Saturday, August 7, 2010

பதிவுலகம் - இப்படிக்கு நான்

நண்பர் ஸ்டார்ஜன் அழைத்த தொடர் பதிவு இது. நன்றி ஸ்டார்ஜன்!

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பா. ராஜாராம்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பா. ராஜாராம், பெயர்.

பா.ரா:- "ஒரு போட்டோ அனுப்புங்க, ப்ளாக்ல போட" என்று தம்பியின் நண்பர் மெயில் செய்த போது, வேண்டாம் என்றேன். பிறகு இந்த பா.ரா. லோகோ அனுப்பி, பிடிச்சிருக்கா? என்றார். பிடிச்சிருந்தது. அப்படி பாராவும் வந்தது. நண்பர்களும் அழைக்கத் தொடங்கினர்.

பிறகொருநாள், கூகுல் தேடலில், இன்னொரு பாரா என்றொரு தேடல் பார்த்தேன். க்ளிக் பண்ணி பார்த்த போது, அந்த இன்னொரு பாரா thaan நான் என அறிந்தேன். முன்பே எழுத்தாளர் பா. ராகவனை பாரா என்றழைக்கிற விபரம் அன்றுதான் தெரிய வந்தது. சற்று வருத்தமாக இருந்தது. சரி, நம்ம எழுத்தாளர் இல்லைதானே, ஒரு ஓரமாக இருந்து விட்டுப் போவோம் என என்னை சமாதானம் செய்து கொண்டேன். கொள்கிறேன். இப்பல்லாம், மகளுக்கு அழை பேசும் போது, "என்ன பாரா, போனையே காணோம் என்கிறாள்?" சந்தோசமாகத்தான் இருக்கிறது. பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

தம்பியும், நண்பரும் தொடங்கித் தந்தார்கள். எழுதுவதை ஆவணப் படுத்துவதே என் முயற்சி, ஆசை. எதிர்பாரா விதமாக உறவுகள் / நண்பர்கள் சம்பாதித்தது, அதிர்ஷ்ட்டம், சொல்லொண்ணா மகிழ்ச்சி.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் எப்பவும் இலக்கில்லை. வாழ்க்கையிலேயே இலக்கில்லாமல் பயணிக்க ரொம்ப பிடிக்கும். அப்படியான ஒரு பயணமாகத்தான் இதுவும். வணக்கத்திற்கு, பதில் வணக்கம் போல், பின்னூட்டங்களுக்கு( நேரம் இருக்கிற போது) பதில். பிடித்த பதிவென்றால் யோசிக்காமல் பின்னூட்டம்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய! ஏன் என்றால் பிடிச்சிருக்கு. பிடிச்சதை செய்ய என்ன பெரிய தயக்கம்? விளைவு என்னன்னா, என்னன்னு சொல்றது மக்கா? சந்தோசமா, விடுதலையாய் இருக்கு. வீட்ல கோபம்னா, சகோதரிகள் / நண்பர்கள் வீட்ல போய் சாப்பிடுவேன். வீட்ல பிரச்சினைடா என்பேன். "போடா லூசு பக்கி" என சாப்பாடும் போட்டு வீட்டிற்கும் அனுப்பி வைப்பார்கள். முழுக்க, என் சுயநலம் கருதியே பகிர்கிறேன். விடுதலை என்கிற சுயநலம்.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

விரும்பியே எழுதுகிறேன். பொழுதும் போகிறது. எழுதியெல்லாம் குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்ற அளவிலேயே என் எழுத்தை புரிந்து வைத்திருக்கிறேன். அதற்காக, சம்பாதிக்க இயலும் எனில், வேண்டாம் என்பவனும் இல்லை. உதாரணத்திற்கு, விகடனில் கவிதை பிரசுரமாகிற போது ஒரு விகடனும் பரிசுத் தொகையும் அனுப்புகிறார்கள். விகடன் மட்டும் போதும் என்றால், மனைவி பிடரியில் அடிப்பாள். 'என்னவோல்ல இவன்ட்டையும் இருந்திருக்கு' என்று மனைவின் பிடரியில் அடிக்க பரிசுத் தொகை உதவியாக இருக்கிறது.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்றுதான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம்- ஏற்பட்டது உண்டு. பின்னூட்டத்தில் இறக்கி வைத்து விடுவதும் உண்டு. தூக்கிக் கொண்டு அலைய கோபம் என்ன குழந்தையா?

