Thursday, March 24, 2011
நல்லவங்களுக்கான சோதனை
(Picture by cc licence, Thanks OneVillage Initiative)
நடப்பதுபோல நடந்து
போவதுபோலப் போய்
'நல்லவங்களா இருக்காங்க
புது வீட்டுக்கு வந்தவங்க’
என்றிவள் வந்து சொன்னாள்.
வருவதுபோல வந்து
நிற்பதுபோல நின்றார்கள்
புது வீட்டிலிருந்தும்
'வாங்க வாங்க
அட, உள்ள வாங்க’ என்றோம்
நல்லவங்க போலான நாங்களும்!
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
அருமை பா.ரா. விகடன் ரசிகர்களுக்கு எப்போதும் விருந்து வைக்கறீங்க போல.
மிக அருமை:)!
//நல்லவங்க போலான//
அக்காங்...
நல்லாருக்குண்ணா..!
//ஓலை said...
அருமை பா.ரா. விகடன் ரசிகர்களுக்கு எப்போதும் விருந்து வைக்கறீங்க போல.//
ஒலையாரை வழி மொழிகிறேன்
வாரம் வாரம் உங்கள் கவிதை ஆனந்த விகடனில் ... அருமை..வாழ்த்துக்கள்
//'வாங்க வாங்க
அட, உள்ள வாங்க’ என்றோம்
நல்லவங்க போலான நாங்களும்!//
எப்படிண்ணே. இது எப்படிண்ணே. முடியல :)
சீக்கிரமே அவர்கள் எழுதக்கேட்டு நீங்கள் எழுத வாழ்த்துகள்.
:) நல்லவங்க மாதிரி எல்லாரும் கமெண்ட் போட்டிருங்கப்பா..
நல்லவங்க போலான நாங்களும் பாராட்டி விட்டு போகிறேம்
விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!
நல்லவங்க போல நாங்களும் கமெண்டிட்டோம் :-))
நல்லா இருக்குங்க பாரா.
எல்லாரும் நல்லவங்கதான் அவங்க அவங்க சொந்த முகங்கள் தெரியாத வரைக்கும்.அழகாச் சொல்லிட்டீங்க அண்ணா !
//எல்லாரும் நல்லவங்கதான் அவங்க அவங்க சொந்த முகங்கள் தெரியாத வரைக்கும்.//
அதே..
பாசாங்கு
விருந்தினன் வீட்டுப் போர்வை
இறுதிநாள் போல் விரல்கள் காட்டி
விரிந்தே கிடக்கிறது உள்ளங்கை
பாம்பு போல் ஒளித்து வைத்திருப்பதில்லை
பித்தமருதாணியை
பீநாறிச்சங்கின் வைத்தியம் போல்
குழந்தை சுடும் துப்பாக்கி
முன் மட்டும்
:) நல்லவங்க மாதிரி எல்லாரும் கமெண்ட் போட்டிருங்கப்பா..
/// நாங்களும் நல்லவங்களாயிட்டோம் பாரா..:))
அண்ணே!!!
ஹிஹி :))
மொத்த வாழ்க்கையும் இந்த கவிதையில் அடக்கீட்டிங்க சித்தப்பா...அதுவும் இந்த வார்த்தையில
" நல்லவங்க போலான "
மொத்த வாழ்க்கையும் இந்த கவிதையில் அடக்கீட்டிங்க சித்தப்பா...அதுவும் இந்த வார்த்தையில
" நல்லவங்க போலான "
நானும் ரொம்ப நல்லவன்போல பாராட்டிட்டு போயிடறனே :)
(எப்டி சித்தப்ஸ் இப்படிலாம்.. கலக்கறீங்க)
தலைப்புலயே எவ்வளவு குசும்பு:). சபாஷ் கவிதை
ஆரம்பத்துல இப்படித்தான் .. அப்புறம் போகப் போக தெரியும்.. என்கிற அடிப்படை தத்துவம் மிளிர்கிற அழகான கவிதை.
பூங்கொத்து!
கவிதை நல்லாருக்கு...நானும் படிச்சேன்.
அரிதாரம் களைந்த அழகிய கவிதை..வாழ்த்துக்கள் அண்ணா..
இருப்பதுபோல் இருந்து
இப்படி ஒரு கவிதை
வருடுவது போல் வந்து
தழுவிச் செல்கிறது
புதிதாய் துளிர்க்கும் ஒவ்வொரு உறவின் தொடக்கத்திலும்... விழைவுகள் மட்டுமே விளைவுகள் ஆகிடாமல் திசைதிருப்பும் சந்தர்ப்பங்களும் சூழலும்...
மொத்த வாழ்க்கையும் இந்த கவிதையில் அடக்கீட்டிங்க சித்தப்பா.
அழகா சொல்லிட்டீங்க
சரி, நானும் நல்லவள் மாதிரியே.....
நலாயிருக்கு.
மாமா... நிதர்சனம்.. கவிதை எழுதவும் உங்ககிட்ட பாடம் கத்துக்கணும்போல... அசத்தறீங்க...
Yov!!
poyya!! Poramaiya irukku Para!!
Ragavan
நன்றி சேது!
நன்றி சகா!
வசந்த், எவ்வளவு நாளாச்சு! நன்றி தம்பு!
நசர், :-) நன்றி ஓய்!
மதுரை சரவணா, நன்றி!
நன்றி அக்பர்!
முத்துலெட்சுமி, நடத்துங்க.. :-) நன்றி மக்கா!
மஹிக்கா, நீங்களுமா? ரைட்டு :-)) நன்றிக்கா!
நன்றி சித்ரா!
சரிங்க பெரிய மனுஷி! :-) நன்றி சாரல்!
சுசி மக்கா, நன்றி!
நன்றிடா ஹேமா!
நன்றி சரவணா!
நேசா, அருமை! நன்றிடா பயலே!
தேனு மக்கா, ரொம்ப நன்றி! :-)
நன்றி செந்தில்!
மோகன்ஜி, நன்றி!
நன்றி மகன் தேவா!
நன்றி அசோக்!
நன்றி பாலாண்ணா!
நன்றி ரிஷபன்!
நன்றி டீச்சர்!
ஸ்ரீ அகிலா, ரொம்ப நன்றி!
தமிழ், நன்றிடா!
நன்றி ராஜாராம்!
நன்றி நிலாமகள்!
குமார் மகன்ஸ், நன்றி!
நன்றி ஜெஸ் மக்கா!
அம்பி, நன்றிடா!
மாப்ள பாலாசி, நன்றி!
நன்றி ராகவன்! :-)
அருமை! விகடன்ல தான் முதல்ல படிச்சேன்.
நன்றி தென்றல்சரவணன்! (ஐ! இந்தப் பெயர் நல்லாருக்கே) :-)
நல்லவங்களுக்கு எல்லோருமே நல்லவங்க தானே
Post a Comment