
(Picture by cc licence, Thanks FontFont)
கடைசியில் ஒரு கேள்வி
மிஞ்சியது.
பதிலை மாற்றி அமைத்துப்
பார்த்தேன்.
ஒரு பதில் மிஞ்சியது.
கேள்வியை பதிலாகவும்
பதிலை கேள்வியாகவும்
பொருத்திப் பார்த்தேன்.
அப்பவும்
ஒரு கேள்வி பதில்
மிஞ்சியது.
பேசாமல் அக்கேள்விக்கு
அப்பதிலை திருமணம் செய்து
வைத்து விட்டேன்.
கேள்வி மிஞ்சும் போதெல்லாம்
பதில் தானாகவே பொருந்திப்போய் விடுகிறது.
***
பொழுது

(Picture by cc licence, Thanks Orange tuesday )
வாசலில்
சைக்கிள் நிற்கிறது.
சைக்கிள் நிழல் சரிந்து
வாசலில் கிடக்கிறது.
நிமிர்ந்து நிமிர்ந்து நிழல்
சைக்கிளுக்கு வந்து விடுகிறது.
சரிந்து சரிந்து சைக்கிளையும்- பின்
வாசலையும்கூட தாண்டுகிறது நிழல்.
பிறகு சைக்கிள் மட்டுமே
வாசலில் நின்று கொண்டிருக்கிறது.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
42 comments:
முதல் இது அக்மார்க பா.ரா குசும்பு.. ரெண்டாவது இது ஏதோ த்த்துவம் மாதிரி இருக்கு.. புரிஞ்சுக்கற வயசு எனக்கு இன்னும் வரல.. மாம்ஸ் பின்றீங்க :)
கலக்கரீங்க தலைவா...
முதல் கவிதைல கல்யாண மேட்டர மட்டும் விகடன்ல கட் பண்ணிடாங்களோ
:)
பதிலில இருந்து கேள்வி, சைக்கிள்னா கேரியர் இல்லாமலா. அப்படின்னா இது பின் நவீனத்துவ கவிதைகள்தான். நோ டவுட்டு:)))
//முதல் கவிதைல கல்யாண மேட்டர மட்டும் விகடன்ல கட் பண்ணிடாங்களோ//
ஆமா மாப்சு, கேள்விப் பட்டேன். ஏற்கனவே இரண்டாவது இடம், இந்தியாவிற்கு! இதுல கேள்வி-பதிலுக்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்கலாடா என்கிற சமுதாய நோக்கமாக இருக்கலாம். :-)
Arumai pa.ra.
First one Best.
Second one wonderful..
நீண்ட நேரம் கவிதைகளை விட்டு அகல் மறுக்குது மனசு..
ஒரு நாப் பூராம் வெய்யில்லயே நின்னா காத்து எறங்கியிருக்குமே, சைக்கில் பம்பு கூட இந்த பாவிப்பய வூருல இல்லையே ஹும்,, உருட்டித்தான் தொலையனுமோ!!
//பதிலில இருந்து கேள்வி, சைக்கிள்னா கேரியர் இல்லாமலா. அப்படின்னா இது பின் நவீனத்துவ கவிதைகள்தான். நோ டவுட்டு:)))
March 3, 2011 4:04 AM//
நீங்க சொன்ன பிறகு கேள்வி கேட்பேன்
// Vidhoosh said...
:)//
ஏன் கவிதை புரியலையா ?
ஏற்கனவே இரண்டாவது இடம், இந்தியாவிற்கு! இதுல கேள்வி-பதிலுக்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்கலாடா என்கிற சமுதாய நோக்கமாக இருக்கலாம். :-) //
கவிதையை விட இதை ரொம்ப ரசித்தேன். ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு ஒரு இலவச TV
திருமணத்துக்குப் பின் ஒரு கேள்வியும் ஒரு பதிலும் பிறந்ததாம் பா.ரா! பேசிக்கொண்டார்கள் பஞ்சாயத்தில். Mind teaser இந்தக் கவிதை.
