குழந்தைகளை கூட்டி வந்த சரவணன்
மூன்று மாத லீவிற்கு போய், 50-நாளில் திரும்பிய சரவணனை மீண்டும் கோல்டன் ஜூஸ் கார்னரில் சந்தித்தேன். கோல்டன் ஜூஸ் கார்னர் என குறிப்பது கூட மனநிலையை குறிப்பது போல்தானே.
ஏறத்தாழ 40-நாள், குடும்ப நெருக்க நிமிஷங்களை இழந்து வந்த சரவணனின் பின்புறம் ஒரு நண்பர் இருந்தார். லீவிற்கு போன இடத்தில் அவரின் நண்பர் விபத்துக்குள்ளானார். கொண்டு போன பொருளையும், வீட்டில் இருந்த பொருளையும் தராசின் ஒரு தட்டில் வைக்க நேரிட்டது. மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்த அந்தப் பக்க தட்டில் நண்பனின் உயிர் இருந்தது. தராசு முல்லை சமன் செய்து, நண்பரை வீடு சேர்த்து, "சரி, நண்பனை மீட்டெடுத்தாச்சு. பொருளும் நாற்பது நாளும் என்ன பெரிய மயிறு" என்று கிளம்பி வந்த சரவணன் சும்மா வரவில்லை.
லாவண்யா,விநாயகம், நர்சிம், காந்தி, மதன் குழந்தைகளையும், அப்புறம் என் மஹா-சசியையும் கூட்டி வந்த மனிதனை எதிர்கொள்ள மிக சிரமமாக இருந்தது.
ஏனெனில்,
வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்.
போன நாளில் இருந்து நாட்காட்டித் தாளை கிழிக்க அஞ்சுவான். ஆனாலும் கிழிபடும் தாள். அப்படி கிழிபடும் தாளில் ராக்கெட் செய்து அதன் மேலேறி பறந்து வருபவன் ஒரு முகம் வைத்திருப்பான். அம்முகத்துடன் ஒரு மௌனமும் மனைவி செய்து தந்த ஊறுகாயும் கொண்டு வருவான். மௌனத்தின் கசப்பு தாங்காது போகிற போதெல்லாம் தொட்டு, ஊறுகாயை நக்கிக் கொள்வான். இப்படித்தான் இருப்பான் பெரும்பாலும் ஊர் திருவிழா பார்த்து திரும்பியவன்.
இப்படியெல்லாம் இல்லாமல் நண்பனை பத்திரபடுத்தி,நண்பர்களின் முதல் குழந்தைகளை கூட்டி வந்த களிப்பில் இருந்தார் சரவணன். ஒருவேளை, நண்பனும், நண்பர்களின் குழந்தைகளும் கூட வரும்போது ஒரு முகம் வரும்போல.
அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் சற்று நேரம். எல்லாவற்றுக்குமாக சேர்த்து கட்டிக் கொள்ள தோன்றியது சரவணனை. கட்டிக் கொண்ட போது, நாட்டை, காற்றை, ஊரை, தெருவை, வீட்டை கட்டிக் கொண்டது போல் இருந்தது. 40-நாள் இழந்த விஷம் முகத்தில் இல்லை. கடைந்த நட்பும் அதன் சார்ந்த ப்ரியமும் அமிர்தமென பொங்கியது.
ஏறத்தாழ இரண்டு மணி நேரம் மணிஜி, வாசு, சிவராமன், கேபிள்ஜி,நர்சிம், பலாபட்டரை ஷங்கர், ஜாக்கி சேகர், அப்துல்லா, துபாய் கார்த்திகேயன், சத்ரியன், பிரபாகர், ஜெத்தா அபுபக்கர், அக்பர், starjan, மயில்ராவணன் என்று பேசிக் கொண்டிருந்தார். எதை கொடுத்தாலும் தின்கிற பசியில் இருந்தேன். மனிதர்களை திணித்துக் கொண்டிருந்தார். விரும்பி தின்கிற மனிதர்களை...லபக் லபக் என விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்பத்தான் கையளித்தார் இக்குழந்தைகளையும்.
