Wednesday, April 14, 2010

ப்ளஸ்-ஒன்


(Picture by cc license Thanks neoliminal )

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்

சொன்ன காரணத்தை

தெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

ப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.

-ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி
சுகுணா, விகடன்!

68 comments:

க ரா said...

ம்ம். அருமை பா.ரா. சார்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னமோ சொல்லுங்கோ. நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.
ஆயிரத்தொரு காரணத்துக்காக ஆண்கள் குடிக்கிறார்கள் என்றால் அதைவிட அதிகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள் ,குடிக்காமல் , குடித்துவிட்டு ஆயிரத்தொரு காரணம் சொல்பவனையும் சேர்ந்து சுமப்பது மட்டும் எந்த வகையில் நியாயம் .என்று சொல்லுங்கோ.

ஹேமா said...

குடிக்கிறவனுக்கு காரணங்கள் தேடுறார் பா.ரா அண்ணா !

ரோஸ்விக் said...

விடியங்காத்தால என் சித்தப்பு பா.ரா. கவிதை எழுதுவாருங்கிறது தான் ஆயிரத்தி ஒன்னாவது காரணமா சித்தப்பா?? :-)

Chitra said...

காரணங்கள் இல்லைனா மட்டும்............ போங்க அப்பு!
விகடன் வெளியாகியுள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள்!

பத்மா said...

வாழ்த்துக்கள்.
காரணம் தேடியே குடிச்சு கெட்டழிதுங்க
நியாயப் படுத்துறா மாறி இருக்கே சார்?

சைவகொத்துப்பரோட்டா said...

இனிமே கேக்க முடியாதே.

Ashok D said...

குடி... குடி உன்னை குடித்துவிடாமல் பார்த்துக்கொள்...

சித்தப்ஸ் எப்டி messagu... ;)

நல்லாயிருக்கு :)

இரசிகை said...

//
ஜெஸ்வந்தி said...
என்னமோ சொல்லுங்கோ. நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.
ஆயிரத்தொரு காரணத்துக்காக ஆண்கள் குடிக்கிறார்கள் என்றால் அதைவிட அதிகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள் ,குடிக்காமல் , குடித்துவிட்டு ஆயிரத்தொரு காரணம் சொல்பவனையும் சேர்ந்து சுமப்பது மட்டும் எந்த வகையில் நியாயம் .என்று சொல்லுங்கோ.
//

aamaapa...
naan jes mam kachchi!

kavithai nallaayirukku...

vigadan-ku vaazhthukal[unga kavithaiyai poda vigadan koduththu vachirukkanumla...ice..ice..:)]

appuram..,
naan kudikkiravarai pahadi seithathaakave inthak kavithaiyai yeduthuk kollkiren...!

vaazhthukal rajaram sir..!

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ஆனா ஆயிர‌ம் + 1 கார‌ண‌ங்க‌ள் இருந்தாலும் குடி கூடாது.

ஆன‌ந்த‌ விக‌ட‌னில் வ‌ந்த‌ க‌விதைக்கு வாழ்த்துக‌ள் அண்ணா.

இரசிகை said...

m...solla maranthuttene.

+1 nu thalaippai paaththa udane...,
+2 thaane mukkiyamnu solluvaanga...
+1 la yenna irukkuthunnu nichutten chinna pulla thanamaa..bottle-a paathathum innum kuzhappam..:)

vaasichchathum purinjathu..naama solla vantha +1-kaana kaaranam yennaanu..:)

பிரபாகர் said...

நல்லாருக்குங்கண்ணே! காரணத்துக்கெல்லாம் ஒரே காரணம் குடிக்கிறதுதான்!

பிரபாகர்...

செ.சரவணக்குமார் said...

கவிதை நல்லாயிருக்கு பா.ரா அண்ணே. விகடன்ல வந்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

ராகவா: பா.ரா.கிட்ட உமா 'இதெல்லாம் ஒரு காரணமா?'ன்னு கேட்டுட்டா போலருக்கு. மணிஜீயையும் என்னான்னு ஒரு வார்த்தை கேளுங்கோ..

இதெல்லாம் நல்லா இல்லே.. அவ்ளோதா சொல்லிட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை நல்லாயிருக்கு

பனித்துளி சங்கர் said...

அவன் முட்டக் குடிப்பதற்கு அந்த ஆயிரம் காரணங்கள்தான் காரணமோ ?????????

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

vasu balaji said...

என்ன குடி குடிச்சாலும் கணக்கு சுத்தம்:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆ.விகடனுக்கு வாழ்த்துக்கள்.

எப்படியோ குடிக்க ஒரு காரணம் வேணுமாயிருக்கு இல்ல ;)

அப்படி 1001 காரணத்தோட குடிச்சே ஆகனுமா? ;)

கே. பி. ஜனா... said...

'ஆசை தான் காரணம் அவனுக்கு! மத்தவங்களுக்கு சொல்ல அவனுக்கு ஆயிரம் காரணம் கிடைக்கும். அவள் ஏதாவது கேட்டு மடக்கினால் அதையும் பிளஸ் ஒண்ணா சேர்த்துக்குவான். என்னத்தைச் சொல்ல!' என்கிற நிலையை அழகாய் சொல்லியிருக்கீங்க.

dheva said...