ரெண்டாவது க்ளாஸ்.
நீளும் மடியும் நிழல் கிளறியது வாழ் தத்துவத்தை.
கேள்வி கெட்டியானது.
சைக்கிள் மட்டும் சுத்தி விடுகிறது.
பாரா.
இரண்டுமே.............செம சித்தப்பா....!
புதுமையாய் கண்டேன்
புரிஞ்சுக்க நேரமெடுத்தது
பேசாமல் அக்கேள்விக்கு
அப்பதிலை திருமணம் செய்து
வைத்து விட்டேன்.
.....சூப்பரு! விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
அண்ணா முதல் கவிதை எங்களை கேள்வி கேட்கவிடாமல் பதிலும் சொல்ல விடாமல் பண்ணிடுச்சி..விகடன் என்ன செய்யும் வெளியிட்டு தான் ஆகனும் இத்தனை சிறந்த கவிதையை....பெருமையா இருக்கு எங்க அண்ணான்னு சொல்லிக் கொள்ள..
mudhal kavidhai romba pidichadhu....
Superrrr
கேள்விக் கொண்டாட்டம்.
க்ளாசிக் கவிதைகள் .. அழகாருக்கு.
இனிக் கேள்வி மிஞ்சும்போதெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சுடலாம் !
கேள்வியும் பதிலும் புதிரவே இருக்கு... இரண்டாவதில் ஒரு முழு பயணம்...
ஆனந்த விகடன் ல 2 கவிதை அடிச்ச அண்ணன் ராஜாராம்க்கு வாழ்த்துக்கள்
புதிர்
--------
ஒரு புடவை கேட்டாள்.
ஒரு சுடிதார் எடுத்துக்கொள்ளேன்
என்றேன்.
ஒரு சுடிதார் மிஞ்சியது.
புடவையைச் சுடிதாராகவும்
சுடிதாரைப் புடவையாகவும்
பொருத்திப் பார்த்தேன்.
அப்பவும்
ஒரு தேவை-தீர்வை
மிஞ்சியது.
பேசாமல் வரவு-
செலவுப் பொறுப்பை அவள் கையிற்
கொடுத்துவிட்டேன்.
தேவை மிஞ்சும் போதெல்லாம்
தீர்வை தானாகவே பொருந்திப்போய் விடுகிறது.
('தீர்வை' என்றால், பழந்தமிழில், கீரிப்பிள்ளை என்றும் பொருள். என்றால் தேவையைப் பாம்பாக்கிப் பொருள்கொள்ள வேண்டும்).
பொழுது
----------
Your shadow at morning striding behind you
Or your shadow at evening rising to meet you;
I will show you fear in a handful of dust.
என்னும் டி.எஸ். எலியட்டின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அவரிடம் வெளிப்பட்ட அச்சுறுத்தல் இல்லாமல், உங்களிடம் - கீழைப் பக்குவத்துக்கே உரிய - அமைதி வெளிப்பட்டு இருக்கிறது.
அன்பு பாரா...
நிழல்கள் தான் எப்போதும் என் தாத்தாவுக்கு... பொழுதைச் சொல்லும் என்பார்... பெரிய வீடெல்லாம் கிடையாது... மண்வீடு... கட்டைகள், கல்லு எல்லாம் வச்சு, செம்மன் பூசிய வீடு... நாவுகள் அறுந்த பனைஓலைகள் அல்லது நாவுகள் கட்டப்பட்ட பனைவோலைகள் தான் கூரை...
முன்னாடி வாசலில் ஓரத்தில் ஒரு கம்பு நட்டிருக்குமாம்... அதன் நிழல் பயணங்களில் கனிக்கப்படும் பொழுது...
இங்கு சைக்கிளாய்... பொழுது இப்படி தான் எதற்குள்ளாவது புகுந்து கொண்டு முகங்காட்டும்... ரிலேட்டிவ்... பொழுதுகள்.
கேள்வி பதில்...ஆவியில் நல்லாயிருந்தது... கடைசி இரண்டு பத்திகள் தேவையில்லை தான்.
