந்து விளைந்ததெனத் தேடியலையவே வேண்டாம். அப்படியான உரம் ஏறிய வாழ்வனுபவம் பாரா உனக்கு. இனி நீ தான்.
எப்படியாவது உன்னை பார்க்கவேண்டும் என்கிற ஆசை மட்டும் தான் படபடக்கிறது பாரா.பதினைந்து ஆண்டுகள் கழித்து தூரத்தில் நின்று பார்த்த வண்ணநிலவன் போல,கவிஞன் அறிவுமதி போலவாவது நான் உன்னைப்பார்ப்பேன்.

Unknown said...

மிக நெகிழ்ச்சியான பதிவு. நமது காலத்தில் பெரியப்பா,சித்தப்பா,அத்தை,
மாமா என்று நிறைவான உறவுகளோடு
வாழ்ந்துவிட்டோம். இப்போதெல்லாம் ஒரே குழந்தையுடன் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்த உறவுகள் வசப்படுமா.
அன்புடன்
சந்துரு

புலவன் புலிகேசி said...

பா.ரா என்ன சொல்ல...

சைவகொத்துப்பரோட்டா said...

பாச உணர்வுகளை அழகாய் எழுத்துகளில் இறக்கி விட்டீர்கள்.

Anonymous said...

மனசு நெகிழ்ந்து போச்சு.

Chitra said...

கடைசி வரிகளில், எங்கள் கண்ணீர் அஞ்சலியும் சேர்ந்து கொள்கிறது.

'பரிவை' சே.குமார் said...

பா.ரா. என்ன சொல்வதென்று தெரியவில்லை...
நெகிழ்ச்சியான பதிவு

இரசிகை said...

vanthu vaasikkum valaip poo manitherkalaiyellaam sambaathikkum varaththaiyum ungal periyappaavirkku koduthuvitteerkal........

arputham rajaram sir...!

mownangaludan...,

rasigai.

இரசிகை said...

//பத்ரமாய் போய்ட்டு வாங்க.

அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க...//

:(

KAVITHAIYAAI ORU KANEERTHTHULI!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:(((

குலவுசனப்பிரியன் said...

//பெரிய வாழ்வு வாழ்ந்திருக்கிறீர்கள்!//
இந்நேரத்தில் அவர்களின் பெருமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறென்ன செய்ய முடியும்?

அன்னார் ஆத்மா சாந்தி அடையட்டும்.

தேவன் மாயம் said...

வாழ்க்கையென்ற ஒன்றை நாம் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அமைதியாக உணர்த்தியுள்ளீர்கள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகு .. உங்கள் வார்த்தைகளால் நிறைவான வாழ்வினை வாழ்ந்து போனவர்களை படிக்கும்போது அதற்கு பின்னூட்டம் போட என்ன வார்த்தைகளப் போடலாம்ன்னு தெரியாம போடாமலே சில நேரம் ஓடிப்போயிருரோம்.. :)

Paleo God said...

வாழ்வின் நொடிகளை பூரணமாய் அனுபவித்தால் மட்டுமே இப்படி அதை பகிர முடியும் அண்ணே..:(

ஈரோடு கதிர் said...

மிக நெகிழ்ச்சியான வழியனுப்பு

மணிஜி said...

நெகிழ்ச்சி...

taaru said...

தொண்டை கரகரத்து விட்டது பா.ரா.அய்யா.... ஆழமான வார்த்தைகள்... சத்தியமா இன்னும் மீளல...

Balakumar Vijayaraman said...

பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.

vasu balaji said...

வாழ்ந்தா இப்படி வாழணும்யா. :((

Ashok D said...

படித்துமுடிக்கையில் இரு கண்களிலும் கண்ணீர்துளிகள் எட்டி பார்த்தன.. நாசுக்காய் துடைக்கவேண்டியிருக்கிறது.. அலுவலகம்... நீங்கள் கொடுத்துவைத்தவர் என்பது மட்டும் புரிகிறது.. இந்த பேரன்பும் பெரியப்பா விதைச்சது என்று புரிகிறது... அதனால் தான் ஆலமரமாய் பல விழுதுகள் தாங்கி கிளைபரப்பி நிற்கிறீர்கள்.

கருவேல நிழல் அல்ல நீங்கள் ஆலமர நிழல் :)

கிளைகள் விழுதுகள் நாங்கள்

rajasundararajan said...

ரெம்ப நாளாப் பதிவெக் காணோமேன்னு கவலைப் பட்டேன். புரியுது. வாழ்க்கைதானுங்க உச்சம்; எழுத்து அதோட நிழல். பாவைக் கூத்தோட திரைநிழல் போல உங்க எழுத்து - மகா காவியங்களையும் புரியத் தந்திறுது!

