
( Thanks :: photo by Dr. Prasad Dasappa, Canada)
கனவிலாவது வருகிறேனா
கணினி வாங்கிய பிறகு
கசிந்துருகி கேட்கிறது
கடிதம்.
"நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்.
தட்டச்சு மொட்டில்
தவிக்கிறது விரல்.
திரையில் அவள்.