பொறாமை - "என்னய்யா இந்த போடு போடுகிறார்கள்?" என்ற நினைப்பிற்கு பெயர் பொறாமை எனில், நிறைய உண்டு. கவிதைகளில், பெயர்கள் குறிப்பிட்டால் பத்தி பெரிசாகும். சிறுகதையில், மாதவராஜ், காமராஜ், அமித்தம்மா, விதூஸ், ஆடுமாடு, மணிஜி, செ. சரவணக்குமார் என்று சொல்லலாம். நகைச்சுவை பத்தி எழுத்துகளில், அனுஜன்யா, ஜெகநாதன், ஆதி, வித்யா(scribblings), நர்சிம், நசரேயன், கார்க்கி, என்று உடன் நினைவு வருகிறார்கள். இன்னும் கூட நிறைய! பெயரை பார்த்ததும் போய் வாசிக்கிறது உண்டு. வாசிக்கிற பட்டியலுக்கு போய் மூளையை இவ்வளவு சுரண்டனுமான்னு வருது. ஏற்கனவே, கரண்டி பாத்திரத்தை சுரண்டும் சத்தம்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

பின்னூட்டத்தில், கோ.வி. கண்ணன் சார்.

அழை பேசியில், ஜ்யோவ்ராம் சுந்தர். அது, "இந்தப்" பதிவில்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

விருப்பம் என்று வற்புறுத்தி கேட்பதால், அக்டோபரில் மகளின் திருமணம். மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்.

அழைக்க விரும்புவர்கள்:

1. நர்சிம்

2. d.r. அசோக்

3. கமலேஷ்

4. வேல்கண்ணன்

5. ரவிச்சந்திரன் & Mrs.கீதா ரவிச்சந்திரன்

(இதில் யார் யார் எழுதியது என தெரியவில்லை. எழுதாதவர்கள் எழுதுங்களேன் மக்களே)

***

50 comments:

தமிழ் அமுதன் said...

மகளுக்கு அழை பேசும் போது..! "என்ன பாரா,
போனையே காணோம் என்கிறாள்"

சந்தோசமாகத்தான் இருக்கிறது..!

பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்..!

கவிதை..!கவிதை..!
அருமை தலைவரே...!

Unknown said...

//பிரபலம் எப்பவும் இலக்கில்லை. வாழ்க்கையிலேயே இலக்கில்லாமல் பயணிக்க ரொம்ப பிடிக்கும். அப்படியான ஒரு பயணமாகத்தான் இதுவும்//

எதார்த்தம்....

'பரிவை' சே.குமார் said...

பாரா அண்ணா...
உங்கள் நடையில் நல்ல பகிர்வு.
மகள் பெயர் சொல்லி அழைப்பதும் அதைக் கேட்பதும் தனி சுகம்தானே?

ரோஸ்விக் said...

ம்ம்ம்... சித்தப்பா எதை எழுதினாலும் கொள்ளையடிக்கிரதே வேலையாப் போச்சு.... :-)

Jackiesekar said...

விருப்பம் என்று வற்புறுத்தி கேட்பதால், அக்டோபரில் மகளின் திருமணம். மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்.//

ஓ இப்படி ஒரு ஆசை வேற இருக்கா... அண்ணியை வந்து மீட் செய்யறேன்..

Vidhoosh said...

சூப்பர் சூப்பரோ சூப்பர்.. :))

நேசமித்ரன் said...

நல்லாருக்கு பா.ரா

//விருப்பம் என்று வற்புறுத்தி கேட்பதால், அக்டோபரில் மகளின் திருமணம். மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்//

ரைட்டு ,,,,,

அதுக்குள்ளயா 60 வயசாகிடுச்சு ?
:)))

வினோ said...

பா ரா அண்ணே சூப்பர்... நல்ல பகிர்வு..
அக்டோபர் எப்போ கல்யாணம் அண்ணே? நானும் இந்திய போலன்னும் இருக்கேன் அக்டோபர்ல..

பா.ராஜாராம் said...

@ நேசா
//அதுக்குள்ளயா 60 வயசாகிடுச்சு ?
:)))//

அடிச்சான் பாரு, சிக்ஸ்சர்! :-))

இரசிகை said...

//
நேசமித்ரன் said...
நல்லாருக்கு பா.ரா

//விருப்பம் என்று வற்புறுத்தி கேட்பதால், அக்டோபரில் மகளின் திருமணம். மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்//

ரைட்டு ,,,,,

அதுக்குள்ளயா 60 வயசாகிடுச்சு ?
:)))

//

ada.....!!
ithai ippadiyum yeduththukidalaamla..:)
azhagu.

naanum amma appavai peyar solliththaane koopiduren.."peyar sollum pillaikal naangal"..:)

vaaaazhthukkal rajaram sir..!

