Monday, August 30, 2010

பா. ராஜாராம் கவிதைகள் - ஏழு

ஒன்று(Picture by cc licence, Thanks Horia Varlan )

கேள்விக் குறியும்
ஆச்சரியக் குறியும்
கோட்டோவியமே.
சற்று
கூன் மட்டும் கூடுதல்
கேள்விக் குறியிடம்.

இரண்டு


(Picture by cc licence, Thanks Silent shot)

திருமண கொட்டகையில்
கொட்டுகிறது மழை
மேலாக.

கீழாக
கலர் கலராய்
சொட்டுகிறது.

மூன்று


(Picture by cc licence, Thanks Hunter Jumper)

லையில்
அடித்துக் கொண்டிருந்தது
மரத்தை வெயில்.
தாங்கிக் கொண்டிருந்தது
நிழல்.

நான்கு


(Picture by cc licence, Thanks Mrs. Gemstone)

புழுவை கொத்தியது கொக்கி.
தன் பங்கிற்கு
மீனையும் கொத்தியது புழு.

ஐந்து


(Picture by cc licence, Thanks Runran)

பித்தின் நிகழ் வாசலில்
வெட்டப் படுகிறது எப்போதும்
ஆட்டுக் குட்டியைப் போன்றே
காதலும்.

ஆறு


(Picture by cc licence, Thanks Mary Jane watson )

ண்ணெய் தேய்த்து
குளித்த பிறகு தூங்கும்
சனிக் கிழமையை

பொன் கிடைத்தாலும்
கிடைக்காத புதன் கிழமையை

னங்கிழங்கு கிடைக்கும்
திங்கள் சந்தையை

ண்புழு தடமூறிய
மழை நாளை

பிழைக்க வரும் போதே
தொலைத்தும் வர வேண்டியதாகிறது.

***
-----------------------------------------------
பா.ராஜாராம் கவிதைகள் - 1, 2, 3, 4, 5, 6
------------------------------------------------


56 comments:

Anonymous said...

அனைத்தும் சொல் ஓவியம் அண்ணா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது என்ன கலர் மழை .. சாயம்போகிற ஷாமியானாவா..
மரமும் நிழலும் மீனும் புழுவும் கொக்கியு ம் ஆஹா ந்னு இருக்கு பா.ரா.

RVS said...

பா. ரா ஆறும் அருமை..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

dheva said...

எல்லாமே முத்துக்கள் சித்தப்பா..

பிழைக்க வரும்போது தொலைத்து வர வேண்டும் என்ற இடத்தில்...தேம்புகிறேன்....இயலாமையில்....!

Deepa said...

அனைத்துமே ந‌ட்ச‌த்திர‌ முத்துக்க‌ள்!

//புழுவை கொத்தியது கொக்கி.
தன் பங்கிற்கு
மீனையும் கொத்தியது புழு.//

இது எனக்குப் புரிய‌வில்லை. :(

Chitra said...

எண்ணெய் தேய்த்து
குளித்த பிறகு தூங்கும்
சனிக் கிழமையை

பொன் கிடைத்தாலும்
கிடைக்காத புதன் கிழமையை

பனங்கிழங்கு கிடைக்கும்
திங்கள் சந்தையை

மண்புழு தடமூறிய
மழை நாளை

பிழைக்க வரும் போதே
தொலைத்தும் வர வேண்டியதாகிறது.


...... எதார்த்தம்!!!
எல்லாக் கவிதைகளையும் ரசித்தேன்....
6? or 7?

சைவகொத்துப்பரோட்டா said...

படிக்கும்போதே பிடித்துப்போனது ஆறு.

vasu balaji said...

ஆறுல கடைசியா ‘ஆறு!’. சூப்பர்ப்.

rvelkannan said...

ஆறும் அருமை அண்ணே
ஆறு மனதை பிசைகிறது

பின்னோக்கி said...

6 வது அழகு.

பித்தின் நிகழ் வாசல்
என்றால் என்ன என்று தெரியவில்லை

PB Raj said...

நன்றாக உள்ளது

vasan said...

