Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Friday, October 9, 2009

கடவுளும் ப்ரியசாமி பிள்ளையும்


(picture by CC licence, Thanks B. Sandman)

ஒன்று:
தெருவோரத்தில்
இருக்கிறோம்
என
தெரியாமலே
இருக்கிறோம்.

ழை
காற்று
வெயில்
பனி
போல

வாழ்ந்து பார்க்க
ப்ரியமெனில்

முறுக்கு மீசை
மழித்தவிழ்த்து
வாடா
கடவுள்
தெருவோரம்.

இரண்டு:
பீத்துணி
கசக்கி
ப்ரியத்தில்
முகரும்
எட்டாவது மகள்
கருப்பாயிக்கு
ஏன்டா கடவுள்
தரலை
பூப்பும்
காய்ப்பும்?

Thursday, August 13, 2009

கடவுளும் நாமும்


(photo by CC license, thanks Original Nomad)

வசர அவசரமாய்
பேசி விலகுகிறோம்
அலுவலகம்
போகும் நாம்

டுதுறை-20
ஐ.ஆர்.-8
குதிரை சம்பா
பொன்னி
பூக்காத பருத்தி
தீஞ்ச தென்னை
பூச்சிமருந்து
கரும்பு திருட்டு
காகம் அப்பும் கடலை
வங்கி கடன்
பிள்ளைக்கு வாந்தி
பிறகு பேதி வேறு

"ன்னடா கெறக்கமா
இருக்கிற..மூதி
உனக்கு மட்டுமா
நொட்டையும் நொங்கும்
ஆக வேண்டியதை பாரு"

டுப்பில் நிமிண்டி சிரிக்கிறான்
வெளியில்
வியர்வை மணக்கும்
ஒருவன்

வ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்