Showing posts with label காதலர் தினம் - கவிதைகள். Show all posts
Showing posts with label காதலர் தினம் - கவிதைகள். Show all posts

Monday, February 14, 2011

இரண்டு கவிதைகள்

கை நழுவிய பாட்டு


(Picture by cc licence, Thanks Abhisek Sarda)

மினுமினுக்கும் வெண்டி வாசம்
கொண்டது அம்மாவின் உள்ளங்கை.

பூரித்து பூத்திருக்கும்
இவளுடையது.

டுருவிய வரியோடும்
உள்ளங்கை லக்ஷ்மியுடையது.

புரியாத பாஷையில்
பேசிக் கொண்டிருப்பதை ஒத்தது
சிற்சிறு கோடுகள் ஓடும் கவிதாவின் கை

காய்ப்பு கூடிய முத்துராமலிங்கம்
கையொரு கை

பார்க்க கிடைக்காமலும் பார்க்க தோணாமலும்
போய் விட்டதுதான் போல
மதி மற்றும் நாகேஷின் கைகள்.

ள்ளங்கைகளுக்கு அப்பால்தானே
எல்லாம் என பேசிய அவளுக்காக
பரிவோடு பார்த்துக் கொள்கிறேன்
அவ்வப்போது என் கைகளை.

வளும் பார்க்கத் தந்திருந்தால்
ஒருவேளை விளங்கியிருக்கலாம்
என்ன சொல்ல விரும்பினாள்
என்பதாவது.

***

காதலை மீறிய காற்று


(Picture by cc licence, Thanks xJasonRogersx)

தாமதமாகிப் போனதில்
முறுக்கிக் கொண்டு
புறப்பட்டு விட்டாள்.

னிமை வெட்கையில்
நிற்க கூச்சம்.
கிளம்பியும் விடுகிறேன்.

புறப்பட்ட பேருந்தில்
மேலேறி வந்த காற்றை
வேறு வழியின்றி
டார்லிங் என்றேன்.

தற்கென்னவோ
சம்மதம் போல..

ப்பிக் கொண்டது.

***