Saturday, April 2, 2011

மாற்றுப் பாதைக்கான கை காட்டி



னிமை படுத்தப்பட்ட
மிக புராதன குரலோசையில்
விழித்துக் கொள்கின்றன புலன்கள்

கிளி கொஞ்சிய குரலுடனும்
பதை பதைப்புடனும்
இழுத்துச் செல்கின்றன தெருக்கள்.

சும் மரங்களிடை
ஆழ் சுழியிடை
பழகிய வழியிடை

ட்டம் காட்டி சற்று
கை பிடித்து சற்று
பின் தங்கி சற்று

டு நடுங்கி, ஒடுங்கி
சாகப் பிடித்தும்
பிழைத்துக் கொள்ளும்படியே
வாய்த்து விடுகிறது.

தையெதையும் அறியாது,

பார்க்காமல் போகச் சொல்லி
இந்த முறையும் இறைஞ்சுகிறது
அக்குரலுக்கான பார்வை.

----கல்கி (இந்த வாரம்)
நன்றி கதிர்பாரதி, கல்கி

16 comments:

ரிஷபன் said...

கவிதைக்கான பார்வை இம்முறை மிக அழுத்தமாய்.. வேறு தளத்தில்.
சட்டென்று ஏதோ உணர்ந்த சிலிர்ப்பும் தவிப்பும் பதைபதைப்பும்..

vasu balaji said...

பா.ரா.!!! க்ளாஸ்

சுசி said...

நல்லா இருக்கு பா.ரா.

thendralsaravanan said...

கருத்தாழமிக்க கவிதை.மிக மிக அருமை!

ராமலக்ஷ்மி said...

அருமை பா ரா!

Geetha said...

arumai .

க ரா said...

Different one mams.. you are rocking always :)

ஓலை said...

Arumai paa.raa.

Aduththa kavithai engalukku appuram thaan kalki, vikadanukkellaam. Urimaiyudan ....

காமராஜ் said...

\\தனிமை படுத்தப்பட்ட
மிக புராதன குரலோசையில்
விழித்துக் கொள்கின்றன புலன்கள்\\

அடி அடின்னு அடிச்சு நொறுக்குது.
அப்படியே ஊள்ளேயே கிடக்க வைக்கிற வார்த்தைகள் பாரா.

Sriakila said...

அருமை!!

Ashok D said...

நமக்கு புரியல சித்தப்ஸ்..அப்ப நல்ல கவிதை போல :)

Ashok D said...

bogan introduction is good chitaps.. he is really rocking

rajasundararajan said...

பேரன் பேத்தி எடுக்கிற வயசுல அப்படியெல்லாம் போயி அவமானத்தெ இழுத்து வெச்சிறாதீக!

Pranavam Ravikumar said...

கவிதை நல்லா இருக்கு !

பா.ராஜாராம் said...

ரிஷபன், நன்றி!

நன்றி பாலாண்ணா!

சுசி மக்கா, நன்றி!

நன்றி தென்றல்சரவணன்!

நன்றி சகா!

நன்றி கீதா!

இரா மாப்ஸ், நன்றி!

ஓகே செஞ்சுரலாம் சேது. உங்களுக்கு மேலயா விகடனும் கல்கியும்? நன்றி சேது!

காமு மக்கா, நன்றி!

நன்றி ஸ்ரீஅகிலா!

என்ன மகன்ஸ் இப்படி பண்ணிட்டீங்க? :-) நன்றி அசோக்! ஆம், மகனே கலக்குகிறார் போகன்.

ஹா..ஹா..அண்ணே, ரைட்டு.. :-)) நன்றி அண்ணே!

நன்றி கொச்சு ரவி!

உயிரோடை said...

வாழ்த்துகள் அண்ணா