குடிச்சா.....சூப்பரா...எஸ்கேப் ஆவுற அளவிற்கு மூளை வளரும்ணு தெரியுது....ப.ரா! வாழ்த்துக்கள்!

ஜெனோவா said...

வாழ்த்துக்கள் பா.ரா ...
சில சமயம் , காரணங்கள் ஏதுமற்று வெறுமையாய் மனம் உணர , உணர்ந்த சற்றைக்கெல்லாம் அந்த வெறுமையே குடிப்பதற்கு காரணமாகி விடுகிறது .. ஹி ஹி ..

மணிஜி said...

“ஏற்கனவே ஒரு பெண்ணை நட்டாற்றில் விட்டு விட்ட உன்னை நம்பமாட்டேன்” என்று ராஜாராமனிடம் புதிதாய் வந்தவளும் சொல்லிவிட்டாள்..

“கண்ணா ! இன்னொரு லட்டு”

கல்யாண பார்ட்டி??

சிநேகிதன் அக்பர் said...

"எனக்கு சொல்றதுக்கு எந்த காரணமும் கிடைக்கலை. அந்த காரணத்தால நான் குடிக்கிறேன்."

ரொம்ப அருமை அண்ணா.

நாலைந்து வரிகளில் சொல்லவந்ததை புரியும்படி சொல்லிவிடுவது உங்கள் சிறப்பு.

RaGhaV said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. :-))

விஜய் said...

நல்லா இருக்கு மக்கா

(நம்ம செய்யறதா நியாயப்படுத்த எவளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு )

விஜய்

அம்பிகா said...

குடிச்சா.....சூப்பரா...எஸ்கேப் ஆவுற அளவிற்கு மூளை வளரும்ணு தெரியுது....ப.ரா! வாழ்த்துக்கள்!

:-))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:) :)

நல்லாயிருக்கு ராஜாராம்.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான கவிதை

ஈரோடு கதிர் said...

அடடா!!!

vasan said...

பாட்டில‌ எடுத்துட்டு
எழுதினிங்க‌ளா? அல்ல‌து,
பாட்டு எழுதீட்டு
பாட்டில‌ எடுத்திங்க‌ளா?
ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ம்
தெரிஞ்சுகிற‌லாமுன்னுதான்
கேக்குத‌ம் !!!

Marimuthu Murugan said...

காலி பாட்டிலைப் போட்டு, எவ்ளோ பெரிய மேட்டர் சொல்லி இருக்கீங்க...
கலக்கல்...

ராகவன் said...

அன்பு பாரா...

என் அப்பாவுக்கு குடிப்பழக்கம் கிடையாது பாரா... எப்போதாவது என்னோட பெரியப்பா மிலிடரி சரக்கு கிடைச்சிருக்கு வெங்கிடசாமி, உங்க வீட்டுல கோழி அடிக்க சொல்லுங்க... சுள்ளுன்னு ஏத்திக்கிட்டு நல்ல தின்னுட்டு குப்புற படுத்து தூங்கலாம் என்பார்... அய்யய்யோ வேணாம் சாமி என்பார் அப்பா... பித்த உடம்புங்க எனக்கு ஒத்துக்காது... அட பரவயில்லைங்க... குடிக்கலாம் தினமுமா குடிக்க போறோம்... ஒரு XXX ரம் பாட்டில் நம்ம மிலிடரி பெருமாள் கொண்டு வந்திருக்கா, குதிரைக்கு ஒத்துறது சும்மா உடம்பெல்லாம் உலுக்கு எடுத்த மாதிரி சுகமா தூங்கலாம் என்று வற்புறுத்துவார்... அப்பா சந்தையில போய் நல்ல விடககோழியா பிடிச்சிட்டு வருவார்... குடிக்கிறாரோ இல்லையோ அப்பா நல்லா சாப்பிடுவார்...


....1

ராகவன் said...

