Thursday, March 17, 2011

மூன்று தலைமுறை சாவி


(Picture by cc licence, Thanks Stevendepolo)

ம்மா மாதிரியே
சாவி வைத்திருக்கிறாள் இவளும்

ம்மா திறந்த
கதவையே திறக்கிறாள்

நெட்டுப் பத்தி, பட்டாசாலை
என்பாள் அம்மா
ரேழி, ஹால்
என்கிறாள் இவள்

ற்றபடி
அம்மா மாதிரியே
சிரித்து அழுது சோறு பொங்கி
கதவைப் பூட்டிக்கொள்கிறாள்

ன்ன ஒன்று

திண்ணையில் தூங்கிய அப்பத்தா
சாவியைத் திறகுச்சி என்றாள்
சாவியை சாவி என்றாள் அம்மா!

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

32 comments:

ராஜவம்சம் said...

என் மகள் கீ என்கிறாள்.

ஹேமா said...

நாகரீகம் மாறும்போதும் வாழ்வியல் மாறாது அப்பிடித்தானே !

க ரா said...

அப்பத்தா திண்ணயிலயாது தூங்கிச்சின்னு சொல்ல வறிங்களா மாம்ஸ் :)

ஓலை said...

போட்டோ மற்றும் கவிதை அருமை.
துரவு (திறவு) கோல் என்றும் சொல்லலாமா?

dheva said...

கை மாறும் பொறுப்பு.....தலை முறைகள் தாண்டிய பார்வை, நிலையாமை.........இப்டி எது எதோ எனக்கு தோணுது சித்தப்பா!

ராமலக்ஷ்மி said...

மூன்று தலைமுறைகளை சாவியால் திறந்து காட்டியிருக்கிறீர்கள்.

Sriakila said...

nice!!

மதுரை சரவணன் said...

vaalththukkal..arumai

Unknown said...

நல்கவிதை....

CS. Mohan Kumar said...

அருமை. வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

ஹாஹா.. அருமை :-)

சாந்தி மாரியப்பன் said...

தலைமுறைகள் கடந்தாலும் மாறுவது சொற்கள் மட்டும்தானோ..

Unknown said...

மஹாவின் குழந்தை..அதான்யா உன் பேத்தி...டிகீ என்பாள்..(டிஜிட்டல் கீ)

Pranavam Ravikumar said...

அருமை!

ராகவன் said...

அன்பு பாரா,

நல்லாயிருக்கு கவிதை... ஆவில படிச்சேன்...

பாராவுக்கு சொல்வனத்துல பட்டா போட்டு ரெடியா இருக்கு போல ஒவ்வொரு இதழிலும்...

உங்களை நிறைய பெமினிஸ்ட் நண்பர்கள்... உதைக்க வரப்போகிறார்கள்... பெண்களின் உடமை என்று கொடுக்கப்பட்டது அல்லது இது தான் என்று, நாம் முடிவு செய்வது...

வருத்தமான விஷயம்... வீடும், இரும்புப் பெட்டியின் சாவிகளில் அல்லது வீட்டின் சாவிகளில் மட்டுமே தங்கள் உரிமையை, சுதந்தரத்தை மெச்சிக் கொள்வது எத்தனை வேதனையான விஷயம்... மூன்று தலைமுறையாய் இதைப் பார்த்து வருவதும் சங்கடமாய் இருக்கிறது.

நல்லாயிருக்கு... என்ன பொருள்படி எழுதியிருந்தாலும், வாசிப்பாணுபவம் அமையப்பெறுவது உங்களை படிக்கும் போது மாத்திரமே.

அம்பையை உங்கள் கவிதையை படிக்கச் சொல்லணும்...

அன்புடன்
ராகவன்

விஜய் said...

சாவிகள் கைகள் மாறினாலும்
பூட்டு மட்டும் மாறவே இல்லை போல

வாழ்த்துக்கள் பங்கு

விஜய்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மொழியைத் திறக்கும் சாவி உங்களதுதான் பா.ரா.

ரிஷபன் said...

கவிதைக்கான சாவி இப்போது உங்களிடம்.

அன்புடன் அருணா said...

நாங்க இங்கே "சாபீ"ன்னு சொல்றோம்!!!

சிநேகிதன் அக்பர் said...

பல கோணங்களை தொட்டுச் செல்கிறது அண்ணே.

எத்தனை தலைமுறைகள் மாறினாலும் பேச்சு வழக்கை மாற்றிக்கொண்டாலும் நடைமுறையில் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் (இருக்க வைக்கப்படுகிறார்கள்)

அச்சம், மடம், நாணம், பாசம் என பல பூட்டுகளை போட்டு பூட்டி விட்டு திறக்காத சாவிக்களை மட்டும் கையில் கொடுக்கும் நம் புத்திசாலித்தனம்.

