Wednesday, April 14, 2010

ப்ளஸ்-ஒன்


(Picture by cc license Thanks neoliminal )

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்

சொன்ன காரணத்தை

தெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

ப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.

-ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி
சுகுணா, விகடன்!

Sunday, April 11, 2010

கொடுக்கல் வாங்கல்


(Picture by cc license Thanks jesse.millan)

பெயர்களை கூடையில் வைத்து
கூடையை தலையில் வைத்து
விற்றுப் போய்க் கொண்டிருந்தாள்
பேரிளம் பெண்ணொருத்தி.

பெண்ணை பிடித்திருந்ததால்
கூப்பிட்டு பெயரை விசாரித்தேன்.

பெயர்களை விசாரித்ததாக
நினைத்தாளோ என்னவோ
கூடை இறக்கி
விலை சொல்லத் தொடங்கினாள்

யானை விலை
குதிரை விலையாக இருந்தது
ஒவ்வொன்றும்.

தென்னடா வம்பா போச்சென
கையில் இருந்த காசுக்கு பெயர் கேட்டேன்.

தூக்கிப் போட்டாள்
ரெண்டு பெயர்களை.

பெண் பித்தன்
ஸ்த்ரி லோலன்
என்பதாக இருந்தது.

ற்று கூச்சமாக இருந்தாலும்
ஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.

"ராசா கணக்கா இருக்க ராசா"
என்றபடி கூடையை தலைக்கு தூக்கினாள்.
ராணி கணக்கா.