ஆச்ச‌ரிய‌ம்!! வ‌ள‌ர்ந்த‌தால்,கூனிக் குறுகி கேள்விக் குறியான‌தோ?

Mahi_Granny said...

ஆச்சரியக்குறியாய் கவிதையையும் கேள்விக்குறியாய் எப்படி இவரால் என்றும் ரசிக்கிறேன்.

Thamira said...

ஆறு பழகியதைப் போலவே இருந்தாலும் பெரும் வீச்சு உள்ளது.

priyamudanprabu said...

அருமை..

வினோ said...

அப்பா... அனைத்தும் அருமை...

பித்தின் நிகழ் வாசல் ?

Ravichandran Somu said...

ஆறும் அருமை அண்ணா!

ஆறு -- ஏக்கம்:(

க.பாலாசி said...

அருமையான கவிதைகள்.. ஆறாவதில் நிலைத்துப்போகத்தான் வேண்டும்.

Vidhya Chandrasekaran said...

ஆறு - சோகம்:(

நர்சிம் said...

!, ;) , !! ,;(, !!!!, ;( ;(.

rajasundararajan said...

//ஆத்தாளுக்கு ரத்தம்.
நமக்கு,
மனசுகளின் இறைச்சி//

'மனசுகளின் இறைச்சி'யில் மனசும் இறைச்சியும் ஒட்டவில்லையோ என்று தோன்றுகிறது.

(abstract-உம் concrete-உம் ஒட்டாது என்று கவிஞர் பிரமிள் சொன்னதை, சில மனிதர்களையும் நிகழ்வுகளையும் வார்த்துச்சேர்த்து 'மீளாப் போக்குகள்' என்று நான் எழுதியதொரு குப்பையை அனுப்பித் தந்தேனா?)

Concrete திட்டவட்டத்துள் abstract-களின் எல்லையின்மை குறைவுபடாமல் மேலெடுக்க வாய்ப்புண்டா?

விமர்சனம் எழுதிவிட்டேனோ? என்றால், மன்னிக்க!

//பித்தின் நிகழ் வாசலில்
வெட்டப் படுகிறது எப்போதும்
ஆட்டுக் குட்டியைப் போன்றே
காதலும்.//

இது நல்லா இருக்கு.

எல்லாக் கவிதைகளிலும் ஒன்றுதொட்டு ஒன்றாக வரும் உள்ளடக்கமும் நன்று.

Ahamed irshad said...

பெயர் பா ரா'ன்னு வெச்சுக்கிட்டு எல்லோரும் பார்க்கிற மாதிரி எழுதிட்டீங்களே சார்.. அனைத்துமே அசத்தல்.. அதிலும் நிழல் மரம் கவிதை திரும்ப திரும்ப படித்தது..

அன்பேசிவம் said...

எல்லாமே நல்லா இருந்தாலும் மூணும் நாலும் கலக்கியெடுக்குது, மகாப்பா....:-)

Paleo God said...

ஆமாண்ணே ஆச்சர்யமாய் பார்க்கும் குழந்தைக்கு குனிந்து கேள்விகளை ஊட்டும் தந்தையாய் நம்பர் ஒன்! :)


நேத்தெல்லாம் புரை ஏறிச்சாண்ணே? :)

சுசி said...

நாலாவது பிரமாதம்.. மீதி :))

கலகலப்ரியா said...

வழக்கம் போல அருமை பா.ரா.

நட்சத்திர வாழ்த்துகள்... தாமதத்திற்கு மன்னிக்கணும்..

நிலாமகள் said...

கவிதைகளும் படங்களும் கலக்கல்!!

கே. பி. ஜனா... said...

அந்த ஆறாவது கவிதை மனசை பிசைகிறது

'பரிவை' சே.குமார் said...

//புழுவை கொத்தியது கொக்கி.
தன் பங்கிற்கு
மீனையும் கொத்தியது புழு.//

//பிழைக்க வரும் போதே
தொலைத்தும் வர வேண்டியதாகிறது.//

எல்லாம் அருமை...
மேலே உள்ள வரிகள் என்னை இறுக்கமாய் பற்றிக்கொண்டன.

