
(Picture by cc licence, Thanks Llimllib)
ஒருத்தனுக்குப் பிறந்திருந்தா
தொடக்கூடாது ஆமா சொல்லிட்டேன்
என்றெல்லாம் காச்மூச்சென்று கத்தியவள்
தூங்கத் தொடங்கிவிட்டாள்.
திறந்திருந்த மேற் ஜன்னல் வழியாக
தெரு விளக்கொளி கசிந்து
சேலை விலகிய வயிற்றில்
விழுந்து கொண்டிருக்கிறது.
மூச்சுக்கு தக்கவாறு
ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது
ஜன்னல் கம்பி.
கை நிழல் கொண்டு
கம்பி நிழல் பற்றி
விளையாடிக்கொண்டிருக்கிறான்
ஒருத்தனுக்குப் பிறந்தவன்.
நன்றி பண்புடன்
18 comments:
நமக்கு இந்த எளக்கியம் போதும் பா.ரா. படிச்சமா. நெஞ்ச நக்குச்சா. எழுதுனவரு கைய மானசீகமா முத்திட்டு கண்ண தொடச்சிட்டு போயிடணும். என்ன சொல்றீங்க:)))
கையின் நிழல்கள் எங்கும் படர்ந்து கொண்டு இருக்கிறதுதானே / நல்ல கவிதை.
கைய வச்சுகிட்டு சும்மா இருப்பதில்லை கவிதை மனசுக்காரர்கள்..
மூச்சுக்கு தக்கவாறு
ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது
ஜன்னல் கம்பி.
ஆஹா.. பொயடிக் டச்.
:)
Nice Paa. Raa.
மானஸ்தன்....?? நம்ம யாரு? love you, this is one of your best...cheers
அழகு வரிகள்!
:-)
Nice.
மானஸ்தன்...
மானஸ்தன்தான்...
அருமை...
கை நிழல் கொண்டு
கம்பி நிழல் பற்றி...
கலக்கல்...
பாராண்ணா..
கவிதைகள் என்றுமே எனக்குப் புரிந்ததில்லை.
புரியாததால் இது கவிதைதான் என்பது மட்டும் புரிகிறது.
கதை எழுதும்போது ஆழ்ந்து படிக்கிறேன், இப்போ ஆஜர் மட்டும் போட்டுச் செல்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
AH! NICE!
அன்பு பாரா,
நல்லா இருக்கு இந்தக் கவிதை... மூச்சுக்கு ஏறி இறங்கும் ஜன்னல் கம்பி அழகான பார்வை.
அன்புடன்
ராகவன்
செம..செம... கட்டிப்போடுறீங்க...
//மூச்சுக்கு தக்கவாறு
ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது
ஜன்னல் கம்பி//
//கம்பி நிழல் பற்றி
விளையாடிக்கொண்டிருக்கிறான்//
புரிஞ்சு போச்சு..
இது நிஜமல்ல
நிழல்.
'நிழல் கவிதை'..நச்.
Super.
நிழல்கள் தொட்ட நிஜத்தைத் தொடாத..
நெஞ்சைத் தொட்ட கவிதை.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment