Showing posts with label முனியம்மாள் அக்கா. Show all posts
Showing posts with label முனியம்மாள் அக்கா. Show all posts

Wednesday, January 13, 2010

புத்தகச்சந்தையும் ஒரு மனுஷியும்


(picture by cc licence thanks unforth)

புத்தகம் புத்தகமாய்
வாங்கி குமிச்சிருக்காங்க
எங்க பப்புக்கு, பப்பு ஆச்சி.

ந்த கடையில
நெறைய புத்தகம்
இருக்கும் போல.
போனா வாங்கலாம் போல.

னக்கும் கூட தோணுச்சு
ஏன்டா புள்ளைகளுக்கு
புத்தகமே வாங்கி தந்ததில்லைன்னு.

ங்க காலத்துல
ஒரு பப்பு ஆச்சி இருந்துச்சு.
ஒரு ஊர்லன்னு தொடங்கி
கதை கதையா சொன்னுச்சு.

து எங்க காலத்துலேயே
செத்து போச்சு.