பா.ராஜாராம் said...

@வினோ
மெயில் i.d தெரியப் படுத்துங்களேன் மக்கா.
rajaram.b.krishnan@gmail.com

அப்பாதுரை said...

மகள் திருமணத்துக்கு வாழ்த்துக்கள்
(உங்கள் துணிச்சலுக்கும் :-)

க.பாலாசி said...

எதக்கொடுத்தாலும் ஒருகாதுல புகுந்து இன்னொரு காதுல எட்டிப்பார்க்கிறீங்களே...

க ரா said...

நல்ல பகிர்வு மாம்ஸ்...

கலகலப்ரியா said...

||பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்||

:)

கலகலப்ரியா said...

|| அக்டோபரில் மகளின் திருமணம்||

வாழ்த்துகள்...

தமிழ் உதயம் said...

உங்களை அறிய தந்தீர்கள்.
மகள் திருமணத்துக்கு வாழ்த்துக்கள்

dheva said...

சித்தப்பா..@ எதார்த்தமான டச்சிங்க் பதில்கள் சித்தப்பா!

vasu balaji said...

:). பின்றீங்க பா.ரா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கலான பதில்கள் பாராண்ணே..

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்கள் மகள் திருமணம் இனிதே நடைபெற இறைவனிடம் பிராத்திக்கிறேன்.. என்னுடைய வாழ்த்துகளை சொல்லிடுங்க பாராண்ணே..

ராஜவம்சம் said...

அழகாக சொல்லியிறுக்கிறீர்கள் மகிச்சியாக உள்ளது.

ஒரு சிறு மனவருத்தம்

ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் ஆகிவிட்டது நான் சித்தி என்று கூப்பிட நினைத்தவள்.

rajasundararajan said...

நேசமித்ரன் அடித்த 'ஸிக்ஸர்'க்கு சிரித்ததில், வாயுப்பிடிப்பு வலிப்பு வந்துவிட்டது. 57 வயசுக்கே இப்படி, தம்பிக்கு இல்ல இல்ல அண்ணனுக்கு ஒன்னும் ஆகலையா!

(//RAJ said..

CLICK AND READ

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.//

இதில் ஏதோ தில்லுமுல்லு (வைரஸ்) இருப்பதுபோல் தெரிகிறது. எச்சரிக்கை!)

சுசி said...

மகாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஓட்டுப் பட்டையில புடிச்சுதான்னு கேட்டிருந்தாங்க.. உடனவே க்ளிக் பண்ணிட்டேன்.

CS. Mohan Kumar said...

அருமை ராஜாராம் ரசித்தேன்

Ashok D said...

பதில்கள் short & sweet..

நான் இன்னும் 2 வருஷத்துக்குள்ள பதிவ போட்டுற்ரன் சித்தப்ஸ்... :)

நேசமித்ரன்.. சிக்ஸர்தான்

Ravichandran Somu said...

பா.ரா அண்ணே,

யதார்த்தமான, அருமையான பகிர்வு.

என்னையும், வீட்டு Boss-யையும் அழைத்தற்கு மிக்க நன்றி! தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளேன். சிங்கை திரும்பியதும் அடுத்த வார இறுதியில் எழுதுகிறேன்.

//ரைட்டு ,,,,,

அதுக்குள்ளயா 60 வயசாகிடுச்சு ?
:)))//

இது சூப்பர்.................

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அம்பிகா said...

பாரா அண்ணா, வழக்கம் போல உங்கள் நடையில் ஒரு அருமையான பகிர்வு.
\\பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்..!\\
என் பையன்களும் அப்படி தான்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பின்னிட்டீங்க..பா.ரா. நீங்க!!!!!!

thamizhparavai said...

\\பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்..!\\
:-)
ரசிக்க வைத்தமைக்கு நன்றி பாரா...

சிநேகிதன் அக்பர் said...

கோக், பெப்சி, ராணி(?),மோசி(?) இன்னும் பல இருந்தாலும்...

தண்ணீரை குடித்தது போல கலப்பில்லாமல் இருந்தது உங்கள் பதில்கள், நிறைவாகவும்...

இறைவன் நாடினால் ஊரில் கல்யாணத்தில் சந்திப்போம் அண்ணே.