...2

புழக்கடையில உட்கார்ந்து என் அம்மாவும் பெரியம்மாவும், கோழியின் கால்களை பிடித்துக் கொண்டு அறுத்து, அதன் துடிப்பு அடங்கும் வரை காத்திருந்து, கோழியின் மயிறு பிடுங்குவார்கள்... மொத்தமா மழிக்கப்பட்ட கோழி தன் அடையாளங்களை இழந்து பரிதாபமாய் கிடக்கும்...லேசாய் துடிக்கும் இரப்பை பகுதியும் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கும். உரித்த கோழியின் மேல் அரைத்த மஞ்சளை தடவி, பொறுக்கி எடுத்த காய்ஞ்ச சுள்ளிகளை எரித்து வாட்டுவார்கள்... கோழியின் உடம்பில் சிறு சிறு வெடிப்பு ஏற்பட்டு எண்ணெய் மாதிரி வழியும்... ஒரு விதமான மகோன்னதமான வாசம் அடிக்கும்...
ஒரு பக்கம் பூண்டு உரித்துக் கொண்டும், சிறு வெங்காயம் உரித்து கொண்டும் நாங்களும் எங்கள் கிழவியும் கதை பேசிக் கொண்டிருப்போம், கிழவி எங்க பெரியப்பாவை திட்டி கொண்டிருப்பாள், உங்கப்பனையும் கேடுக்குறார் இந்த பேங்க்காரரு... அவருக்கு தான் உடம்புக்கு ஆகாதுல்ல... சொல்லாகூடாதா என்பாள்... அந்த மனுஷன் கேட்கிற ஜாதியா என்ன... எனக்குன்னு பிடிச்சு கட்டி வச்சியே... குமாரி புருஷன மாதிரியே இருந்துட்டா எந்த பிரச்சினை இல்லை என்பாள் என் பெரியம்மா... என் அம்மாவுக்கு பெருமை தாங்காது... என்க்க உன் வீட்டுக்காரரு பாங்க்ல வேலை பார்க்காறு, கை நிறைய சம்பாதிக்கிறாரு... உனக்கென்னா. என்பாள் அம்மா...
காய்ந்த மிளகாய் வத்தலையும், மல்லியையும் லேசா என்னை போடாம வறுத்து... மை போல அரைச்சு... தனியா எடுத்து வச்சுடுவா பின்னி... தேங்காய் அரைக்க, நான் தான் தேங்காய் உரிச்சு... நாரெல்லாம் பக்குவமா பிரிச்சு தரனும்... தேங்காய் உடைக்க ஆரம்பிப்பேன்... சத்தம் கேட்டாலே வந்துடுவைங்க... தம்பியும், ஜெயந்தியும்... தேங்காத்தண்ணி குடிக்க... உடைச்ச தேங்காயில சில்லு போட்டு, பின்னிக்கு குடுக்க அலுத்து கொண்டே அரிப்பால் பின்னி... அவள் அம்மி குலவிய உருட்டுற அழகே தனிதான், அதிலும் அரைச்ச தேங்காய வழிக்கும் போது அவளோட லாவகம் வேற யாருக்கும் வராது... இதுக்குள்ள சிவத்தம்மா, கோழி அறுக்கன்னு இருக்கிற அருவாமனைய எடுத்துட்டு கோழியின் எழும்ப நொறுக்காம துண்டு பொதுவா... கொஞ்சம் பெருசாவே போடுதே... கோழி ரொம்ப இளசா இருக்கு... எலும்பு நொறுங்கினா... குடிச்சிட்டு கண்ணு மண்ணு தெரியாம சாப்பிடும் உங்க அய்யா தொண்டையில மாட்டிக்க போகுது என்பாள் கிழவி... சரித்தா... என்பாள்..
அடுக்களையில வச்சு அறுக்காம அங்கனகுழிக்கிட்ட வச்சு தான் அறுக்கணும்... கவிச்சு அடுக்களைக்குள்ள அறுக்கப்பிடாதாம்... உரிச்ச வெள்ளைபூடை கொஞ்சம் நசபுசன்னு நகட்டிக்கா, கொஞ்சம் இஞ்சியைவும் தட்டிக்க தாயி... என்பாள் சின்ன மகளிடம் அவ்வளவு பிரியம், எனக்கும் திலகம் பின்னிய ரொம்ப பிடிக்கும், அவ்வளவு அழகா இருப்பா பின்னி. மையா அறைச்சுபுடாதா... குழம்பு கெட்டி படாதமாதிரி ஆயிடும் என்பாள் கிழவி... கிழவியின் பக்குவம் அம்மா பெரியம்மாவின் கைகளில் மணக்கும்... எல்லா சமையலிலும்... நல்லெண்ணெய் விட்டு அறிந்து வைத்திருக்கும் சிறுவெங்காயத்தை போட்டு வதக்குவாள் அம்மா... நல்லெண்ணையும், வெங்காயத்தின் மனமும் கிறங்க வைக்கும் யாரையும்... இதுக்கேடையே மணிப்பய வந்து ஆச்சான்னு பெரியப்பா கேட்க சொன்னாரு என்பான்... கோழி அறுத்து வச்சிருக்கு பச்சைய திங்குறாரான்னு கேளு உங்க பெரியாப்பாவ...
கோழி இன்னும் கூப்பிட்டு அடங்கலை அதுக்குள்ளா கொண்டான்ன எங்க போறது, பொறுக்க சொல்லு... என்றவுடன்... டவுசரை ஒரு கையில பிடிச்சிக்கிட்டே ஓடுவான்... மணிப்பய... அவனுக்கு அடுப்படி வேலையே பிடிக்காது...
வெங்காயம் வதங்கியதும் அரைச்ச மசாலாவையும், தட்டி வைத்துள்ள வெள்ளைப்பூடையும், இஞ்சியையும் ஒன்ன போட்டு, கொஞ்சம் தட்டி வச்ச மிளகையும், சீரகத்தையும் போட்டு கொதிக்க வைப்பாள் அம்மா... பெரியம்மாவுக்கு... மூக்கு விடைச்சிக்கிட்டு... குமாரி நல்லா வாசனையாத்தான் இருக்கு... சிவத்தம்மா அத்தா... கோழி வயத்துக்குள்ள ஆரஞ்சு கலருளா.. முட்டை மாதிரி இருக்கே அத என்னத்த பண்றது என்பாள்... அடி கூறு கெட்டவளே அது தாண்டி ரெண்டு நாளைக்கப்புறமா வரபோற முட்டை... இது தெரியாத உனக்கு... எனக்கு அந்த முட்டை ரொம்ப பிடிக்கும்... அவ்வா அது எனக்கு வந்தவுடனே குடு அவ்வா... இவ்வளவு வேலை செய்யிற எங்களுக்கு... உனக்கிள்ளமையா... வாங்கிக்கோ... அவங்களுக்கு... கரிய அனுப்பிட்டு உனக்கு.. இதை கொடுத்துடறேன்... யாருக்கும் சொல்லக்கூடாது என்பாள் கிழவி...