ஜெனோவா said...

என்னத்த சொல்றதுன்னு தெரியல மக்கா.. ;-(
நெகிழ்ச்சி

VijayaRaj J.P said...

நெகிழ்ச்சி..நெகிழ்ச்சி..

மனதை உருக்கும் நெகிழ்ச்சி.

கண்களை கசிய வைக்கும் பதிவு

அமிர்தவர்ஷினி அம்மா said...

பத்ரமாய் போய்ட்டு வாங்க.


அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க...

கண்கலங்கிவிட்டது பா.ரா.

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

நேசமித்ரன் said...

பத்ரமாய் போய்ட்டு வாங்க.


அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க...

**************************

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.வழமை போல.

க.பாலாசி said...

சில உறவுகள் இப்படித்தான் நெகிழ்வினைத்தரும்....

க ரா said...

உங்கள் எழுத்தீன் மூலம் எங்கள் கண்களை கலங்க செய்து விட்டீர்கள்.
நெகிழ்ச்கியான பதிவு.

Unknown said...

நெகிழ்ச்சியான இடுகை

mathiyalagan said...

Anna...Nanba...,
Padithavudan pesanum pool ullathu...will call you...

Mathi

பத்மா said...

கடந்த நாள் நினைவுகளை எல்லாம் உசுப்பி விட்டது. வேறென்ன சொல்ல .எப்போதும் எல்லாருக்கும் எதையும் தாங்கும் மனசு தேவையாய்தான் இருக்கிறது

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

என்ன எழுத்து நடை இது.கண்கள் வழிய,மனம் உருக்கும் பா.ரா நடையா?

கலகலப்ரியா said...

negizhvu...

பனித்துளி சங்கர் said...

தலைப்பில் சொன்னதுபோலவே செய்துவிட்டீர்களே . அருமயான பதிவு .நேர்த்தியான எழுத்து நடை . வாழ்த்துக்கள் !

அன்புடன் அருணா said...

வார்த்தைகளை இப்படியுமா விதை போல் ஊன்ற முடியும் என்னும் வியப்பு ஒவ்வொரு தடவையும் ஏற்படுகிறது. மனம் கனிந்தது.

Thenammai Lakshmanan said...

ரைஸ்மில் மாதிரியான வாணியங்குடி வீட்டில் நெல் மணிகளைப் போன்று குழந்தை குழந்தைகளாக குவிந்து கிடந்தோம்.//

என்னையா மக்கா எங்களை எல்லாம் அழ அடிகதுக்குன்னே வந்து கிடக்கியா இப்படி எழுதிக்கிட்டு .. தாள முடியல வருத்தம்

ராகவன் said...

அன்பு பாரா,

இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்... கொண்டாடுவதற்கு. அடுக்குபானைக்குள் ஒளித்துவைத்த பணியாரங்கள் பெருகிக் கொண்டே இருக்கிறது பாரா...

எல்லோரையும் மயிலிறகில் வருடுவது போன்ற புரை ஏறும் மனிதர்கள் ஒரு சுககூச்சம் பாரா... மெய்மறந்து ஒரு வெட்கம் கலந்த சுகத்துடன் திரும்பி திரும்பி மனசைக்காட்டிக் கொண்டிருக்கத் தோன்றுகிறது.

உலகத்தையே கட்டி நேசிக்கும் காதல் உங்களுடையது... ஒரு அதிகாலையில் முதலில் தொடும் ஒரு வாடைக்காற்றாய் சிலிர்க்க வைக்கிறது... பாரா...

அன்புடன்
ராகவன்

இரவுப்பறவை said...

அவர்களின் வாழ்க்கை உங்களின் வார்த்தைகளில்... நல்லா இருக்குங்க...

பா.ராஜாராம் said...

நன்றி ஜெஸ்!

நன்றி மாப்ள!

நன்றி காமு!

நன்றி சந்துரு!

நன்றி புலவரே!

நன்றி எஸ்.கே.பி!

நன்றி C.A!

நன்றி குமார்!

நன்றி ரசிகை,ரசிகை!

நன்றி டி.வி.ஆர் சார்!

நன்றி குலவுசனப்ரியன்!

நன்றி தேவன் சார்!

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி ஷங்கர்!

நன்றி கதிர்!

நன்றி மணிஜி!

நன்றி பெ.ப.ஐயனார்!

நன்றி பாலகுமார்!