மகளுக்கு எனது வாழ்த்துகளும்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க ராஜாராம்

:~)

தூயவனின் அடிமை said...

அழகான பதில், உங்கள் இல்ல திருமணத்திற்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.

ஹேமா said...

அண்ணா..நீங்க எங்க சூப்பர் ஸ்டார்.

Mahi_Granny said...

வாசிக்கும் போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது காரணம் தெரியவில்லை. ஒரு ஓரமா உட்கார்ந்துட்டு போகவேண்டிய ஆளா நீங்க . இவன்கிட்டையும் எதோ ஒன்னு இருக்குன்னு அவங்க மட்டுமில்ல எல்லோருக்கும் தெரியும். அருமையாய் வந்திருக்கு. வாழ்த்துக்கள் தம்பி

Unknown said...

அழகான பதில்கள்

காமராஜ் said...

நான் ஆகப்பெரிய சொத்தாக பாதுகாத்து வைத்திருப்பது இதுதானோ ?
நான் அரிய விருதாக போற்றிப்பாதுகாப்பதும் இதுதானோ? அன்புக்குறியவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பது எவ்ளோ கொடுப்பினை.நெகிழ்ந்து போகிறேன்...

Romeoboy said...

\\மகளுக்கு அழை பேசும் போது, "என்ன பாரா, போனையே காணோம் என்கிறாள்?" சந்தோசமாகத்தான் இருக்கிறது. பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்.//

இதை தான் இங்கிலீஷ்ல சொல்லுவாங்க "AWESOME"

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெண்டு கல்யாணத்துக்கும் வாழ்த்து.. :)ஒன்றில் ஆசி குடுக்கனும்.. ஒன்றில் ஆசி பெறனுமோ நாங்க.. :)

Vidhya Chandrasekaran said...

வீட்டு விசேஷத்துக்கு வாழ்த்துகள்.

பதில்கள் - நன்று.

அப்புறம் என் பேர் - ஹி ஹி. காமெடிக்கு தான:))

a said...

//
இப்பல்லாம், மகளுக்கு அழை பேசும் போது, "என்ன பாரா, போனையே காணோம் என்கிறாள்?" சந்தோசமாகத்தான் இருக்கிறது.
//
"என்ன பாரா, உங்க பாரா(pharagraph)வை கொஞ்ச நாளா காணோம்ன்னு" எழுதிட போறாங்க..

Kumky said...

ம்..ம்...

அக்டோபர்.

நல்லது.

ஆ.ஞானசேகரன் said...

உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி நண்பரே....

Thenammai Lakshmanan said...

பாரா .. மக்கா என்ன ஆச்சு.. பேரனைப் பார்க்க ஆவல்னா ஒத்துக்கலாம் என்னது இது..??:)))

August 7, 2010 3:07 AM
நேசமித்ரன் said...
நல்லாருக்கு பா.ரா

//விருப்பம் என்று வற்புறுத்தி கேட்பதால், அக்டோபரில் மகளின் திருமணம். மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்//

ரைட்டு ,,,,,

அதுக்குள்ளயா 60 வயசாகிடுச்சு ?
:)))
ஹாஹாஹா

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

ரமதான், மற்றும் அதன் சார்ந்த வேலைகள் தொடக்கம். தனித்தனியாக கை பற்ற இயலவில்லை. சின்னூண்டு கேப் கிடைச்சாலும் ஓடி
வந்துருவேன். கேட்டீங்களா? (அலாரம்?)

நன்றி மக்கள்ஸ்!

Geetha Ravichandran said...

அழகான பதில்கள். அழைப்பிற்கு மிக்க நன்றி. எங்கள் வாழ்த்துக்கள்.

விஜய் said...

கைப்பக்குவம் ருசி

வாழ்த்துக்கள் பங்கு

விஜய்

கமலேஷ் said...

//மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்//

ரைட்டு - நீங்க ஊருக்கு போங்க - அம்மா, பூரி கட்டையோட உங்களுக்காக காத்திருப்பங்கன்னு நினைக்கிறேன்

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்கப்பா...

லேட்டாதான் பார்கிறேன். நானும் எழுதுறேன்.

Thamira said...

உங்களது பொறாமை லிஸ்டில் என் பெயருமா?

Owner's pride.! :-)

Ravichandran Somu said...

அண்ணா,

ஒரு வழியாக நான் பதிவு எழுதிவிட்டேன்:)

http://vssravi.blogspot.com/2010/08/blog-post_18.html