அண்ணாவை விட சித்தப்பா இன்னும் பாசத்துடன் மரியாதையையும் கூட்டும் அல்லவா?.
அதனால் இன்று முதல் சித்தப்பா...

வரிகளில் லயித்'தேன்' சித்தப்பா.

க ரா said...

மாம்ஸ் எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு.. கடைசி உண்மை மாம்ஸ் :)

அன்புடன் அருணா said...

/பிழைக்க வரும் போதே
தொலைத்தும் வர வேண்டியதாகிறது./
இப்படிப் பிழைக்க வரும் போது தொலைத்தவைகள் நிறைய இருக்கு மனசுக்குள்!

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை பா ரா.

Ashok D said...

5 - மனதின் ஆழம் தெரிகிறது அல்லது ஆழ்ந்த ஆளுமை புரிகிறது(ரொம்ப பிடிச்சது சித்தப்ஸ்)

6 - என்னென்மோ சொல்லி திரிகிறது நினைவுகளின் விரிசலில்.. ஒவ்வொரு கிழமைகளும் விழித்துக் ’கொல்’லுகிறது

1 - எண்/வார்த்தை விளையாட்டு ’மற்றும்’ தத்துவமெனக்கொள்ளலாம்

2 - எளிமைதான்.. இன்னும் பிடிபடவில்லை.. மறுபடி மறுபடி முயற்சிக்கிறேன்... அல்லது சிக்குகிறேன்

3 & 4 - வார்த்தை விளையாட்டு

இதனை படித்து உணர்வதுதான் ஏழாவது கவிதையோ?


7.
கிளர்ந்து எழும் எண்ணங்களின்
கணம் தாங்காமல் ஆன்மா
மெல்ல மெல்ல வழுக்கி
உள்ளே வீழ்கிறது

ருத்ர வீணை® said...

எல்லாமே அருமை.. இதையும் கொஞ்சம் பாருங்க

http://rudhraveenai.blogspot.com/2010/08/blog-post_31.html

பா.ராஜாராம் said...

ராஜசுந்தரராஜன் அண்ணே,

அனுப்பி தந்தீங்க அண்ணே. நானும் வாசித்தேன். வாசித்துக்கொண்டே இருக்கிறேனும் கூட. ஆனால் இன்னும் பிடிபடல. விமர்சனம் இல்லையண்ணே இது. உதவிதான்ண்ணே.

தெளிவு விரும்பி,
'மனசுகளின்' எடுத்துர்றது. அப்படி எடுக்கும் போது, கவிதையில் அர்த்தம் மாறுகிறதா? அதாவது "நமக்கு இறைச்சி" என்பதில் காமம் என்பது பொருள் ஆகிறதா? (அதுவும் அர்த்தமாகிறது என்பது பிரச்சினை இல்லை).

பாலா அறம்வளர்த்தான் said...

கவிஞர் சொல்ல வருவதாக நான் புரிந்து கொள்வது:

மனசு என்பது அருவமானது. இறைச்சி என்பது உருவம் கொண்டது. அவை இரண்டும் ஓட்டவில்லை என்கிறார். உதாரணமாக காமப் பிசாசு OK - காமமும் பிசாசும் அருவமே.

அன்பரசன் said...

அருமை சார்..

ஜெயசீலன் said...

superb

velji said...

எல்லாம் நல்லாயிருக்கு.

ஆறு-ரொம்ப நல்லாயிருக்கு.

Anonymous said...

எல்லாமே ஆச்சர்யக்குறி பா :) கடைசிக் கவிதை மட்டும் ;'(....

விஜய் said...

(,) பங்கு

விஜய்

rajasundararajan said...

//பாலா அறம்வளர்த்தான் said...