மனிதர்களிடமிருந்து குழந்தைகளிடம் தாவினேன். மஹா-சசி போல இருந்த கருவேலநிழல் தொகுப்பை கையில் தூக்கிய போது கண்கள் நிறைந்து போனது. அழுவது எவ்வளவு விருப்பமோ, அப்படியே சிரிப்பதும் என்பதால் சரவணனை சிரமப் படுத்தாது சிரித்து வைத்தேன். முதல் தொகுப்பை கையில் பெற்ற நர்சிம், 'முதல் குழந்தையை கையில் வாங்கியது போல் உணர்ந்தேன்' என உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருந்தது நினைவு வந்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள் நர்சிம்!
"இருங்கண்ணே டீ வாங்கிட்டு வந்துர்றேன்" என சரவணன் விலகும் போதெல்லாம் நான் குழந்தைகளை தடவாமல் இல்லை. பிறந்த குழந்தைகளாகப் பார்க்க நினைத்திருந்த குழந்தைகளுக்கு எல்லாம் பல் முளைச்சாச்சு. ஒவ்வொன்னும் அம்புட்டு பேச்சு. இதை எல்லாம் பிறகான பதிவுகளில் ஒவ்வொன்றாக பாப்போம்-பிழைத்துக் கிடந்தால்.
அப்புறம்,முட்ட விலகுகிற சந்தர்பம் இருவருக்கும் வந்தது. "சரிண்ணே.. கொஞ்சம் பர்சேஸ் இருக்கு, முடிச்சிட்டு நான் கிளம்புறேன்" என விடை பெற்று கிளம்பி போன சரவணன் போன திசையை சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றேன். இப்படி எப்பவாவதுதான் வாய்க்கும், மனிதர்கள் கரைகிற திசைகளைப் பார்க்கிற சந்தர்பம். இல்லையா?
அறை வந்து விளக்கு பொருத்தியதும்,"பிளைட்ல குட்டீஸ் எல்லாம் பயப்படாம வந்தாச்சா?" என்றேன் குழந்தைகளிடம்.
சிரித்தார்கள்.
சவுதி வந்த பிறகு, முதல் பயணம் மூன்று வருடம் கழித்தே வாய்த்தது. சென்னை இறங்கி, மதுரை பிளைட் எடுத்து, ஏர்போர்ட் வந்து, லக்கேஜ் பெறுகிற இடத்தில் இருந்து பார்த்தால், கண்ணாடிக்கு வெளியே குடும்பத்தை காண இயலும். அப்படி மனைவியைப் பார்த்த கண்ணோடு மகனையும் தேடினேன்.
மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.மார்பில் இருந்து அவன் முகம் நோக்கி பயணித்த நொடியை, நொடியின் நொடியை...
மூன்று வருடம் என்கிறேன். நம்புவீர்களா மக்கா?
இவ்வளவு அதிர்ச்சி தராதுதான், சரவணன் கூட்டி வந்த எல்லா குழந்தைகளும், பத்து நூறு வருடம் கழித்துப் பார்த்தாலும் முகம் பார்த்த இடத்தில் முகத்தையே பார்க்கலாம்.
இல்லையா சரவனா?
இல்லையா லாவண்யா?
இல்லையா விநாயகம்?
இல்லையா நர்சிம்?
இல்லையா காந்தி?
இல்லையா மதன்?
இல்லையா ராஜா?
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
49 comments:
//பத்து நூறு வருடம் கழித்துப் பார்த்தாலும் முகம் பார்த்த இடத்தில் முகத்தையே பார்க்கலாம்.//
ஆம் .
மிக நல்ல வெளிப்பாடு .
பகிர்வுக்கு நன்றி .