நன்றி பாலா சார்!

நன்றி மகனே!

நன்றி ராஜசுந்தரராஜண்ணே!. .."படிச்சுட்டு வெங்காய கடை வச்சிருக்கோமேன்னு யோசிக்க கூடாதுடா.
எதை செஞ்சாலும் மனசில் இருந்து செய்" என்று பெரியப்பா பேசியது போல இருந்ததுண்ணே.உங்கள் தேடல், உச்சி முகரல்.பதியனிடுதல்...விலை மதிப்பற்ற பொக்லைன் கைக்கு முத்தம்ண்ணே.கண்ணீரும்..

நன்றி ஜெனோ!

நன்றி வி.ஜே.பி!

நன்றி அமித்தம்மா!

நன்றி மெஹர்!மெயில் வரலை.வந்தால் பதில் கண்டிப்பா அனுப்புகிறேன்.

நன்றி நேசா!

நன்றி ஸ்ரீ!

நன்றி பாலாஜி!

நன்றி இராமசாமி கண்ணன்!

நன்றி ராஜா!

மதி,நன்றிடா!

நன்றி பத்மா!

நன்றி சாந்தி!

நன்றி ப்ரியா!

நன்றி ப.து.சங்கர்!வாங்க மக்கா.

நன்றி அருணா டீச்சர்!

நன்றி தேனு!

நன்றி ராகவன்!

நன்றி இரவுப்பறவை!

கோமதி அரசு said...

நெகிழ வைத்த பதிவு.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்,பொன்னுச்சாமி (எ) செல்லப்பா பெரியப்பா.

என் முத்துபொன்னு சித்தாப்பாவையையும்,என் அப்பா செல்லப்பாவையையும் நினைவு படுத்தும் பதிவு.

க்ண்ணில் நீர் மறைக்கிறது. எழுத முடியவில்லை.

சிநேகிதன் அக்பர் said...

நெகிழ்ச்சியான இடுகை அண்ணா.

☼ வெயிலான் said...

வாழ்வை, மனிதர்களை வார்த்தைகளிலேற்றுகிறீர்கள்.

முத்துலட்சுமி சொன்னது போல், பல நேரங்களில் நானும் பின்னூட்டமிட வார்த்தைகளின்றி........

ரிஷபன் said...

பிரிவின் வலி மீறி பிரியமும் கலந்த பதிவு..

அம்பிகா said...

ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக பாராட்டலாம். தேடி தேடி கோர்த்தது போல்.
மிக நெகிழ்ச்சியான பதிவு.
கடைசியில் கலங்க வைத்து விட்டீர்கள் பாரா.

vidivelli said...

வார்த்தைகளே வர மறுக்கிறது....
நன்று...

பா.ராஜாராம் said...

நன்றிங்க கோமதி அரசு!

நன்றி அக்பர்!

நன்றி வெயிலான்!

நன்றி ரிஷபன்!

நன்றி ப.து.சங்கர்!

நன்றி அம்பிகா!

நன்றி விடிவெள்ளி!

Unknown said...

"மனசில் இருந்து நீளும் போது கைதானே மனசு"

wonderful words...........

ஸ்ரீராம். said...

இயற்கையை மீறமுடியாத புரிதல் உணர்வுள்ள பாசமான வழியனுப்புதல். நெகிழ்ச்சியாய் இருந்தது.

அண்ணாதுரை சிவசாமி said...

என்ன சொல்றதுன்னே தெரியலேடா ராஜா!திரும்ப ஒருமுறை குமுறிக் குமுறி அழ வச்சுட்டியேடா மகனே!

'பரிவை' சே.குமார் said...

எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.

பா.ராஜாராம் said...

நன்றி ra!

நன்றி ஸ்ரீராம்!

சித்தப்பா,

நீங்கள் தந்ததுதான் யாவும்.நண்பர்கள் சொல்வது போல் இயற்கையை மீற இயலா.அழுது,உதறி ஆக வேண்டியதை பார்ப்போம்.மனிதர்களாய் இருந்த அப்பாக்கள் கடவுளாகி நிற்கிறார்கள்!இது,கூடுதல் support தானே நமக்கு!வேறு என்ன வேணும் அப்பா?

நன்றி குமார்!

இப்னு ஹம்துன் said...

இன்றைக்குத்தான் படித்தேன். கிராமத்தின் வெள்ளந்தியான அன்பு அப்பிக் கிடக்கிறது உங்கள் எழுத்துகளில்.

கருவேல நிழலில் இளைப்பாற கொடுத்து வைத்திருக்கணும் மக்கா!