கை நழுவிய பாட்டு
(Picture by cc licence, Thanks Abhisek Sarda)
மினுமினுக்கும் வெண்டி வாசம்
கொண்டது அம்மாவின் உள்ளங்கை.
பூரித்து பூத்திருக்கும்
இவளுடையது.
ஊடுருவிய வரியோடும்
உள்ளங்கை லக்ஷ்மியுடையது.
புரியாத பாஷையில்
பேசிக் கொண்டிருப்பதை ஒத்தது
சிற்சிறு கோடுகள் ஓடும் கவிதாவின் கை
காய்ப்பு கூடிய முத்துராமலிங்கம்
கையொரு கை
பார்க்க கிடைக்காமலும் பார்க்க தோணாமலும்
போய் விட்டதுதான் போல
மதி மற்றும் நாகேஷின் கைகள்.
உள்ளங்கைகளுக்கு அப்பால்தானே
எல்லாம் என பேசிய அவளுக்காக
பரிவோடு பார்த்துக் கொள்கிறேன்
அவ்வப்போது என் கைகளை.
அவளும் பார்க்கத் தந்திருந்தால்
ஒருவேளை விளங்கியிருக்கலாம்
என்ன சொல்ல விரும்பினாள்
என்பதாவது.
***
காதலை மீறிய காற்று
(Picture by cc licence, Thanks xJasonRogersx)
தாமதமாகிப் போனதில்
முறுக்கிக் கொண்டு
புறப்பட்டு விட்டாள்.
தனிமை வெட்கையில்
நிற்க கூச்சம்.
கிளம்பியும் விடுகிறேன்.
புறப்பட்ட பேருந்தில்
மேலேறி வந்த காற்றை
வேறு வழியின்றி
டார்லிங் என்றேன்.
அதற்கென்னவோ
சம்மதம் போல..
அப்பிக் கொண்டது.
***
Monday, February 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
முதலில் வாசம் பின்னதில் சுவாசம்.
அழகிய கவிதைகள்.
கவிதையை சுவாசித்து எழுத்தாக்கும் கையைப் பிடிச்சுக்கணுமே பா.ரா.:)
பாரா ஸ்பெஷல் கவிதைகள். நல்லாயிருக்கு ண்ணா.
அப்பா இப்படியும் அப்படியுமா ? சரி ரைட்டு...
அண்ணே எங்கிட்ட ஒரு ஆளு சொன்னாரு 50ஐ தாண்டினா இளமை திரும்பும்னு உண்மையா?
ப்ளஸ்டூ முடிச்சிட்டு எழுதின மாதிரி புத்தம் புதுசா இருக்கு.
பாடல் புதுசா இருக்குங்க..
காற்று வருடிப் போகுது..
//கவிதையை சுவாசித்து எழுத்தாக்கும் கையைப் பிடிச்சுக்கணுமே//
தங்க மோதிரத்தை ஆட்டையப் போடயா ?
நச் என்று வரி கவி
அன்பின் பாரா மினுமினுக்கும் வெண்டி
அதை அனுபவிக்க கொடுத்துவைக்கனும்.
அது கவிதையாக அதற்கு கொடுத்து வைக்கனும்.
உள்ளங்கைகளின் மொழியும் ஒரு கவிதைதான்
முதல் கவிதை உயிரில் ஊடுருவியது அண்ணா..
இரண்டு கவிதைகளும் அருமை ராஜாராம்
:)
entry kkaaga
இரண்டாவது அவ்வப்பொழுது அனுபவிப்பதுதான்..!
:))
சவுக்கியமாண்ணே!
கவிதைகள் நல்லா இருக்கு பா.ரா. அண்ணா
super :))
இரண்டும் இனிமை.
மன விழிகள் பார்க்க தவறிய
கை வரி கவிதை..
தாமதமாகி போனவள்..
தான் மதமற்றவள் என
காற்றணைத்தது..
நலமா மக்கா.
அருமையான கவிதைகள்..
அப்படியே மனசை இழுத்துக் கொண்டு ஓடுகின்றன இரண்டும்!
கவிதை வரிகளோ உங்கள் உள்ளங்கையில்?
லேசாகி கிடக்கு மனசு...
உன்னதங்களை வார்த்தைகளாக்கும் சூட்சம் மிக சாதரணமாக கைகூடுகிறது உங்களிடம்.... ஆனால் பார்ப்பதற்க்கு அதற்கு oppositaதான் உள்ளீர்... :)
ஆம் நாம்(ன்).. உலகை அதன் புற தோற்றத்திலே அனுகுவது எத்தனை தவறு.. ;(
அண்ணா...கவிதை எழுதும் உங்கள் கைகளும் அழகுதான் !
அன்பு பாரா,
முதல் கவிதை அருமையாய் இருக்கிறது... உள்ளங்கைக்குள் எத்தனை கவிதைகள் பாரா உங்களுக்கு... கடைசி இரண்டு பாராக்கள்... கலக்கி விட்டது பாரா...
இரண்டாவது கவிதை நல்ல கவிதையாய் தெரிந்திருக்கும்... முதல் கவிதை இல்லாதிருந்தால்...
அன்பும் வாழ்த்தும் பாரா...
அன்புடன்
ராகவன்
அவள் பார்க்கத் தந்திராவிட்டாலும் உங்களுடையதையாவது பார்த்திருக்கலாம்.
அவள் சொல்லத் தவறியதை அவை சொல்லியிருக்கும்.
வார்த்தைகள் எல்லாம் வெறும் ஏமாற்றுத்தான் பா.ரா.
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
வேலைப் பளுவில் தனித்தனியாக கை பற்ற இயலவில்லை. நிறைய வாசிக்கவும் விட்டுப் போயிருக்கு. ஓரிரு தினங்களில் வந்து சேர்ந்து கொள்கிறேன் மக்கா. நடந்து கொண்டிருங்கள்..
எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும்!
எதுவுமே படிக்க பிடிக்காதப்ப இப்டித்தான் உங்களோடத படிக்க ஆரம்பிச்சிடுறேன். மீண்டும்கூட... இரண்டாவது என்னிடமும் அப்பிக்கொள்கிறது..
டார்லிங் என அப்பிக்கொண்ட காற்று, அருமை... :) அதை ஒருவேளை அவளிடம் சொல்லி இருந்தால், காற்றிடம் சொல்லி இருக்க வேண்டி இருக்காதோ? ;) நல்லா இருக்குங்க பா.ரா. !
நன்றி சுகிர்தா! :-)
Post a Comment