ரொம்ப உணர்வு பூர்வமா எழுதிருக்கீங்க .வேலை நிமித்தம் பிரிவு..... என்ன கொடுமை இது?
கடகடன்னு ஊருக்கு வர வழிய பாருங்க .
ராஜாராம் உங்க வருகையை எதிர்பார்க்கிறேன்.
saahadikkireenga sir.........!!
//
பொருளும் நாற்பது நாளும் என்ன பெரிய மயிறு" என்று கிளம்பி வந்த சரவணன் சும்மா வரவில்லை.
//
hat off..saravana sir
[thoppi poduvenaannu kekkaatheenga rajaram sir.lathananth sir appadithaan kettirunthaanga]
//
பிறந்த குழந்தைகளாகப் பார்க்க நினைத்திருந்த குழந்தைகளுக்கு எல்லாம் பல் முளைச்சாச்சு. ஒவ்வொன்னும் அம்புட்டு பேச்சு. இதை எல்லாம் பிறகான பதிவுகளில் ஒவ்வொன்றாக பாப்போம்-பிழைத்துக் கிடந்தால்.
//
ippadilaam sollappdaathu..
kaaaththu kidakkom..pizhachchuk kidanthaalaamla...
//
லாவண்யா,விநாயகம், நர்சிம், காந்தி, மதன் குழந்தைகளையும், அப்புறம் என் மஹா-சசியையும் கூட்டி வந்த மனிதனை எதிர்கொள்ள மிக சிரமமாக இருந்தது.
//
aahaa...!
//
எதை கொடுத்தாலும் தின்கிற பசியில் இருந்தேன். மனிதர்களை திணித்துக் கொண்டிருந்தார். விரும்பி தின்கிற மனிதர்களை...லபக் லபக் என விழுங்கிக் கொண்டிருந்தேன்.
//
:))
arusuvai neram...!
moththamaa......,ore varrththaila sollanumnaa
nallaayirukkuthu.
nallaayirukkuthu.
nallaayirukkuthu.
[iyo 3 thadavai solleetteno.aanaa ore vaarththai thaane]
ஒரு சந்திப்பை நெக்குருகும் நிகழ்வாக்கும் வித்தைக்காரனப்பா நீ.
எதையெடுத்தாலும் திண்கிற பசி உனது. பசிக்கு நட்பு எவ்ளோ பெரிய
தீவணம்.
கொண்டா ஓங்கைய ஒத்திக்கிறேன் .
ம்ம்ம்...... ரொம்ப கஷ்டம்.. உங்க அன்ப தான் சொன்னேன்.. :)))
எழுத்தில் இத்தனை அருமையாய் உணர்வுகளை காட்ட முடியுமா? பாராட்டுக்கள்!
நெகிழ்ச்சி!!
வாசித்துவிட்டு...
அருமைனு சொல்லவா
நெகிழ்ச்சினு சொல்லவா
கனக்கும் அடர் மௌனத்தை எந்த வார்த்தையில் இறக்கி வைக்க
புத்தகத்துக்கும் நட்புக்குமுண்டான சிலாகித்தல் இல்லையா என்ற ஒற்றை விளிப்பில்:). அனைவருக்கும் புறையேறித்தான் இருக்கும் பா.ரா.
வாங்க வாங்க :)
நெகிழ்வான பதிவு பா. ரா.
வாசு போல நாங்களும் உங்களை எதிர் பார்க்கிறோம்
வெளி நாட்டில் வசிப்பவனின் உணர்வுகளை....கரைத்து வார்த்தைகள் நெய்தீர்களா...பா.ரா....?
வாசிக்கும் வாசகனின் அதுவும் என்னைப் போன்ற வெளி நாட்டில் வாழ்பவர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறதே....வரிகள்... ப.ரா.....!
