
(Picture by cc licence, Thanks Madaboutasia )
அவரை எனக்குத் தெரியும்
உங்களுக்கும் தெரியும்
யாருக்குமே தெரியும் அவரை
அவருக்குத்தான் தெரியாது
நமக்கெல்லாம் அவரைத் தெரிகிறதென
அவர் யார்?
என என என
விடுகதை விடுகிறாள் மகள்.
எனக்கு விடை தெரிகிறது என்பது
ஒரு சந்தோசம்.
அதை விட சந்தோசம்
என் என் என் மகளை
எனக்குத் தெரிகிறது என்பது.
நன்றி பண்புடன்















