Sunday, January 23, 2011
மிதக்கும் வெளியில் நீந்தும் தோணி
(Picture by cc licence, Thanks Heavenhated)
அவளுக்கு ஆறேழு வயது
அதிகமிருக்கும் என்னைவிட.
சாதாரண நாளின்
அசாதாரண இருள் போல இருந்தவள்
நல்ல பசிண்ணா என தொடங்கினாள்.
என்னிடம் நுரைகளற்ற மூணு அவுன்சிற்கான
காசு இருந்தது.
போதும்தான்.
வைத்து ஓட்டிவிடலாம்.
இட்லி புரட்டாவை பிசைந்து உருட்டி
எறிந்ததில் எந்த விவேகமும் இல்லை.
பசியின் வேகம்
அப்பேற்பட்டதுதானே எப்போதும்.
இருந்துபோக நேரம் இருக்குமா
என்றாள் இடையில்.
நன்றி காட்டுகிறாள் போல.
இருந்து போக முடிவெடுத்து
சைக்கிளில் வைத்து ஊருக்கு வெளியே
ரயில்வே லைனை தாண்டி வந்தாகிவிட்டது.
கடை கட்டுகிற நேரமாய்
பேசமாட்டாது மூசு மூசென்று
அழுதபடி சொன்னாள்
"நீங்கதாண்ணா மனுஷியா நடுத்தியிருக்கீக"
நானாவது நடுத்தினேனே என்பதைவிட
உனையாவது நடத்தினேனே
என்றிருந்தது எனக்கு.
--கவிதாசரண்
(வருடம் மாதம் குறிப்பில் இல்லை. நன்றி ப்ரபா!)
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
Arumainga.
நல்கவிதை
கடைசி வரி... வலி...!
இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை.
மாம்ஸ் !
பா.ரா. எப்போது எழுதிய கவிதையோ இப்போது படித்தாலும் இறுதிவரிகள் மனசாட்சியை குத்துகிறது, யாரும் எப்போதும் நல்லவனாக இருப்பதில்லை, எனவே உதவி செய்துவிட்டு கர்வம் கொள்ளத் தேவையில்லை என்பதை உணர்த்துகிறது.
அசைக்கும் தோணி.
arumai vaalththukkal
எங்கோ ஓரிடத்தில் அல்லது யாரிடத்திலோ ஒரு மனிதன் உண்மையாக மனச்சாட்சியோடு நடந்துகொள்கிறான் நிச்சயமாய் !
அருமை கவிதைங்க பா.ரா...
தூள் !
மனிதாபிமானம் எந்த அளவுக்கு டேமேஜ் ஆகி உள்ளது என்பது இந்த கவிதையின் வாயிலாக உனர்த்தி உள்ளீர்கள்.
நானாவது நடுத்தினேனே என்பதைவிட
உனையாவது நடத்தினேனே
என்றிருந்தது எனக்கு.
.....அருமையாக இருக்குதுங்க!
அருமையான கவிதை...
அருமையான கவிதை..
அன்பு பாரா,
நல்ல கவிதை இது... என்னிடம் நுரைகளற்ற மூணு அவுன்ஸிற்கான காசு இருந்தது... இதற்கு பின்னான நீட்சி முதல் எட்டு வரிகளின் அடர்த்தியை நீர்த்து விடுவதாய்ப்படுகிறது எனக்கு.
அன்புடன்
ராகவன்
மாமாஆஆ...செளக்கியமாஆஆ....
நல்ல கவிதை
மனிதன் ஒரு சில நேரம் மனசாட்சிக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறான் !
கவிதை மிக பிடித்தது.
இறுதி வரிகளில் தான் கவிதையின் மொத்த அடர்த்தியும் இருக்கிறது.
இப்படி தொலைத்த முத்துக்கள் எத்தனை பா.ரா அண்ணே..
நன்றி ப்ரபா.
அருமை... அருமை... அருமை..!
கவிதை அருமையா இருக்கு..