எண்ணியது எல்லாம் அல்லது உணர்ந்தவை எல்லாம் எழுத்தில் கொண்டு வரும் வித்தையை இறைவன் உங்களுக்கு அருளியுள்ளார்....!
நெகிழ்ச்சியுடன்.... நன்றிகள்!
வெளி நாட்டில் வசிப்பவனின் உணர்வுகளை....கரைத்து வார்த்தைகள் நெய்தீர்களா...பா.ரா....?
வாசிக்கும் வாசகனின் அதுவும் என்னைப் போன்ற வெளி நாட்டில் வாழ்பவர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறதே....வரிகள்... ப.ரா.....!
எண்ணியது எல்லாம் அல்லது உணர்ந்தவை எல்லாம் எழுத்தில் கொண்டு வரும் வித்தையை இறைவன் உங்களுக்கு அருளியுள்ளார்....!
நெகிழ்ச்சியுடன்.... நன்றிகள்
என்ன பின்னூட்டம் இடுவது?? ..நேரில் பேசுவோம்.
நெகிழ்ச்சியான பகிர்வு அண்ணா...
புரை ஏறிவிட்டது.
உங்க வருகையை எதிர்பார்க்கிறேன்
:)
என்ன பின்னூட்டம் போடுறதுன்னு தெரியல. நெகிழ்ச்சியா இருக்கு, அவ்வளவுதான்.
//மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.மார்பில் இருந்து அவன் முகம் நோக்கி பயணித்த நொடியை, நொடியின் நொடியை...//
நீங்கள் என்னிடம் நேரில் சொன்னதுதான், எனினும் வாசிக்கையில் என்னவோ செய்கிறது. என்ன எழுத்து.. கிரேட் பா.ரா அண்ணா.
சிறுகதைகளையும் கொஞ்சம் எழுதுங்களேன் மக்கா.
அண்ணா அன்பைக் கொட்டித் தருகிறீர்கள்.உங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது.
//மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.//
குழைய வைக்கும் மொழி மக்கா !
வாசிக்கும் ஒவ்வொருவரும் உங்களை நேசிக்கத் துவங்குகிறார்கள்
unga blog romba nalla iruku....
Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips
நெகிழ்ச்சியான் பதிவு பா.ரா. சார்.
//அறை வந்து விளக்கு பொருத்தியதும்,"பிளைட்ல குட்டீஸ் எல்லாம் பயப்படாம வந்தாச்சா?" என்றேன் குழந்தைகளிடம். சிரித்தார்கள். //
நானும் சேர்ந்து சிரித்தேன் பா .ரா
ஒவ்வொரு வரியும் மனதைத் தொடுகிறது..
உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html
அருமை என்னும் ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியவில்லை.
test
நட்பின் பரிமாணம் அழகாய் உங்கள் எழுத்தில்...
ஆழமான அழுத்தமான பதிவு.
உங்கள் பிள்ளைகளை பார்த்த சந்தோஷத்தை படிக்கும் போது என்னால் உணர முடிந்தது.
கொயுந்த கோவில் மிருகம் இப்ப என்ன பண்ணுது? ரொம்ப குறும்பு பண்ணுதா? :)
தாங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். நேரில் பேசலாம். நிறைய
/ஸ்வாமி ஓம்சைக்கிள் said...
உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html //
அடிச்சான் பாரு “சைக்கிள்” கேஃப்பில் சிக்ஸர்
//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்//
//அழுவது எவ்வளவு விருப்பமோ, அப்படியே சிரிப்பதும் என்பதால் //
//மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.மார்பில் இருந்து அவன் முகம் நோக்கி பயணித்த நொடியை, நொடியின் நொடியை...//
எவ்வளவு உணர்வுகளை கோர்வையாய், தெளிவாய் வெளிப்படுத்திவிட்டீர்கள்!