மனசு என்பது அருவமானது. இறைச்சி என்பது உருவம் கொண்டது. அவை இரண்டும் ஓட்டவில்லை என்கிறார். உதாரணமாக காமப் பிசாசு OK - காமமும் பிசாசும் அருவமே.//

ஆமாம், ‘காமப் பிசாசு’ என்பதில் ஒரு குருட்டு வெறி அர்த்தப் படுகிறது. அதையே, ‘காம ஓநாய்’ என்று சொன்னால், வேட்டையாடுதல் காட்சிப் படுகிறதே யல்லாமல் அந்தக் குருட்டு வெறியாட்டம் சூழ்ந்துபிடிக்கவில்லை. ‘பிசாசு’-இல் உடல், உயிர், ஆவி, குடி, குலம் என அனைத்தையும் அலைக்கழிக்கும் ஓர் எல்லையின்மை, ‘ஓநாய்’-இல் உடம்பைக் கிழித்து உண்ணுகிற எல்லைக்குள் சுருங்கிவிடுகிறது.

// பித்தின் நிகழ் வாசலில்
வெட்டப் படுகிறது எப்போதும்
ஆட்டுக் குட்டியைப் போன்றே
காதலும்.//

இந்தக் கவிதையில் என்ன அழகு என்றால், ‘காதல்’ அருவமானது; ‘ஆட்டுக்குட்டி’ உருவமானது. ‘வெட்டப்படுதல்’ இரண்டுக்கும் பொதுவாகிறது. ‘பலி’ என்கிற புரிதலில் வெட்டுகிற ஆயுதம் ஒரே நேரத்தில் உருவமாகவும் அருவமாகவும் தொழிற்படுகிறது. அதனால் உணர்ச்சி வடிதற் குழப்பம் இல்லை.

//ஆத்தாளுக்கு ரத்தம்.
நமக்கு,
மனசுகளின் இறைச்சி//

இப்பொ, சாராம்சம் தெய்வத்துக்கு, சக்கை நமக்குன்னு பங்கு போடுறோம். பழி தெய்வத்துக்கு பாவவகாரியம் நமக்குன்னு ஆகுது. அதாவது செய்யுறதையும் செஞ்சிட்டுத் தெய்வத்து மேல பழியப் போடுறோம்.

ஆனால் இவ்வளவும் பித்தின் நிகழ் வாசலில் நேர்கிறது, ஆகவே, மனசுகளுக்கு அங்கே அர்த்தமில்லை; இடமில்லை. அவலமே அதுதான். அதே ஆட்டுக் குட்டியை அதுநாள் வரை பேணி வளர்த்த ஒரு மனசும் கூடக் களத்தில் உண்டு. புரிதலை வேண்டும் மனசுகளின் வியாழத்தை (விரிவானதை ஆழமானதை) நாச்சுவைக்குத் தீனிபோடும் இறைச்சியோடு பிணித்தால் உணர்ச்சி இழிதல் நேராதோ?

//பா.ராஜாராம் said...

தெளிவு விரும்பி,
'மனசுகளின்' எடுத்துர்றது. அப்படி எடுக்கும் போது, கவிதையில் அர்த்தம் மாறுகிறதா?//

'அருவம் x உருவம்' பற்றித்தான் பேசுகிறோம். கவிதையைத் திருத்தி எழுதுதல்/ மறுஉருவாக்கல் கவிஞர் மூளைக்குள் விடியக்கூடிய ஒன்று. அதுபற்றியொரு தீர்வும் இல்லை.

ஹேமா said...

சொல்லுச் சொல்லாய் சேர்த்துச் சொல்ல அண்ணா நீங்கள்தான்.
தொலைத்தவைகளைச் சொல்லி அழவைத்திவிட்டீர்கள்.

பா.ராஜாராம் said...

நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணே! தம்பிக்கு மெயில் செய்திருக்கிறேன். மாற்றுவான். அப்புறம் அண்ணே, உங்க "மீளாப் போக்குகள்" பாலா அறம்வளர்த்தான் வாசிக்க விரும்பி கேட்டிருந்தார். பார்வர்ட் பண்ணி வச்சேன். இது உங்க தகவலுக்கு அண்ணே.

பாலா, மிக்க நன்றி! வாசிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். :-)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அனைத்துமே அசத்தல். ரசித்தேன் .

ப்ரியமுடன் வசந்த் said...

அத்தனையும் ரசனை

மரம் நிழல் வார்த்தையில் விளையாடியிருக்கீங்க.,..

Unknown said...

ஆறாவது அருமை...

உயிரோடை said...