ராகவன் said...

...3

நல்லெண்ணையில் அறுத்த கோழி துண்டுகளை போட்டு கொஞ்சம் தனியா வதக்கி கொள்வாள் அம்மா, அப்பா தான் வாசனையா இருக்குமாம்... வதக்கின கோழி துண்டுகளை இப்போ கொதிக்கிற குழம்புல போட்டு மொத்தமா கூட்டி வைப்பா... கல்லு உப்பை போட்டு கரைத்து உப்பா பார்க்க நான் தான் எப்போதும்... இவனுக்கு தான் நாக்கு நீலம் சரியாய் சொல்லிபுடுவா... இங்க வாட ராசா இதுல உப்பு இருக்க பாரு என்று கரண்டியில் எடுத்த குழம்பை உள்ளங்கையில் ஊதி ஊதி ஊத்துவாள், நக்கி பார்த்து சரியாயிருக்கு அவ்வா என்றவுடன்... ஆத்தா இவனுக்கு ஒரு வட்டையில கொழம்பு கொதிக்கையில கொஞ்சம் எடுத்து நல்லெண்ணெய் ஊத்தி கொடு சூப்பு மாதிரி குடிக்கட்டும்... நெஞ்சு சலிக்கு நல்லது... ராத்திரி எல்லாம் கர்புர்ருன்னு இருமுறான்...
வட்டியில் வரும் குழம்பில் மிதக்கும் நல்லெண்ணெய் துளிகளில் என் முகம் தெரியா குடிப்பேன் சந்தோசமாய்... கொதித்த கோழிகுழம்பு திரும்பவும் ஆட்களை இழுத்து வரும் என்ன ஆயிடுச்சா... என்று பெரியப்பாவே வருவார்... இந்தாங்க என்று பெரிய துண்டங்களாய் பார்த்து எடுத்து கொடுப்பாள் பெரியம்மா... வாங்கி கொண்டு வெங்கிடசாமி... வாங்க... கிளாசுல ஊத்துங்க... என்பார் பெரியப்பா..
அப்பா அநியாயத்திற்கு கூச்சபடுவார்... எனக்கு இந்த அளவெல்லாம் தெரியாதுங்க... நீங்களே ஊத்துங்க என்றவுடன் நான் ஊதாவாப்ப என்ற என்னை முறைத்து போட பெரியவங்க மருந்து சாப்பிடும் போது நீங்கெல்லாம் வரக்கூடாது...
இது மருந்தில்ல எனக்கு தெரியும்... இது குடிச்சா நீங்க நிறைய பேசுவீங்க... வேட்டி விலகுனது கூட தெரியாம தூங்குவீங்கன்னு... பெரியம்மா சொன்னாங்க... என்றால் போடா கீரை இது மருந்து தாண்ட... என்று கதவை மூடி கொள்வார்கள்... அப்புறம் கொஞ்சம் சத்தம் கேட்கும்... சிரிப்பார்கள்... யாரையோ திட்டுவார் பெரியப்பா கெட்ட வார்த்தையில... அதன் பிறகு... அப்பா வேப்பை மரத்த பிடிச்சிக்கிட்டு வாந்தி எடுத்தார்... என்ன குமாரி உங்க வீட்டுக்காரரு மூடியில தான் ஊத்தி கொடுத்தேன்... அதுக்கே பிரட்டுதுன்னு போய் வாந்தி எடுத்துக்கிட்டு இருக்காரே... என்பார்... அப்பா கண்கள் கலங்கி, சிவந்து போய் வருவார் எனக்கு சோத்தப்போடு சாப்பிட்டுட்டு தூங்குறேன்... என்றவர் சாப்பிட்டுவிட்டு அசந்து தூங்கி விடுவார்... சாயந்தரம் வரக்காப்பிக்கு தலைய பிடிச்சிக்கிட்டு அடுப்படிக்கு வரவரு... இனிமே இவர் என்ன சொன்னாலும் குடிக்க கூடாது என்பார்... அப்பா சாகும் வரை ரம் என்றாலோ அல்லது எந்த லாகிரி வஸ்துவின் பெயர் சொன்னாலும் ஒங்கரிப்பார்...
நமக்கு எல்லாகாரண காரியங்களுக்கும் போதுவான நியாயங்கள் இருக்கிறது... நியாயங்கள் தீரும் வரை குடிக்கலாம், வாந்தியும் எடுக்கலாம்... உமாவின் (அல்லது உமா மாதிரியானவர்களின்) புறக்கணிப்பை நினைத்து புலம்பலாம்... என் போன்றவர்கள் எப்பவுமே நிதானத்தில் இருப்பதில்லை என்பதால் தனியாக செலவழித்து குடிப்பதில்லை...

