Sunday, August 14, 2011

ரௌத்ரம்(Picture by cc licence, Thanks Mckaysavage)

டக்க முடியாத காரணம் காட்டி
கோவில் திருமணம் காரியத்திற்கு
வீட்டிலேயே விட்டுப் போய் விடுகிறார்கள்.

குழந்தைகளை பார்த்துக் கொள்ள
என் கிழவியும் வேணும் போல.

சாப்பாட்டிற்கு
கட்டி வைத்த இட்லி துவையல்.

பேச்சுத் துணைக்கு
பேப்பரும் அணிலும்
மைனாவும் குருவியும்.

பின் மதியத்தில் மட்டும்
அடங்காத ஒரு சுவராசியம்.

புறக்கணிப்பும் உதாசினமும்
குளிரக் குளிர..

திண்ணையில் நின்றபடி
சிறுநீர் கழிக்கலாம்.

***

நன்றி அதீதம்18 comments:

சத்ரியன் said...

//திண்ணையில் நின்றபடி
சிறுநீர் கழிக்கலாம். //

மூத்த குழந்தைகளின் “ரெளத்ரம்” இப்படித்தான் வெளிப்படுமோ?

ஓலை said...

Nice

க ரா said...

அருமை மாம்ஸ்

முனைவர் இரா.குணசீலன் said...

நிழற்படம் எழுத்துக்களுக்கு உயிரூட்டுவதாக உள்ளது.

'பரிவை' சே.குமார் said...

ரெளத்திரம் அருமையா இருக்கு...

கே. பி. ஜனா... said...

கவிதை அருமை (எப்பவும் போலவே!)

ரிஷபன் said...

உதாசீனத்தின் உக்கிரம் இப்படித்தான் நீர்த்துப் போகுமோ?

இரசிகை said...

suthanthirathina vaazhthukal...

ராகவன் said...

அன்பு பாரா,

ரொம்ப நல்ல கவிதை... இதற்கு முந்தைய கவிதை பற்றிச் சொல்லவும் விட்டுப் போச்சு... சொல்ல என்ன இருக்கு, சொல்லாம இருக்கிறதுக்குத் தான் நிறைய இருக்கு, இல்லையா பாரா?

பாகீரதிக் கிழவிக்கும் இது போல ஒரு கிடப்பாடு உண்டு... படுத்தப்படுக்கையிலேயே மூத்திரமும், மலமும், சளியுமா கிடக்கையிலும்... ஒரு ஆத்தாமை... என்னிய எங்கயுமே கூட்டிட்டுப் போறதில்லை... இவிங்க... என்று போவோர் வருவோரிடமெல்லாம் புலம்புவாள் கிழவி... அவளிடம் நிற்க சகியாமல் கடப்பவர்களையும் ஏசத் தவறுவதில்லை அவள்...

பேச்சுத்துணைக்கு அவளுக்கு எப்போதும் குளிர்மாமலை வேங்கடவனும், காரவடை சுப்பு மாத்திரமே... எப்போதாவது எப்போதோ செத்துப் போன தாத்தனும்... வருவதுண்டு அவளுடன் பேசிக் கொண்டிருக்க, அல்லது அலுக்காமல் கேட்டுக் கொண்டிருக்க...

புறக்கணிப்பையும் உதாசீனத்தையும் வேறு மாதிரி காட்டுவாள், இயற்கை அவஸ்தைகளைச் சொன்னால், தூக்கிக் கொண்டு போய், வெளியே விடுவார்கள் என்று தெரிந்து சொல்வதே இல்லை... படுக்கையிலேயே எல்லாத்தையும் முடிச்சிட்டு கை, காலெல்லாம் இழுவி விடுவாள், கிடக்கிற கட்டில் கட்டையெல்லாம், இழுவிய பீயும், மூத்திரமும் அவளுக்கு புறக்கணித்தவர்கள் மேலே இழுவியது போல ஒரு திருப்தி...

இந்தக்கவிதையில் இருக்குது எல்லாமும்... பாரா!

அன்புடன்
ராகவன்

Ashok D said...

