
(Picture by cc licence, Thanks Madaboutasia )
அவரை எனக்குத் தெரியும்
உங்களுக்கும் தெரியும்
யாருக்குமே தெரியும் அவரை
அவருக்குத்தான் தெரியாது
நமக்கெல்லாம் அவரைத் தெரிகிறதென
அவர் யார்?
என என என
விடுகதை விடுகிறாள் மகள்.
எனக்கு விடை தெரிகிறது என்பது
ஒரு சந்தோசம்.
அதை விட சந்தோசம்
என் என் என் மகளை
எனக்குத் தெரிகிறது என்பது.
நன்றி பண்புடன்
12 comments:
என்ன பாரா....
ரொம்ப நாளாச்சு?
சுகமாயிருக்கிறீரா?
எனக்கு அந்த ’அன்பே சுகமா’
பாட்டு பிடிக்கும்.
அன்பே மட்டுமில்லை அன்பைச்சுற்றியிருக்கும் நட்பு,தெரு,அறை,பாட்டில் டம்ளர்கள்,சந்தோசம் எல்லாம் சுகமா >
சித்தப்பா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிதை...
ரொம்ப நல்லாயிருக்கு..
சுகம் தானே?
pachchai pattup paaavadaik kutti ponnu polave.. arumaiyaai irukirathu kavithaiyum.
:)
vaazhthukal sir.
vidukathaikku vidai yenakkuth theriyalaye...
solludingalen rajaram sir.
நமக்கே நமக்கான இடம் இது....
ஊரு ஊரா சுத்தி வந்தாலும் ஏழுகடை போல ஆகாதில்லையா...
Nice.
அருமை பாரா:)
அதை விட சந்தோசம்
என் என் என் மகளை
எனக்குத் தெரிகிறது என்பது.//
ஆமா அண்ணா. பெற்று வளர்த்த பிள்ளை மனசறியாம எதைத் தெரிஞ்சுதான் என்ன?
காமு மக்கா, நலமா? :-) கொஞ்சம் வேலைகள் காமு. கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் கூகுள் பஸ்ஸில் கும்மி அடிக்கப் போயிர்றேன். நம்ம ஆளுகள் பூராம் அங்கனதான் கெடக்காங்க. நன்றி காமு!
குமார் மகன்ஸ் நன்றி!
ரசிகை, மஹா, தொப்ளான் எல்லோரும் நலம். சேவியர் எப்படி இருக்காரு? நன்றி ரசிகை!
எனக்கென்னவோ பஸ்ஸுதான் ஏழுகடை உணர்வை தருகிறது தோழர். பேச்சும் சிரிப்புமா, சண்டையும் சச்சரவுமா :-) வீட்ல நுழையும் போது வாலை சுருட்டி வச்சுக்குவது உண்டு. போலவே இந்த 'நம்ம இடமும்' :-). நன்றி தோழர்!
சேது நன்றி!
தேனு மக்கா, நலமா? நன்றியும்!
நிலாமகள், நல்லாருக்கீங்களா? நன்றி சகோ!
ஆங்... சந்தோசம் பாஸ்(சித்தப்ஸ்) :)
ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிற சொந்த ஊர் மாதிரி சந்தோஷம் தருது இந்தக் கவிதை!
m..yellorum nalam rajaram sir.
Post a Comment