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

ராகவன்,

கோழியை,அம்மாவும் பெரியம்மாவும் உரித்தது போல் ஒரு குடும்பத்தையே உரித்து, உப்பு தடவி காய வைக்கிரீர்.

கொடுமை என்னவெனில்,
யாருப்பா உமா சித்தி என இன்னும் அழைக்கவில்லை மகா.
முன்பாக நானே சொல்லிவிடுவது உசிதம் என நினைக்கிறேன்.

மகா,

உமா,நம்ம மணி அப்பா(தண்டோரா) திருமணம் செய்து கொள்ள விரும்பி,(நூலிலையில் தவற விட்டார்).ரிஜிஸ்தர் ஆபீசுக்கு கையெழுத்து போட,என்னை,ராகவனை,வித்யா அத்தையை கூப்பிட்டு இருந்தார்.அவ்வளவே உமா சித்திக்கும் எனக்கும் பரிச்சியம்.நீ குழம்ப வேணாம்..முக்கியமாய் அம்மாவிற்கு தெரிய வேணாம்.

ராகவன் வேறு கோழி மயிரை பிடுங்குவதை காட்சியாக்குகிறார்.

ராகவனுக்கு அவரின் பெரியம்மா,அம்மாவை போல் உன் அம்மாவையும் தெரிந்திருக்கும் போல.

இப்படிக்கு,உன் அப்பாவி அப்பா.

க ரா said...

ராகவனின் பின்னூட்டமும் அதற்கு உங்களின் பதிலும். ம்.ம். என்னவோ போங்க பின்றீங்க.

Anonymous said...

தினம் தினம்
அழுகிறாய் நீ..
நான்
ஒரு குடிகாரன் என்பதற்காக..
தினம் தினம்
குடிக்கிறேன் நான்..
அதே காரணத்திற்காக!

ராஜவம்சம் said...

//குடிக்கிறவனுக்கு காரணங்கள் தேடுறார் பா.ரா அண்ணா !//

நாங்கள்ளா காரணம் இல்லாம எதுவும் செய்யமாட்டோமுங்க

Anonymous said...

தினம் தினம்
அழுகிறாய் நீ..
நான்
ஒரு குடிகாரன் என்பதற்காக..
தினம் தினம்
குடிக்கிறேன் நான்..
அதே காரணத்திற்காக!

Anonymous said...

தினம் தினம்
அழுகிறாய் நீ..
நான்
ஒரு குடிகாரன் என்பதற்காக..
தினம் தினம்
குடிக்கிறேன் நான்..
அதே காரணத்திற்காக!

Anonymous said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

நல்லாவே இருக்கு கவிதையும் கவிதையைச்செய்த பாட்டிலும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை .

'பரிவை' சே.குமார் said...

அருமை பா.ரா.

இளமுருகன் said...

குடிபதற்கு ஒரு மனமிருந்தால் ...

காரணமா பஞ்சம்???

இளமுருகன்
நைஜீரியா

rajasundararajan said...

ஒரு வணிகப் பத்திரிக்கையில் வந்த கவிதைக்கு விளம்பரம் என்னத்துக்கு என்று பின்னூட்டம் வேண்டாம் என்றுதான் விலகி இருந்தேன், ஆனால் இந்த ராகவன் என்னங்க இந்தப் போடு போடுகிறார்?

ராகவன், இந்தப் பின்னூட்டங்களை ஒரு கோப்பில் இட்டுச் சேர்த்து வையுங்கள். இவை உங்கள் படைப்புகளாகவே மிளிர்கின்றன. (நல்லெண்ணை இட்டுச் செய்த கோழிக் கறிக்கு ஏங்க வைத்துவிட்டீர்கள்)

பா.ரா., வழக்கமாக இரவு பதினொரு மணிக்கே வீடு திரும்ப வாய்க்கும் எனக்கு சித்திரைத் திருநாள் அன்று ஒன்பது மணிக்கே வாய்த்தது. அது ஒன்றே போதுமான காரணமாய் இருந்தது. வழியில் ஒரு 'டாஸ்மாக்' கடையில் "'Royal' பிராந்தி இருக்கா?" என்று கேட்டேன். "'அரை'தான் ஸார் இருக்கு என்றான்." வாங்கி வந்து நேற்றும் இன்றும் ஓடுகிறது.

'முன்முடிபு கொண்டார்க்குக் கூடுவன எல்லாம் கூடுதலாய் ஒரு காரணம்' என்னும் உங்கள் கவிதைக் கருத்தை எதிர்மறை என்று அல்லாமல் நேர்முறை என்றே கண்டு பாராட்டுகிறேன்.

பா.ராஜாராம் said...

@இராமசாமி கண்ணன்
நன்றி ஆர்.கே!

@ஜெஸ்
//குடிக்காமல், குடித்துவிட்டு ஆயிரத்தொரு காரணம் சொல்பவனையும் சேர்ந்து சுமப்பது மட்டும் எந்த வகையில் நியாயம்//
என்று கட் பண்ணி பேஸ்ட் பண்ணி பார்த்தேன் ஜெஸ்.ஜாலியா இருக்கு.நன்றி மக்கா! :-))


@ஹேமா
குடிக்காதவர்களுக்கும் ஆயிரம் காரணம்(அ)ஏக்கம் இருக்குமோ என்பதால் குடிப்பதும் ஒரு காரணமாகிறது ஹேமா.அக்காரணம்,நல்ல வேலை,ஆயிரதிற்குள்தான் இருக்கு. :-)நன்றி சகோ!