க‌விதை எல்லாம் ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா

bogan said...

கலர் மழை மட்டும் புரியவில்லை.ப்ராக்டிஸ் பத்தலையோ என்னவோ..பிழைக்க வரும்போது நிறையத் தொலைத்துவிடுகிறோம் சரியே...ஆனால் அந்த நாட்களில் நமது கனவுகள் நகரம் நோக்கி அல்லவா இருந்தது?

பாலா அறம்வளர்த்தான் said...

இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறேன் பா ரா - அற்புதமான ஆளுமை.
ராஜசுந்தர்ராஜன் சார் - நான் கேட்க நினைத்த கேள்விக்கும் (ஆட்டுக் குட்டி-காதல்) சேர்த்து பதில் சொன்னதற்கு நன்றி. உங்களுடைய பின்னூட்டம் ஒவ்வொன்றும் புதிது புதிதாக கற்றுத் தருகிறது. நீங்கள் வலையுலகில் எழுத வரவேண்டும், வரும்வரை, உங்களுடைய பத்திரிக்கையில் பதிந்த எழுத்துக்களை பா ரா தளத்திலாவது பதிய சொல்லுங்களேன்.

cheena (சீனா) said...

அன்பின் பாரா

அத்தனையும் அருமை -
கூனாகிப் போன ஆச்சர்யக் குறி கேள்விக்குறியாய் .....

மேலே கொட்டிய மழை கீழே கலர் கலராய் - அடடா - கன்ணில் கண்ட சிறு இயல்பான நிகழ்வு ஒரு அருமையான கவிதைக்கு கருவா ?

வெயில் நிழல் - நன்று நல்ல கற்பனை

மீனைக் கொத்திப் பழை வாங்கிய புழு - கற்பனையின் உச்சம்

பிழைக்க வரும் போதே தொலைத்து வர வேண்டிய சூழ்நிலை - நெகிழ்ச்சியின் உச்சம் பாரா

அனைத்துமே அருமை பாரா
நல்வாழ்த்துகள் பாரா
நட்புடன் சீனா

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

தனித் தனியாக கை பற்ற இயலவில்லை. வேலைப் பளு மற்றும் கிடைக்கும் நேரத்தில் தமிழ் மணத்திற்கான மறுநாள் இடுகை தயார் செய்ய வேண்டிய சூழல்.இவ்வளவு சிரமப் பட்டு, எங்களையும் சிரமப் படுத்த, அப்படி நீ இடுகை தயாரிக்கனுமாக்கும்? என்பீர்கள். விடுங்க மக்கா. இன்னும் நாலு நாள்தானே. பொழைச்சு போய்க்கிறேன். நீங்களும் பொறுத்து போய்க்கிருங்க.

பின்னூட்டத்தில் அன்பு செய்த அனைவருக்கும், அன்பும் நன்றியும்!

பாலா அறம்வளர்த்தான் said,

// நீங்கள் வலையுலகில் எழுத வரவேண்டும், வரும்வரை, உங்களுடைய பத்திரிக்கையில் பதிந்த எழுத்துக்களை பா ரா தளத்திலாவது பதிய சொல்லுங்களேன்.//

ஆமாம் அண்ணே, மனசு வையுங்கள். (பத்திரிக்கையில் வெளியான எழுத்துக்களையாவது) நம்ம மக்களுக்கும் பெரிய presentaion-ஆக இருக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

6ம் பிடித்திருக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

எல்லாமே அசத்தல்.

கடைசியில ஒன்னு வச்சிங்க பாருங்க அது ஆப்பு.

இரசிகை said...

aththanaiyum azhagu......
last one class ..ippadiththaan solla ninaiththen.
raju iyavin pinnoottam koduththa vilakkkathil naan antha kavithaiyinul moozhkik kidakkiren....!!

nantri iyaa!
vaazhthukal rajaram sir!

இரசிகை said...

aththanaiyum azhagu......
last one class ..ippadiththaan solla ninaiththen.
raju iyavin pinnoottam koduththa vilakkkathil naan antha kavithaiyinul moozhkik kidakkiren....!!

nantri iyaa!
vaazhthukal rajaram sir!