என்ன பின்னூட்டமிடுவது என்று தெரியவில்லை... (வயசானாலே இப்படிதான் சித்தப்ஸ்)

அதனாலே எப்பவும் யூத்தா இருக்கனும் :)... (என் கண்ணாடி எங்கப்பா)

கவித பத்தி சொல்லனும்னா.. சின்ன விஷயத்தை சொல்லி சும்மா அதிர வைக்கிறீங்க... கடலுக்குள் நிகமும் பூகம்பத்தினை போல... உள்ளுக்குள்

இந்த வாட்டி extra creditச ராகவன் எடுத்துசெல்கிறார்

மரா said...

அண்ணே அற்புதம்னே.எங்க அப்பத்தா ஞாபகம் வந்துருச்சு.

மணிஜி said...

விட்டு விட்டு போக நேரிடும் இயலாமையை பற்றியும் எழுதுகளேன்..

க. சீ. சிவக்குமார் said...

சத்ரியன்! மூத்தவர்களின் ரௌத்ரம் வெளிப்படுவது இப்படியல்ல. உண்மையில் இந்த நிலை உபத்திரவம்தான். வாய்ப்பிருப்பின் திலகன் நடித்த ‘அச்சன்’ மலயாளப் படத்தைப் பாருங்களேன்.

Mahi_Granny said...

எப்பவும் extra credit ராகவனுக்கு போய் விடும். இதில் நான் பா.ரா. வை பாராட்டி credit வாங்குவது நடக்குமா . . சூப்பர் ரௌத்ரம் தம்பி . படமும் அசத்தல்

கல்யாணி சுரேஷ் said...

கவிதையின் வரிகளால் மனதினை கனத்துப் போக செய்கிறீர்கள் அண்ணா
:(

rajasundararajan said...

இமிர்வு(Buzz)-இல் பா.ராஜாராம் சொன்னது:
/அப்புறம் இந்த 'ரௌத்திரம்' கவிதை பாட்டிம்மாவுக்கும் பொருந்துகிறதா மாப்ள? நான் ஆண் உணர்வைக் (கையாலாகாத கோபத்தைக்) காட்டுவதாகவே முயற்சி செய்திருந்தேன்./

//குழந்தைகளை பார்த்துக் கொள்ள
என் கிழவியும் வேணும் போல.//

இது அந்தக் கேரக்டர் ஆண்தான் என்பதை உணர்த்துகிறது. ஆனால், படமும், ராகவன் தன் நினைவுகளைப் பகிர்ந்துதந்த பின்னூட்டமும் வழிமாற்றிவிட்டது.

[பிறகும், ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்துகிறாற்போல எழுதுவது இன்னும் சிறப்புச் செய்யும் (தனிப்பட்ட பிரச்சனைகளைத் தனித் தனி ஆகத்தான் பேசியாகவேண்டும்.)]

எனக்கு இந்தக் கவிதையில் ஒரு நக்கல் தொனிப்பதாகத் தெரிகிறது. //திண்ணையில் நின்றபடி
சிறுநீர் கழிக்க// முடிவதை - அந்தச் சின்னூண்டு எதிர்ப்பை - 'ரௌத்திரம்' என்கிறார். அப்புறம், இத்தகைய புரட்சி மனப்பான்மை நமக்குக் காலங்கடந்துதான் வருகிறது என்றும் காட்டுகிறார்.

க ரா said...

ரா.சு.ரா சார் சொன்னது போல படமும் ராகவன் அண்ணனின் கமெண்டும் என் பார்வைய மாத்திருச்சு...

என் பார்வையில் இன்னும் ஒரு சிறுகோளாறு என்று நினைக்கிறேன்.

////குழந்தைகளை பார்த்துக் கொள்ள
என் கிழவியும் வேணும் போல.//
இதுல வர என் எனக்கு மட்டும் எனன்னு தெரிஞ்சுருச்சு ... கண்ணாடி போடனும்.

hariharan said...

ஆகா அருமை.. இது ரெளத்திரமா.. கோபமா?