@ரோஷ்விக்
மகன்ஸ்,விடிஞ்சு போச்சா சிங்கையில்?விடியலயேப்பு..நன்றி மகனே! :-)

@சித்ரா
:-) நன்றிங்க சித்ரா!

@பத்மா
நியாயம் இல்லை என்பதும் ஆயிரத்தில் ஒரு காரணமாக இருக்கிறது பத்மா. :-)நன்றி மகள்ஸ்!

@எஸ்.கே.பி
எங்க விட்டாங்க?நன்றி மக்கா!

@அசோக்
பாருய்யா!..:-)) வேலைகள் எப்படி மகனே? நன்றி மகன்ஸ்!

@ரசிகை
//naan kudikkiravarai pahadi seithathaakave inthak kavithaiyai yeduthuk kollkiren...!
அவ்வ்வ்வவ்வ்வ்..ரொம்ப நாளா யூஸ் பண்ண விரும்பிய வலை உலக வார்த்தை ரசிகை,இதற்கும் சேர்த்து நன்றி! :-)

@லாவண்யா
+2 காரணம் தொடங்கியாச்சு. :-) நன்றி சகோ!

@ரசிகை
:-)+3 இது.

@ப்ரபா
ஹா.ஹா நன்றி ப்ரபா!

@சரவனா
ரொம்ப நன்றி சரவனா!

@வித்யா
பத்தவச்சுட்டீங்களே பரட்டை.. :-)கீழ போய் பாருங்க.கொழுந்து விட்டு எரியிராப்ல ராகவன் :-))நன்றி வித்யா!

@டி.வி.ஆர்.சார்
மிக்க நன்றி சார்!

@ப.து.சங்கர்
அதுசரி..வந்துகிட்டே இருங்க.நன்றி மக்கா!

@பாலா சார்
:-))மிக்க நன்றி பாலா சார்!

@அமித்தமா
:-) (அசட்டு சிரிப்பிற்கு தனியா ஒரு ஸ்மைலி இருந்திருக்கலாம்..) நன்றி அமித்தம்மா!

@ஜனா
நம்மாள் பாஸ் நீங்க.நன்றி மக்கா!

நேசமித்ரன் said...

பா.ரா

எழுதிக் கொண்டிருக்கும் குறு நாவலின் ஒரு பகுதியை இங்க பின்னூட்டமா போட அனுமதிக்கணும்
( உனக்கென்னடா அனுமதின்னு கேக்குறீங்களா :) )

........கைலிகளில் ஒட்டிக்கொள்ளும்
தானா .ஆனா வை போல் என்னதான் கொய்யா இலையை மென்றுவிட்டுப் போனாலும் கண்டு பிடித்து விடுவாள் வித்யா அக்கா

வைது கொண்டே வெஞ்சனசத்துக்கு என்னடி நாயி பண்ணுவ என்றபடி நீட்டும் அர்த்த சாமத்து நெத்திலிக்குப் பிறகு தடவித் தடவி அள்ளிப் போட்டுக் கொண்ட பிறகு புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருப்பவள்
மறு சோறுபோடாம எந்திரிச்ச ...
இருக்குடி ஒனக்கு மண்டகபடி
என்று குளிருக்கு போர்த்திய முந்தானையுடன் வருவாள்
புரையேறும் மண்டிய ரசத்தின் காரலுக்கு

கொலசாமிதாண்டா வரணும் உன்னை கரையேத்த என்று தலை தட்டும் பாசம்

இன்னைக்கு நண்டு !எடுவட்டப் பயல நிதானத்துலயே வீட்டுக்கு வரச் சொல்லு என்றபடி பொட்டிக் கடை பொடியனிடம் சேதி சொல்லிவிடுவாள்
பொம்பள சீதக்காதி .......

888888888888888888888888888888

விகடனுக்கு வாழ்த்துகள் பா.ரா
but still I insist this is not your cup of tea pa.ra

ராகவன் தமிழ்மணத்திலிருந்து உங்கள் மறுமொழிகள் கோப்புகளாய் சேமிக்கப் படுவதை நேற்றோடு 5 வது நபர் சொன்னார் :)

வாழ்த்துகள்

Nathanjagk said...

காரணமேயில்லாமல் கவிதை பிடித்துப் ​போச்சு :)))

Nathanjagk said...

நேசா,
//இன்னைக்கு நண்டு !எடுவட்டப் பயல நிதானத்துலயே வீட்டுக்கு வரச் சொல்லு //
அருமை! நண்டு மாதிரி வருகிறவனுக்கு நண்டுக் குழம்பா?

CS. Mohan Kumar said...

விகடனில் இந்த வாரம் படித்து மகிழ்ந்தேன். இந்த கவிதை மட்டும் தனியே ஓர் பக்கத்தில் போட்டிருந்தாங்க. ரொம்ப மகிழ்ச்சி

சத்ரியன் said...