என்ன சார் இது, ஒரு பக்கம், அதைப் படிக்கிறதுக்குள்ளே நெகிழ்ந்து நெக்குருகி புல்லரித்து புழகாங்கிதம் அடைந்து மகிழ்ந்து சொற் பிரவாகத்தில் மூச்சுத் திணறி... ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கோம் உங்களைப் படிக்க!
என்ன சார் இது, ஒரு பக்கம், அதைப் படிக்கிறதுக்குள்ளே நெகிழ்ந்து நெக்குருகி புல்லரித்து புழகாங்கிதம் அடைந்து மகிழ்ந்து சொற் பிரவாகத்தில் மூச்சுத் திணறி... ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கோம் உங்களைப் படிக்க!
ஒவ்வொரு குழந்தையையும் பற்றிப் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதிர்பார்க்கிறேன்.
ஏதாவது நல்லாத் திட்டுங்க பா.ரா.. அப்பவாவது நல்லா ஏதாவது வருதானு பாப்போம் எனக்கெல்லாம்.
முகந்தேடிய இடத்தில் நெஞ்சிருந்த கதை. நெஞ்சிருக்கும் இடத்திலெல்லாம் நைஞ்சிருக்கும் கதைதானோ.
காலங் கழியக் கழிய முகங்கள் கீழிறங்கி, நெஞ்சுக்குள் பொதிதலும் நிகழ்தல்தான். உங்கள் முகம் எங்கள் நெஞ்சில்!
புரையேற்றுவதே வேலையாய் ஒருத்தர் அலையுராருப்பா
நம்ம பதிவுக்கு கொஞ்சம் வந்து வாழ்த்துங்கள்
விஜய்
//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்.//
இப்பத்தான் எனக்கு விசா வந்திருக்கு.. கண்டம் விட்டு கண்டம் பறக்க டிக்கெட் வாங்கியாச்சு... ஊர் உறவுக்கெல்லாம் சொல்லிக்கிட்டு கிளம்பற நேரம் பார்த்து, இப்படி ஒரு வரிகளை படிச்சா... புள்ள எப்படி பிளைட் ஏறும் சொல்லுங்க...
நெகிழ்ச்சி.
உணர்வுகளை அப்படியே எழுத்தில் வடிக்க உங்களால் முடிகிறது பாரா.
//மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.மார்பில் இருந்து அவன் முகம் நோக்கி பயணித்த நொடியை, நொடியின் நொடியை...
//
கட்டுரையைக் கூட கவிதையாக்கும் வித்தை உங்களுக்கு அழகாய் கைகூடி இருக்கு
உணர்வுகளின் கூட்டு இப்பதிவு. இது தான் பா.ரா.
அன்பு பாரா,
அருமையான பதிவு...புரை ஏறும் மனிதர்கள் ஒரு புத்தகமாய் போட்டாலும் நல்லாயிருக்கும் என்று தோன்றுகிறது. மொழியின் அடி நாதம் மலைக்கோயிலின் ஒற்றை மணியாய் ரீங்கரித்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது பாரா...
நிறைய எழுதிவிட்டார்கள்... நான் என்ன சொல்லிவிட முடியும்... கைகட்டி வேடிக்கை பார்ப்பதை விடுத்து...
அன்புடன்
ராகவன்
உங்களின் எல்லா வரிகளிலும் உங்களின் முகமாய், மனதாய் இருக்கிறது...
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
நிறைய அன்பும் நன்றியும் மக்கள்ஸ்!
கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு வரியையும்!என்ன சொன்னாலும் குறைவாகத்தான் தெரியும்..பூஊஊஊஊஊஊங்கொத்து!
எப்ப வந்தாலும் புரை ஏறுது மக்கா.. குழந்தைகளுக்கும் புரை ஏறீவிடாமல்.
நன்றி அருணா டீச்சர், தேனு மக்கா!
//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்.
//
உங்களுக்கு மட்டும் சாத்தியமான சிந்தனை. உருக்கம் நிறைய பாரா!!
Post a Comment