Monday, January 17, 2011

குழந்தைக் குருவி


(Picture by cc licence, Thanks Sfllaw )

ழையின் வேகம் பொறுக்க மாட்டாது
புறப்பட்டு வந்த சிட்டுக் குருவியொன்று
எனைப் பார்த்ததும் புறப்பட்டும்
போய்விட்டது.

நொடி நேரம் இருக்குமா
புறப்பட்டு வந்ததிலிருந்து
போனது வரையில்?

னக்கொன்றும் ஆட்சேபனை இல்லை
வந்த சனியன் சற்று இருந்து
நனையாமல் போக.

ன்றாலும் வாஸ்த்தவம்தான்..

நாளையோ மறுநாளோ
நான் கிடைப்பேன்.

ழை கிடைக்குமா?


--கல்கி (இந்த வாரம்)
நன்றி கதிர்பாரதி, கல்கி

34 comments:

க ரா said...

arputham.. vera enna solla...engirunthuthan pidikiringalo ....

உமர் | Umar said...

கண் முன் காட்சியாய் விரிவதே சிறப்பு!

ராகவன் said...

அன்பு பாரா,
அருமையான கவிதை... அந்த சனியனை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜனரஞ்சக பத்திரிக்கைகள் என்று அறியப்பட்ட பத்திரிகைகளில்... இது போல மக்கள் கவிஞனின் கவிதை வருவது சுகமாய் இருக்கிறது... அற்புதமாய் இருக்கிறது... மறுபடியும் வாசிக்க ஆரம்பிக்கிறேன்... பாரா

அன்புடன்
ராகவன்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை பா ரா. வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

அற்புதமாய் இருக்கிறது.

dheva said...

//மழை கிடைக்குமா?//

அதானே சித்தப்பா...மழை கிடைக்குமா?

சாந்தி மாரியப்பன் said...

அற்புதமான கவிதை..

வடகரை வேலன் said...

ஏங்க ராஜாராம் குருவியப் போய்சனியனேன்னு சொல்றீங்க.

ஓ பாசமாச் சொன்னீங்களோ?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//சனியன்//
ம் ...

ஹேமா said...

இப்பிடி மழை கொட்டி அழிச்சுக்கிட்டி இருக்கு.மழை கிடைக்குமான்னு கேள்வி கவிதையில !

வினோ said...

அப்பா எனக்கும் ராகவன் அண்ணா சொன்னது தான் தோன்றியது...

Chitra said...

அருமை.....

மாதவராஜ் said...

ஆஹா...!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மழையும் குருவியும் உங்களுக்கு.
நீங்களும் மழையும் குருவிக்கு.
மழை குருவியுடன் கவிதை எங்களுக்கு.

க.பாலாசி said...

ரொம்ப..ரொம்ப.. அருமையான கவிதை...

"உழவன்" "Uzhavan" said...

Read in Kalki itself.. so happy :-)

Ashok D said...

நல்ல ட்விஸ்ட்... thinking from the outside of the box... நல்லா இருந்தது...

கவிதை புரியும் கணத்தில் வரும் நிலை அழகானது .. சித்தப்ஸ் :)

VISA said...

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பா ரா

Sriakila said...

super!!

மாதேவி said...

மழையில் நனையும் சின்னக் குருவி மனத்தை நிறைக்கிறது.

சமுத்ரா said...

மழை இல்லை என்றால் அது உங்களிடம் ஏன் வரப்போகிறது?

கோநா said...

அருமையான கவிதை...பா ரா. வாழ்த்துக்கள்.

Gowripriya said...

அருமை
:))))

கவி அழகன் said...

உணர்வு பூர்வமான கவிதை

அம்பிகா said...

சனியன்..., செல்லமாய்....
நல்லாயிருக்கு கவிதை.

RaGhaV said...

அழகு.. :-)))

omvijay said...

குருவியின் கீச்சிடலில் கரைகிறது மழைச்சந்தம்

வாழ்த்துக்கள் பங்கு

விஜய்

Santhini said...

Beautiful.

காமராஜ் said...

ரொம்ப அனுபவிச்சு படித்தேன் பாரா.
போன வாரம் ஒரு முயல் ஒன்று சுற்றுச்சுவருக்கே வெளியே நிண்ருகொண்டிருந்து நானும் அவளும் வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தோம்.சடீரென மறைந்துபோனது நான்குபத்தாண்டுகள்.

ப்ரியம் ப்ரியம் ப்ரியம்.

சனியன் இன்னும் தூக்கல்.

மன்னிச்சுக்குங்க ராகவன்.

rvelkannan said...

எல்லாமே அருமை பா.ரா
அந்த 'சனியனையும்' சேர்த்து

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்குங்க அண்ணா. கல்கியில் வந்ததற்கு வாழ்த்துகளும் கூட

Raja said...

பாசத்திற்குரிய குட்டி சனியன்...வாழ்த்துக்கள் பா.ரா.

பா.ராஜாராம் said...

நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்!

(இந்த 'அன்பும்' என்பதை தட்டுச்சு செய்கிற போதெல்லாம் 'அன்பை' எழுதுவது போல்தான் இருக்கிறது.)