அன்புடன்
ராகவன்
அன்புடன்
ராகவன்
தத்துவம்... என் அளவுக்கு இல்லாகாட்டியும்... ஏதோ சுமாரா கீது நைனா.. ;)
இருந்தாலும்.. கேள்வி பதில்ன்னு சும்மா சோக்காவூடு கட்ற நைனா :))
சைக்கிள் கேப்புல கவித..
ரொம்ப நல்லா இருக்கு பா ரா எப்பொழுதும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி பானி இதிலும் தெரிகிறது
நன்றி பா ரா
ஜேகே
:)
இப்பல்லாம் விகடன் வந்ததுமே சொல்வனத்துல உங்க கவிதை இருக்கான்னு பார்க்குறது வழக்கமாயிடுச்சுண்ணே..
கவிதைச் சைக்கிள் சும்மா ரொங்குது.
அருமை அருமை!!
மாமா,
அக்மார்க் “பா.ரா.” கவிதை.
அருமை.ஆமாம்,நிழலின் கேள்விகளுக்கு நிஜம் பதில் சொல்ல முடியாது
இரண்டும் அருமை:)!
பா ரா அண்ணா சிலர் கவிதை எழுதுகிறார்கள்
சிலர் கவிதையாகவே ஆகிவிடுகிறார்கள்
நீங்கள் இரண்டாவது வகை :)))
நன்றி இரா மாப்ள! //புரிஞ்சுக்கற வயசு எனக்கு இன்னும் வரல// சரிங்க கைப்புள்ள! :-)
நன்றி கரூன்!
நன்றி வித்யா!
பாலாண்ணா, ரொம்ப நன்றி! :-)
சேது மக்கா, நன்றி!
நன்றி இர்ஷாத்!
நன்றி செந்தில்!
நன்றி வாசன்ஜி! :-))
ரௌடி நசர், நன்றி! :-)
நாய்க்குட்டி மனசு, நன்றி! :-)
நன்றி சுந்தர்ஜி! :-)
நன்றி காமு மக்கா!
மகன் தேவா, ரொம்ப நன்றி!
வாங்க ஹாசிம். நன்றி!
நன்றி சித்ரா!
தமிழ்ஸ்! நன்றி சகோ!
நன்றி கீதா!
டீச்சர், நன்றி!
நன்றி நேசா!
நன்றிடா சாரல்!
நன்றிடா ஹேமா! :-)
நன்றி வினோ!
நன்றி, சி.பி. செந்தில்!
டி.வி.ஆர்.சார், நன்றி!
அண்ணே, கலக்கல்! :-))
நன்றி ராகவன்!
நன்றி மகன்ஸ், அசோக்! :-)
நன்றி ஜே.கே!
சுசி மக்கா, நன்றி!
நன்றி சரவணா!
நன்றி சீதா!
மாப்ள, சத்ரியா! நலமா? நன்றி மாப்ஸ்!
வாங்க குறட்டை புலி. நன்றி!
நன்றி ரா.லெ. சகா!
சக்தீஸ், நன்றிடா! :-)
அருமை ராஜாராம். முத்திரை பதித்து உங்கள் கவிதைகள் வலை யுலகை மயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
அது சரி ஒரு நாள் முழுதும் அந்த சைக்கிளைப் பார்த்துக் கொண்டு இருந்தீர்களா? என்ன ? ஹ ஹ ஹா
நன்றி ஜெஸ் மக்கா! :-)
முதல் கவிதை கலாட்டா என்றால் அடுத்தது சீரியஸ்..
இரண்டும் தான் உங்கள் கைவசம் வசப்பட்டு நிக்குதே
இரண்டாம் கவிதையின் நிழல் ஒரு பொழுதினை மட்டும் சொல்லவில்லை. வாழ்வை நிழலாக சுருக்கி கொண்டு பேசுகிறது
நன்றி ரிஷபன்!
லாவன்ஸ், நன்றிடா!
Post a Comment