எல்லா
குழந்தைகளுக்கும்
சோறூட்டுகிறது
தனி ஆளாய்
ஒரு நிலா.
உச்சிக்கிளை
கூட்டிலுள்ள
குருவிக்குஞ்சுகளுக்கு
இன்னும்
அருகில் இருக்கிறது
இந்த
நிலா.
பாட்டி
வடை சுடுகிறாள் என
காட்ட வேண்டி
ஆள் தேடி அலையும்
அத்துவான
காட்டிலொரு
நிலா.
குழந்தைகளை நடுவில் கிடத்தி
காட்டி காட்டி கதை சொல்லும்
மொட்டை மாடி தகப்பன்களை
மனைவியறியாது நேசிக்கிறாள்
மற்றொரு நிலா.
மிக அழகு நிலா
மிக்க அழகு
பார்ப்பவர்கள்!