//இவனுக்கு தான் நாக்கு நீலம் சரியாய் சொல்லிபுடுவா..//

ராகவண்ணே,

என் மாமா ஒரு கவிதை தானேப்பா சொன்னாரு.
நீங்க பின்னூட்டமா ஒரு பதிவையே போட்டுட்டீங்க.

நல்லாயிருக்கங்கண்ணே.

சத்ரியன் said...

//இதெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து//

மாமா,

சரியான காரணம். (இப்படி வர்ரவங்க போரவங்க ..(?!) எல்லாம் காரணகர்த்தாவா இருந்தா எண்ணிக்கை இன்னும் கூடுமே மாமா.)

Athisha said...

இன்றைக்கு காலையில்தான் விகடனில் படித்ததும் உங்களை நேரில் பாராட்ட வேண்டும் போல் இருந்தது. மிக அருமையான கவிதை.

இரசிகை said...

//
என் போன்றவர்கள் எப்பவுமே நிதானத்தில் இருப்பதில்லை என்பதால் தனியாக செலவழித்து குடிப்பதில்லை...

அன்புடன்
ராகவன்
//

superb......:)

விநாயக முருகன் said...

/
என் போன்றவர்கள் எப்பவுமே நிதானத்தில் இருப்பதில்லை என்பதால் தனியாக செலவழித்து குடிப்பதில்லை...

அன்புடன்
ராகவன்
//

:) :)

பா.ராஜாராம் said...

@தேவா
வாழ்த்துக்கள்?தேவா,இது ஓவர். :-) நன்றி மக்கா!

@ஜெனோ
எம்புட்டு ஆள்யா?..நன்றி ஜெனோ!

@மணிஜி
வெள்ளைக் கொடி மணிஜி..(பாவி)ஆட்டம் டிராவில் முடிந்தது.நன்றி இல்லை!

@அக்பர்
நன்றி அக்பர்!staarjan ஓகேயா?

@ராகவ்
ரொம்ப நாளாச்சு ராகவ்..நல்லாருக்கீங்களா?நன்றி மக்கா!

@விஜய்
நம்மலுமா? :-)) நன்றி விஜய் மக்கா!

@அம்பிகா
நன்றி சகோ! :-))

@சுந்தரா
உனக்கு பிடிக்குமுன்னு தெரியும். :-))நன்றிடா!

@உழவர்
நன்றி உழவரே!

@கதிர்
நன்றி கதிர்!

@வாசன்
பாப்பையா சார்,வந்து என்னன்னு கேளுங்க,வாசன் சாரை.நன்றி வாசன்!

@மாரி-முத்து
கடைசியில 'கலக்கல்' வேறயா? :-))நன்றி மக்கா!

@ராகவன்
சான்சே இல்லை ராகவன்!

"இந்த மாதிரி பின்னூட்டத்தை எல்லாம் உங்கள் தளத்தில் இடுகையாய் போடலாமே ராகவன்"என்று சொல்லி வந்திருக்கிறேன்.எதுவுமே சொல்லாமல்,எதிர் பார்க்காமல் பின்னூட்டம் இடுவீர்கள்.கொஞ்ச நாள் முன்புதான் உணர்ந்தேன்.
ராகவன் இடுகைதான் இடுகிறார்.அதுவும், அவர் தளத்தில்.

வேறு அம்மா,வேறு அப்பா,வேறு வேறு குடும்பம்.
வேறு குடும்பம்,வேறு பிரச்சினைகள்,வேறு வேறு மனிதர்கள்.
வேறு மனிதன்,வேறு மனுஷி,வேறு வேறு குழந்தைகள்.
வேறு குழந்தை,வேறு குடில்,ஒரே ஒரு உலகம்.

ஆமாவா இல்லையா? நன்றி ராகவன்!

@இராமசாமி கண்ணன்
நன்றி ஆர்.கே! :-)

@ராதை
மூணு கவிதையும் சூப்பர் ராதை! :-) நன்றி மக்கா!

@காமு
யோவ்..சகபாடியா நீர்? :-) நன்றி மக்கா!

@ஸ்ரீ
நன்றி ஸ்ரீ!

@குமார்
நன்றி குமார்!

@இளமுருகன்
வாங்க முருகன்.மிக்க நன்றி!

@ராஜசுந்தரராஜன்
அண்ணே நல்லாருக்கீங்களா?வேலைப் பளுண்ணே.ராயல் பிராந்தி?

பிராண்ட்,முன்பு ஜானக்சா,பிறகு,பீ.பி,பிறகு நெப்போலியன்.
நெற்றி பொட்டில் தாக்கிய பிறகு மாப்ள என்றேன் நெப்போலியனை.சவுதி வந்த பிறகு,சொல்லொண்ணா நாவரட்சி.குடும்பத்தை விடவா நா?என (இல்லாததால்) தெளிகிறேன். :-)

எனக்கு கிறுக்கு பிடித்த ஒரு கட்டுரையை (கூடுதலாக நேசனுக்கும்)என உங்களின் பின்னூட்டத்திற்கான பதிலில் சொல்லி இருந்தேன் இல்லையா?வாசித்திருப்பான் போல.வாசித்துக் கொண்டே இருக்கானாம்...இப்போ கொஞ்சம் சத்யாகிரகம் பண்ணுகிறான்.போய் என்னன்னு கேளுங்கண்ணே.

http://nesamithran.blogspot.com/

ராகவனும் நம்மை மாதிரிதான்.கிறுக்கு. :-) ரொம்ப நன்றிண்ணே!