Ashok D said...

கீ கொடுக்க கீ கொடுக்க முத்தம் தரட்டா?

Ashok D said...

பசியெடுக்குது.. போடு இரண்டு பெரோட்டா..


சித்தப்ஸ் பாட்டு அம்புடுதேன் :)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மற்றபடி
அம்மா மாதிரியே
சிரித்து அழுது சோறு பொங்கி
கதவைப் பூட்டிக்கொள்கிறாள்//
ரசிக்க வைக்கும் ரசனை மிகுந்த வரி.

காமராஜ் said...

ரொம்ப மெதுவா ரெம்ப ரெம்ப மெதுவாக
மாறிக்கொண்டுவரும் பெண்கள்.

சுசி said...

நாங்கள் திறப்பு என்கிறோம் :)

'பரிவை' சே.குமார் said...

போட்டோ மற்றும் கவிதை அருமை.

உயிரோடை said...

திறக்குச்சி ம்ம் good

RaGhaV said...

:-))

இன்றைய கவிதை said...

சாவி பற்றிச்சொல்லி எங்களுக்கு சாவி கொடுத்துவிட்டீர்கள்

எல்லாரையும் ஒவ்வொரு விதமாய் யோசிக்க வைத்தது உங்கள் கவிதையின் வெற்றி

அருமை பா ரா

முடியும் பொழுது எங்கள் இன்றையகவிதையையும் சற்று எட்டிப்பார்த்தால் மிகவும் சந்தோஷமாய் இருக்கும் பா ரா இது ஒரு வேண்டுகோள் :-)

நன்றி

ஜேகே

பா.ராஜாராம் said...

நன்றி மகன், ராஜவம்சம்! உம்ம மகள் கீ கீன்னு சொல்வாள்! :-)

நன்றிடா ஹேமா! கேள்வில்லாம் கேட்டா, பூச்சாண்டி அசோக்ட்ட பிடிச்சுக் கொடுத்துருவேன். :-)

இரா மாப்ஸ், உங்களையும்தான். அப்பத்தாட்ட பிடிச்சுக் கொடுத்துருவேன். நன்றி மாப்ள!

ஆஹா, இது நல்லாருக்கே சேது! நன்றி!

மகன் தேவா, மிக்க நன்றி!

நன்றி சகா, ராமலெட்சுமி!

நன்றி ஸ்ரீஅகிலா!

நன்றி ம. சரவணன்!

நன்றி கலாநேசன்!

நன்றி மோகன்ஜி!

நன்றி நவனி!

நன்றிடா சாரல்!

நன்றி மணிஜீ! என்ன மாறுவேடம்? :-)

நன்றி கொச்சு ரவி!

ராகவன், உங்க கமெண்டையும், அக்பர் கமெண்டையும் நல்லாருந்ததாக ப்ரபா பெண்ணிய(தீவிர)வாதி சொன்னாள்.(தீவிரவாதி, ப்ரபாவிற்கே பதில் சொல்லி மாளாது. இதில் அம்பை வேறா?..ரைட்டு..) சரி.. நீங்க நல்லவரா, கெட்டவரா ராகவன். :-) நன்றி ராகவன்!

வினோ said...

அப்பா, இங்க உங்க மருமகளுக்கு படிக்க கொடுத்தேன்... உங்க கூட சண்டைக்கு நிற்கிறாள்...

பா.ராஜாராம் said...

விஜய் பங்கு, மிக்க நன்றி!

நன்றி சுந்தர்ஜி!

நன்றி ரிஷபன்!

டீச்சர், நீங்களுமா? ரைட்டு.. :-) நன்றி டீச்சர்!

நன்றி அக்பர்! சேம் சைட் கோலா? :-)

பாட்டு சூப்பர் மகன்ஸ்! :-) நன்றியும் அசோக்!

நன்றி நாய்க்குட்டி மனசு!

காமு மக்கா, நன்றி!

நன்றி சுசி!

நன்றி குமார் மகன்ஸ்!

நன்றி லாவன்ஸ்!

நன்றி ராகவ்!

நன்றி ஜே.கே! சற்று வேலைகள் ஜே.கே. நேரம் வாய்க்கிறபோது அவசியம் வர்றேன். சரியா?

வினோ பாவி, :-)) பேபி, கவிதைல்லாம் சும்மா, உலு உலுவாயிக்கு. :-)