இந்தக் கவிதை எனக்கு ஞாபகமிருக்கே!
வெகு சிறப்பு :-)
எல்லோருக்குமே இடிக்கும் இடம் உண்டு எங்காவது...
நல்ல கவிதைன்னு எளிமையா சொல்லிடமுடியல.... ஒரு விலகமுடியாத அழுத்தம்...
காலங்களை உதிர்த்தாலும் காலத்தால் உதிர்க்கமுடியாத கவிதை இது பா.ரா.
தன் மேன்மைகளை மட்டுமே பேசும் கவிதைகளுக்கு மத்தியில் தன் குறையைப் பேசுவதால்.
ஒரு மனுஷியாக நடத்தியதால்.
ஆனாலும் வழக்கமான உங்களின் செய்நேர்த்தி கொஞ்சம் குறைவாய்-குளித்துத் தலை வாராதது மாதிரி.
ருசி கண்ட நாக்குல்ல பா.ரா.?
விழிப்புணர்வையும் சுயவிசாரணையையும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறது கவிதை...நெகிழ்வான பின்புலத்தோடு....வாழ்த்துக்கள் பா.ரா..
//நீங்கதாண்ணா மனுஷியா நடுத்தியிருக்கீக"
நானாவது நடுத்தினேனே என்பதைவிட
உனையாவது நடத்தினேனே
என்றிருந்தது எனக்கு.//
கவிதையின் உச்சம் இந்த வரிகள் மனசுகுள்ள ஆயிரம் கேள்விகள் நம்மை நாமே கேட்க வைக்கிறது..
கடைசி வரியில் எல்லாம்.
கடைசி வரி
முகத்தில அறைஞ்சுட்டு போயிருச்சு.
நல்லா வந்திருக்கு
எப்பொழுதும் போல் இப்பொழுதும் .... இருக்க முடியவில்லை கவிதை படித்த பின்
சென்னையில், கிளைபிரிந்து என் வீட்டுக்குப் போகிறதொரு சாலையின் வளைவில் குப்பை கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மாநகராட்சிக் காரன் கூட்டிக்கூட்டி எரித்தாலும் அவ்விடம் அழுக்கொழிகிற பாடில்லை.
'இருந்துபோக' என்னும் மங்களவழக்கு, கவிதையில் வரும் நாட்டுப்புறத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் புனித இருப்பில் வைத்திருக்கும் சூட்சுமத்தை - வெட்கக்கேடு! - கீறிக் காட்டுகிறது.
இதற்காக, ஒரு கூட்டம் பட்டினியில் இருத்தப்பட வேண்டிய அவசியமும் சமூகத்துக்கு இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், அந்த அழுக்கு உலகத்துக்கு இதனால்தான் இது என்கிற விவரமே தெரிகிறதில்லை. அதற்குள்ளும் அறம், காதல், மனிதாபிமான ஏக்கம்... ஓ!
சாதாரண நாளின் அசாதாரண இருள்!
மனுஷியாய் அறியப்படத்தான் எத்தனை ஏக்கம் !
மனிதனாய் நடப்பதில் எத்தனை கருவம் ?
நம்முள் இருக்கும் மனிதத்தை உசுப்பும் கவிதை பாரா
என்ன சொல்றதுனு புரியல..
நீர் கவிஞன்யா.
உணர்ச்சி கவிஞர் என்று காசிஆனந்தனை அழைப்பது போல,
உவமை கவிஞர் சுரதா என்று சொல்வதை போல இனி உங்களை உறவு கவிஞர் பா.ரா என்று அழைக்கலாம்.
கடைசி வரி இன்னமும் மனதில் நீந்துகிறது....
தொடர்ச்சியான வேலைப் பளுக்களில் நண்பர்களை தனித் தனியாக கை பற்ற இயலவில்லை.
மிகுந்த அன்பும் நன்றியும் , என் நண்பர்கள் மற்றும் ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்களுக்கும்!
ம்...
Post a Comment