பத்மா said...

இலையுதிர் காலம் என்ற உங்கள் பழைய கவிதை படித்தேன் .அதில் கூட சில காரணங்கள் உள்ளன போல.?இன்று வேலை உங்கள் எல்லாக் கவிதையையும் பின்னூட்டங்களையும் படிப்பது தான் .special sunday இன்றைக்கு .பிரியங்களை சம்பாதித்து வைத்துள்ள மனிதர் ஐயா நீங்கள் .சந்தோஷமாக உள்ளது

பத்மா said...

உங்கள் பழைய பதிவெல்லாம் படித்து விட்டேன் .மீண்டும் படிப்பேன் .உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உள்ளது .அதை surprise ஆக ஒரு நாள் கூறுவேன் .
எழுத்துக்களை மீறி நீங்கள் சம்பாதித்த ப்ரியம் நெஞ்சடைக்க செய்கிறது .am so glad i came across people like u. வாழ்க

Matangi Mawley said...

:) .. arumai!

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு கவிதையும்...
கவிதைக்கான பாட்டிலும்...
ஆமா, ராகவன் எதோ ரவுண்ட் கட்டி அடிச்சிருக்காரே...?

பா.ராஜாராம் said...

@நேசன்
ரொம்ப நல்லாருக்குடா மக்கா.தொடரவும்.அவசியம் தொடரவும்.நன்றிடா பயலே!

@ஜெகா
காரணமே இல்லாமல் என்பது குசும்பு. :-)நன்றி ஜெகா!

@மோகன்
ஆரம்பத்தில் இருந்து ஆ.விக்கு அனுப்ப சொன்ன ஆள்,இல்லையா?நன்றி மோகன்!

@சத்ரியன்
மாப்சு,குட்டீஸ் நலமா? :-) நன்றி மாப்ள!

@அதிஷா
ரொம்ப நன்றி அதிஷா!முதல் மற்றும் ஆச்சர்ய வரவு.

@ரசிகை
நானும் மிக ரசித்த பகுதி ரசிகை, ராகவன், :-)))

@விநாயகம்
உங்களோடு சேர்ந்தவர்,தோழர். :-) நன்றி விநாயகம்!

@பத்மா
பத்மா,மகா மாதிரி காரணங்களுக்கான காரணங்களாய் தேடுகிறீர்கள் போலேயே.. :-)

@பத்மா
ஆகட்டும் பத்மா.காத்திருக்கிறேன்.
//am so glad i came across people like u.//இதேதான் மகள்ஸ்! நன்றி பத்மா!

@ Matangi Mawley
உங்கள் பெயரை தமிழ் படுத்த தெரியலை.தளம் வந்தேன்.பிடிச்சிருந்தது.நன்றிங்க!

@குமார்
ரவுண்டு கட்டி அடிச்சாதான் அது ராகவன்,குமார். நன்றி மக்கா!

Nathanjagk said...

ஆ.வி.யில் ​நேற்றுதான் பார்த்தேன் - காரணங்கள் என்ற தலைப்பில்!
வாழ்த்துகள்!!
//ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது//
இருந்தன - என்று மாற்றிவிடுங்கள் ராஜா.

நந்தாகுமாரன் said...

ஆனந்த விகடனிலும் வாசித்தேன் ... நன்று

கவிதன் said...

கவிதை ரொம்ப அருமையா இருக்கு அண்ணா!
ஆனந்த விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!!!

Vidhoosh said...

அப்பாவி அப்பாவின் அறியாத பொண்ணோட அசட்டு அம்மாவுக்கு, மகாவின் அத்தை எழுதுவது. என்னதான் கொடுமைக்காரி நாத்தனாரா இருந்தாலும் மனசு கேக்கல அண்ணி. ராகவன் சொன்னாப்லையே கோழி குழம்பு ஆக்கித் தாங்க. சரியா?

நேசன்: இப்படி ஒரு உலகம் புதுசாத்தான் இருக்குங்க... :) கொலசாமிய வேண்டிக்கிறேன் :))

ராகவன்: இன்று வரை கோழிக் குழம்பு வாசனை கூட பார்த்ததில்லை, நோன்பை முடிச்சுக்கலாம் என்றே தோன்றுகிறது :))

Thamira said...

கவிதையோடு பின்னூட்ட விருந்துகளும்.. நன்றி.

பா.ராஜாராம் said...

@ஜெகா
மாற்றசொல்லி தம்பிக்கு மெயில் செய்தேன்.பிசி போல.மாற்றுவான்.மிக்க நன்றி மக்கா!

@நந்தா
நன்றி நந்தா!

@கவிதன்
நன்றி கவிதன்!

@வித்யா
//அப்பாவி அப்பாவின் அறியாத பொண்ணோட அசட்டு அம்மாவுக்கு,//
படவா,சகோவா நீங்கள்?
:-))
நன்றி வித்யா!

@ஆதி
ரொம்ப நன்றி ஆதி!